<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

பின்னூட்டங்கள் 01 - 50


பின்னூட்டங்கள் 50 - 100

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பாஸ்டன் பாலாஜியின்வலைப்பதிவுகள் - 2005 ::

// சர்ச்சை - முகமூடி //

எப்பிடி இருந்தவன் இப்படி ஆயிட்டனே (ஆக்கிப்புட்டாவளே)

;))
 



ஞானபீடத்தின் நன்றி கெட்ட உலகமடா... ::

அ) இந்த கவிதையின் மூலம் சமுதாயத்தின் மீதான உங்களின் கோபம் புரிகிறட்து.. கவிதை அருமை... பதிவுக்கு நன்றி

ஆ) //பசு மாட்டுக்கும் கோழிக்கும் நியாயம் கிடைக்காதான்னு ஏங்கற நரி நெஞ்சத்தொட்டுடுச்சு!// - ராம்(தா)ஸ் என்று படித்ததும் ஒரு கணம் துணுக்குற்றேன்... (தா) தெரியாத மையினால் எழுதப்பட்டது தெரிந்ததும் நிம்மதியடைந்தேன்
 



ஞானபீடத்தின் லிட்டர் ::

இதுக்கு தள மேம்பாடு எவ்வளவோ தேவல

(அப்புறம் ஏஜண்டு, உம்ம பின்னூட்டம் இட என்ற லிங்கு சரியா வேலை செய்யல.. நான் குறூக்கு வழிய - பின்னூட்டங்களை பார்க்க - புடிச்சி வந்தேன்)
 



வா.மணிகண்டனின் வலைப்பதிவுகளின் தொடர்ச்சியான வீழ்ச்சி ::

// தனிப்பட்ட ஒருவரால் வலைப்பூவுலகிற்கு வீழ்ச்சி என்பது குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான் // இதை ஒரு பார்வையாளனாக இருந்து சொல்வது சுலபம். ஆனால் அறுவறுக்கத்தக்க அளவில் பல்முனை - ஆபாச எழுத்தில் பின்னூட்டம், போலிப்பெயரில் அடுத்தவர் பதிவில் ஆபாசமாக எழுதுவது - போன்ற தாகுதல்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் நூலிழை அறுந்துவிடுகிறது. ஒரே வாரத்தில் 100க்கும் மேல் கற்பனையே செய்ய முடியாத அளவு ஆபாசமான எழுத்தை தாங்கி வரும் பின்னூட்டங்களை மாடரேஷனில் தடுத்தாலும் அதை அழிப்பது என்பது சோர்வை தரும் விஷயம். மாடரேஷன் என்பது பலருக்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமில்லை. ஆனால் அதை ஒரே ஒருவரால் நாம் செயல்படுத்த வேண்டியிருக்கிறது என்பது நிர்ப்பந்தத்தின் காரணமாக வரும் எரிச்சலை தருகிறது.

// படிந்துவிடும் முத்திரையும் ஊக்கத்தைக் கெடுக்கும் இன்னொரு காரணி // இது ஒரு மிகவும் முக்கியமான காரணி. கருப்பொருளை விடுத்து கருத்தை சொல்லுபவனை பற்றிய ஆராய்தலை , அதுவும் ஒரு ஊகமாக இவன் இப்படித்தான் இருக்க முடியும், அதற்கு இதுதான் காரணமாக இருக்க முடியும் என்ற தேக்க சிந்தனையை அனைவருக்கும் பரப்பி அதன் மூலம் எழுதுபவனின் நோக்கத்தை சிதறடிப்பது எழுதுபவனுக்கு அலுப்பை தரும் விஷயம்.
 



பால பாரதியின் படித்ததில் பிடித்தது ::

3,6,7,8,11 ஆகிய கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...

இது போன்ற மேலும் பல "படித்ததில் பிடித்தது" பதியுங்கள்.
 



டோண்டுவின் மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமை ::

ஐயோ தலைய சுத்துதே...

நான் first principles முறையில வருடத்த மட்டும் (குத்துமதிப்பா) குறிப்பிடுவேன். உதாரணமாக நான் பிறந்தது இந்த ஆண்டு, கல்லூரி சேர்ந்தது இந்த ஆண்டு, வீடு மாறியது இந்த ஆண்டு, இது மாதிரி... இதுவும் ஒரு திறமையா?
 



தமிழ்ச்சங்கமத்தின் இது வைகோவின் குரல் ::

தட்ஸ்தமிழ் வலைத்தளத்தில் இருந்த வைகோவின் குரலை வைத்து நான் ஒரு பதிவு எழுதினேன். அதில் ஏன் காஷ்மீராகும் என்ற தகவல் இல்லை. நான் அகதிகள் விஷயமாகத்தான் சொல்கிறாராக்கும் என்று நினைத்த்தேன்...

இப்பொழுதுதான் இப்பதிவை பார்த்தேன்.

"எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு இன்னொரு காஸ்மீரமாகிவிடும்" என்பது பொறுப்பற்ற பேச்சு என்பது என் கருத்து. அதை இங்கு பதிகிறேன்.
 



டோண்டுவின் மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமை ::

பிளாங்கி அடித்து படித்ததற்கே பொ.ப.து பதவி வீடு தேடி வந்திருக்கிறது... ஹும். அது ஒரு கனாக்காலாம்.
 



புலம்பல்களின் ஓட்டுப் போட முடியலே ::

உங்க Templateற்கு சென்று
#Head>

#/Head> என்ற பகுதிக்குள் கீழ்க்கண்ட codeஐ இணைக்கவும்...

#!-- First Part of thamizmanam.com rating/comment code version 1.0 : Date March 3, 2005-->
#script type='text/javascript' src='http://www.thamizmanam.com/tamilblogs/scorepad.js'>
#/script>

****

மேலே # எனும் இடத்தில் எல்லாம் < என்பதாக மாற்றிக்கொள்ளுங்கள்

****

அப்புறம் உங்க settingsல போய்,
Comment moderation ,
Word Verification , ஆகியவற்றிற்கு No என்பதாகவும்
Who can comment? என்பதற்கு Anyone என்பதாகவும் தேர்ந்தெடுத்து Republish செய்ங்க..

(நீங்களே இந்த option எல்லாம் விரும்பி தேர்ந்தெடுத்திருந்தீர்கள் எனில் கண்டுக்காதீங்க)
 



வசந்தனின் கடகத்துட் குழந்தை ::

நல்ல படம். மனதை என்னவோ செய்கிறது.
 



சிறகுகள் நீண்டன தாராவின் விமானம் எந்தன் அபிமானம் ::

நல்ல கூத்து போங்க. அதுக்காக ப.கா. மி.க பார்த்த மாதிரி ரெட் சிக்னல எல்லாமா க்ராஸ் பண்ணுவாங்க?

கொசுறு தகவல்: எனக்கும் வைகோவுக்கும் பிடித்தது நடைப்பயணம்தான்.
 



நிலாவின் தமிழ்மண நிர்வாகிகளுக்கு ::

இப்பதிவின் மூலம் உங்கள் வலைத்தளம் பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சி.

(என் பதிவில் உங்கள் தளத்தை பற்றிய சுட்டியை இணைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்)
 



உருப்படாதது நரேனின் தீவிரவாத தாக்குதல் ::

இது போன்ற நேரத்தில் அரசியல்வாதிகளை போல், இது கோழைத்தனமான செயல் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது சரியல்ல...

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை அவசர கதியில் கண்டுபிடித்து ஆற அமர பல வருடங்களாக கேஸ் நடத்தாமல் விரைவாக கேஸை நடத்தி அதிக பட்ச தண்டனை வாங்கித்தருவதே முதுகெலும்புள்ள அரசு செய்ய வேண்டிய செயல்
 



கொழுவிஸ் விஜயகாந்துக்குச் செய்யப்பட்ட துரோகம் ::

விரைவில் எதிர்பாருங்கள்

ஆண்சிங்கம் விசயகாந்துக்கு பெண் பெயர் வைத்ததன் பின்னாலுள்ள உள்குத்து அர்சியல் பாகம் I, பாகம் II
 



பெனாத்தல் சுரேஷின் அவள் விகடனுக்கு நன்றி ::

நடக்கட்டும் நடக்கட்டும்.. விகடன்ல லே-அவுட் எல்லாம் கொடுத்து கலக்கிபுட்டாங்க... ரொம்ப மகிழ்ச்சி...
 



நரேனின் புதுப்பேட்டை: நிழலுகம் - 101 ::

நரேன் அருமையான பதிவு. மேலும் விரிவாக எழுதுங்கள்
 



இட்லி வடையின் டாப் டென் - 2 வலைப்பதிவுகள் ::

யோவ் புத்தாண்டும் அதுவுமா ஆஃபிஸுல பைத்தியம் பட்டம் வாங்கி கொடுத்திருவ போலருக்கே... இவன் எதுக்கு 10 நிமிசமா விடாம சிரிக்கிறான்னு எல்லாம் கலவரமாயிட்டாங்க...

(சரி டாப் 10ல 8தான் இருக்கு?)

புத்தாண்டு வாழ்த்துக்கள்பா..
 



டோண்டுவின் கூகிள் என்னும் நண்பன் ::

// தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வத்தைக் குலைப்பது போல கூகிளின் ஷரத்துகள் உள்ளன. முக்கியமாக எல்லா மொழிபெயர்ப்புகளும் இலவசமாக செய்ய வேண்டியுள்ளது //

தன்னார்வலர் என்றால் தானே விரும்பி (காசு கிடைக்கிறதோ இல்லையோ) செய்யும் வேலை என்றல்லவா நினைத்திருந்தேன். இதில் காசு தர மாட்டேன் என்பது எப்படி உற்சாகத்தை குலைக்கும்?
 



ஞானபீடம் வாடி மச்சி காதல் பஜ்ஜி ::

பஜ்ஜிய பாக்கு உரல்ல போட்டு சாப்பிடற வயசாச்சி... இது காதல் பஜ்ஜி தேவையா?

புத்தாண்டு வாழ்த்துக்கள்பா
 



உருப்படாதது நாராயணனின் ஆளப் போவது யார்? ::

தேர்தல் நெருங்க நெருங்க வலைப்பதிவு உலகமே ஒரு கூட்டு வலைப்பதிவு மாதிரிதான் இருக்கும்கறது நம்ம கருத்து...

இருந்தாலும் "சமத்துவபுரம்" மாதிரி உங்க கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
 



டோண்டுவின்
Y2K - பிரச்சினை ::
முதல்ல எண்கள வச்சிக்கிறதுக்கு ஒரு எடத்த பிடிப்போம்.

இது ஏற்கனவே நிரல்ல இருக்கு
வருசம் = இரண்டு இலக்க எண்தாங்கி

இத புதுசா நிரல்ல உருவாக்குறோம்
புதுவருசம் = நான்கு இலக்க எண்தாங்கி
இதயும் இப்பிடி பிரிச்சிக்கிறேன்.
செஞ்சுரி = புதுவருசத்தோட முற்பாதி இரண்டு இலக்க எண்தாங்கி
இயர் = புதுவருசத்தோட பிற்பாதி இரண்டு இலக்க எண்தாங்கி

இப்ப நிரல்ல எங்கங்க எல்லாம் வருசம் உபயோகிக்கிறோமோ, அங்க இந்த லாஜிக்க போட்டு தாக்கேய்

அதாவது
வருசங்கிறது 50 அல்லது அதுக்கு மேலன்னா
செஞ்சுரி = 19
இல்லாகாட்டி செஞ்சுரி = 20
எப்பிடின்னாலும் வருசம் = இயர்
முடிஞ்சிது

புதுவருசம் பிறக்கறதுக்கு முன்னாடி வருசம் 50க்கு மேலயா இருக்கும், லாஜிக் படி செஞ்சுரி 19. ஆக புதுவருசம் = 19** ஆனா புதுவருசம் பிறக்க சொல்லோ, வருசம் 00ன்னு ஆகும். இப்போ லாஜிக் படி வருசம் 50க்கு கீழன்றதால செஞ்சுரி 20 ஆயிடும். ஆக புதுவருசம் = 2000. நிரல்ல எங்கங்க எல்லாம் வருசம் வருதோ அதயெல்லாம் தேடி பிடிச்சி அங்க எல்லாம் புதுவருசம் உபயோகப்படுத்தினாங்க... இது ஒரு ஸ்டைலுதான். இத மாதிரி பல ஸ்டைல்ல மேட்டர் பண்ணாங்கோ.

*

// இதைத் தீர்ப்பதில்தான் இந்தியர்களின் மென்பொருள் திறமை உலகுக்கு தெரிந்தது என்று நினைக்கிறேன் // அப்படீன்னு எல்லாம் ஒன்னும் இல்ல.. டைம் க்ரஞ்ச்.. அல்லாரும் எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்க சொல்லோ, இந்தியாவுல ஏகப்பட்ட ஆள்பலம் + கொடக்கூலி கம்மிங்கறதால நாம சந்தர்ப்பத்த நல்லா ஊஸ் பண்ணிகினோம். அதான் மேட்டரு.
 



இளந்திரையனின் தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு ::

நல்லதொரு பதிவு இளந்திரையன். இதன் தொடர்ச்சியாக எழும் விவாதங்கள் என் போன்றோருக்கு (எனக்கு மட்டுமாவது) பயனாக இருக்கும். காத்திருக்கிறேன்.
 



பத்ரியின் கிழக்கு புத்தகங்கள் - 1 ::

அந்த இந்தியா டுடே இலக்கிய மலர் + அந்த கதையின் தாக்கம் என்னிடம் இன்னமும் இருக்கிறது. அப்பொழுது இரா.முருகன் இளைஞர், நம்பிக்கை தரும் எழுத்தாளர் என்று சுஜாதா எழுதியிருந்ததாக நினைவு.

குறிப்பு 1: commaவை "அப்பொழுது" என்பதன் பிறகு போட்டிருக்க வேண்டும்... மிஸ்ஸாகிவிட்டது ;-)

குறிப்பு 2: பிரும்மமகரிஷி + goinchami-8A வழியில் :: "நல்ல பதிவு . நன்றி பத்ரி.." ;-)))
 



சுரேஷ் பாபுவின்பாலகுமாரன் ::

பாலகுமாரன் பற்றி தேடிய போது கண்ணில் சிக்கியது. நானும் ஒரு காலத்தில் அவர் எழுத்தை விரும்பி படித்ததுண்டு. பின்பு ஏனோ...

// உதவி இயக்குனரை பற்றிய கதை. அவர்கள் வழ்வினை படம் பிடித்து கட்டியதால் அன்று பாலா விற்கு வீட்டெதிரே முற்றுகை //

அது உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை படம் பிடித்ததால் அல்ல... (நினைவிலிருந்து) "...நிதர்சனம் புரியும் போது கிராமத்தில் சமைஞ்ச பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு...." என்பது போன்று எழுதியிருந்தார். "கிராமத்தில் சமைஞ்ச" என்ற பதத்தை படிக்கையில், எனக்கும் கோபம் வந்தது. அவர்களின் போராட்டம் எனக்கும் சரியாகவே பட்டது...
 



தருமி கம்ப்யூட்டர் வித்தகர்களுக்கு ஒரு பொது விண்ணப்பம்

நான் ப்ளாக்கர் மட்டும்தான் வச்சிருக்கிறதால எனக்கும் பதில் தெரியாது தருமி.

நிரலிப்பட்டை இணைப்பதற்கான குறிப்புகள் blogger.comக்கு இருக்கின்றன. weblogக்கு இல்லை. தெரிந்தவர்கள் உதவுங்கள் :: இதான் விஷயம். இத மணிரத்னம் மாதிரி நறுக்னு கேக்காம கொஞம் தமாஷா கேட்டிருக்காரு தருமி. அதுக்கு எதுக்கு டென்ஷன் ஆயிகிட்டு கார்த்திக். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. வர வர வலைப்பதிவு உலகம் சிற்றிலக்கிய சம்மேளனம் மாதிரி ஆயிடுச்சி.
 



தங்கமணியின் கணந்தோறும் வெவ்வேறு வியப்பு தோன்றும் ::

// நம்மூர்ல கூட முந்திரிக் காட்டுக்குள்ள ஒரு காலத்துல நடந்த தீவிரவாதத்திற்கும் ஒன்றைத்தன்மை நிறுவப்பட்டது, அல்லது ஒரு கூட்டத்தின் அடையாளம் மறுக்கப் பட்டது தானங்க காரணம்! // நம்மூர் முந்திரி காட்டு இயக்க செயல்பாடுகளுக்கும், ஒற்றைத்தன்மை/மறுக்கப்பட்ட அடையாளங்களுக்கும் உள்ள நேரடியான தொடர்பை பற்றி கொஞ்சம் விளக்கமாக (இங்கில்லாவிட்டாலும் உங்கள் பதிவில்) தர இயலுமா மரம்.
 



தங்கமணியின் கணந்தோறும் வெவ்வேறு வியப்பு தோன்றும் ::

தங்கமணி,

“தியாகுவின் நூல், தியாகு விகடனில் தொடராக எழுதி வெளிவந்த சுவருக்குள் சித்திரங்கள் இவைகளைப் படிக்கலாம்”

முயற்சிக்கிறேன். நன்றி

*

மரம்,

“நினைச்சேன்., என்ன இவருக்கு இதப் பத்தி தெரியாத மாதிரி கேட்க்ராருன்னுஸ”

நக்ஸல்பாரிகள், ஆரம்ப கால விடுதலை சிறுத்தைகள், தியாகு, சுப.இளவரசன் போன்றவர்களை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்கள் முழுமையானது அல்ல. நோக்கம் வேறான ஆரம்ப கால விஷயங்களை விட செயல் வேறான பிற்பகுதி வாழ்க்கை, அதாவது “தமிழ் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப் பட்ட” காலத்திய விஷயங்கள்தான் அதிகம் தெரியும். எனக்கு தெரிந்த விஷயங்கள் அல்லது கூகிளில் தேடினால் கிடைப்பது “குறிப்பிட்ட பார்வையில்” எழுதப்பட்டவையாக இருக்கலாம். அதனாலேயே இவர்களின் செயல்பாடுகளுக்கு காரணம் ஒற்றைத்தன்மை என்று எப்படி சொல்கிறீர்கள் என்ற உங்கள் பார்வை குறித்து அறியும் நோக்கில் உங்களிடம் கேள்வி எழுப்பினேன். நீங்கள் சொன்னது போல் விரிவாக எழுதுங்கள், புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

*

குழலி,

ஆர்வம் புரிஞ்சிடுச்சா… ஒருத்தரு கருத்து சொல்லும்போது எல்லாருக்கும் “சரியான” விதத்துல புரிஞ்சிக்க முடியறதில்ல.. யாராவது கேள்வி கேட்டாக்கா, ஒரிஜினல் ஆளோட பதிலுக்கு கொஞ்சம் காத்திருந்தா அவரோட பார்வை முழுமையா தெளிவா கிடைக்கலாம். அல்லது கேள்வி சம்பந்தமான நமக்கு தெரிஞ்ச பதில விவரமா சொல்லலாம். அத விட்டுபோட்டு “அவிங்க கெடக்கிறாங்க வெவரம் தெரியாத பசங்க, நீங்க பேசுங்க தல காத்து கிடக்கோம்னு” கார்த்திக்ராமரு பாணில சொன்னா அது பிரசங்கத்துக்கு வேணா நல்லா இருக்கும். விவாதத்துக்கு நல்லா இருக்குமா? அட கண்ண கட்டுதுன்னு சொல்லியிருக்கீங்க இல்ல… இது தமாஸ் பதிவு இல்லை என்பதால் உங்க காமெண்டும் தமாஸா இருக்காதுன்னு நினைச்சி கவனிக்காம பேசிபுட்டேன். இந்த இடத்துல ஒரு ஸ்மைலி.. கு.பா.பே (கு.பாதுகாப்பு பேரவை) கருத்து சொல்ல வருமுன் முதுகுக்கு மெத்தை வாங்க வேண்டியிருப்பதால் விடு ஜூட்.
 



உஷாவின் பின்னூட்டம்- என் முடிவு ::

மாடரேஷன் அப்படீன்னா என்ன?
 



பாஸ்டன் பாலாவின் இந்தியப் பதிவுகள் - 2005 ::

// Best Indic (Tamil) Blog 2005 - ஹி... ஹி... வெக்கமாயிருக்கு :-)) //

எனக்கும்தான் ;)
 



ராம்கியின் சண்டைக்கோழி ::

யப்பா... போட்டோல ஆரு என்னான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா... என்ன மாதிரி பாமரனுங்கோ (சிற்)எலக்கிஅவாதிங்கள எப்பதான் எனங்காணரதாம் ??
 



ஞா.பீ.யின்யூஸ்லெஸ் ::

யூஸ்லெஸ் - பொருத்தமான பெயர் (பதிவுக்கா கவிதைக்கான்னு யாருப்பா அங்க நாரதர் வேல பாக்குறது??)
 



உருப்படாதது நாராயணனின் அறிவு ஜீவிகளும், ஆணாதிக்க மனப்பான்மையும் ::

// என் மாலதி மைத்ரியினை யாராவது சொல்லியிருந்தால் மூன்று தலைகள் உருண்டிருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்ததாக படித்தேன். ஆக மாலதி மைத்ரி இல்லாமல் வேறு யாராவது இருந்தால் தலைகள் உருளாது, மாலதி மைத்ரியாயின் தலைகள் உருளும். //

முதன் முதலில் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியதும் இதுதான்.. மற்றொரு அரைவேக்காட்டுத்தனம் பிரபஞ்சனுடையது. கு.அழகிரிசாமியின் கடிதங்கள் வெளியிட வந்தவர் வேறு ஒரு படைப்பாளியின் ப்ரச்னை காரணமாக வெளியேறுகிறேன் என்று வெளிநடப்பு செய்தால் அப்புறம் இந்த படைப்பாளிக்கு என்ன மதிப்பு.

// பிரச்சனைகளை சந்திப்பதிலும், எதிர் கொள்வதிலும் அவர்கள் தமிழ்நாட்டில் கூலிவேலைக்கு போய் ஒரு நாளைக்கு ரூ 30 சம்பாதித்து வாழ்வினை எதிர்கொள்ளும் மனிதர்களை விட கீழானவர்கள். //

இது இங்கே அபஸ்வரமாக தெரிகிறது. உண்மையில் தினக்கூலிகள் ப்ரச்னைகளை சந்திப்பதில் மத்திய/மேல் வர்க்கத்தை விட ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல.
 



துளசியின் சீவி முடிச்சு சிங்காரிச்சு ::

நீங்க பாட்டுக்கு பூ படத்த போட்டுட்டீங்க. கோபாலகிருஷ்ணன பத்தி தெரியாத புதியவங்க, இது என்ன திடீர்னு முடிஞ்சி போச்சே கதைன்னு நினைச்சிக்குவாங்க :))
 



பத்ரியின் நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம் ::

நண்பன்,

நேற்றிலிருந்து உங்களை கேட்க நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே போவதற்கு காரணம், "நண்பன்" என்று குறிப்பிட்டு யாராவது ஏதாவது சொன்னால், நேரடியான அர்த்தத்துக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொட்த்து மத்த fill in the blanksக்கு உங்கள் அஞ்சறை பெட்டியை திறந்து சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ், மதம், ஜாதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி ஒரு பதிவு பல பின்னூட்டங்கள் என்று சம்பந்தமில்லா இடங்களில் எல்லாம் எழுதி வருகிறீர்கள் என்பதே... சரி, விஷயத்துக்கு வருவோம்.

பதிரி இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில் :: நீங்கள் இதை இதையெல்லாம் சுட்டியிருக்கலாம், தவறிவிட்டீர்கள் என்ற அளவில் எழுதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் // இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள்? பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு -
உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்? // இது என்ன? பத்ரி என்பவர் ஜாதி உங்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் தெரிந்துவிட்டது என்பதால் அதிலேயே தொங்குவீர்களா? மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். இப்போது உங்கள் பாணியில் பேசினால், உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா?
 



பாஸ்டன் பாலாவின் கே டிவியில் குட்டி ரேவதி ::

இந்த பதிவு மட்டும் அஸின பத்தி எழுதப்பட்டிருந்தா இந்நேரம் இங்க 6 தல உருண்டிருக்கும்... இல்லங்கறதால இப்போதைக்கு வெளிநடப்பு செஞ்சிக்கிறேன்.
 



ஞானபீடத்தின் பொங்கல் ::

உமக்கு நெட்டி மாலையும், கொம்புக்கு தாரும் (பெயிண்டின் தமிழ் அய்யா), சக்கரை பொங்கலும் பார்சல் அனுப்பியிருக்கிறேன். முட்டாமல் மகிழ வாழ்த்துக்கள்.
 



பத்ரியின்நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம் ::

neo,

It's better to let someone think you are an Idiot than to open your mouth and prove it.
 



பத்ரியின் நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம் ::

neo,

பேச வந்த விஷயத்தை விடுத்து எப்ப பாத்தாலும் எதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பட க்ளைமாக்ஸ் போல நீளமான விமர்சனம், உளவியல் ஆராய்ச்சி, பழமொழின்னு...

நான் இதற்கு முன்பு நண்பனிடம் என்ன கேட்டிருக்கிறேன் என்று மூன்று முறைக்கு மேல் பொறுமையாக படிக்கவும். உங்களுக்கு ஜாதி கண்ணாடியை கழட்ட மனம் வராது என்பதால் எளிமையாக உரை எழுதுகிறேன்.

அதாவது பதிவாளர் மூன்றாம் மனிதர் பார்வையில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் கூட்டத்தை குறிப்பிட்டு, 90% என்றெல்லாம் பேசுகிறார்கள், நிதர்சனம் 25% கூட இல்லை என்று சொல்கிறார்.

அதை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் நண்பன், "ஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில்" என்று ஆரம்பிக்கிறார். இங்கு நீங்கள் என்று குறிப்பிடுவது பதிவாளரைத்தான் என்பது 3ம் வகுப்பு வரை தமிழ் படித்தவர்களுக்கு கூட எளிதில் புரியும். அப்படியே அதன் தொடர்ச்சியாக நீங்கள் நல்ல நிலையில்தானே இருக்கிறீர்கள் என்று வரும்போது அதனை அவர் பதிவாளரை நோக்கி எழுதியதாகவே அனைவருக்கும் தெரிகிறது, உங்களுக்கும் நண்பனுக்கும் தவிர.

இங்கே "அவர்கள்" என்று வந்திருக்க வேண்டிய கேள்வி பதிவாளரின் சாதியை பற்றி தெரிந்ததால் "உங்கள்" என்று வந்திருப்பது தவிர்க்கப்படவேண்டியது. அப்படி பார்த்தால் "நீங்கள்" ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள் என்று IISc தாக்குதல் குறித்து நண்பனை நோக்கி கேட்க முடியுமா என்பதே நான் கேட்டது.

இதில் எங்கே தட்டையான வாதம் வருகிறது. முகமூடியின் தட்டையான வாதத்தில் ஆரம்பித்து தேள் கொட்டி விட்டது என்று முடிக்கும் வரை என்னை refer செய்து நடுவில் வழமையான சில கேள்விகளை கேட்டு ஒரு ஸ்மைலியுடன் முடிக்கும் அவசர கோல பின்னூட்டத்துக்கு காரணம் ஒன்று அந்த பழமொழியில் குறிப்பிடப்பட்டதாக் இருக்கலாம் அல்லது செக்கூலரிஸ திரையின் பின்னிருக்கும் உமது உண்மையான முகமான பச்சையான ஜாதி துவேஷம் காரணமாக இருக்கலாம். இந்த பின்னூட்டம் நான் போட்டு 12 மணி நேரம் மாடரேஷனில் இருந்த போது என் பதிவில் வந்து நீங்கள் மறுபடி மறுபடி நான் சொன்னதை Prove செய்த போது எனக்கு பரிதாபமாகத்தான் இருந்தது.

*

உங்களுடைய பின்னூட்டத்தை நீக்கச்சொல்லி கேட்டது உங்கள் விருப்பம். அது எதற்கு முந்தைய என் பின்னூட்டத்தையும் நீக்க சொல்லி கேட்பது. அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்காமல் சுயநினைவோடுதான் நான் அந்த பின்னூட்டத்தை எழுதினேன். அதை நீக்க கோர உங்களுக்கு உரிமை இல்லை.
 



இளவரசன் ஹஜ் பயணிகள் சாவு: கருணாநிதி இரங்கல் ::

தலைப்பை "ஹஜ் பயணிகள் மரணம்" என்று எழுதுங்கள். மரணம் சாவு என்ற இரண்டுமே ஒரே நிகழ்வை குறிப்பவை என்றாலும் இப்படி தலைப்பை படிப்பதற்கு என்னவோ போல் இருக்கிறது.
 



உஷாவின் பொங்கல் கசக்கிறது ::

எப்போதும் போல பொங்கல் செய்யாமல் கற்பனையே செய்ய முடியாத அச்சுக்களில் தயாரிக்கப்பட்டு தினமொரு விதமாக வெளிவரும் வெல்லத்தில் செய்தீர்களா? எதிலும் மயங்காமல் எப்போதும் போல பொங்கலிட்டு வீட்டுக்குள்ளேயே "பொங்கலோ பொங்கல்" என்று கூவி சாப்பிட மட்டும் வாய் திறவுங்கள். பொங்கல் இனிப்பாக இருக்கும்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
 



துளசியின் பட்டை ஜுரம் ::

// என்ர கணிணியிலதான் அந்தப்பட்டை வரமாட்டன் எண்டு நிக்குது. வேற கணிணியில என்ர பக்கத்துக்குப் பட்டை வருது. // உங்கள் கண்ணியில் firewall நிறுவப்பட்டிருந்தால் அதில் disable scripts/javascript என்பது on என்று இருக்கலாம். அதனால்தான் அப்படி. உங்கள் firewall shutdown செய்து பாருங்கள். அப்படியும் பட்டை தெரியவில்லை எனில் உங்கள் பட்டை நிரலில் ஏதோ கோளாறு.

*

துளசி, இன்னமுமா? துளசி, ஷ்ரேயா, ராம்கி உங்களை மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.
 



நிலாவின் முகமூடி ::

// முகமூடியைக் குறித்து இப்படிப் பதிவுபோடுவதைக் கண்டிக்கிறேன் //

// சம்பந்தப்பட்டவர்கிட்டேர்ந்து கண்டனம் ஒண்ணையும் காணுமே //

*

“எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து எனக்குள் இப்படி ஒரு அமைதி இருந்ததே இல்லை. தலைக்குள் ஒரு நிசப்தம் நிலவுவதை உணர முடிகிறது. எனது சாந்தத்தின் ரகசியம் என்ன என்பதை அறிய எனது நண்பர்கள் ஆவலாக இருக்கிறார்கள்”.

நன்றி : சுகம்
 



செல்வனின் சோமு தங்கச்சியும் குஷ்புவும் ::

//`"சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு" பேசிருக்கணும். //

;-)) ஊர்ல கழுதையெல்லாம் காணாம போயிருச்சாம். எதுக்கும் உங்க ஊட்டு வெளியில ஏதும் கூச்சல் கேக்குதான்னு பாருங்க.
 



என்னுலகம் பிரியாவிடை - தாற்காலிகமாக ::

// உங்களுக்கு என்னைப்போல தவறாமல் படித்துவிட்டு பின்னுட்டமிட சோம்பல்படும் வாசகர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன்!

உங்க வாசகர்களில் இந்த சோம்பேறியும் ஒருவன் என்பதை இந்தவேளையிலே சொல்லிக்கொள்ளும் அதே நேரத்திலே.. //

இதைக்கூட காப்பி பேஸ்ட் செய்யும் இன்னொரு சோம்பேறி
 



நண்பன் நண்பனின் அமெரிக்க எதிர்ப்பும், முகமூடிக்கு ஒரு பதிலும் ::

சுட்டு பதிவு, என் தமிழ் தகராறு பிடித்தது என்றெல்லாம் நீங்கள் சொன்னாலும் நீங்கள் அந்த இடத்தில் கட்டுரையாளரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது படித்தவர்களுக்கு தெரியும். எனினும் பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் இதுபற்றிய விவாதம் இனி தேவையில்லாதது.

அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்த்து சமைக்கிறீர்கள் என்ற என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. உங்களின் எல்லா எண்ணங்களையும் பதிவாக எழுதி, தலைப்பு வைக்கும்போது மாத்திரம் எங்கோ உங்களை கேள்வி கேட்டவர் ஒருவரின் பெயரை வைப்பது என்பது தெரிந்தே செய்தால அது அயோக்கியத்தனம். ஆனால் நீங்கள் தெரியாமல் செய்கிறீர்கள் என்பதால் மசாலா சமையல். இப்பதிவிலும் கூட எனக்கு பதில் என்று தலைப்பு வைத்துவிட்டு சம்பந்தமேயில்லாத பல விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தலைப்பை பார்த்துவிட்டு, நீங்கள் ஆழமாக பதிப்பவர் என்று ஏற்கனவே முன்முடிவுகளோடு வருபவர்கள் ஏதோ உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்கு எதிரான முகமூடிக்கு நீங்கள் பதில் சொல்வதாகவே நினைப்பர். உங்களின் ஒரே ஒரு பதிவை தவிர வேறு பதிவுகளை படித்திராத முகமூடிக்கும் உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைக்கும் என்ன சம்பந்தம். எளிமையான ஒரே ஒரு கேள்விக்கு தொடர்பிருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் ஆனால் உண்மையில் தொடர்பில்லாத எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு பதிவு. நியாயப்படி பார்த்தால் இப்பதிவின் தலைப்பு "பலருக்கு என் பதில்" என்பதாக இருக்க வேண்டும். தலைப்பு வைப்பது உங்கள் இஷ்டம், அதில் என் பெயர் இருப்பதால்தான் இவ்விளக்கமே அன்றி இது பற்றி எந்தவிதத்திலும் இதற்கு மேல் விவாதம் செய்ய விருப்பம் இல்லை. நன்றி.
 



கார்த்திக்ராமாஸின் இண்டி ப்ளாக்ஸ் தேர்தலில் வெற்றி பெற்ற ::

வாழ்த்துக்கு நன்றி.

// WHAT A PATHETIC …ING JERKS // இந்த உங்கள் கடைசி வரியை மிதிக்க விரும்பாமல் தாண்டிப்போகவே நானும் விரும்பினேன். ஆனால் எனக்கும் ஒளிவு மறைவில்லாமல் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்.

உங்கள் மிமையுணர்வால் ஏற்பட்ட கொந்தளிப்பு அடங்கியவுடன் நீங்களே சற்று சிந்தித்துப்பாருங்கள். உங்கள் நண்பர்களிடம் பேசிப்பாருங்கள். அப்படியும் தோன்றவில்லையெனில், இது அருவருப்பாக தோன்றுவது ஏன் என்று பிறகு நான் சொல்கிறேன்.

பிகு: உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் உங்களை சாந்தப்படுத்தலாம் என்றால் :: யாருடைய கட்டாயத்தினாலோ அல்லது வேண்டுகோளுக்கோயன்றி என் தனிப்பட்ட விருப்பத்திற்காக நான் தேர்ந்தெடுத்தது தமிழ்மணத்தை.
 



சன்னாசியின் Indibloggies முடிவுகள் ::

உங்கள் மூலம்தான் இந்த முடிவை பற்றி தெரிந்துகொள்கிறேன். தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சன்னாசி. ப்ரேமுக்கும் நன்றி.
 



பாஸ்பாலாவின் ஜெயமோகன் ::

திடீர்னு செயமோகன் இண்ட்ரோவுக்கு பெசல் காரணம் ஏதும் உண்டா?
 



நரேனின் ஜல்லியடித்தல்: மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர் ::

// 1944 மார்ச்சில், கோட்சே "அக்ரானி" என்கிற பத்திரிக்கையினை தொடங்குவதற்கு நிதி வழங்கியதே சாவார்கார் தான். //

நானறிந்த வரையில் அக்ரானியின் புரவலர் ஆப்தே. அதன் ஆசிரியர்/கட்டுரையாளர்தான் நாதுராம்.

***

my bad..

Godse had initially backed Gandhi's campaigns of civil disobedience against the British government, but was disilluisioned after the Gandhi-Irwin Pact of 1931 and Gandhi's decision to attend the Round Table Conference in London. Savarkar, Godse and his fellow Mahasabha activists were the most ferocious critics of Gandhi's efforts to make an agreement with Muhammad Ali Jinnah in 1942-44, and saw his actions and efforts on bridging the political divide with Jinnah and B.R. Ambedkar as pure appeasement and sacrifice of Hindu interests.

Godse started a Marathi newspaper for Hindu Mahasabha called Agrani, some years later renamed Hindu Rashtra.

Godse's immediate motive for the assassination is usually ascribed to Gandhi's January 13, 1948 decision to fast to the death unless the Indian central government reversed a decision to withhold the transfer of 55 crore (550 million) rupees (which was to be paid in accordance with the partition agreements) to the government of Pakistan, a decision initially made as retaliation for Pakistan having invaded the then-independent kingdom of Kashmir. The Indian government immediately reversed its decision, and this prompted Godse to assassinate Gandhi on January 30, 1948.

*

எனினும் போன பின்னூட்டம் நான் ஒரு புத்தகத்தில் (வரலாற்றை ஆய்ந்து எழுதப்பட்டது) படித்தது. சரி பார்த்து மேல் விபரம் சொல்கிறேன்.

*

என்னிடம் Me Nathuram Godse Boltoy என்ற (மஹாராஷ்டிராவில் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட) நாடகட்தின் ஆங்கில வடிவம் ஏதோ ஒரு ஆர்க்கைவல் சிடியில் இருக்கிறது. யாருக்காவது வேண்டுமெனில் தேடியெடுத்து தருகிறேன்.
 



ராம்கியின் பொல்லாத சொல்! ::

இ-சிற்றிலக்கிய சம்மேளனமான ப்ளாக் உலகில் "அரசு" இல்லாத குறைய நிவர்த்திக்க நியோ இருக்கிறார். என்ன ஒன்று ஏதாவது விவகாரம் என்றால் மட்டும் எடுக்கும் அவதாரம் போல் எப்போதாவது மட்டும் வந்து தமிழ், பாப்பான் விவகாரங்களை பேசிவிட்டு மறைந்து விடுகிறார். இனி நிரந்தரமாக இந்த சேவை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கமான செக்கூலரிஸ்ட் அஜெண்டாவுல பாப்பான் பாப்பாத்தி என்று ஒரு பாட்டும், தமிழ் சூத்திர பாஷை என்று இன்னொரு பாட்டும் பாடி முடித்தாயிற்று. இதில் குஷ்பு விவகாரம் எழுதியவர்கள் இதை பற்றி எழுதுவதில்லை என்று போகும் இடமெல்லாம் பினாத்துவது நல்ல தமாஷ். இரண்டுக்கும் உள்ள ஆதார விஷயம்/வித்தியாசம் இவருக்கு விளங்கியதா, இது பற்றி எழுதப்பட்டது அனைத்தையும் இவர் படித்து விட்டாரா, எல்லாத்துக்கும் மேல் இவர் எழுதுவதை யாராவது தடுக்கிறார்களா என்று தெரியவில்லை.

தமிழ் என்ற வார்த்தையை கண்டவுடன் உணர்ச்சிவசப்படும் குஞ்சுகளுக்காக போகிற போக்கில் தமிழ் சூத்திர பாஷை என்றொரு பிட்டும் போட்டாயிற்று. இந்த லட்சணத்தில் தமிழுக்காக உணர்ச்சிவசப்படும் இவர் பெயர் நியோ. ஸ்ப்பா கண்ண கட்டுதே.
 



சரி, உங்க கருத்து ??