<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

பின்னூட்டங்கள் 51 - 100


பின்னூட்டங்கள் 51 - 100

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ராம்கியின் ஓரங்கட்டேய் - 7 ::

இதுக்கும் அதுக்கும் பொருத்தம் இருக்குமா, அதுக்கும் இதுக்குமாவது சம்மந்தம் இருக்குமா, இல்ல அதுதான் சரியான காரணமா இருக்க முடியும், இப்படியெல்லா எழுதறவர் எதுக்கு அப்படி எழுதல, அப்படி இல்லையின்னா ஏன் தமிழ் வாழ்கன்னு சொல்லல, எழுதற ஆளோட பிறந்த ஜாதி என்னவா இருக்கும், அதுக்கும் எழுத்துக்கும் நேரடி தொடர்பு இருந்தே ஆகணும் -- ஆராய்ச்சியாளர் (கள்) வர்றதுக்கு முந்தி "நல்ல கற்பனை"ன்னு மட்டும் சொல்லிட்டு ஜூட் விட்டுக்கறேன்.
 



வண்ணக்குழப்பம் மரியாதை செய்ய முந்துங்கள் ::

கு.அழகிரிசாமியின் கடிதங்கள் வெளியிட வந்தவர் குட்டி ரேவதி ப்ரச்னை காரணமாக கோச்சிகிட்டு வெளியேறலையா... கலைஞர்கள்னா கோபம் மூக்கு மேல இருக்கும்னு கண்டுக்காம இருக்க வேண்டியதுதான்.
 



தேவ் ஒரு சாரல் பொழுது ::

சரளமான நடை. வெகு சில இடங்களில் சில வார்த்தைகள் மிஸ் ஆன உணர்வு கிடைத்தாலும் அது உங்கள் பாணி என்று கொள்ளலாம். நிறைய இடங்களில் எனக்கு மலரும் நினைவுகளை தந்தது. இது நிஜமா இல்லையா என்றெல்லாம் விளக்கம் கொடுத்து வாசகர்களின் அனுபவத்தை கெடுத்துவிடாதீர்கள். அது வெற்றிடமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் வாசகர்களின் கற்பனை அதை நிரப்பிக்கொள்ளும். இதனை எனது நூலகத்தில் சேமிக்க விரும்புகிறேன்.

*

தேசி பண்டிட் விமர்சனங்களை பார்த்தேன். வர வர எல்லா விஷயங்களையும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. grow up என்று சொல்லலாம் போல் நல்ல நகைச்சுவை.
 



ஆனந்தின் பிரிட்டினி ஸ்பெயர்ஸ¤ம் நானும் ::

மாலிபு கோயிலுக்கு போனா இந்த பாப்பராஸிங்க தொல்ல எனக்கு மட்டும்தான்னு நினைச்சா பாப்பாத்தாவுக்குமா? (pop ஆத்தா). இவ்ளோ தூரம் வந்துட்டு நம்மள பாக்க்காம போயிட்டாளே ப்ரிட்னி.. சரி அவ கொடுத்து வச்சது அவ்வளவுதான்.

*

ஏம்பா அந்த கார்த்திக் பொளச்சி போவட்டும் விட்டுறுங்களேம்பா.. பாவம் ஏதோ பதிவு எழுதணும்னு ஆர்வமா வந்திருக்காரு. இப்பவே இ-சிற்றிலக்கிய சம்மேளனத்த பத்தி அவருகிட்ட சொல்லி மிரள வைக்கணுமா?
 



இராமநாதன் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ::

வ.வ.உ (வரிககு வரி)
 



குழந்தை, ஆண், பெண் & பெருசு
::

// அன்றைய ஹிந்துவின் கடைசிப் பக்கத்தின் பொடி எழுத்துக்களில் மூழ்கி இருந்த அவன் //

இதை ஆண் சேரில் உட்கார்ந்து செய்துகொண்டிருந்தாரா அல்லது தரையிலா? என்பது இந்த சம்பவத்துக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக்கூடியது.
 



குமரன் வாழ்வினிலே ஓர் நாள் திருநாள் ::

குமரன், உங்கள் படைப்புக்களை படிப்பது வழக்கம்தான். ஆனால் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால் நல்லா இருக்காது என்பதால் உங்கள் ஆன்மீக பதிவுகளில் பின்னூட்டம் எல்லாம் இடுவதில்லை. மற்றபடி இந்த வாரம் தினம் ஒரு பதிவு தாருங்கள் என்று கேட்பது அனாவசியம் ;) வித்தியாசமாக தாருங்கள் என்று கேட்பது எதிர்பார்ப்பு.(உங்கள் லெமூரியா கேள்வியை படித்த பின், இப்போது அதைப்பற்றி நோண்டிக்கொண்டிருக்கிறேன் என்பது ஒரு கொசுறு தகவல். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதோ நம்மால் ஆன சோதனை)
 



பாஸ்டன் பாலாவின் ஆங்கிலப் புத்தகங்கள் ::

நீர் டைம் மேனேஜ்மென்ட் பத்தி ஒரு புஸ்தகம் எழுதினா யார் வாங்குவாங்களோ என்னவோ, நான் வாங்குவேன்... நமக்கு ஒரு நாளக்கி நாலு பக்கம் படிக்கிறதுகுள்ள நாக்கு தள்ளுதுப்பா சாமி...
 



இராமநாதனின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ::

ஒண்ணா ரெண்டா மூச்சு முட்டுதேப்பா... (அதாவது இது ஒரு கமெண்டு இல்ல, ஏகப்பட்ட கமெண்டு)
 



குமரன் வாழ்வினிலே ஓர் நாள் திருநாள் ::

குமரன் இணையத்துக்கு நீங்க புதுசுன்றதால என் வயச பத்தி தெரியாம அண்ணான்னு சொல்லிட்டீங்க.. மன்னன் மகள் எனக்கு அக்கா என்றால் என் வயசு என்ன?

*
// கடவுளும் அவள் இடையும் ஒன்று
சிலர் உண்டென்பர்
சிலர் இல்லையென்பர் //

கவிதை பற்றி போன தடவையே சொல்ல நினைத்தேன். ஆனா... சரி இப்ப சொல்லிடறேன்.

அயல்நாட்டில் நான் ஆத்திகன்
தமிழ்நாட்டிலோ நாத்திகன்


மகளிர் பாதுகாப்பு குழு வருவதற்கு முன் விடு அப்பீட்டேய்...
 



பாஸ்டன் பாலாஜியின் கூடிய விரைவில் ::

குட்டி பதிவுகள் இலக்கியமாகுமா?
 



பெனாத்தல் back with a bang ::

எப்பிடி இருந்த ஆளுன்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா இஞ்சி பத்தி நீங்க காரஞ்சாரமா பேசுனதும் ஒருவேளை அடிப்படையில கரடி வித்தை காட்டுறவராவோ இல்ல கவிஞராவோ இருந்து ப்ளாக்ல கூட கவிதை படைக்காத சமுதாயம் என்னத்துக்கு இருக்கணும் தீ தின்னட்டும்னு கண்டபடி திட்டி நான் சலூன்ல சவரம் பண்றத போட்டோ எடுத்து போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டா என்ன பண்றதுன்னு ஆ·ப் ஆயிட்டேன்.
 



பாஸ்டன் பாலா கூடிய விரைவில் ::

மஜா பண்ணுவது எப்படி?
பொம்பளக்கி எத்தன/எத்தனாவது புருசன்?
அடுத்தவன் பொண்டாட்டிய அலேக் உட்டுக்கலாமா?

-- போன்ற தலைப்புகள் சரிஆ தப்ஆ
 



நிலா குழந்தைகளை அடித்தால் ஜெயில் ::

அமெரிக்காவில் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரியாது. ஆனால் பிள்ளைகளை அடிப்பது தவறு என்ற அளவில் இது நடைமுறையில் இருக்கிறது. நல்லதொரு விவாதத்திற்கு அடிகோலியிருக்கிறீர்கள்.

அ) குறைந்த சம்பளத்திற்கு - சில ப்ரைமரி ஸ்கூல்களில் மொத்த சம்பளம் சில நூறுகள் - வேலை வாங்குவது
ஆ) முறையான டீச்சர் ட்ரெய்னிங் இல்லாமல் பக்கத்துல +2 அல்லது 10த் படிச்ச புள்ளங்க இருந்தா 6வது வரை சமாளிக்கலாம் என்று பள்ளிகள் டீச்சர்களை உருவாக்குவது
இ) டீச்சர் ட்ரெயினிங் என்பது ஏட்டுச்சுரைக்காய் அளவில் நடைமுறையுடன் தொடர்பில்லாமல் இருப்பது
ஈ)பிள்ளைகளை பயமுறுத்த பெற்றோர்கள் டீச்சர்களை உபயோகப்படுத்துவது, இவன நாலு போடுங்க என்று அவர்களே டீச்சர்களை வேண்டுவது
என்று பல காரணங்களால் குழந்தைகள் அடிக்கப்படுகிறார்கள்.

எது நல்லது என்று பெற்றோர்களுக்கு/ஆசிரியர்களுக்கு தெரியாதா? என்ற காரணம் காட்டி குழந்தைகளை அடிப்பது மிருகத்தனம். சக மனிதனுக்கு உடல் ரீதியான துன்பம் மிருகத்தனம் எனும்போது தம்மை தற்காத்துக்கொள்ள இயலாத குழந்தைகளின் மேல் உடல் ரீதியான வன்முறை மிகவும் தவறுதான். அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளின் மனநிலை பற்றி யாரும் கவலைப்படுகிறார்களா என்று தெரியவில்லை.
 



அப்பாவி ஆறுமுகம் உள்குத்து...அலம்புங்கோ அப்பு

;)))))

இந்த பாட்டை பாடி மகிழவும் :
பார்வைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம் ;))
 



குமரனின் தமிழ் இறைவனுக்கும் முன்னால் ::

// இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார் //

தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் பெருமாள் யாரை துரத்துகிறார்?

டிஸ்கி: பாருங்க, ஸ்மைலி இல்லை. ஆக இது கிண்டல் இல்லை.
 



சந்தோஷ் பின்னுட்டமும் பாலஸ்தீன பிரச்சனையும் ::



// சமுத்ரா வித்தியாசமான ஜீவராசி..அவரிடம் வாயை கொடுக்க வேண்டாம்... பொது புத்தின்னு ஒரு வார்த்தை உண்டு. அது தான் அவர் //

முத்து (தமிழினி), பொது இடத்தில் என்னத்துக்கு பண்ணையார்த்தனம். சமுத்ரா வித்தியாசமான ஜீவராசி என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதை உங்கள் பதிவில் விளக்கமாக எழுதவும். இல்லை போகிற போக்கில் சேற்றை வாரி தூற்றுவது உங்கள் பழக்கம் எனில் அதையாவது கண்டிப்பாக எழுதவும். அப்படியே உங்கள் பதிவில் எழுதும்போது, யார் யாரிடம் நீங்கள் வாயை கொடுப்பீர்கள் என்று எழுதினால் பின்னூட்ட பெட்டியில் கருத்து சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். மத்தவர்கள் பதிவுகளாவது கருத்துக்களமாக இருக்கட்டும். அதிலும் சென்று உங்கள் அறிவுஜீவித்தனத்தை காண்பிக்க வேண்டாம். இதில் லெவல் ஹெடிங் பற்றி நீங்கள் பேசுவதுதான் சிறந்த நகைச்சுவை.

*

சந்தோஷ்... இப்பதிவில் சமுத்ரா என்பவரது கருத்துக்களில் எனக்கு சில விஷயங்கள் கிடைக்கின்றன. ஆனால் முத்து என்ற பதிவர் சமுத்ரா என்ற பதிவர் மீது பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் தனி மனித தாக்குதலை ஆரம்பிக்கிறார். அவருக்கு வேறு என்ன துவேஷமோ என்னவோ.. (இப்படித்தான் பல விஷயங்கள் ஆரம்பித்தது/க்கிறது) டோண்டுவுக்கு நியாய அநியாயங்களை எடுத்துச்சொல்ல ஒரு பதிவு எழுதும் உங்களுக்கு இதிலுள்ள அ/நியாயங்கள் தோன்றவில்லையா?
 



நண்பனின் வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு ::

// இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான் //

இலக்கிய திறனாய்வு எல்லாம் செய்கிறீர்கள். ஆனால்,

இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டன

என்று எழுத வேண்டியதை

// இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான் //

என்று எழுதுகிறீர்கள்.

*

// படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது //

நீங்கள் + உங்களால் அறிவுருத்தப்படும் நிலையில் இருக்கும் உங்கள் நெருங்கிய உற்றார் உறவினர் என்ன படித்தீர்கள்/ஏன் என்பதை முதலில் ஒரு முறை சொல்லிவிடுங்கள். கருத்து கந்தசாமியாக மாறி என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் நிதர்சனத்தை சொல்லுங்கள். கூடாது என்பது உங்கள் ஆசை. நடைமுறை என்ன? நான் +2 முடித்தபோது தமிழ் இலக்கியம், எனக்கு விருப்பமான இசைக்கருவி/இசை, பொறியியல் என்ற மூன்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெறுவது என் விருப்பம் என்ற வாய்ப்பு கிடைத்த போது நான் ஏன் பொறியியல் பட்டத்தை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன். ஆசைக்கு படிப்பவர்கள் சிறுபான்மை. வேலைக்கு படிப்பு என்பதுதான் பெரும்பான்மை. சிந்தனை தெளிவுக்கு சைடில் படிக்கலாம் என்பது பகுத்தறிவு. உடனே உதாரணம் காண்பிக்கிறேன் என்று ஒற்றை இலக்கத்தில் ஆள்காண்பிக்காதீர்கள். சுற்றுமுற்றும் பாருங்கள். (ஏட்டுச்சுரைக்காய் - படித்தவர்கள் எல்லாம் நல்லபடி சிந்திக்கிறார்களா என்ற உபகேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

மாலன் எழுதியது கதை. அதை நிகழ்வாக பார்த்து, நடைமுறையிலிருந்து உதாரணமும் தருகிறீர்கள். தமிழால் வெற்றி பெற்றவர்களையும் காட்ட முடியும் என்று நீங்கள் சொல்வதை போலவே தமிழால் தான் வெற்றி பெறவில்லை என்று ஒரு கதாபாத்திரம் அந்த கதையில் நினைக்கிறது. புனைவை ஏன் புனைவாக மட்டும் பார்க்க முடியவில்லை உங்களால். கொலையை பற்றி ஒரு கதை எழுதப்பட்டால் கொலை குறித்த ஆசிரியரின் கண்ணோட்டத்தை எதிர்பார்ப்பீர்களா நீங்கள்? மாலனுக்கு கேள்வி வெறுமே உங்கள் பதிவில் மட்டும் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. அவரிடமிருந்து பதில் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 



கோபியின் இரண்டு ஜோக்குகள் ::


யப்பா, எவ்ளோ நாளாச்சி.. இருக்கட்டும் இருக்கட்டும். தப்பில்ல ;)

*

தொடர்புள்ளது/இல்லாதது பதிவு வந்தும் ரொம்ப நாளாச்சி

*

அப்புறம் இப்பதிவு பற்றி : ஹிஹி ;)
 



ஞானபீடத்தின் காப்பி - coffee ::

ஏனெனில்
காப்பி குடிப்பதுவும்
குற்றமென்றுரைக்கும்
மனமின்னும்
வாய்க்கவில்லையே
அதற்காக
 



நண்பனின் வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு ::

WOW.... I AM APPALLED
WOW.... I AM APPALLED
WOW.... I AM APPALLED


தயவு செய்து இதற்கும் பதில் அளிக்க ஆரம்பித்து விடாதீர்கள். பிரதியுபகாரமாக இனி உங்கள் பதிவில் கருத்து சொல்லவே மாட்டேன் ;)
 



திராவிட ராஸ்கல்களை ஒழிக்க முடியுமா? ::

// என்னை சீர்தூக்கி பார்த்து திருத்திக் கொள்ள உங்கள் பின்னூட்டங்கள் உதவும் என்று நம்புகிறேன் // என்று நீங்கள் சொன்னதால் மட்டும் ::

பரவலாக அறியப்படாதவராக இருக்கும் (அட்லீஸ்ட் நான் மற்றும் சந்தோஷ் என்ற அளவில் வைத்துக்கொள்வோம்) ஒருவரை பற்றி வந்து சம்பந்தமில்லாத இடத்தில் ஜீவராசி என்று சொல்கிறீர்கள். ஒருவர் துக்ளக் படித்து கண்ட இடத்தில் ஜெய்ஹிந்த் போடுவதால் அவருக்கு பொது புத்தி என்ற முடிவுக்கு நீங்கள் வந்த விதத்தை வைத்து உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட புத்தி என்று நான் நினைக்கலாம். ஆனால் அதை வெளியில் சொல்ல ஆரம்பிக்கும்போதுதான் ப்ரச்னை.

இதில் irony என்னவென்றால் அந்த பதிவின் ஆதார விஷயங்களில் ஒன்று தனி மனித தாக்குதலை பற்றியது. சந்தோஷ் பதிவை பற்றிய உங்கள் கருத்தை பற்றி ஒரு விமர்சனமும் இல்லை. அதில் சம்பந்தமில்லாத தனி மனித தாக்குதலை பற்றியதுதான் அது. அதை படித்துவிட்டு எப்படி எதிர்வினை செய்கிறார் என்பதை பொறுத்து சமுத்ராவுக்கு ஆதரவோ அறிவுரையோ வழங்க அறிவு ஜீவிகள் வரலாம்.

பின்னூட்டம் வரும்போது ஒரு பகுதிக்கு மட்டும் பதில் சொல்வது பதில் சொல்பவரின் இஷ்டம். அதில் வெறுமை இருந்தால் அதை விளக்குங்கள். சும்மா போகிற போக்கில் கமெண்ட் எழுதாதீர்கள். புதிதாக வருபவர்களுக்கு யாரையாவது எக்ஸ்போஸ் செய்யவேண்டும் என்று நினைத்தால் அவரை பற்றி நேர்மையாக ஒரு பதிவு எழுதி எக்ஸ்போஸ் செய்யுங்கள். இப்படி கண்ட இடத்தில் போய், இவனுக்கு எல்லாம் பதில் சொல்லிகிட்டு டைம் வேஸ்ட் செய்யாதீர்கள், அவன் ஒரு ஜீவராசி ஜந்து என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். அது நேர்மையற்றது. அது பண்ணையார்த்தனம்தான். இதற்கும் மூத்த வலைப்பதிவு அப்ரண்டீஸ் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு உங்கள் இஷ்டம்.

பண்ணையார்த்தனம் மட்டும்தான் எழுதியுள்ளேன் என்று சொல்லிக்கொண்டே ஆரிய திராவிட பார்ப்பனீய விஷயங்களை (அதை எல்லாம் எழுதும் அளவு படிப்பு இல்லை என்று சொல்லிக்கொண்டே) இழுத்து எழுதும் நீங்களா அப்ரண்டீஸ்? ஆல் த பெஸ்ட்.
 



தருமி திருமா நெற்றியில் திருநீறு… ::

தருமி. (தமிழ்மண) பட்டையடிப்பதை பற்றி பல பதிவுகள் வந்த் கொண்டிருந்த நேரத்தில் திருமா நெற்றியில் பட்டையுடன் கூடிய படத்தை பார்த்தவுடன் எதேச்சையாக எழுதப்பட்ட அப்பதிவு எழுதப்பட்டதற்கு மாற்றாக உங்களை போலவே பலருக்கும் தாக்கம் ஏற்படுத்தியதால் தூக்கப்பட்டது. மற்றபடி,

1)அவர் பட்டை என் கண்களை உறுத்தவில்லை.
2)விபூதி வைப்பதற்கு தகுதி தேவையில்லை
3)விபூதிக்கு நான் ஹோல்சேல் ஏஜண்ட் இல்லை
4)திருமா குறித்த ஏளனமோ உள்நோக்கமோ எதுவும் அதில் இல்லை
5) மனதை கட்டாயம் தைத்திருக்க வேண்டிய விஷயங்கள் மனசை விடுங்கள், கண்களில்கூட பட்டிருக்காது என்ற உங்கள் ஊகத்திற்கு நன்றி
6)‘இத்தகைய தரம்’ அமைவதற்கு காரணம் முகத்திரை மட்டுமே

என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நன்றி.
 



தருமி திருமா நெற்றியில் திருநீறு ::

// முன்பொரு முறை சகபதிவாளர் கழிவரை சுத்தம் செய்பவர் என்று தெரிந்தவுடன் ‘கக்கூசுகிளினர்’ என்றொரு பதிவு வந்து அதையும் காணோம்!! //

எந்த சகபதிவாளரை பற்றி நான் பேசினே/நீங்கள் பேசுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அவர் செய்யும் தொழிலை பற்றியோ (அ) அவர் ஜானிட்டராகத்தான் இருக்கிறார் என்பதற்கோ ஆதாரம் காட்ட முடியுமா? நான் படித்த வரை அவரின் பதிவாலோ, இடுகைகளாலோ அவரின் பெயரோ, தொழிலோ மற்ற எந்த பர்சனல் விஷயங்களோ இன்று வரை அறிந்திருக்கவில்லை. அவரின் இடுகைகளில் அவர் எடுத்தாண்டிருந்த - வாந்தியை புகைப்படமாக எடுத்து எழுதியது, கழிப்பறையில் விடும் குசு (தருமி, இதை வேறு நாகரீக வார்த்தைகளில் எடிட் செய்து போடுவதை பற்றி எனக்கு ஆட்சேபம் இல்லை) சத்தத்தை வைத்து எழுதியது ஆகியவை - விசயங்களின் அடிப்படையிலும், அவர் இன்னொரு இடுகையில் எழுதியிருந்த க.நா.சுவை பற்றிய விமர்சன அடிப்படையிலும் "அவருக்கு" நான் எழுதிய க.நா.சுவும் கக்கூஸ் க்ளீனரின் வாக்குமூலமும் என்ற அந்த பதிவு இரு நாட்களுக்கு பிறகு நானே பொதுவிலிருந்து மறைத்தேன். அதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டா? "கழிவரை சுத்தம் செய்பவர் என்று தெரிந்தவுடன்" என்று சொல்வதன் பிண்ணனி என்ன?

// இப்போது அதேவார்த்தைகள் சின்னவரின் பதிவில்!! இதெல்லாம் எங்கேயோ தேள் கொட்டினால் எங்கேயோ நெறிகட்டும் கதைதான்! //
இதன் மூலமாக நீங்கள் நிறுவ முயல்வது என்ன?

// அதற்கு பதிலே கூறாமல் // மற்றவருக்கு நான் சொல்லும் பதிலை எதற்கு உங்களுக்கானதாக எடுத்துக்கொள்கிறீர்கள். கேள்வி கேட்பவரை பொறுத்து என் அலுப்பு மாறும். நீங்கள் இதற்கு முன் கேட்டு நான் இதை சொல்லியிருக்கிறேனா? அடுத்த முறை எதுவும் சொல்வதற்கு முன் ஒரு வார்த்தை கேட்கவும்.
 



தருமி திருமா நெற்றியில் திருநீறு ::


எனது இடுகை காணாமல் போனது பற்றி ஏதோ ஒன்று பட்டவர்களுக்காக மீண்டும் பதியப்பட்டுள்ளது

(தமிழ்) கடவுள் நம்பிக்கை இருக்கா?

*

// அந்தப்படம் பிரபலங்களின் குலதெய்வ வழிபாடுகளைப்பற்றிய தொடர் ஆவியில் வந்தபோது எடுக்கப்பட்ட திருமாவின் பழையபடம். குலதெய்வ வழிபாடு என்பது தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு மூதாதையர் வழிபாடே. // தகவலுக்கு நன்றி.
 



தருமி திருமா நெற்றியில் திருநீறு ::

// இந்த ஒப்புதல் வாக்குமூலம் தமிழ்ப் பதிவர்கள் இனியும் காணப் போகும் “வளர்ச்சி”யை நினைத்து நினைத்து புளகாங்கிதம் அடைகிறேன் //

நீங்கள் புளகாங்கிதம் அடைய ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து நானும் புளகாங்கிதம் அடைகிறேன்.

வேறு ஏதாவது மிச்சம் மீதி ஊக குற்றச்சாட்டுகள் இருந்து அதையும் சபையில் கேட்டீர்கள் எனில் அதற்கும் ஒப்புதல் தருவதற்கு தயாராயிருக்கிறேன். உங்கள் புளகாங்கிதமே எனது குறிக்கோள்.
 



குசும்பனின் பூரணமாகாத கிரகணங்கள் ::

ரொம்ப வருசத்தப்புறம் இன்னிக்கிதான் பிரியுது பதிவு. அதுக்கே ரொம்ப நண்றி (ண் அழுத்தமாக சொல்வதை குறிக்க)
 



பாஸ்டன் பாலாவின் நிலைமை உரை

;)))))

// 'ஒன்றே காண்ட்ராக்ட்; ஒருவனே ஹாலிபர்ட்டன்' //

லாக் ஈடு மார்ட்டின் உள்பனியன் போட்டிருக்க வேண்டுமா?
 



சின்னவன் ஜொள்ளு 100 ::

1600 x 1200 விட பெரிய jessica alba படம் போஸ்டர் க்வாலிட்டி என்னிடம் உள்ளது. HQ அஸின் படம் வைத்திருப்பவர் ட்ரேடிங் டீலிங்குகளுக்கு தொடர்பு கொள்ளவும்
 



வாசன் கடிதங்கள் அல்லது ஒத்தடங்கள் ::

அழகான பதிவு வாசன்

// அப்பாவிற்கு வரும் கடிதங்கள் ஒரு வலைக்கம்பியில் குத்தப்பட்டு சேகரிக்கப்பட்டிருக்கும். சிறுவனாக இருந்த காலத்தில், குழாய்விளக்கைச் சுற்றும் பூச்சிக்களை பிடிக்க அக்கடிதங்கள் சிலவற்றில் எண்ணெய் தடவி // பசுமையாக ஞாபகம் இருக்கிறது
 



இளவஞ்சி வாசகர் கடிதம் ::

இளவஞ்சி, வார இறுதியில் (அல்லது அதற்கும் முன்பே) இப்பதிவில் நீங்கள் எனக்கு கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன், சில சுட்டிகளை தேடி எடுத்து அனுப்பி வைக்கிறேன், அப்பதிவுகளை படித்து வைக்கவும்.
 



tbr திரும்பிப் பார்க்கிறேன் 73 ::


// சரி சார். நீங்க சொன்னா மாதிரி என்னுடைய மேலதிகாரிகளுக்கு புகார் பண்றீங்க. அவங்க என் மேல நடவடிக்கை எடுப்பதும் எடுக்காம போறதும் உங்க கையில இல்ல. ஆனா உங்க கடை சாவிய என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போனீங்கன்னு உங்க மேலதிகாரிகளுக்கு தெரிஞ்சா உங்க கதி என்னாவும்? அத யோசிச்சி பார்த்தீங்களா? //


ஜோசப். நீங்கள் இதை நியாயப்படுத்த போகிறீர்களா? உங்கள் படிப்பு, பதவி, கண்ணியம் ஆகியவற்றை நம்பி கடை சாவியை உங்களிடம் நம்பி ஒப்படைத்து சென்றிருக்கிறார். (இதே அந்த ப்ரதர்ஸ் கேட்டிருந்தால் கொடுத்திருப்பாரா?) இரவில் அவருக்கு என்ன நடந்தது என்று பொறுப்பான நீங்கள் எடுத்து சொல்லவில்லை (அது லேட் என்பதால்) பகலில் கடைக்கு வந்தால் டேமேஜ் ஆகி இருக்கிறது. யாரோ என்னவோ அவரிடம் சொல்கிறார்கள். அவர் நம்பிக்கை வைத்த உங்களை எதிர்பார்க்கிறார். ஆனால் நீங்கள் என்னடா என்றால் இப்படி பேசுகிறீர்கள். நான் அவர் இடத்தில் இருந்திருந்தால் உங்கள நம்பிக்கை துரோகம் செய்தவராகவே பார்த்திருப்பேன்.
 



கோயிஞ்சாமி க்ளப் ர.ரா.க்கு பொறந்த நாளு ::

அழைப்பிதழ் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

அழைப்பிதழை பொறுத்து பிறந்த நாள் வாழ்த்து மாறும்.

தற்போதைக்கு many more happy returns of the day ramki.
 



குசும்பன் வேலி தாண்டிய வெள்ளாடுகள் ::

சிற்றிலக்கிய உலகத்த பத்தின பின்னூட்டம் ரெண்டும் பிரியல. குற்றிலக்கிய சம்மேளன உலகை பத்தின ரெண்டும் பிரியுது.. ஒன்னு சிற்றா குற்றான்னே பிரியல... நடக்கட்டும் நடக்கட்டும்.
 



இளவஞ்சி வாசகர் கடிதம் ::

வார இறுதியில் சொல்வதாக சொல்லியிருந்தேன். அதற்கு முன் பல கருத்துக்கள்.

அப்டிபோடுவின் கருத்துக்கள் நான் எதிர்பார்க்காத கோணத்தில், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. misunderstanding. என் விளக்கததை open mind எதிர்கொள்வார் என்று நம்புகிறேன்.

அரை வேக்காட்டுத்தனமாக உளறிய நண்பனுடன் மேற்கொண்டு பேச விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகும் இங்கே வந்து நண்பன் ஊளையிடுவது ஆச்சர்யம் அளிக்கிறது. சரி நண்பனுக்கு என் மேல் என்ன அக்கரை என்றும் விளக்குகிறேன்.

அனைவருக்கும் :: மரண தண்டனை விதிக்கும் முன் கொஞ்சம் பொறுங்கள். please reserve ur judgements till I come with my facts. weekend programs சில உள்ளன. ஆகவே இரண்டொரு நாள் தாமதித்தால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்று நம்புகிறேன்..
 



அப்டிபோடு தமிழ்மணம் நண்பர்களுக்கு ::

மரம். வழக்கம் போலவே உணர்ச்சி கண்ணை மறைக்க சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறீர்கள்.

உங்களுக்கும் மாடர்ன் கேர்ளுக்கும் சம்பந்தம் என்று நான் எங்கே சொன்னேன் என்று காட்ட முடியுமா?

டோண்டுவின் மீது நீங்கள் விமர்சனம் வைப்பதை திசை திருப்புவது என் நோக்கமல்ல. ஒரு நிகழ்வை பற்றிய என் கருத்தை என் பதிவில் சொன்னேன். எடுப்பார் கைப்பிள்ளைகளை மெயில் அனுப்பி கூட்டம் சேர்த்தது நான் என்பது உங்கள் யூகம். டோண்டு பதிவில் நீங்கள் அக்காரியத்தை செய்தீர்கள் என்று நானும் சொல்ல முடியும். எனக்கு இதுவரை கூட்டம் சேர்க்கும் அவசியம் கண்டிப்பாக தேவைப்படவில்லை. நாலு பேர் உங்கள் கருத்துக்கு மாற்றாக கருத்து சொன்னால் மெயில் அனுப்பி ஆள் சேர்ப்பதா? grow up.

சட்ட பூச்சாண்டியெல்லாம் சூப்பர்தான். அதற்கு முன் நீங்கள் என் மேல் வைக்கும் குற்றச்சாட்டு என்ன என்பதை சொல்லுங்கள்.

என் மேல் நீங்கள் சொல்லும் சம்பந்தமில்லாத கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு சில விளக்கங்கள்இந்த பதிவிலே இருக்கிறது. முடிந்தால் படித்துப்பாருங்கள்

 



பெனாத்தல் பாண்டுச்சோழன் சரித்திரம் ::

நல்ல நகைச்சுவை. அதிலும் புலிக்குட்டிச் சோதனைக்கு சிரிப்பை நிறுத்த நிமிடங்கள் ஆயின.
 



ஞானபீடம் உலக நீதி ::

இவ்வளவுக்கு பிறகு இப்போதுதான் உலக நீதி நன்றாக புரிகிறது.

முகமூடி

(நான் நீங்க இல்லன்னு நீங்களாவது நம்பறீங்களா?)
 



ஞானபீடம் ஒரு பக்தர் ::

ஞானபீடம், இந்த கதையை உலக ஹிட்லர், ஹிஸ்டீரியா எல்லாம் தெரியாத பிள்ளை பிராயத்திலே படித்த போது இது "மற்றுமோர் கதை"

ஆனால் இப்போது அவர்களை பற்றிய அனுபவங்களோடு இக்கதையை படிக்கும்போது இந்த கதைக்கே ஒரு புதிய பரிணாமம் கிடைக்கிறது...

அதுவும்
// ஒரு பைத்தியக்காரனின் மூளைக்கோளாறு அவனுக்கு இருக்கும் அந்தஸ்தாலும், அவன் மீது பிறருக்கு இருக்கும் மதிப்பு மரியாதைகளினாலும் பல காலம் மறைந்திருக்கலாம். பைத்தியங்கள் புத்திசாலிகளாக - அதீத புத்திசாலிகளாகவும் இருக்க முடியும். அதே காரணத்தினாலேயே ஒரு மன நோயாளியின் மீது அறியாமல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளின் காரணமாக அவனது நோய் மற்றவர்களையும் பாதிக்கிறது. சிலருக்குச் சில சமயங்களில் அந்த நோயே தொற்றி விடுவதும் உண்டு //

// அவர்கள் மனப்பூர்வமாகவே அவ்விதம் பரஸ்பரம் நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு ஆதாரமான நியாயங்கள் அவர்களுக்கு மட்டுமே புரிவன //

// யார் நம்பினால் என்ன, நம்பா விட்டால் என்ன? அவர் உறுதியாக நம்புகிறார். அவர் ராமாவதாரம்தானாம் //

போன்ற வரிகள் அற்புதம்.

வாழ்த்து உங்களுக்கும், இந்த பதிவை எழுத உதவியாக இருந்த ஜெயகாந்தனுக்கும். இந்த பதிவுக்கு நன்றிகள் பல.
 



ஞானபீடம் நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் ::

இதை நாலு மீம் என்று அழைக்கலாமா? உம் டாக்கர்ஸ் (taggers) லிஸ்டில் என் பெயரை சேர்க்காததற்கு உம் மீது வழக்கு போடலாமா என்று யோசிக்கிறேன்.

அப்புறம் ஞான... நீர் டாக்கிய அந்த நாலு பேர் மீது உமக்கு என்ன கோபமோ? உம்மோடு சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்ற வீண் பழியை அவர்கள் மீது நிறுவ உதவுவானேன்??

// Four sites I visit Hourly // இதில் பொருட் குற்றம் உள்ளது.

// முகமூடிய பாக்கவே முடியலயே // அதுக்குத்தானே முகமூடியே மதுமிதா...
 



ரவி ஸ்ரினிவாஸ் விடுதலைப் புலிகள் குறித்து சந்தியா ஜெயின் ::

As the LTTE completes a quarter century of armed conflict with the Sri Lankan state, Tamil intellectuals in the island nation are agonising over its pronounced western bias and poor returns to the Hindu community. As Indians largely perceive the LTTE as a Sri Lankan Tamil Hindu organisation, even though former Prime Minister Rajiv Gandhi was assassinated by a Christian suicide bomber

இதற்கு மேல் இந்த தமாஷ் கட்டுரையை படிக்க தேவையிருக்கவில்லை...
 



குசும்பன் பயாஸ்கோப்பு படம் காட்டுறாங்கோ ::

இதை படித்துவிட்டேன். தூங்கப்போகிறேன். தூங்க விடாமல் நடுநிசியில் வேர்க்க விறுவிறுக்க எந்திரிக்க வைத்தால் உங்கள பதிவை பற்றி நல்ல விதமாக நாலு வார்த்தை எமோஷனலாக பொங்க பொங்க எழுதுகிறேன். எழுதவில்லையெனில் குப்பையா கோபுரமா ஆராய்ச்சியில் இருக்கிறேனன கொள்க...

எப்படியிருப்பினும் இது கூச்சல் இல்லை என்பதை தாழ்மையாக சொல்லிக்கொள்கிறேன்
 



இராமநாதன் பிடிச்ச நாலு! ::


நான் இந்த நாலு வகை சங்கிலி இல்லாம புது தினுசா ஒரு சங்கிலி தொடர் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். இப்ப ஆரம்பிச்சா வேற விதமா சபையில பேச்சு வருமேன்னு சும்மா இருக்கேன். சரி நாலையும் ஒரு கை பாப்போம்.
 



ஞானபீடம் கண்ணே ரம்பா ::

அ) இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒருவரின் புறத்தோற்றத்தை கிண்டல் செய்கிறீர். அதற்கு நான்கு பேர் பின்னூட்டம் வேறு போடுகிறார்கள்.

ஆ) இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ரம்பா பெண் என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாமல் ஆண்வர்க்க மேலாதிக்கத்தில் இப்படி சிந்தித்து அதையும் வெளியில் சொல்லி நீரும் MCP கூட்டத்தில் ஒருவர் என்ற உமது உண்மையான முகத்தை தோலுரிந்து வெளியுலகிற்கு உமது அழுகிய... இதற்கு மேல் உணர்ச்சி பெருக்கில் வார்த்தைகள் வரவில்லை. நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

- முகமூடி (செக்கூலரிஸ்ட்/பெண்ணியவாதி)

யோவ் ஞானபீடம், நான் மூணாப்பு படிக்கிறப்போ (அப்போ நீர் காலேஜ்) வெளியான ஜோக்கையெல்லாம் இப்ப பதிவா போடுறீர்? இதுல அம்பிகா பதிவுக்கு லிங்க் வேற. வயசான காலத்துல இது தேவையா?

// பளிச்சுனு ஒரு ஜோ படம் போடுங்க // கொத்தனார், ஞாபீ கூட சேர்ந்து உமக்கும் வயசாயிடுச்சா? அஸின் பொண்ணு, ஜூனியர் சிவாஜி (சிவாஜி பார்ட் 2) படத்துல மகன் ரஜினிக்கி ஜோடியா நடிக்கிற காலத்துல ஜோ படமெல்லாம் கேட்டுகிட்டு.

- முகமூடி (சாதா/சோதா பதிவர்)

PICK THE RIGHT ME.
 



நிலா பூப்பறிக்க வருகிறோம் ::

இளவல்கள் குமரன், பமக கொபச(ஐரோப்பா) ஆகியோரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க எனது ஓட்டு மட்டுமல்ல ப.ம.க தொண்டர்கள் பத்து கோடி பேரின் ஓட்டுக்களும் ரோஜா அணிக்கே என்று இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

(காசு மாலை மட்டும் போதும்பா)

பி.கு :: ஏம்பா ரோஜா அணின்னு என்ன ரிடையர்டு பேரா வச்சிருக்கீங்க... ஒரு அஸின் அணி, த்ரிஷா அணின்னு வைக்கக்கூடாது?
 



இலவசக்கொத்தனார் உடன்பிறப்பிற்கு ஒரு கடிதம் ::

இராம்ஸ் & கொபச.. டென்ஷன் ஆகாதீங்க. நேரடியாத்தான் பேசரதில்லையே தவிர திரை மறைவில பேசிகிட்டுத்தான் இருக்காங்க. அடுத்த பொதுக்குழுவுல மிச்ச விபரம் சொல்றேன்.

அப்புறம் நம்ம ஓட்டையும் போட்டாச்சி.. காசுமாலை மட்டும் இல்ல கட்சி வளர்ச்சி நிதியும் தாராளமா கொடுங்க. தேர்தல் நேரம்.
 



பாபா Jeyamohan (Audio Blog) ::

நல்லாத்தான் இருக்கு.. ஆனா எழுத்தில் கிடைக்கும் வாசக கற்பனை அனுபவம் இதில் மிஸ்ஸிங்... மாடுலேஷனின் ப்ரச்னையா அல்லது நீங்கள் இந்த பதிவில் எடுத்தாண்ட சப்ஜெக்ட்டின் ப்ரச்னையா தெரியவில்லை. (அல்லது என் ரசனைக்கு ஆடியோ புக்ஸ் போன்ற monologues பிடிக்காது என்பதும் காரணமாக இருக்கலாம்)

பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
 



பாபா Thrumavalavan on Tamil Cinema Politics ::

// சினிமா தொடர்புடையவரே அடுத்த முதல்வராக முடியும் என்பதுதான்.... //

செய்தி :: விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அரசியலில் பிரபலமான பிறகு சினிமா துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். திருமாவளவன் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகும் அன்புத்தோழி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதில், பொது மக்களுக்கு உதவி செய்யும் போர்ப்படை தளபதியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். போலீசார் சென்று தீர்க்காத பல பிரச்சினைகளை, திருமாவளவனின் போர்ப்படை தலையிட்டு நியாயத்தை நிலை நாட்டுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுமுகங்கள் கதாநாயகன்- கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், திருமாவளவன் வரும் காட்சிகள் 45 நிமிடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் பேசும்படி இருக்கும். திரைப்பட உலகில் திருமாவளவனுக்கு தனி இடம் கிடைக்கும் என்று அன்புத்தோழி பட இயக்குனர் கே.எஸ். சரவணன் கூறுகிறார்.

இந்த படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு, திருமாவளவன் தலைமை தாங்குகிறார். கேசட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிடு கிறார்.
 



இராம்ஸ் தலைவா! இப்போவாவது?
::

எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்...

*

மரியாதையா ப.ம.க நிறுவன தலைவர் முகமூடிக்கு விடுத்த அறைகூவல் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவும்.
 



மூக்கு லல்லல்லா...லாலு ::

// ஊழலையும் பைலட்டாக வேலைபார்த்துவிட்டு வந்தவர் செய்தால் ஒரு மாதிரியும், விவசாயி செய்தால் ஒரு மாதிரியும் பார்க்கவேண்டுமென்பது சமூக நீதியின் பாலபாடம். //

விவசாயி ஜெயலலிதாவோட ஊழலை பத்தி எழுதலாம்னு இருந்தேன். நல்ல வேளை.. பழியில இருந்து தப்பித்தேன்...
 



சரி, உங்க கருத்து ??