<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

பின்னூட்டங்கள் 101 - 150


பின்னூட்டங்கள் 101 - 150

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தமிழ்சசி திமுகவிற்கு தோல்வியா ? ::

நல்ல அலசல். ஆனால் உங்கள் கணக்கில் சில ப்ரச்னைகள் இருந்தன.

பாமகவுக்கும்ம் மதிமுகவுக்கும் (26 அ 30) சரிசமமாக தொகுதிகள் வழங்குவதை பாமக விரும்பவில்லை. அதன் மூலம் மூன்றாமிடம் என்ற தனது இமேஜுக்கு பங்கம் வரும் என்றே கருதியது. சில நாட்களுக்கு முன் திருச்சி மாநாட்டில் தான் கலந்து கொள்ள விதிக்கும் நிபந்தனை என்று மதிமுகவை விட இரு சீட்களாவது வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்ததாக வந்த செய்தியை கவனிக்கவும்.

பாமக விடுதலை சிறுத்தை உள் ஒதுக்கீடு கூட்டணி (30) திருமா விரும்பவில்லை. தன்னை நேரில் அழைத்து கருணாநிதி பேச வேண்டும் என்பதையே ஆரம்பத்தில் இருந்து கேட்டு வருகிறார். நேரில் அழைகப்பட்டால் ஏற்படும் தர்மசங்கடங்களை தவிர்க்கவே கருணாநிதி உள் ஒதுக்கீடு கோஷத்தை முன்னெடுத்தார். அதிமுகவில் கொடுத்த இடத்துக்கு ஓகே சொன்ன திருமா திமுக என்றால் கொஞ்சம் முரண்டு பிடித்திருக்கலாம்.

மற்றபடி மதிமுக வெளியேறியது திமுக எதிர்பார்த்தே செய்த மூவ்தான். இன்றைக்கில்லாவிட்டாலும் நாளை திமுக பதவியில் இருந்து கருணாநிதி ஓய்வு பெறும் நிலை வந்தால் ஸ்டாலினின் எழுச்சிக்கு திமுகவிற்குள் எழும் எதிர்ப்பை வைகோ சுலபமாக அறுவடை செய்வார். அதை கண்டிப்பாக கருணாநிதியோ முக்கியமாக ஸ்டாலினோ விரும்ப முடியாது.

எல்லாவற்றையும் விட திமுக 130 தொகுதிகள் என்பது அதற்கு பாதகமே. அதிமுகவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பலை இல்லாத இந்த நேரத்தில் 130 தொகுதிகள் என்பது அறுதிப்பெரும்பான்மை எடுப்பதற்கு கொஞ்சம் சவால்தான். மெகா கூட்டணி என்பது மத்திய அரசியலுக்கு நன்றாக இருந்தது. ஆனால் மாநில அரசுக்கு? எங்கே இவ்வளவு கட்சியோடு போட்டியிடும் திமுக அறுதி பெரும்பான்மை எடுக்காமல் போனால் கூட்டணி அரசாக ஆகலாம் என்ற எண்ணம் மக்களை அதிமுகவிற்கே ஓட்டு விழ செய்யும். மாநில அரசில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஏகப்பட்ட ப்ளாக்மெயிலுக்கு உட்படும் மெகா கூட்டணி, நிலையான ஆட்சி என்பதாக ஒரு மனநிலை வரும், அது திமுக மெகா கூட்டணிக்கு எதிர்ப்பாகவே அமையும்.

எல்லாமே எதிர்பார்த்ததுதான். எதிர்பாராத ஆண்டி-க்ளைமேக்ஸ், திருமாவளவன் மட்டுமே. வைகோ முன்பே பிரிந்து சென்றிருந்தால் திருமா திமுக கூட்டணியில் சேர்ந்திருக்கலாம். அப்படியில்லாமல் முன்பே அதிமுக விசியை வளைத்ததுதான் அதன் புத்திசாலித்தனம்.
 



பாலசந்தர் கணேசன் என்ன தான் சாப்பிடுகிறார் கலைஞர்? ::

கவுன் அரிசி என்றால் என்ன? சாதாரண அரிசிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
 



ஜோ கலைஞர் தடுமாறுகிறார் ::

// இராமதாசின் மகளும் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிகிறது. எங்கென்று தெரியவில்லை //

பூம்புகாராக இருக்கலாம். ரொம்ப காலமாகவே பாமக மகளிர் அணி அங்கே ஏதாவது ஒரு பெயரில் விழா எடுத்து தம் இருப்பை பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
 



நிலா நட்சத்திர பேட்டி ::

// ஆழமான நதியில் கணவன் ,மனைவி ,செல்ல குழந்தை,மற்றும் படகோட்டி இவர்கள் ஓர் சிறிய படகில் பயணம். பயணம் இனிதாக இருக்கும் ஒரு திருப்பத்தில் ஓர் கொடும் முதலை படகை துரத்தியது. இந்த விளையாட்டை எட்டி பார்த்த சிறுவனை கண்டு விட்டது முதலை! அவனின் சிறு கரத்தை கவ்வி பிடித்தது முதலை.இன்னும் ஓர் வினாடியில் அந்த குழந்தை முழுவதுமாய் முதலை வாயில்! //

இந்த சம்பவம் ஒகேனக்கலில் உண்மையில் நடந்தது. அதில் சம்பந்தப்பட்ட குடும்பம் எனக்கு நேரடியாக தொடர்பு கிடையாது எனினும் எங்களுக்கு அறிமுகப்பட்ட குடும்பம்.. கடைசி வரை அந்த குழந்தையை காப்பாற்ற முனைந்தனர். முடியவில்லை. குழந்தையை கண்முன் காவு கொடுத்த அதிர்ச்சியில் குழந்தையின் தாயாருக்கு சித்த பிரமை பிடித்துவிட்டது... சமீபத்தில் சன் டிவியில் இதை ஒரு சம்பவமாக சொல்லி இதை வைத்து எப்படி திரைக்கதை அமைப்பீர்கள் என்று சினிமா நட்சத்திரங்களிடம் கேட்டு கேவலப்படுத்தியிருந்தார்கள்...
 



தமிழ்சசி திமுகவிற்கு தோல்வியா ? ::

// MDMK, PMK, DPI, Puthiya Thamizhagam, CPI, CPM should have joined together and tried a formidable third party alliance. But none of these parties have any self-confidence and respect for other parties. //

LOL.. and who would they front as Chief Minister candidate ??
 



ஸ்ருசல் பிரியாரிட்டி பூஸ்டிங் ::

// ஒரு இசைக்கலைஞர் மிகச் சிறப்பாக 5 படங்களில் இருந்து பின்னணி இசையினை வயலினில் வாசித்துக் காட்டினார் //

Itzhak Perlman (விழாவை அப்பப்போ எட்டி பார்த்தது... நீங்கள் வேறு யாரையாவது குறிப்பிடுகிறீர்களா என்று தெரியவில்லை)
 



கார்த்திக்ரமாஸ் உறிஞ்ச, பளபளவென உமிழ ::


சன்னாசி பதிவில் karthikramas Says: பதிந்ததற்கு நன்றி.முகமூடியின் நேர்மைக்கு இன்னுமொரு சான்று. இதற்கும் ஏதாவது வழவழாகொழகொழான்னு லெக்சர் அடிக்கலாம். இத்தோடு இதைவிட்டு நகருங்கள்...

சூப்பரு கார்த்திக்க்.. நான் சாயங்காலம் 6:03க்கு உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிச்சேன்... ஒண்ணுமில்ல கீழ இருக்கும் பின்னூட்டத்த கொடுத்து என் பேர்ல கொஞ்சம் பப்ளிஷ் பண்ணுங்கன்னு ஒரு வேண்டுகோள்தான்... ஆனா பாருங்க 9:08க்கு போலி எழுதிய பின்னூட்டம் வெளி வருது... ஆனா நம்முது இன்னமும் காணோம்.. உடனே ஆஹா பாரீர் கார்த்திக்கின் நேர்மைக்கு இன்னுமொரு சான்று என்றெல்லாம் கூவப்போவதில்லை நான்... நீங்கள் இன்னமும் மெயில் பார்க்கவில்லை, அல்லது மெயிலில் வரும் கருத்துக்களை பப்ளிஷ் பண்ணுவதில்லை என்பது உங்கள் கொள்கை என்றெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உங்களுக்கு மெயிலில் அனுப்பிய என் பின்னூட்டத்தை உங்கள் பின்னூட்ட பெட்டியில் போடுகிறேன்... இப்போது மணி 9:40

*

// முகமூடி “சம்பந்தப்பட்ட கமண்ட் பகுதிய மட்டும் எடிட் பண்றதுல” கெட்டிகாரராமே?
அண்ணரோட கமண்ட்க்கு எவ்வளவு சம்பந்தம் இருக்குன்னு யாருக்கு வெளிச்சமோ?
அங்க எழுதுனா வருமோ வராதோன்னுதான் இப்படி ஒரு கழிவுப்பதிவு எழுதவேண்டிய நிலைமை வந்துடுச்சு. //

கார்த்திக்ராமாஸ் என்பவர் விளக்கு பிடிப்பதில் கெட்டிக்காரராமே? மாமா வேலை பார்ப்பதில் கெட்டிக்காரராமே? கூஜா தூக்குவதில் கெட்டிக்காரராமே? ஜால்ரா அடிப்பதில் கெட்டிக்காரராமே? என்றெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான்.... அப்புறம் எஜமானுக்கு ஆபத்து என்றவுடன் சிலிர்த்துகிட்டு முட்ட ஓடும் கிடாவுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் வேணுமில்ல, அதனால எழுதல..

அப்பிடியே ஒரு ப்ளாஷ்பேக் உடலாம் ராமரு... உணர்ச்சி வசப்பட்டு கண்டபடி சவடால் விட்டுகிட்டு கிடந்தா அதுக்கு பேரு தில்லாம்... அந்த தில்லோட சில பேரு இருண்டதெல்லாம் அரண்டவனுக்கு பேயின்னு கூச்சல் போட்டுகிட்டு கிடந்த நேரம்... பதிவு போட்டு, தனி மெயிலு அனுப்பின்னு ஆளு சேத்துகினு புகை மூட்டத்துக்கு நடுவில ஜால்ரா சத்தம் மட்டும் கேக்குது, என்னதாண்டா கெரகம் நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது... அய்யா ராசாங்களே, உங்க கற்பனை குதிரைய கொஞ்சம் அடக்கி வையுங்க, போன்ல சிலரு சொல்றதெல்லாம் உண்மையின்னு "நியூஸ கேள்விப்பட்டவுடனே வீச்சரிவாள தூக்கிகிட்டு அலையுற தொண்டன் மாதிரி" வராதீங்க. உங்க நினைப்பு தப்பான புரிதல்யான்னு என் தரப்பு சண்டைய போட்டுகிட்டு இருக்கிற இடத்துக்கு வந்து எட்டி பாக்குறாரு சன்னாசி...

அட, இப்படித்தான் பாரு ஒரு காலத்துல என்ன ஆச்சின்னான்னு அவரோட சொந்த கதை சோக கதைய ஆரம்பிக்கிறாரு... ஏற்கனவே உம்மை மாதிரி அறிவாளிகள் ஒருசில ஆளுங்க வெள்ள காக்கா பறக்குதுன்னாலும் போதும், அதை படிக்கிறீங்களோ இல்லையோ உடனடியா வரிக்கு வரி உடன்பட்டு இம்சை படுத்துவீர்கள். இந்த லட்சணத்தில் சன்னாசியின் தமிழ் வேறு கொஞ்சம் புரிதலுக்கு கஷ்டமானது... வர்ற ஆளுங்க எசகு பிசகா புரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கய்யா... வேற நேரமின்னா ஒரு ப்ரச்னையும் இல்ல, இப்ப என் தற்காப்பு சண்டையில நீங்க வந்து உங்க ப்ரச்னைய ஏன் ஆரம்பிக்கிறீங்க சன்னாசின்னு கேட்டேன்.

விபரமா இங்க இருக்கு, முடிஞ்சா மூளைய தக்கிணியூண்டு காலி பண்ணிகிட்டு வந்து படிச்சி பாரும்

சன்னாசியின் பின்னூட்டமோ :: ஒரு பதிவு, அதுக்கு வந்த அத்தனை பின்னூட்டங்கள், அதுக்கு சன்னாசி புதுசா கொடுத்திருக்கிற பொழிப்புரைன்னு மொத்தம் 3350 வார்த்தைகள்.

ஆகையால சன்னாசிகிட்ட நான் கேட்டது இது :: சன்னாசி அவர்களே, உங்க பின்னூட்டத்த நசுக்க எண்ணம் இல்ல... வேற சந்தர்ப்பம்னா இத வெளியிட ஒரு ப்ரச்னையும் இருக்காது. இப்ப அரைகுறை அறிவாளிகள் கூச்சல் போட்டுகிட்டு இருக்கிற நேரத்துல, சம்பந்தமே இல்லாம என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியாத ஒரு பெரிய பின்னூட்டத்த இங்க போட்டா என்ன அர்த்தம்னு கொஞ்சம் விளக்கினீங்கன்னா போடறேன், அது வரிக்கும் வெயிட் பண்ணிகிறேன்னு..

அவ்ளோ பெரிய பின்னூட்டத்துல நான் என் பெயரில் எழுதியிருந்த ஒரு 4 வரி தவிர வேறு ஒருவகையிலயும் நான் அந்த இடத்துல சம்பந்தப்படல... அவ்ளோ பெரிய விவாதத்ததுல நான் எழுதியிருந்தது மொத்தமே அந்த 4 வரிதான்.. அதுவும், என்ன குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டுச்சோ, அத மறுதலிப்பதற்கான கருத்து மாதிரி தெரிஞ்சுதால அத மட்டும் எடுத்தாண்டேன்.

இல்லப்பா இத நீ வெளியிட்டே இருக்கணும்னு சன்னாசி சொல்லியிருந்தா வெளியிட்டுறுப்பேன்.. ஆனா சன்னாசி மட்டுறுடுறுடுறுத்தல்னு ஒரு பதிவா அத போட்டுட்டாரு... அங்கியும் போயி முகமூடியோட நேர்மைய கேள்வி கேட்ட ஆளுதானே நீர்... உமக்கு புரியாததா... அப்படியும் அந்த பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணேன்... ஆனா அவ்ளோ பெரிய பின்னூட்டத்தோட (ஏற்கனவே என் பதிவு பெருசு) என் பதிவு hanga ஆரம்பிச்சிட்டுது.. அதனால அத வேற இடத்தில் வைத்திருந்துவிட்டு, அதான் சன்னாசிகிட்ட இருக்கே இங்க வேறயான்னு அழித்துவிட்டேன்...

இந்த ஒரே ஒரு பின்னூட்டம்தான் இது வரை நான் கை வைத்த பின்னூட்டம்... அதுவும் அசந்தர்ப்பமான நேரத்தில் வந்தது, மிகப்பெரியதாக இருந்தது என்று சரியான காரணங்கள் இருந்தாலேயே... வேறு என்ன பின்னூட்டத்தை எடிட் செய்வதை நீர் கண்டீரோ தெரியவில்லை (இதற்கு முன்பு இரண்டு பின்னூட்டங்கள் தவறுதலாக reject செய்யப்பட்டிருக்கின்றன... அதுவும் நீ என்ன பெரிய புடுங்கியா, உருப்படவே மாட்டே என்ற ரேஞ்சில் அநானிமஸாக கேட்கப்பட்டதுதான்.. அதை மறைத்து இமேஜ் பில்ட்-அப் செய்யும் நிலையிலா நான் இருக்கிறேன்...)

இதற்கு முன்பு இப்படித்தான் பெயரிலி வேறு யாரையோ குற்றம் சாட்டுமிடத்து சம்பந்தமேயில்லாமல் என் ஐ.பியை எடுத்து வெளியிட்டு "சந்தேகத்தின் பலனை அளிக்கிறேன், அள்ளிப்பருகு" என்று கூவினார்... "என்னய்யா இப்படி செய்கிறீர், உம்ம கயவாணித்தளத்துக்கு அடிப்படையில ஏதாவது அர்த்தம் இருக்கா"ன்னு கேட்ட என் கேள்விக்கு இன்று வரைக்கும் அவரிடம் பதிலில்லை...

இப்போது "சந்தேகத்தின் பலனை தரும்" வேலையை நீர் ஆரம்பித்திருக்கிறீர்... இனி உம்மாதிரி அடியாட்களோடு பேசுவதே அவமானம் என்றுதானே நான் சமீப காலமாக உம்மோடு பேசுவது கூட இல்லை.. இருந்தாலும் சந்தேகத்த்தின் பலன் தராசு ஓவரா டகால்ட்டி அடிக்கும் போது நம்மலும் பேசலைன்னா நல்லாருக்காது இல்ல... எவனா எதுனா சொன்னா பேசாம இருப்போம்னு இருந்தா கூட எதுனா புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்கய்யா... ஒரு பதிவு போட்டு, அதில் “சம்பந்தப்பட்ட கமண்ட் பகுதிய மட்டும் எடிட் பண்றதுல” முகமூடி கெட்டிகாரராமே? என்று எனக்கும் ஒரு சைடு கிக்கு... என்ன .யித்துக்குடா இப்படியெல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாம எழுதறீங்க, இதுக்கு எதுவும் அர்த்தம் இருக்கா என்று கேட்டால் ஒருத்தனும் பதில் சொல்ல போவதில்லை... ஆனா, கேட்ட கேள்விக்கு வழக்கம் போலவே வழக்கமான அதே கூட்டம் வந்து அறிவுரையும் ஆலோசனைகளையும் அங்கலாய்ப்புகளையும் அள்ளி வீசி ஒரே கொண்டாட்டம்தான்... நடத்துங்க ராசா நடத்துங்க...
 



கார்த்திக்ரமாஸ் உறிஞ்ச, பளபளவென உமிழ ::

அதான் உங்க நேர்மைய சந்தேகப்படப்போவதில்லைன்னு சொன்னனே ராசா.. அப்புறம் எதுக்கு உணர்ச்சிவசப்பட்டுகிட்டு.. 40 நிமிசம் போலி பின்னூட்டம் இருந்தது, தகுந்த விளம்பரம் பரவியதும் அதை அழித்தும் விட்டாச்சி. இடையில் குருவந்தன பாடலும் பாடியாச்சு.. இருந்தாலும் நீங்க மெயில் பாக்கலேன்னு நான் நம்பலென்னு உண்மையத்தான சொன்னேன்... எதுக்கு கோச்சுக்கறீங்க...

// அது எப்படி உங்களுக்கு பாதகமானதை மட்டும் எடிட் செய்து //

exactly இதை, இதை, இதையேத்தான் கேட்டிருந்தேன் சன்னாசிகிட்ட... சன்னாசி நான் போலி இல்லைங்கிறப்ப, நீங்க உங்க ப்ரச்னையோட யாரையோ பத்தி சொல்ல இந்த இடத்துல வந்து பொடிமட்டை பிரிச்சா, புரியாத அரைவேக்காடுங்க வேற விதமா புரிஞ்சி ஆடுங்க.. அதனால கொஞ்சம் பொறுங்கன்னேன்... அது மட்டும் இல்ல, இந்த வேலைய என்னிக்கு இருந்தாலும் நீங்க செய்வீங்கன்னு அப்பவே தெரியும்.. அப்பவே சன்னாசிகிட்ட நான் சொன்னது :: "எவ்வளவோ முறை சொல்லியும் மீண்டும் இதை இங்கேயும் அங்கேயும் (அ) ஒன்றும் புரியாமல் அல்லது சிந்திக்காமல் (ஆ) எஜமானுக்கு தனது அப்பட்டமான விசுவாசத்தை காண்பிக்க இன்னுமொரு வாய்ப்பு என்ற ரீதியில் எழுதும் கார்த்திக்ராமாஸ் ஆரம்பித்து வைக்கலாம்"

*

// சன்னாசி முழ நீளம் எழுதிய பதிவுக்கு நீங்கள் பதில் சொன்னாலே போதும் நான் வேறு புதுசா எழுதத் தேவையில்லை // என் பதில் என்னான்னு சன்னாசிக்கு நல்லாவே தெரியும்.. ஒரு தடவை எனது "மீள்பதிவு - நாய் அழகுதான் கடிக்கும் வரை" பதிவை படித்து பார்க்கவும்..முக்கியமாக இந்த பின்னூட்டத்தை தனக்கு வேண்டாததுன்னு கண்ண மூடிக்கிட்டே அலையிற உங்களுக்கு அது தெரியாமல், தெரிஞ்சாலும் உங்க மூளைக்கு அது புரியாமல் போகலாம்.. அப்போது சன்னாசிக்கு மடலனுப்பி என்னவென்று அறிந்து கொள்ளவும்... தெரிந்த பின்னும் தெரியாத மாதிரியே, செய்யும் வேலையை புத்துணர்ச்சியோடு செய்யவும். (குரு தூவியிருந்த லிங்க்ஸ் சிலத தொட்டு பார்த்தேன்.. செம இண்ட்ரஸ்டிங்பா... மூணு வருசமா சிண்டு முடியிற/சண்டை போடுற வேலைய எப்படிய்யா அலுக்காம செய்யறீங்க... அதுல டாப் காமெடி எதுன்னா, குருவை ஒரு வார்த்தை சொல்லிட்டானேன்னு, நீங்க வா.மணிகண்டன பாத்து குறைப்பதை விட்டு , உபயோகமாய் ஏதாவது எழுத முயற்சி செய்யுங்கள்னு சொன்னதுதான் )
 



ஞானபீடம் வீரன் ::

:))) அடங்க மறுக்கறீரே...

கவிதை அருமை... மூசிக் இந்தியா ஆன்லைன் லிங்க் கிடைக்கலையா??
 



கார்த்திக்ராமாஸ் உறிஞ்ச, பளபளவென உமிழ ::

// அடாடா, முகமூடி! அற்புதம். நாகரீகத்தைப் பற்றியெல்லாம் முழ நீள சொற்பொழிவாற்றுபவர்களின் யோக்கியதைகள் தெளிவாகின்றன //

ஆஹா... வாங்க சுதர்சன்.. என்னடா இன்னமும் காணோமேன்னு பார்த்தேன்... வந்துட்டீங்க... ஸ்கூல்ல ஒரு குழந்தை அழுதுகிட்டே வாத்தியாரம்மாகிட்ட போச்சாம்...

ரமா :: டீச்சர் டீச்சர், அவன் என்ன குத்திட்டான்..
டீச்சர், அவனிடம் :: ஏண்டா ரமாவ குத்துன
அவன் :: ரமாதான் டீச்சர் என்ன வம்புக்கிழுத்து முதல்ல அடிச்சான்
டீச்சர், ரமாவிடம் :: ஏண்டா இது உண்மையா
ரமா :: நான் வம்புக்கிழுத்தது, அவன அடிச்சது எல்லாம் உண்மைதான் டீச்சர்... ஆனா நான்
அடிச்சது அவனுக்கு வலிக்கவேயில்ல.. ஆனா அவன் குத்துனது எனக்கு வலிக்கிது
டீச்சர் அவனிடம் :: எலேய் ரமா அடிச்சா, நீயும் அடிக்கத்தானே செய்யணும்.. நீ எப்படி குத்தலாம்.. அதுவும் வலிக்கிற மாதிரி... நாகரீகம் கெட்ட பயலே... உன் யோக்கித இப்பத்தாண்டா தெளிவாகுது...

இதுவரைக்கும் கேவலமான முறைகளில் கேவலமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி நான் திட்டப்பட்ட போதெல்லாம், அதற்கெல்லாம் நாகரீகமாக நான் விளக்கம் கொடுத்த போதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்களோ தெரியவில்லை... மிகச்சாதாரணமாக நாகரீகமான முறையில் நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், "முகமூடி தன் புண்ணை புறவெளியில் தானே நக்கி சுகம் காணும் நாய்" என்று எதிர்வினை வைத்தவனின் யோக்கிதையை உங்களுக்கு கேள்வி கேட்க தோன்றவில்லை. வார்த்தைகளில் எழுத முடியாத வசவு சொற்களை கொண்டு என் மீது கவிதை புனையப்பட்ட போது, என்னை ஒருமையில் விளித்து அநாகரீக கூச்சல்கள் எழுந்தபோது, என்னை எப்பவுமே அ·றினையாக விளித்தே ஒருவர் எழுதியபோது, சமூகத்தில் இழிதொழிலாக நினைக்கப்படும் தொழிலை நான் செய்வதாக சொன்னபோது எல்லாம் நீங்கள் வேறு வேலைகளில் மும்முரமாக இருந்திருக்கலாம். ஏனெனில் அப்பொழுதெல்லாம் உங்களிடமிருந்து ஒரு முணுமுணுப்பு கூட எழவில்லை... இப்பொழுது கூட வைக்கலாம், எல்லாம் இணையத்திலே இன்னமும் இருக்கிறது... ஆனால் வைப்பீர்களா? என்று எனக்கு தெரியாது.. எப்பொழுதும் நான் "நாகரீக" மொழியில் பதில் சொல்வது அல்லது பதிலே சொல்லாமல் அமைதியாக கடந்து போவது எல்லாம் உறைக்காமல், சும்மா சும்மா இப்படி எதையாவது எழுதிக்கொண்டே இருந்தால் என்ன எப்படி?

இப்பொழுதும் கூட கார்த்திக்ராமாஸ் பி.கே.எஸ்ஸை நோக்கி என்னவோ எழுதுகிறார் என்றால் அதை பற்றி (மட்டும்) எழுதுவதை விட்டுவிட்டு போகிற போக்கில் என்னை பார்த்து "சம்பந்தப்பட்ட கமெண்ட் பகுதியை எடிட் பண்றதில் கெட்டிக்காரராமே" என்று என்னவோ எழுதுகிறார் கார்த்திக்ராமாஸ்... அவர் கருத்தில் ஒரு லாஜிக் இருந்தாலாவது அதுகுறித்து எனக்கு ஆட்சேபமில்லை... ஆனால் இவரோ, தான் மதிப்பு வைத்திருப்பவர்கள் எழுதும் எழுத்தை முழுவதும் படிக்காமலேயே ஒரு குன்சாக புரிந்துகொண்டு கருத்து எழுதுபவர்... உதாரணமாக இந்த பதிவின் முதல் இரண்டு பின்னூட்டங்களை பாருங்கள் மொத்த பதிவே 3 வரிகள்தான்.. 3 வரி பதிவையே முழுவதுமாக படிக்காமல் அவசர அவசரமாக தனது இருப்பை காண்பிக்க எழுதும் கார்த்திக், சன்னாசியின் ஒரு பெரிய பதிவை படித்து அது எதற்காக எழுதப்பட்டது என்று கூட புரியாமல் அதிலிருந்து வெறுமே இரு வரிகளை பார்த்துவிட்டு வந்து என் மீது சேறு பூசுகிறார். இது என் நேர்மையை சந்தேகப்படுவதாக உங்களுக்கு தோன்றவில்லையா? இதுவே வேறு ஆளாயிருந்தால் "அவரோட நேர்மையை கேள்வி கேட்ட நீ உருப்படவே மாட்டே" என்றேல்லாம் 13 பேர் வரிசையாக வந்து ஆதரவு குரல் கொடுத்திருப்பார்கள்...

எடிட் செய்வது என்பது என்ன? ஒருவர் ஒரு விஷயம் எழுதினால் அதில் சில வரிகளை நீக்கி சேர்த்து கத்தரித்து அக்கருத்தை எழுதியவர் பெயரிலேயே எழுதியவர் கருத்து போல் வெளியிடுவது... சன்னாசி ஒரு பின்னூட்டம் கொடுத்த போது அவர் பின்னூட்டத்தை முழுவதுமாகவே நிறுத்தி வைத்துவிட்டு (ஏன் என்று சொல்லி சொல்லி சலித்துவிட்டது) சன்னாசியிடம் நான் அது குறித்து ஒரு கேள்வி கேட்கிறேன். சன்னாசியின் பின்னூட்டத்திலிருந்து 4 வரிகள் என் கேள்வியில் இருந்தால் அது சன்னாசியின் பின்னூட்டத்தை எடிட் செய்வதாக அர்த்தமாகுமா? இதெல்லாம் சுயசிந்தனையோடுதான் எழுதுகிறார்களா? மேலும் இதை வைத்து "முகமூடி அப்படியாமே" என்று குழாயடி ஆள் மாதிரி கேட்டால் என்னய்யா சொல்வது?

சும்மா on-the-fly சேறு பூசுபவர்களுக்கு வெறுமே விளக்கம் மட்டும் கொடுத்து கொடுத்து கொடுத்து கொடுத்து, சரி ஒரு உதாரணம் கொடுத்தாலாவது புரிகிறதா என்று அப்படி எழுதினேன்... உடனே வந்துவிடுங்கள் "ஒரு சார்பு யோக்கிதை" வாதத்தை தூக்கிக்கொண்டு... அடப்போங்கய்யா...

சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். ஆனாலும் கார்த்திக் புதுசாக ஒரு ராகத்தை கண்டுபிடித்து drums வாசிப்பார், அதை அவசியம் பாருங்கள், சுவாரசியமாக இருக்கும்... நான் conclude செய்கிறேன் :: You come with whatever weapons that you have in your arsenal... but there is no weapon as powerful... as that of an idea whose time has come... நன்றி

*

// முகமூடி என்ன நினைத்து சொல்கிறீர்களென்று புரியவில்லை //

சன்னாசி :: என் விளக்கத்தை படிக்கும்போதுதான் மூளையை சுத்தமாக மூடிக்கொண்டு படிக்கிறார் கார்த்திக். நீங்கள் விளக்கம் தந்தாலாவது அவர் மூளை திறந்து கேட்பாரா என்ற அர்த்தத்தில்தான் எழுதினேன்.. மற்றபடி எதுவும் நினைக்கவில்லை...
 



கார்த்திக்ராமாஸ் உறிஞ்ச, பளபளவென உமிழ ::


// என்று எதிர்வினை ******* யோக்கிதையை உங்களுக்கு கேள்வி கேட்க தோன்றவில்லை //

"என்று எதிர்வினை வைத்தவனின் யோக்கிதையை உங்களுக்கு கேள்வி கேட்க தோன்றவில்லை" என்பதே நான் எழுதியிருந்தது... என் பின்னூட்டங்கள் பதிவில் ஒரிஜினல் அப்படியே இருக்கிறது... "வைத்தவனின்" என்ற சொல்லில் என்ன ஆட்சேபணையோ தெரியவில்லை.. அது மட்டுறுடுறுடுறுத்தப்பட்டிருக்கிறது... அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை... இதையே உதாரணமாக எடுத்துக்கொண்டு யோசித்து "எடிட் செய்வது என்றால் என்ன" என்பதை பதிவாசிரியர் புரிந்து கொண்டால் சரிதான்...

*

// முகமூடி என்ற பெயரில் எழுதுவது சாட்சாத் பிகேசிவக்குமார்தான். அவ்வப்போது நடை தெரியாதிருக்க அதே பதிவில் எழுதுவது திருமலைராஜன் // ;)))))) மரத் தடி, நீயும் உலகத்துல இருக்கிற எல்லார் பெயரையும் சொல்லி அதுதான் முகமூடின்னு கூவிக்கிட்டேதான் இருக்க... ஆனா ஒரு பய உன்ன கண்டுக்க மாட்றான்... வேணா ஜார்ஜ் புஷ்தான் முகமூடி, சோனியா காந்திதான் முகமூடின்னு சொல்லி பாரேன்...

அது சரி, காமக்கதைகள் எழுதுவதை விட்டுவிட்டு எப்பயிருந்து ஜோக் அடிக்க ஆரம்பிச்ச...
 



கார்த்திக்ராமாஸ் http://karthikraamas.net/pathivu/?p=127 ::


சபாஸு கார்த்திக்... நீங்க என் மேல ஒரு குற்றச்சாட்டு வைக்க நான் அது சம்பந்தமா ஏகப்பட்ட விளக்கம் கொடுக்க கடைசியில உங்களுக்கு புடிச்சிகிட்டு தொங்க கிடைச்சது உப்பு பெறாத டைம் ஜோன் விஷயம்தானா? நீங்க இந்த வேலைய பண்ணுவீங்கன்னு அப்பவே தெரியும் ஆனாலும் கார்த்திக் புதுசாக ஒரு ராகத்தை கண்டுபிடித்து drums வாசிப்பார், அதை அவசியம் பாருங்கள், சுவாரசியமாக இருக்கும்…ன்னு இதைத்தான் சொன்னேன்... நீங்க என்ன படம் வேணா போடுங்க.. நடந்தது என்னன்னா, நான் உங்களுக்கு மெயில் அனுப்பியது மதியம். இரவு வரை அது வரவில்லை.. அதனால் உங்கள் நேர்மையை சந்தேகப்படவில்லை என்பதை தெளிவாக சொன்னேன்... இதுபோல் வால்மார்ட், கேமார்ட், பாத்ரூம் எல்லாம் போக வேண்டிய சந்தர்ப்பங்கள் அடுத்தவனுக்கும் வாய்க்கும், அதனால் அவன் நேர்மையை குறித்து அறைகூவல் விடுக்கும் முன் கொஞ்சம் நிதானமாய் எழுதுங்கள் என்பதை இப்பொழுதாவது உணருங்கள் என்பதை குறிக்கவே அப்படி எழுதினேன். நான் refer செய்து எழுதிய டைம் பசிபிக் டைம் + 2 hrs. ஒரு comparision பண்ணலாம் என்றால் இப்போது போலியின் பின்னூட்டமும் உங்கள் பதிவிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது... அதனால் இது குறித்து பேசுவது இனி ப்ரயோஜனமுமில்லை...

விஷயத்துக்கு வருகிறேன். முக்கியமான விஷயமே "சம்பந்தப்பட்ட கமண்ட் பகுதிய மட்டும் எடிட் பண்றதுல” கெட்டிகாரராமே? அண்ணரோட கமண்ட்க்கு எவ்வளவு சம்பந்தம் இருக்குன்னு யாருக்கு வெளிச்சமோ? "ன்னு போற போக்குல நீங்க தெளிச்சிட்டு போன குற்றச்சாட்டு பத்திதான்... அதுக்கு வேலை மெனக்கெட்டு பொறுப்பா விளக்கம் கொடுத்தனே ராசா.. ஆனா வழக்கம் போல அத விட்டூட்டு உப்பு பெறாத சமாச்சாரத்த பேசிறீங்க.. சந்தோசம்.. ஜாலியா இருங்க.. வாழ்த்து.

கெட்ட வார்த்தை பேசுறது ஒண்ணும் பெரிய கலை இல்ல ராசா... இதுல என்னா காம்படீசனு? அதுல எல்லாம் தூள் கிளப்பிறலாம்... பொம்பளைங்க படிக்கிறாங்கன்னு தெரியுதுல்ல, இனி கொஞ்சம் பொறுப்பா எழுதுங்க.. நான் எத்தினி நாளு கூல்டவுனு, கூல்டவுனு, அபாண்டமா பேசாதீங்கன்னு கரடியா கத்தியிருப்பேன்.. அப்ப தெரியலையா கூல்டவுன் பத்தி.. நான் எப்பவுமே கூல்டவுன்தான், வெறுமே பிரதிபலிக்கிறேன் அவ்வளவே. நன்றி.
 



வினையூக்கி தவறுக்கு வருந்துகிறேன் ::

// மெகாத்தொடர் பார்பதே வெட்டி வேலைனு நெனைச்சிகிட்டு இருந்தேன்.. இதுல அதை ஆராய்ஞ்சு ஒரு பதிவு, அதில் தப்பு கண்டுபிடிக்க பலர், பின்னர் அதுக்கு மன்னிப்பு பதிவு... கலக்குற தமிழா..!!!! //

:))))))))))))))))))))
 



கார்த்திக்ராமாஸ் உறிஞ்ச, பளபளவென உமிழ ::

// உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் அதுவும் இந்தப் பதிவில் வந்ததை நான் எதிர்பார்க்கவில்லை //

சுதர்சன், அடிக்கடி அடைப்பெடுத்து தொல்லை கொடுக்கும் சாக்கடையை சுத்தம் செய்ய சாக்கடையில் இறங்கிய நேரம் பார்த்து, "அய்யோ உங்களையெல்லாம் சாக்கடையில் எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லாதீர்கள்..

பி.கு: மாடர்ன் கேர்ள் உங்கள் ப்ளாக்ரோலில் பார்த்தேன். நீங்களும் மாடர்ன் கேர்ள் விரும்பிப்படிப்பவர் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி :)
 



காசி வாக்கெடுக்கலாம் வாருங்கள் ::

இது போன்ற வாக்கெடுப்புகள்

அ) தேவையானதே
ஆ) வெட்டிவேலை

;))
 



அன்னப்பறவை முகமூடி: சில குறிப்புகள் ::

// கதிர்காமஸ் சரியான ஆயுதங்களக் (ஆதாரங்களக்) கொண்டு ஒரே அடி விட்டார். முகமுடி கீழ விழுந்து தெறிக்க, திரும்ப எடுத்துப் பொருத்திட்டு ஓடியே போய்ட்டார் //


// முகமுடிங்கிறது ஒரே ஆளுண்ணு நினைக்க முடியாதுதான். எழுதுர ஸ்டைல் கொஞ்சம் ஒரே மாதிரி இருந்தாலும், உள்ள இருக்கிற சரக்கு பலரோட சரக்கு. கிட்டத்தட்ட நம்ம விவேக் ஜோக்ஸ் மாதி பலர் சரக்கு, குழுப்பணின்னு சொல்லலாம். ராம்- சோ.ராமசாமி-பி.ராமன் - ராகவன் - வெங்கடராமன் இப்படின்னு ஒரே 'ரா' சமாச்சாரம்னு நினக்கிறேன் //

:)))))))))))))))) பயங்கர ஹுயூமர் சென்ஸ்யா/சென்ஸ்மா உமக்கு.. சான்ஸே இல்ல... U made my day... கீப் இட் அப்...
 



தங்கமணி சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ::

ஜெயஸ்ரீ, உங்கள் பின்னூட்டத்தை படித்துவிட்டு வெகுநேரமாக அமைதியாக அமர்ந்திருக்கிறேன்... இப்போதைய என் மனவோட்டத்தை வார்த்தைகளில் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.. இன்னமும் நிறைய கேள்விகள் தொண்டையில் சிக்கிய முள்ளாய் நிற்கின்றன.. அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன் என்பதை மட்டும் பதிய விரும்புகிறேன்.
 



பெயரிலி சொல்ல மறுத்த கதை ::

கேட்ட கதை ஒன்று, பொருள் குற்றம் கண்டுபிடிக்காமல் படியுங்கள் :: ராமர் (god) சிவபூசை செய்வதற்கு முன் ஒரு அம்பை (arrow) பூமியிலே குத்தி வைப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் பூமியிலே குத்தி வைத்த அம்பை வெளியே எடுக்கும்போது அதன் நுனியில் ரத்தம்.. அடடா என்று பூமிக்குள் பார்த்தால் ஒரு தவளை குற்றுயிராக கிடக்கிறது.. ராமர் அந்த தவளையை எடுத்து "குத்தும்போதே ஒரு வார்த்தை கத்தியிருக்க கூடாதா" என்றாராம். அதற்கு அந்த தவளை சொன்னதாம் :: யாராலாவது எனக்கு ஆபத்து வந்தால் நான் ராமா ராமா என்று கத்துவேன்.. ஆபத்து ராமராலேயே எனும்போது என்ன சொல்லி கத்துவேன் என்று...

// ஒரு மூன்று வருடங்களாவது நிம்மதி அருள்வார்களென // இதை நீங்கள் கண்ணாடி முன் நிற்கும் போதும் கிடா வெட்டும் போதும் வேண்டி அதை நிறைவேற்றினால் போதும்... கண்டிப்பாக இணைய நல்லுலகில் அனைவருக்கும் நிரந்தர நிம்மதி கிடைக்கும்... வேண்டிக்கொள்வீர்களா?
 



பெயரிலி சொல்ல மறந்த கதை ::

பெயரிலி.. இதுவரை நான் உங்களை கேட்டது, கேட்பது எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான்.. அதை தவிர வேறெதுவும் கேட்டதில்லை. அது நீங்கள் என் IP

அட்ரஸை எடுத்துப்போட்டது.. (அப்போது ராம்வாச்சர்தான் பெயரிலி என்பது எனக்கு தெரியாது என்பதை சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்) நீங்கள் காசி பதிவை மேற்கோளிட்டு, குசும்பன் ஐபீயையும் சின்னவன் ஐபீயையும் எடுத்து போட்டு என்னவோ எழுதுகிறீர்கள்.. ஆனால் அதோடு கூடவே எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் காசி பதிவில் என் ஒரிஜினல் பெயரோடு ஒரே ஒரு கேள்வி கேட்ட என் ஐபீயையும் எடுத்து எழுதுகிறீர்கள்... இதன் மூலம் உங்கள் நோக்கம் என்ன?

இந்த இரண்டு பேரின் ஐபீயையும் எழுதி அதோடு என் ஐபீயையும் எழுதுவதன் மூலம் எனக்கும் இந்த இரண்டு பேருக்கும் சம்பந்தம் உண்டு என்று நிறுவுவது போன்றதான

செய்கை அல்லவா அது... கொசுறாக ஒன்றிரண்டு ஐபீ எடுத்து போட்டால்தான் பதிவு பெரிசாக இருக்கும் என்று தோன்றினால் உங்கள் ஐபீயையோ அல்லது வேறெதாவது

உங்கள் நண்பர்கள் ஐபீயையோ எடுத்து போட்டுக்கொள்ள வேண்டியதுதானே?

சின்னவனுக்கும் முகமூடிக்கும் எச்சரிக்கை என்று அப்டிபோடு ஒரு பதிவு எழுதுகிறார். நண்பர்கள் மெயில் அனுப்பி விளக்குகிறார்கள், போனில் பேசி விளக்குகிறார்கள் என்று

அவரே சொல்லிக்கொள்கிறார். எந்த பிண்ணனியில் நாங்கள் மயில் ராவணர்கள் என்ற முடிவுக்கு வந்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை (சின்னவன் பதிவுக்கு நான்

தொடர்ச்சியாக பின்னூட்டம் இட்டதாலாம் என்பது பின்னர் தெரிய வந்தது.. அப்ப ஏகப்பட்ட பேரு சிலருக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் எழுதறாங்களே என்று நான் கேட்க

ஆரம்பித்தால் அது வேறு விதமாக ஆகிவிடும்) அறியாத நிலையில், என்றோ குத்து மதிப்பாக சின்னவன் ஐபீயோடு முகமூடியின் ஐபீயையும் எடுத்து போட்ட ராம்வாச்சரின் பதிவு, அதுவும் மறைக்கப்பட்ட விலக்கப்பட்ட அந்த பதிவு அப்டிபோடுவுக்கு "நண்பர்கள்" மூலம் அறிய வந்ததாலேயே இருக்கலாமா என்பது எனக்கு தோன்றக்கூடாதா? ஆனால் நான் அப்படி கூட கேட்கவில்லை. நீங்கள் சம்பந்தமில்லாம் என் ஐபீயை எழுதினீர்கள் என்பதாலேயே நீங்கள் ஓட்டு கேட்கும் பொதுமக்களில் ஒருவரான அப்டிபோடு இவ்வாறு நினைக்கிறாரோ என்று பொருள் படும்படி சொல்லியிருந்தேனே தவிர உங்களிடம் காலங்காத்தாலை சண்டை பிடித்துக்கொண்டிருக்க எனக்கென்ன விசரே?

இன்றளவும் நீங்கள் அப்படி எழுதியதற்கு காரணம் உங்களின் ஆறு வயது குசும்புத்தனமா அல்லது வேறு விஷயமா என்பதற்கு விளக்கமில்லாமலே இருக்கிறது.. ஆக

செய்வதெல்லாம் செய்துவிட்டு முகமூடி என் பெயரை எழுதுகிறது என்று பரிதாப வேஷம் போடுவது எதனால்? எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை வரலாம் என்பது

உங்களுக்கு தோன்றவில்லையா? அல்லது நீங்கள் என்பதால் அதற்கு வராது என்று நினைத்தீர்களா?

இப்போது உங்கள் பதிவில் பிகேஎஸ்ஸுக்கு குசும்பனுக்கு பத்திகளை படிக்காமல் தாண்டி, நீங்கள் பொதுவில் எழுதியது + முகமூடிக்கு என்று எழுதியதை மட்டுமே நான்

படித்தேன் என்பதை சொல்லி, அதுபற்றி மட்டும் நான் பேசுகிறேன்.

மாடர்ன் கேர்ள் என்று நான் பெயரிலியை சொன்னதாக ஞாபகம் இல்லை.. (வேறு சிலரும் இதே போன்று claim செய்கிறார்கள்..) ஆனால் முகமூடிக்கு என்று எழுதிய பத்தியில் மூக்கில் சளி என்றெல்லாம் குன்சாய் எழுதினால் என்ன எழுதுகிறீர்கள் என்று புரியாமலே கைதட்டும், நீங்கள் விசனப்படும் குறிப்பிட்ட அந்த மிகச்சிலர் தமக்கு ஏற்றபடி புரிந்து கொண்டு உணர்ச்சி வசப்படுவார்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ..

நானும் குசும்பனும் வேறு வேறு என்று சத்தியமாக உங்களுக்கு தெரியும் என்றாலும், "பத்து மைல்" என்ற வார்த்தை பிரயோகத்தை இருவரும் உபயோகித்திருந்தோம்

என்பதை குறிப்பிட்டு குசும்பன் = முகமூடி என்பதாக நீங்கள் படம் காட்டிய போது எல்லாரும் அறிவாளியாக கொண்டாடுகிறார்களே அது இந்த பெயரிலியையா என்று

சிரிப்புதான் வந்தது... அதை விட சிரிப்பு நீங்கள் என்ன படம் போட்டாலும் பப்படம் போட்டாலும் ஓடி வந்து அண்ணை சூப்பர் என்று சொல்லும் அந்த குறிப்பிட்ட சிலர்

இதற்கும் அதே வேலையை செய்ததுதான்...

இன்று சன்னாசி = பெயரிலி ஈக்குவேஷனின் பாற்பட்ட உங்கள் பார்வை ஏன் மற்றவர்களுக்கு நடக்கும்/நடத்தியபோது உங்களுக்கு தெரியவில்லை. என்னை

வந்தியத்தேவனாக நீங்கள் சொன்னபோது வெறுமே நான் இல்லை என்று மறுத்தேனே தவிர உங்களை போல் "புத்திசாலித்தனமாக" பேசிக்கொண்டிருக்கவில்லை..திடீரென

சன்னாசி மீது என்னவோ ஒரு அக்கரை.. அவரை பேரி குத்து என்றெல்லாம் சொன்னேன் என்பது என்னுடைய இலக்கிய சலிப்பும் கருத்துப் பதிவும் பதிவை வைத்து என்றால் அது படிப்பவரின்

அனுமானம் மட்டுமே. அதை எழுதிய காலகட்டத்தில் இதே போன்றதொரு சலிப்பில் எழுதிக்கொண்டிருந்த ஒரு பதிவாளரை பற்றியது அது.. அதற்கு எதிர்வினையாக அவர்

கவிதை எல்லாம் கூட எழுதினார்... எதை எழுதினாலும் தன்னை பற்றி என்று சிலர் நினைத்துக்கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது.

// அதனாலேயே this-is-not-a-spam பயன்படுத்தவேண்டிய அவசியமேற்பட்டது // இதே போன்ற நிர்ப்பந்தங்கள் மற்றவருக்கு ஏற்பட்டால், அதுவும் சின்னவனுக்கு

ஏற்பட்டால் அது குறித்து என்னிடம் என் பதிவில் வந்து சன்னாசி கேட்பது ஏன் என்பது எனக்கு புரியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். நான் இங்கு கேட்க விரும்புவது,

KingKK எழுதியது - சாரம் என்னவென்றாலும் - தவறுதானே அவர் பதிவில் எல்லாம் நீ எப்படி பின்னூட்ட (ஆதரவு) தரலாம் என்றெழுதிய சன்னாசி, இந்த

உங்களுக்கேற்பட்ட "நிர்பந்தத்தை" பற்றி இதுவரை உங்களிடம் ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறாரா என்பதை மட்டுமே..

இதுவரை கார்த்திக்கை தவிர வேறு யாரையும் உங்களின் அடியாள் என்று நான் சொன்னதாக ஞாபகம் இல்லை. கார்த்திக்கை உங்கள் அடியாள் என்று சொல்வதில் என்னிடம்

மாற்றம் எதுவும் இல்லை.. (எப்படி என்று கேட்டால் ஒரு பெரீய்ய பதிவே எழுதும் அளவு விஷயம் இருக்கிறது) அப்படி அவராக விரும்பி அடியாளாக இருப்பதிலும் எனக்கு

ஒன்றும் ஆட்சேபம் இல்லை, அந்த விசுவாசத்தால் எனக்கு ப்ரச்னை எனும்போது மட்டுமே அதை குறிப்பிடுகிறேன் என்பதை இந்நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.

இதற்கு முன்னால் நீங்கள் செய்த "உண்மைக்குப் புறம்பானதொன்றை எழுதுதலும் உள்ளதைத் திரித்து எழுதுதலும்" பதிவுகளில் பலவற்றிலே சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயம் இருந்தது... ஆனால் ஆகப்போவது என்ன என்றே சும்மா இருந்தேன்.. இதற்கும் அப்படியே இருந்திருப்பேன், ஆனால் "இப்படியான பொழுதிலே, சொல்லப்பட்டதை மற்றவர்கள் முன்னாலே மறுதளிக்கவேனும் வந்தாகவேண்டிய பின்தள்ளுதல்நிலை" ஏற்பட்டதாலேயே இப்பின்னூட்டம்.

நானும் நீங்களும் சம்பந்தப்பட்டது இது ஒன்றுதான் :: ராம்வோச்சரின் கணியிணைமுகவரியென பி. கே. சிவகுமார் வெளிட்டால் அதற்கு பதில் சொல்லும்போது எதற்கு முகமூடி ஐபியையும் எடுத்து போடவேண்டும் என்பதை இன்றாவது எல்லோருக்கும் புரிகிற எளிய தமிழில் விளக்கவும்... இல்லையெனிலும் ஒன்றும் பாதகமில்லை, அது பெயரிலியின் "நேர்மை மனதிற்கு" மற்றொரு சாட்சி என்று இருந்துவிட்டு போகிறேன். ஆனால் கதைப்படி உண்மையில் நீங்கள் தம்பியாக இருந்துகொண்டு "அண்ணன் நிலையிலே என்னைச் சிலர் தள்ளி" என்றெல்லாம் புலம்பாதீர்கள். அது உங்களின் ஆளுமைக்கு இழுக்கு.

பிகு :: உங்க ஆளுமை இப்பதிவிலேயே கிழிந்து தொங்குவதை பார்க்க உண்மையிலேயே பாவமாக இருக்கிறது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலேயே உங்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்துவிட்டார்கள்.. அதற்கென ஒரு கம்பீரம் வேண்டாமா? (இதை கிண்டலாக எடுத்துக்கொள்ளாமல் படியுங்கள்)

அ) "மிகச்சிலர் தவிர்த்து மீதியானோர் என்னை இன்னார் இப்படிப்பட்டவர் என்று நினைப்பதினால் எனக்கேதும் ஆகப்போவதில்லை" என்று ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்? நான் உட்பட எல்லோருமே விளக்கம் கொடுத்து மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதுவது சம்பந்தப்பட்டவர் உட்பட அனைவருக்குமாகத்தான் (அதை எடுத்துக்கொள்வார்களா இல்லையே என்பது வேறு விஷயம்) அதில் வெட்கப்பட ஒன்றுமேயில்லை.. எனக்கு கவலையில்லை என்றெல்லாம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே செய்வதை பார்த்தவர்தானே நாம்... உங்களின் நோக்கம் "எனது பக்கக்கதை ஏற்கனவே என்னை அறிந்து தனிப்பட்டத் தெரிந்த சிலருக்குத் தெரியவேண்டுமென்பதாலும்" என்பதாகத்தான் என்றால் பதிவே தேவையில்லை, யாகூ குழுமத்தில் ஒரு மெயிலே போதும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஓ.. "இனியும் கிடைக்கக்கூடிய சில கருத்தொத்த நண்பர்கள்" சரிதான்..

ஆ) தயவு செய்து எனக்காக நீங்கள் பொதுமக்களிடம் ஓட்டு கேட்காதீர்கள்.. அப்புறம் எதிர்காலத்தில் "என்னால் ஓட்டு பெற்ற முகமூடி இப்படியெல்லாம் எழுதுவதை கண்டால் புல்லரிக்கிறது" என்றெல்லாம் நீங்கள் பெருமைப்படும்போது எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.

இ) நான் அரசியல்வாதிக்கு சொல்வதை இங்கும் சொல்கிறேன்.. அரசியல்வதியின் அடிப்படை குணத்திடை ஒன்று, வாக்கு மாறுவது. அதை அமைதியாக செய்தால் ப்ரச்னை ஒன்றுமில்லை.. ஆனால் வீராப்பாக வசனம் விட்டுவிட்டு அதை மாற்றும்போதே அதுகுறித்த கிண்டல் வருகிறது. எனவே ஏற்கனவே உங்களால் 27 தடவை சொல்லி புளித்து போன "இந்தப்பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் அப்பால், எதையுமே நான் பேசப்போவதில்லை" போன்ற அனாவசிய வாக்கியங்களை தவிருங்கள்.. அதனால் "கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படும்" பத்திகள் குறையும். எழுதுபவருக்கும் சில மணித்தியலங்கள் மிச்சம்.. படிப்பவருக்கும் முக்கால் மணிநேரம் ஆகாது பாருங்கள்..
 



பெயரிலி சொல்ல மறந்த கதை ::

// முகமூடி, நான் எழுதியதை நீங்கள் சரியாக வாசிக்கவில்லையென்பதை // போன முறை அவசரமாக வெளியே போகும் முன் படித்தது... நீங்கள் பொதுவாக எழுதியது மற்றும் முகமூடி என்று தென்படும் இடங்களை மட்டும் வாசித்தேன்.. ("பிகேஎஸ்ஸுக்கு குசும்பனுக்கு பத்திகளை படிக்காமல் தாண்டி" என்று போன முறை எழுதியதை குறிப்பிட்டு அப்படி இருக்கும்போது அவர்களுக்கான பத்தியில் முகமூடியை குறித்து எழுதியது முகமூடிக்கு எப்படி தெரிந்தது என்று யாரும் இன்னமும் "மடக்காதது" ஆச்சரியப்படுத்துகிறது) இருப்பினும் போன பின்னூட்டத்தில் நான் கொடுத்த விளக்கங்களில் பெரிய மாற்றம் எதுவுமில்லை..

// அவர் முறையல்ல என்றது மாசாசூசெட்டு மோப்பசக்தியை அல்ல என்பதைக் கண்டுகொள்ளவேண்டும் // அப்போது உங்களுக்கும் பிறருக்கும் நடந்த ஐபீ சர்ச்சையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.. ஆனால் எந்த வித குற்றமும் செய்யாத, யார் ஐ.பீயையும் சேகரிக்கும் அல்லது வெளியிடும் வழக்கமில்லாத என் ஐ.பீயை முகாந்திரம் இல்லாமலே பொதுவில் உபயோகித்ததை நான் கண்டித்தேன்/கிறேன். அவ்வளவுதான்.

// முகமூடி எதுவும் அவரோடு அவர் பதிவிலே பேசாத என்னைக் குறித்து மோடி என்றொரு பதத்தினை முன்னிட்டு, மோடியைப் பயன்படுத்துகின்றவர்கள், ராம்வோச்சர், மார்டன்கேர்ள், அப்டிப்போடு என்ற தோரணையிலே பேசி ஆகவே மூவரும் ஒருவரோ என்ற வகையிலே ஒரு பதிவிட்டிருந்தார் // கண்டிப்பாக இல்லை. ராம்வோச்சர்தான் மாடர்ன்கேர்ள் அல்லது அப்டிபோடு என்று சூசகமாக கூட நான் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு தோற்றம் வந்தால் அது சொன்ன விதத்தில் அல்லது புரிதலில் வந்த கோளாறேயாகும். முன்பே சொன்னது போல முகமூடி கூத்தடிக்கிறது என்று அப்டிபோடு சில விஷயங்களை சொன்னபோது, அவர் விலக்கப்பட்ட பதிவுகளை குறித்த மேற்கோள் காட்டுகிறார் என்ற எண்ணத்தில் அது எப்படி அவருக்கு இப்போது தெரியவருகிறது என்ற - அது யாராலேயோ தரப்பட்டிருக்க வேண்டும், கண்டிப்பாக நீங்கள் அல்ல - அனுமானத்தில் எழுதப்பட்டது.. அன்றி ராம்வோச்சர் = மாடர்ன்கேர்ள் = அப்டிபோடு என்ற வாதம் எந்த இடத்திலும் என்னால் தரப்படவில்லை...

இவர் = அவர் என்ற அனுமானத்தை பலர் சுலபமாக கையாளுகிறார்களே, எழுத்துநடை ஒரே போல் இருப்பதை வைத்து சன்னாசி = பெயரிலி என்று கூட சொல்லலாம் என்ற அளவிலேதான் குறிப்ப்ட்டேன், அதன் மூலம் குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை

// "பத்து மைல்" தொலைவு வந்ததை முகமூடியும் குசும்பனும் பயன்படுத்தியிருந்ததை ஒன்றாக எடுத்துப் போட்டிருந்தேன். வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை // இதை பிறிதொரு நாள் படித்து பாருங்கள்... உங்களுக்கே சிரிப்பாக வரும். இறைதூதரை படமாக போட்டோம், வேறு ஒரு சொல் எதையும் சொல்லவில்லை.. இந்து கடவுளை நிர்வாணமாக வரைந்தேன் வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை என்றெல்லாம் அவர்கள் ஏன் சொல்லவில்லை என்று தோன்றுகிறது...

// முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். // இதற்கென்ன அர்த்தம் என்று புரியவில்லை.. ஆனால் இதற்கு முன் சில நண்பர்களால் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் போல, நீங்களும் திருமலை = திருப்பதிக்கு மேல் இருக்கும் புனித மலையை குறிப்பிட்டு என்னவோ சொல்கிறீர்கள் என்பதாய் நினைத்து சந்தோஷமாக இருந்து கொள்கிறேன்.

மற்றபடி போன பின்னூட்டத்தில் குறிக்கப்பட்ட அ மற்றும் இ குறிப்புகள் பெயரிலிக்கு எழுதியதல்ல... நான் அறிந்த மாசக்கா என்ற நபர் இன்றைக்கு பண்ணிக்கொண்டிருக்கும் வேலையை நினைத்து எழுதியதே... // அதற்குமேலே சொல்ல ஏதுமில்லை. தெம்புமில்லை // இவ்விடமும் அஃதே.. சண்டை போட வேண்டும் என்ற குறிக்கோளோடு நான் எதுவும் எழுதியதில்லை.. என்னை குறித்த விமர்சனம் வரும்போது பெரும்பாலும் அமைதியாகவே கடந்தாலும் சில சமயம் எனக்கு தெரிந்த மொழியில் பதில் சொல்கிறேன். அது சண்டை பிடிப்பதாக தோன்றினால் அதுகுறித்து சொல்ல ஏதுமில்லை... நித்திலன் என்பது யாரென்று தெரியவில்லை.. எல்லோரும் சொல்கிறார்கள், நானும் சொல்கிறேன். நித்திலனுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி.
 



ஐகாரஸ் Jaane Bhi Do Yaroo ::

இன்னா நைனா... வர வர பதிவுங்க எல்லாம் pathos ஸாங்கோட ஆரம்பிக்குது.. எதுனா ஃபிகர் மேட்டரா? யாராவது ப்ர(ரப்)சர் பண்றாங்களா?
 



பெயரிலி சொல்ல மறந்த கதை ::

// goinchami-8A // ;-))))

// எல்லாரும் சொல்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக, எதையும் சொல்லாதீர்கள் // அட நித்திலன் அவர் குழந்தைன்னு யூகிக்க முடியுதுப்பா... இருந்தாலும் ஒரு முன்சாக்கிரதைக்கு - வேற யாராவது வந்து எலேய் வாழ்த்து சொல்றதுக்கு நீ யாரு, எதுக்கு இப்ப வாழ்த்து சொல்றேன்னு கேட்டா என்ன பண்றதுன்னு - ஒரு முன்னுரைய பொழிய வேண்டியதா போச்சி...

// சொல்பவர் மீதும் மரியாதை வராது. சொல்லப்படுகிற விஷயத்துக்கும் மதிப்பில்லை // அப்ப படிக்காமலேயே எல்லாம் சொல்றாங்கன்னு எழுதப்படற "**** ***" பின்னூட்டத்துக்கு மதிப்பு இல்லைன்றீங்களா..

சரி சீரியஸ் :: இனிமே அனாவசியமான முன்னுரைய பொழியாம இருக்க முயற்சி பண்றேன். கண்ண திறந்ததுக்கு நன்றி ;))
 



நாமக்கல் சிபி தகவல் தங்கவேலு அவர்களின் மறைவு ::

மனதிற்கு பாரமான செய்தி. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
 



பெயரிலி பதிவில் கோயிஞ்சாமி 8Aக்கு எழுதிய முந்தைய பின்னூட்டத்தை நீக்கிவிட்டு கீழ்க்கண்டது இடப்பட்டது ::

// goinchami-8A // ஆனாலும் இப்படி போட்டு தாக்க கூடாதய்யா ;-))))

நித்திலன் அவர் குழந்தைன்னு யூகிக்க முடிந்தாலும் பெர்சனலாக தெரியாத நிலையில் நான் அந்த வாக்கியத்தை போட்டது அனாவசியம் என்றே தோன்றுகிறது

இனிமே அனாவசியமான வாக்கியங்களை தவிர்க்க முயற்சி பண்றேன். கண்ண திறந்ததுக்கு நன்றி..
 



தங்கமணி சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ::

அதானே பார்த்தேன். ரொம்ப நேரமா "ஒரு டைப்"பான கருத்த காணோமேன்னு. வந்துட்டாரு அனாதை. மொத்த சமுதயத்தையும் முதல்ல பாப்பான்/பாப்பாத்தி vs மற்றவர்கள்னு பிரிச்சாத்தான் சரிப்படும். முதல்ல அதை செய்வோம். அதுக்கு முன்னாடி நீங்க யாருன்னு சொல்லுங்க அனாதை. அதாவது உங்க ஜாதி. நீங்க ஜாதியை புறக்கணிச்சவருன்னா பாப்பான்னே பேசியிருக்க கூடது. பேசியதால இன்னமும் புறக்கணிக்கல. அப்ப உங்க ஜாதி என்ன? இல்ல பல ஜாதி கலந்த ஆளா?

// ..... தன் “பாம்பே” கக்குஸில் ஒரு பக்கெட் தன்ணியை வீசி தன் மலத்தை நீக்குவதாலும், ஒர் ரேசர் வாங்கி தன்னுடைய உடம்பு ரோமத்தை நீக்குவதாலும், ஒரு செருப்பு பிய்ந்தால் 399.99 பாட்டா செருப்பு வங்கமுடியும் என்பதாலும் தன்னுடைய துணிகளை ஒரு வாஷிங்மெசினுக்குள் போட்டு ஒரு பட்டனைத் தட்டித் துனிகளை வெளுக்க முடியும் கால / பண திமிர் இருப்பதாலும் ஒரு தோட்டியையின், ஒரு சக்கலியனின், ஒரு வண்ணானின் மொத்த இருப்பையும் எளிதாக அலட்ச்சியம் செய்யமுடிவதுடன் ...... //

அப்ப உங்க ஏரியாவுல இருக்குற லெட்ரின் எல்லாம் நீங்களும் உங்க குடும்பமும் சுத்தம் செய்றீங்க. உங்க வீட்டு பொம்பளையாளுங்க எல்லாம் ரேசர் வாங்காம முடி வெட்டுற அம்பட்டன்கிட்டதான் போயி ரோமத்த நீக்கிக்கிறாங்க, செருப்பு பிஞ்சா வீட்டுல நீங்களே ஊசி வச்சி தச்சிக்கிறீங்க, துணி மூட்டைய கழுதை மேல போட்டு ஊர் பொது குளத்துல போயி வெளுக்கறீங்க அதனாலதான் உங்களுக்கு ஒரு தோட்டி, ஒரு வண்ணான், ஒர் சக்கிலியன் என்று பகுமானம் பேசும் கொழுப்பும் இல்லாம அவங்க நிலைமையெல்லாம் புரியிதுன்னு எங்கள நம்ப வச்சிட்டீங்க.. பிரமாதம்..

தங்கமணி நீங்க தயவு செய்து நேரத்த வீணாக்காம எதையாவது எழுதுங்க.. பாவம் அனாதை மாதிரி மற்ற பண்ணாடைகளின் "சொரணை எழும்ப" உங்க விடயங்கள் அவசியம் தேவைப்படுது. சிலருக்கு சொரணை எழும்பவெல்லாம் மற்றவர் துணை செய்யும் அளவுக்கு எவ்வளவு கஷ்டம்...
 



ராசா யோசனை ::

அதாவது கதையே இல்லாம ஒரு மூணு மணி நேரம் படம் எடுக்கலியா நம்மாளுங்க... அது மாதிரி எழுதணுமான்னு யோசிக்கிறேன்னு சொல்லியே ஒரு பதிவ ஒப்போத்திட்டாரு நம்மாளு.. அந்த டெக்னிக்க தவிர மத்தத எல்லாம் கண்டு பிடிச்சி பேசிகிட்டு இருக்கீக அல்லாரும்...

(இருந்தாலும் பல்ஸ் பாக்குறத கண்டுபிடிச்ச இணைய நாரதரின் செயலுக்கு வாழ்த்து)
 



தங்கமணி சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ::


அனாதை பன்னாடை அவர்களே :: முகமூடிக்கு மட்டுமில்லை யாருக்குமே பதில் சொல்லாமல் வெறுமே தன்னைத்தானே நக்கினோமா இருந்தோமா என்று நீங்கள் இருப்பதையே பார்ப்பனர் மட்டுமல்ல "மற்றவரும்" விரும்புகின்றனர் (கொஞ்ச நாளாவே அப்படித்தானே இருந்தீர்.. என்ன இப்ப திடீர்னு)
 



தங்கமணி சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ::

தங்கமணி, இதற்கு முன்பு அனாதை எழுதிய கருத்திற்கு நான் எழுதிய பதில் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. என் பின்னூட்டம் நீக்கப்பட்டதை பற்றி எனக்கு துளியும் அக்கரையில்லை... ஆனால் அனாதையின் பின்னூட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அனாதைக்கு நான் கொடுத்த பதில் பின்னூட்டத்தை அழித்த உங்கள் எண்ணத்திற்கான காரணத்தை அறிய ஆசை...
 



துளசிதளம் மூணு விருந்து ஒரே நாளில் ::

இதோ பாருங்க.. பத்து ரூபா எதுக்குன்னு ரொம்ப குழப்பமா இருந்தா அத போக்க நான் ஒரு வழி சொல்றேன்... பேசாம எனக்கு மணிஆர்டர் பண்ணிடுங்க ஹிஹி (பத்துன்னா வெறும் பத்தோட நிறுத்தணும்னு இல்ல.. மேல ஒரு லட்சமோ கோடியோ சேத்துக்கலாம்.. அபிராமி அபிராமி)
 



தங்கமணி ::

// அந்த ஒரே உயர் சாதியினரைத்தவிர மற்றவர்களில் ஓரளவேனும் கணிசமானவர்கள் தலித்துகளின் இன்றைய சமூக, வாழ்வியலை ஒரு கரிசனத்தோடு பார்க்கும்போது எப்படி அவர்கள் ( எல்லோரும் (exceptions cannot be rules) அதைப் புரிந்துகொள்ளவும் மறுப்பது ஏன்? //

சூப்பர் கண்டுபிடிப்பு தருமி... ஆனா பாருங்க இந்த முடிவுக்கு எப்படி வந்தீங்கன்னுதான் தெரியல. கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.. ஏன் கேட்கிறேன்னா, நிறைய பேரோட சாதி கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். இல்லைன்னா பெரியவங்க நீங்க, கரிசனத்தோட பார்க்கிறவர்கள் அனைவரும் "அந்த ஒரே உயர்சாதி இல்லாதவர்கள்" அப்படீன்னு குத்துமதிப்பா சொல்வீங்களா?

மதம், ஜோசியம் என்று பல விஷயங்களில் உங்களின் அலசலை பாராட்டி வியந்த என் போன்றவர்களுக்கு புரியும் படி உங்களின் இந்த அலசலையும் தயவு செய்து வெளியிடுங்கள்.
 



ஹிந்துஸ்தானி இசையும் அண்ணன்மார்சாமி கூத்தும் ::

நான் இந்தியாவில் இருக்கும்போது தூர்தர்ஷனில் காண்பிக்கப்படும் நாட்டுப்புற கலைகளை அவசியம் பார்ப்பேன். இப்போதும் தூர்தர்ஷனில் அந்நிகழ்ச்சிகள் வருகின்றனவா என்பது தெரியவில்லை.. (வந்தால் அவசியம் பாருங்கள்.. சில நபராவது பார்க்கிறார்கள் என்பது TRBக்கு உதவலாம்)

இன்னொன்றும் சொல்ல வேண்டும். நான் பார்க்கும்போது அந்நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தால் வேறு ஏதாவது சேனலில் முக்கியமான நிகழ்ச்சி ஓடினாலும் கூட எதிர்ப்புக்களை மீறி பார்ப்பேன். அசுவாரசியமாக இருந்தால் சகிக்க முடிகிற அளவுதான் சகிப்பேன், நம் கலையாயிற்றே என்று என்னை கஷ்டப்படுத்திக்கொண்டு பார்க்கமாட்டேன். ஆக தன் வடிவத்தில் மாறுதலில்லாமல் அதே நேரத்தில் காலத்திற்கேற்ப சில சுவாரசிய உத்திகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் கலை தேக்க நிலையடையும் என்பதில் சந்தேகம் இல்லை. என்னை பொறுத்தவரை புரியாது என்பதால் எப்படி ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் உட்கார முடியாதோ அதே போலத்தான் சுவாரசியமாக இல்லையெனில் ஒரு தெருக்கூத்திலும் உட்கார முடியாது...

நாட்டுப்புற கலையின் நசிவை பற்றி கவலைப்படும் ஆட்கள் மிகக்குறைவு. நீங்கள் படுவதால், ஒரு விஷயத்தை முயற்சிக்கலாம். அடுத்து வரும் ஏதாவது ஒரு கிராம நிகழ்வில் (அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், காணும் பொங்கல், சிவராத்திரி போன்று) உங்கள் முயற்சியில் ஒரு தெருக்கூத்தையோ, பொம்மலாட்டமோ, ஒயிலாட்டமோ நலிந்த கலைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்யலாம். (அன்றைக்கு இந்தியா-பாக் மேட்ச் இருந்தாலும் அதை மீறி செய்ய வேண்டும் :)) அந்த அங்கீகாரம் அந்த கலைஞர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக அமையும். 5-10 ஆயிரத்துக்குள்தான் செலவு இருக்கும். (உங்கள் பக்கத்தில் கையில் சிறு துணியை கட்டிக்கொண்டு ஆண்கள் ஆடுவார்களே அந்த ஆட்டத்திற்கு பெயர் என்ன?) மறக்காமல் அதை வீடியோ பிடித்து வைக்கவும். அடுத்த தலைமுறைக்கு உதவும். சமயம் கிடைக்கும்போது நான் இதை செய்கிறேன். இந்தியாவில் ரொம்ப நாள் இருக்க முடிந்தால் தமிழகம் முழுவதும் சுற்றி இதை ஒரு ப்ராஜக்ட் போல் செய்ய வேண்டும் என்பது எனக்கு ஒரு கனவு. (அடுத்த முறை ஊருக்கு போகும் சமயம் மறக்காமல் handy-cam எடுத்து செல்லுங்கள். வயல் வரப்புக்கு போய் களை புடுங்கும் ஆயாக்கள் பாடுவதை பதியுங்கள். அப்புறம் ஊர் ஊருக்கு ஒப்பாரி வைக்கும் பெரிசுகள் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் சென்று இட்டு கட்டி பாட சொல்லி பதியுங்கள். விடுகதை என்று ஒரு சமாச்சாரம் இருக்கும். அதை போடச்சொல்லி பதியுங்கள். பல்லாங்குழி, பச்சை கல்லு, பச்சை குதிரை போன்ற கிராம விளையாட்டுக்களை பதியுங்கள்)
 



துளசி கோவை பிரதர்ஸ் ::

// இப்படி?பார்த்தேன்னு 'சப்'னு முடிச்சிட்டேனா? அதுலே சொல்லிக்க ஒண்ணும் இல்லை. //

என்னமோ நீங்க பாக்குற மத்த படத்துல எல்லாம் சொல்லிக்க ஏதோ இருக்கிற மாதிரி... ஊர் உலகத்துல எங்கியுமே கேள்விப்படாத, தமிழ்நாட்டுல அப்பிடி ஒரு படம் எடுத்தாங்களான்னே தெரியாத, பொட்டி தியேட்டருக்கு வந்ததும் தெரியாம போனதும் தெரியாம இருக்கிற படங்கள மட்டும்தானே நீங்க பாக்குறது வழக்கம்... (உங்க பழைய பட விமர்சனத்த எல்லாம் அட்டவணை போட்டு லிங்க் கொடுங்க. அடுத்த தடவை சினிமா பேர் விளையாட்டு ஆடும் போது இந்த மாதிரி சத்தியமா படம் வரலன்னு எதிரிகட்சி காரவுங்க சண்டை போடும்போது காமிக்க)
 



ஊமை சன்னிவேல் Hot Breads ::

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. எதுவும் சொல்லல... ;)
 



யக்ஞா V for வேண்டாண்டா ::

நேத்து தியேட்டர் வரை போயிட்டு 15 நிமிசம் லேட்டாயிட்டதால ஒரு வேளை ஸேவிங் ப்ரைவேட் ர்யான் மாதிரி இருந்தா என்ன பண்றதுன்னு திரும்பி வந்திட்டேன்.

// கொட்டகையில் பார்த்தே ஆக வேண்டுமென்று வெறியில்லை என்றால் வட்டு வந்தவுடன் பாருங்கள் போதும் // ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் கூட அவ்ளோ மோசமாவா இருக்கு. (மாட்ரிக்ஸ் படம் தியேட்டரில் பார்ப்பதே சிறப்பு)

// புரட்சிக்கூவல் விடுக்கும் முகமூடி மனிதனாக // புரட்சிக்கூவல் விடுக்கும் எல்லாரும் ஏன் முகமூடி அணியிறாங்க ஹிஹி :))
 



ஆனந்த் V for Vendetta ::

நேத்தி தியேட்டருக்கு போனேன். ஆனா 15 நிமிசம் லேட். முதல் 15 நிமிசம் சில படங்கள்ல முக்கியமாச்சேன்னு திரும்பிட்டேன்..
// சர்வாதிகார அரசை எதிர்க்கும் முகமூடி அணிந்த super (anti) hero கதை என்றாலும், ஏகப்பட்ட உள்/வெளிக் குத்துக்கள் படத்தில் இருக்கின்றன //
இதுல எந்த குத்தும் இல்லியே...

// NO relations! //
யோவ் ஞானபீடம்... ஒரு முடிவோடதான் இருக்கீரு போல... நடக்கட்டும் நடக்கட்டும்..
 



பொட்டிகட வேர்க் கடலையும் வட்டார மொழியும் ::

காட்டுக்கு போறேன், தோட்டத்துக்கு போறேன், கொல்லைக்கு போறேன், two bathroom போறேன், loo க்கு போறேன் என்றெல்லாம் மற்றவர்கள் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கும்போது பார்ப்பான்கள் மட்டும் ஆய் போறேன் என்று சொல்லிக்கொடுத்து குழந்தைகளை வளர்ப்பது எனக்கும் சமூகத்துக்கும் மிகப்பெரிய ப்ரச்னையாக உள்ளது என்பதுதான் தாங்களின் அடுத்த பதிவா நட்சத்திரமே?
 



nepolean டீக்கடையும் அழுகின வேர்கடலையும் ::

// இந்த பதிவை படித்தவுடன் இப்படி எல்லாம் கூட யோசிப்பார்களா என்றுத்தான் தோன்றியது //

அவரை பின்னூட்டங்கள் வழி ஏற்கனவே தரிசித்திருந்தால் உங்களுக்கு இந்த ஆச்சரியம் எல்லாம் வந்திருக்காது ;)))
 



சிறில் டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார் ::

நல்லா ரைமிங்கா இருந்தது சிறில்.. அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க :-

ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கா ?

நர்சரி ரைம்ஸாராய்ச்சி
 



ராம்ஸ் கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்! ::

வாழ்த்து, வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - எது சரியோ அதற்கேற்ப எடுத்துக்கொண்டு மற்றதை திருப்பி அனுப்பிவிடவும் (நம்ம பதிவுலதான்)

**

// பொறுத்தது போதும் ராமநாதா. பொங்கி எழு. பொதுக்குழுவை கூட்டு //

கொஞ்சம் அசர கூடாதே உடனே ஆரம்பிச்சிடுவீங்களே.. முதலாண்டு வெற்றி விழாவுக்கு தலைவர் வரவில்லை என்று வெளியிலிருந்து ஆதரவு தரும் மற்றவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம்.. ஆனால் காலையில் முதல் வேலையாக இராம்ஸ் தலைவரை பார்த்து பொன்னாடை போர்த்தி ஆசிர்வாதம் வாங்கி பழைய நினைப்புகளை கிளறி கொஞ்சம் போல அழுதுவிட்டுத்தான் இந்த விழாவையே ஆரம்பித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

இருந்தாலும் ராம்ஸ், இந்த மாதிரி சந்தேகங்களுக்கெல்லாம் காரணம் நீங்க வெளிப்படையா அறிக்கை கொடுக்காததுதான்.. இதுக்கெல்லாமா பினாமி பேர்ல ஆற்காட்டாரை தூது விட முடியும்.. நீங்களா பார்த்து ஒரு அறிக்கை விடறதில்லையா ??

**

தலைவரே, திராவிட பாரம்பரியப்படி ஓராண்டு நிறைவு விழாவுக்கெல்லாம் எங்கள மாதிரி "தானைத்தலைவருக்கு நன்றி! புரட்சி ப்ளொக்கார் புண்ணியச்செம்மல் முகமூடியின் வழி நடக்கும்" அப்படீன்னு எல்லாம் தன்னடக்கத்தோட எழுதி உங்க போட்டோவ ஆளுயற போஸ்டரா அடிச்சி அதுல சின்னதா ஒரு மூலையில தன்னோட போட்டோவ போடாம தெனாவட்டா பதிவு போட்ட ரஷ்ய மாவட்ட செயலாளர் மேல கட்சி மீறல் நடவடிக்கை எதுவும் கிடையாதான்னு கேக்கிற குட்டி செயலாளருங்கள சமாளிக்கும்படி வச்சிட்டீங்களே ராம்ஸு.
 



பட்டிணத்து ராசா ஹாலிவுட் மேக்கப்புக்கு சவால் ::

// பின்ன சும்மவா இவர இவ்வளவு இளமையா காட்டுரது ஹி ஹி //

;)))
 



பினாத்தல் ஜூ.வி.அதிர்ச்சி செய்தி ::

இவ்ளோ பெரிய லிஸ்டில் பச்சோந்தி மக்கள் கட்சி சின்னம் மட்டும் விடுபட்டது வெறும் விபத்தா அல்லது சூட்கேஸ் இடம் மாறியதாலா என்பதை வரப்போகும் பொதுக்குழுவில் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீர் இருக்கிறீர் என்பதை மனதில் வைக்கவும்.

( விரைவில் பமக தேர்தல் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரத்தில் கட்டவுட்டில் அடி வாங்க ஆசையா? )
 



பாபா India Trip - Varanasi ::

தமிழ்நாடு, தமிழ்க்கடவுள் எல்லாம் இருக்க ஆரியநாட்டு காசியை விரும்பி தேடி போனது எதற்கு? காவிரியில் தண்ணீர் இல்லாமல் இங்கே அவனவன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க கங்கையில் தண்ணீர் ஓடுகிறது என்று படம் போடுவதன் உள்நோக்கம் என்ன? உள்நாட்டில் சிதிலமடைந்து சாய்ந்த கோபுரங்கள் பல கவனிப்பாரற்று கிடக்கும் காலத்தே பீஸா கோபுரத்தை உதாரணம் காட்டுவது இத்தாலி (அதன் மூலம் காங்கிரஸ்) மீது தாங்கள் கொண்டிருக்கும் பற்றையே காட்டுகிறது. தூய தமிழாம் கோவணம் இருக்க வடமொழி சொல்லாம் கௌபீனம் என்ற சொல்லை உபயோகப்படுத்துவது த்மிழை உச்சரித்தால் கேவலம் என்ற உயர்குடி மனோபாவத்தையே காட்டுகிறது... முக்கியமாக காசிக்கு போனதன் மூலம் இந்துமத ஆதரவு அதன் மூலம் சாதிக்கு ஆதரவு என்ற உங்கள் நிலைப்பாடு அருவருக்க வைக்கிறது...

இவண்,
தமிழ் வலையுலக செக்கூலரிஸ்ட் பாதுகாப்பு இயக்கம்.
 



ஞானபீடம் Just do it ::


// சுளுக்கா... எனக்கா! // இப்ப இல்ல.. ஆனா முந்தி இருந்திச்சி.. நாங்க சுளுக்கெடுத்துட்டோம்னு ஊர்ல பேசிக்கிறாங்களே உண்மையா??
 



சுகா பிண்ணனி இசையற்று இனிக்கும் சில பாடல்கள் ::

உங்கள் தங்கைக்கு நல்ல குரல்வளம்.. அருமையாக பாடுகிறார்.. (அன்பென்ற மழையிலே பாடலில் கொஞ்சம் எக்கோ எஃபக்டை குறைத்திருக்கலாம்)

என் பாடலை "சுட்டு" உங்கள் பாடல் என்று போட்டிருக்கிறீர்களே (என் பாடல் உங்களுக்கு எப்படி கிடைத்தது?)
 



டோண்டு டோண்டுவின் இரண்டாம் திருமணம் ::

இவ்ளோ short noticeல சொன்ன எப்படி... சரி பரவாயில்லை... உங்கள் எண்பதாம் திருமண விழாவிற்கு வருகிறேன்.. சஷ்டியப்தபூர்த்தி விழா வாழ்த்துக்கள்..

சக வலைஞர்களுக்கு ::

இந்த பதிவின் சொந்தக்காரர் JUST GOT MARRIED.. எனவே, இரு நாட்களுக்கு பின்னூட்ட பெட்டிக்கு விடுமுறை விடப்படுகிறது :))
 



andrew Panoramic Shot of the Neighborhood ::

Wow.. very nice. Could u upload the original unstiched photos too.. Just a reduced version would do.. I'd like to know how you composed the individual photos to get the fountain without ghosting... appreciate any technical details (lens used etc)
 



ஸ்ரீகாந்த் மீனாட்சி Good Night and, Good Luck ::

// க்லூனி இவ்வளவு சீரியஸான ரோலை செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை //
தாராளமாக செய்திருக்க முடியும்.. ஆனால் என்னதான் கதாபாத்திரத்தோடு ஒன்றினாலும் சில இடங்களில் கமல் "வெளி"ப்பட்டுவிடுவது போலவே க்ளூனியும் தனிப்பட்ட சில மேனரிஸங்களால் "வெளி"ப்பட்டுவிடுவார்.. (இதை உணர்ந்தோ இல்லையோ) க்ளூனியை விட டேவிட் ஸ்ட்ரேதர்ன் தேர்வு படத்தோடு ரசிகர்களை ஒன்ற வைக்க எடுக்கப்பட்ட நல்ல முடிவு..
*
// மெக்கார்த்தி இவ்வாறு இயங்கிய காலகட்டத்தில் அமெரிக்கப் பொதுமக்கள் மற்றும் சமுதாயம் எப்படி எதிர்வினையாற்றியது என்பது பற்றி படம் மிக மேலோட்டமாகவே சொல்கிறது. //
நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. காப்பி ரூம் பணிப்பெண்ணையும் செனட்டுக்கு இழுத்ததன் மூலம் பொதுமக்கள் என்றாலும் சரி, குற்றச்சாட்டுகளிலிருந்து தப்ப முடியாது என்ற தோற்றத்தை உருவாக்கியதன் மூலமும், FBI பொதுமக்கள் இடையிலும் ஊடுருவியிருக்கலாம் என்ற வதந்தியின் மூலமும் சமுதாயம் பெரிய அளவில் இதை பற்றி வெளிப்படையாக பேச/எதிர்வினையாற்றவில்லை என்றே படம் பார்த்தபோது எனக்கு தோன்றியது
*
// அந்தக் காலத்தில் அலுவலகங்களுக்கு உள்ளே அவ்வளவு புகைத்தார்களா // புகைத்திருக்கலாம்... மிக சமீபம் வரை நான்-ஸ்மோக்கிங் செக்சன் தனியாக இருந்தாலும் ரெஸ்டாரெண்டுகள் உள்ளே புகை மண்டலங்களாகத்தானே இருந்தது.. மேலும் சில கறுப்பு-வெள்ளை படங்களும் இதை உறுதி செய்கின்றன.
*
மற்றபடி படம் பார்த்து 10 நாட்கள் ஆகிறது. பார்ததவுடன் தமிழ் வலைப்பதிவுலகமும் Good Night and Good Luckம் (உம்மை தொகை) என்று ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்து பின்பு pendingல் இருந்த படங்களை பார்க்க ஆரம்பித்து அந்த எண்ணமே காணாமல் போய்விட்டது... சரி வந்தது வந்தோம், ஒரு ஸ்டாண்டர்டு பின்னூட்டம் போட்டுக்கறேன் :: "நான் எழுதலாம் என்று இருந்தேன். நீர் முந்திவிட்டீர்" :))))
 



வந்தியத்தேவன் சில நேரங்களில் சில மனிதர்கள்-5 ::

நல்லதொரு தொடர் "எனக்குத் தெரிந்திராத பல விஷயங்களை அறிமுகப்படுத்திய பயனுள்ள கட்டுரைத் தொடராக இது அமைந்தது. நன்றி"
 



தமிழகத் தேர்தல் 2006 அ.தி.மு.க. 167 - தி.மு.க 67: கருத்து கணிப்பு ::


// இது கோயபல்சு வகையைச் சார்ந்த "பெட்டி"ச் செய்தி அளவிலேயே கருத முடிகிறது. அல்லது முட்டாள் கூட்டத்தின் மேதாவிலாசத்தில் எழுந்த கணிப்பு! //
இது மட்டுமல்ல, இதற்கு முன்பு 2006-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்கணிப்பு-1: DMK-191:: ADMK-43 அப்படீன்னு ஒருநபர் கருத்து கணிப்பு ஒன்று வந்ததே, அதை படித்த போதும் இப்படித்தான் தோன்றியது... ஆனால் சுருக்கமாக அதே சமயம் நிறைவாக சொல்ல இயலவில்லை.. வாக்கியம் அமைத்து கொடுத்ததற்கு நன்றி !!!
 



ஷோபா சக்தி 'தம்பி' திரை விமர்சனம் ::

குஷ்பு ப்ரச்னையின் போதே சீமான் போன்றவர்களின் திடீர் சமுதாய பற்று போலித்தனமானது, வியாபார ரீதியிலானது என்று பலரும் உணர்ந்திருந்தனர்.. தம்பி அதற்கான சான்று. நல்லதொரு அலசல்.
 



சரி, உங்க கருத்து ??