<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

பின்னூட்டங்கள் 00 - 00


பின்னூட்டங்கள் பழசு

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


அல்வாசிட்டி இசம் பற்றிய கேள்விகள் ::

அப்படியே எனக்கும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லுங்கப்பு

செக்யூலரிசம் (கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது), செக்யூலரிசம் (கருணாநிதி பிஜேபியுடன் இருக்கும் போது), நேஷனலிசம் (கருணாநிதி பிஜேபியுடன் இருக்கும் போது), செக்யூலரிசம் (கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில்), ஷோசலிஸம் (கம்யூனிஸ்டுகள் எதிர்கட்சியாக இருக்கும்போது), ஷோசலிஸம் (கம்யூனிஸ்டுகள் வெளியில நின்னுகிட்டு உள்ள எட்டிபார்த்து ஆதரவு தரும்போது)
 



அல்வாசிட்டி இசம் பற்றிய கேள்விகள் ::

எனக்கு தெரிந்த வரையில சொல்றேம்பா… கேட்டுக்குங்க:

1) நவீனத்துவம்(modernism) - ஜீன்ஸ் பேன்டுல முன்னாடி கிழிச்சி வுட்டு போட்டுக்கிறது

& பின் நவீனத்துவம் (Post modernism) - அதே ஜீன்ஸ்ல பின்னாடி கிழிச்சி உட்டுக்கிறது

2) மேஜிகல் ரியாலிசம் (magical realism) - மந்திரவாதி காத்துல வரவழச்ச காச நாம கடையில கொடுக்கறப்ப கடக்காரன் காண்பிப்பது

3) இருத்தலியல் (அ) எக்ஸிஸ்டன்சியலிசம் - வீட்டுக்கு புழக்கடை பக்கமா இருக்கற புறம்போக்கு நிலத்துல செடி கொடி எல்லாம் வளர்த்து அப்படியே அபேஸ் பண்ணிக்கிறது

4) நியோரியலிசம் (Neo realism) - மேட்ரிக்ஸ் படம் பார்த்தவுடன் ஏற்படும் உணர்வு

5) சுற்றியலிசம் (Surrealism) - 4,5 பெயின்ட் டப்பாவ ஒன்னா கொட்டி அதும் மேல நாலு பசங்கள வெளயாட வுட்டு அதுல ஓவியம் கண்டுக்கிறது

6) மசாக்கிஸ்ட் - மஜா கிஸ் க்கு எழுத்துப்பிழையா?
 



அல்வாசிட்டி தலை நிமிர விடாத தமிழர்கள் ::

என்னா அண்ணாச்சி, விவசாயம்னா எல்லாம் கிண்டல் பண்றீங்க… அம்மாவுக்கு அளவுக்கு அதிகமா சொத்து சேர்ந்ததுக்கு திராட்சை பண்ணைல வெளஞ்ச லாபம்தான்னு கோர்ட்லயே ஏத்துக்கிட்டாங்களே தெரியாது… நாங்கூட ஒரு திராட்சை தோட்டம் வாங்கி போட்டேன்.. ஒரு போகம் வெளஞ்சதுக்கு அப்புறம்தான் சொன்னாங்க, என் தோட்டத்து திராட்சை கொடில திராட்சை பழமாத்தான் வெளயுது ஹைதராபாத்ல மாதிரி தங்கத்துல இல்லைன்னு… அப்புறம் அடிமாட்டு விலைக்கு விக்க வேண்டியதா போச்சி…
 



சரி, உங்க கருத்து ??