<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

பின்னூட்டங்கள் 151 - 200


பின்னூட்டங்கள் 151 - 200

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


துளசி பெங்களூரு, நானு பருத்திதேனெ ::

முன்னூறு பத்தி சொல்லலாம்னு நினைச்சேன்.. ஆனா "நேத்து முளைச்ச காளான், எக்கச்சக்கமாக் காய்ச்சுக் குலுங்கி நிக்கற மாமரத்தை (இனிப்பு மாம்பழத்தோடு கூடிய)பத்தி என்ன சொல்ல முடியும்?" :))
 



கோ.ராகவன் நான் இந்துவா? ::

// நான் இந்து என்பதால் என்னை யாரும் வேதத்தையும் கீதையும் அல்லது வேறெந்த நூலையும் மதிக்க வேண்டும் என்று கட்டாயத்திற்கு நான் கட்டுப் பட மாட்டேன். // உங்களை இதுவரை யாரும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்களா?

// நான் இந்து என்று சொல்லிக் கொள்வதால் எக்குறிப்பிட்ட வேதங்களையும் எக்குறிப்பிட்ட இனத்தாரையும் மதித்து நடக்க வேண்டும் என்று என்னை யாருக் கட்டுப்படுத்த முடியாது. // உங்களை இதுவரை யாரும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்களா?

மேற்குறிப்பிட்ட இரு வாக்கியங்களும் சமீப சர்ச்சைகளின் பாதிப்பில் சேர்க்கப்பட்டவை போல் தோன்றுகிறது... எந்த மதமாக இருந்தாலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் அளவில் அந்த நம்பிக்கை குறித்து பெருமையோ சிறுமையோ கொள்ளாமல் அடுத்தவருக்கு பாதிப்பில்லாமல் தமது நம்பிக்கையை பின்பற்றினால் ப்ரச்னை இல்லை. அது போல் மதம் மறுத்தவர்களும் தமது நம்பிக்கை குறித்து பெருமையோ சிறுமையோ கொள்ளாமல் தம்மளவில் மட்டும் பின்பற்றினால் ப்ரச்னை இல்லை.. ஆனால் ஏனோ நாஸ்திகர்கள் ஆஸ்திகர்களின் நம்பிக்கை குறித்து பேசும் போது அது (பகுத்)அறிவு அற்ற செயல், சிந்திக்கத்தெரியாதவர்கள் என்பது போன்று எண்ணங்களை வெளிப்படுத்துதான் ப்ரச்னை.. சமீபத்தில் கூட ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அறிவாளிகளாக பிரகாசிக்கிறார்கள் போன்ற புள்ளிவிவரங்கள் வெளியானதை பார்த்திருக்கலாம்.

(இந்த பத்தி உங்களுக்காக இல்லை) இந்து என்பது மதமே இல்லை? எனக்கு பிடிக்கவில்லை என்கிறீர்களா, சரி ஒன்றும் ப்ரச்னை இல்லை. உங்கள் வசதிப்படி உங்கள் வாழ்க்கை முறையை என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து வாழ்ந்து கொள்ளுங்கள் இந்தியாவில் பிறந்தால் by default இந்து மதத்தில் கட்டாயமாக சேர்த்துவிடுகிறார்கள் என்று வருத்தப்படுகிறீர்களா? ஆனால் மதம் மறுத்தும் வாழ முடியும்.. என்ன கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும். என்னதான் நிறுவனப்படுத்திவிட்டாலும் அதை மாற்ற வேண்டும் என்று எண்ணும்போது நோகாமல் நோம்பி கும்பிட முடியுமா.. யாராவது ஒருவர் புரட்சியை ஆரம்பிக்க வேண்டியதுதான்.. (புரட்சி என்பது வலைப்பதிவில் வீரவசனம் எழுதிவிட்டு சினிமா பார்க்க போவதில்லை) கமல்ஹாசன் தம் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த போது மதம் என்ற இடத்தை வெறுமையாக விட்டே சேர்த்ததாக படித்த நினைவு. அதனால் மதம் மறுக்க ஆசைப்படுபவர்கள் தமது ஆணித்தர உபதேசத்தை ஊருக்கு செய்வதற்கு முன்பு தமது குடும்பத்தில் இருந்து ஆரம்பிப்பது பல விஷயங்களில் நல்லது. குழந்தைகளாவது குழம்பாமல் வளரும். பகுத்தறிவு ப்ரச்சாரத்தை ஊருக்கெல்லாம் சொல்லும் ஒருவரின் மனைவி கடவுள் நம்பிக்கையோடு இருக்க, கேட்டால் அப்போது மட்டும் எனது மனைவியின் தனி மனித நம்பிக்கையில் நான் தலையிடுவது இல்லை என்பது போன்ற சப்பை வாதங்கள் வரும்போது, அப்போ என்ன இதுக்கு ஊரார் நம்பிக்கையில் மட்டும் தலையிடுகிறாய் என்று எரிச்சலாக வருகிறது.
 



பாலசந்தர் கணேசன் போலி டோண்டுவை பற்றிய குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரை ::

// பத்திரிக்கையாளர்களுக்கும் இத்தகைய டெக்னிகல் சமாசரங்கள் தெளிவாக தெரிந்தவர்களாகவோ அல்லது நாம் கூறியவுடன் சரியான முறையில் புரிந்து கொள்ள கூடிய நேர்த்தி உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயாம் இல்லை. // இது சரியே. மேலும் நிருபர்கள் மனநல மருத்துவரிடம் பேட்டி கண்டதை விட காவல்துறையிடம் பேட்டி கண்டு எழுதியிருக்கலாம். (போலி மனநலம் குன்றியவன் என்பதுதான் அனைவரும் அறிந்த ஒன்றே)

*

// ஒரு நடவடிக்கை எடுப்பது சரியென்று இருக்கும் நேரத்தில் அதை எடுக்காமல் தாமதிப்பதும் ஒருவகைத் தவறே என்பது எனது கருத்து // ராகவன், இது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, பல நாட்டு காவல்துறை எல்லைகளில் கீழ் வரும் விஷயம். ஆகவே தாமதம் தவிர்க்கப்பட முடியாதது.
 



கூட்டு பதிவு விஜய்காந்த் குறித்து அறிவுமதி ::

பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். பாட்டெழுதி என்ற போர்வையில் வெறுமே உளறி பேர் வாங்கும் முயற்சியிலும் சிலவர்கள் இருக்கிறார்கள். என்னடா சொக்கா, இந்த திராவிட நாட்டுக்கு வந்த சோதனை..

சிந்தனையாளர் பேரவை சிந்தனையாளர் விருதை அறிவுமதிக்கு தந்தார்களா? சிந்திச்சிதான் செஞ்சாங்களா?
 



கூட்டு பதிவு விஜய்காந்த் குறித்து அறிவுமதி ::

// ஆனால் அறிவுமதியின் கவிதைமீது துப்புவதற்குமுன் யோசியுங்கள் //
அறிவுமதியின் கவிதைத்திறனின் மேல் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை ஸ்ரீரங்கன். ஆனால் கவிஞர் என்பதற்காக கவுரப்படுத்தப்படும் ஒரு விழாவில் இவர் பேசும் அரசியலை குறித்த எனது விமர்சனமே அது.. மண்ணின் மைந்தனை வட நாட்டு நடிகையிடம் மன்னிப்பு கேட்க வைத்தது என்பதை ஒரு குற்றச்சாட்டாக வைக்கும் அவருக்கு சிந்தனையாளர் பட்டம்.. கவிஞர் அறிவுமதியின் எச்சரிக்கை என்ற பெயரில் இருக்கும் இந்த அறிக்கை முழுவதுமே ஒரு உளறலாகவே எனக்கு படுகிறது.
 



ரஜினி ராம்கி ஜக'தைலா'பிரதாபன் - 1 ::

அறிவுப்பசி அண்ணாசாமி :: திண்டிவனம் ராமமூர்த்திய பத்தி என்னவோ சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா டாக்டர்னு சொல்றீங்களே, எப்ப அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க? (அப்படீன்னு கேட்டு முதுகுல டின்னு கட்டிக்காம எஸ்கேப் ஆயிக்கலாம்... தேர்தல் நேரம்)
 



வந்தியத்தேவன் விவாதக் கூ(கு)த்துகள் - 3 ::

உண்மையான தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி... தேசியம் பேசும்போதே வந்தியத்தேவன் காவி கட்சி ஆளாத்தான் இருக்க வேண்டுமென்று நாம் சந்தேகப்பட்டோம்.. சந்தேகம் உறுதியாகும் வகையிலே ஒரு செய்தி இன்று தினமணியில் வந்திருக்கிறது... செய்திக்கு போவதற்கு முன் கச்சத்தீவு என்ற வார்த்தையை வந்தியத்தேவனும் அம்மாவும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பேசுவதால் ஒருவேளை வந்தியத்தேவன் = அம்மா என்ற சநதேகம் மற்றவர்களுக்கு வருவதை பற்றி நமக்கு ஆட்சேபம் எதுவுமில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்...

கச்சத் தீவை நிரந்தர குத்தகையில் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்: ஜெயலலிதா பேச்சு

நாகர்கோவில், ஏப்.12: கச்சத் தீவுப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பெறுவதற்காக, கச்சத் தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் பெற வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து, அஞ்சுகிராமத்தில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியது:

மீனவர் நலனுக்காக சேமிப்பு, நிவாரணத் திட்டம், மீனவர் குழுக் காப்புறுதித் திட்டம், இலவச வீட்டு வசதித் திட்டம், மீனவ மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுமட்டுமின்றி மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் உபயோகப்படுத்தும் டீசலுக்கு விற்பனை வரியை முழுவதுமாக நீக்கி, விற்பனை வரியில்லாமல் மீனவர்களுக்கு அதிமுக அரசு டீசல் வழங்கி வருகிறது.

கச்சத் தீவுப் பகுதியில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பெறுவதற்காக கச்சத் தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் பெறவேண்டும் என்று மத்திய அரசை அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

மீனவர் பாதுகாப்பு திட்டம்:உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்று மீனவர் பாதுகாப்புத் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஜெயலலிதா.
 



கூட்டு பதிவு விஜய்காந்த் குறித்து அறிவுமதி ::

தம்பீ முத்துக்குமரன்,

கண்ணில் விளக்கெண்ணெய் வழிய வழிய தெளிவாக படித்தேன்... அப்படியும் உளறலாகத்தான் தோன்றுகிறது... ஒரு வேளை எனக்கு திரைப்பட இயக்குனராகும் ஆசை வருமானால் அப்பொழுது கண்டிப்பாக அண்ணனின் இந்த அறிக்கை கவிதையாக தோன்றும்... அப்பொழுது அண்ணனின் இந்த அறிக்கவிதை பற்றி தனிப்பதிவு எழுதி உணர்ச்சி வசப்பட்டுக்கொள்கிறேன்... அதுவரை அண்ணனின் அறிக்கை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை பொதுவில் எழுதிக்கொள்ள தம்பிகள் அனுமதி தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்...
 



பாலசந்தர் கணேசன் தி.மு.க வை சாடும் முகமூடியின் பதிவு ::

பாலசந்தர் கணேசன், உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் அப்படி ஒரு தோற்றம் வருவது உண்மைதான். அதற்கு காரணம் கருணாநிதி அளவு ஜெயலலிதாவை நான் விமர்சனம் செய்வதில்லை என்ற எண்ணமே. இது குறித்த எனது எண்ணங்களை பலமுறை நான் அங்கங்கே பேசி வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் திமுக & அதிமுக குறித்த எனது நிலைப்பாடு புரிய வரும். இப்போதைக்கு "கலர் டீவி கொடுப்பது என்பது உலக மகா கேணத்தனம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்ன காரணங்கள் கூறியும் இதனை நியாயபடுத்த முயல்வது தவறானதும் மட்டுமில்லை. மிக அபாயமான ஒன்றும் கூட" என்பதை மட்டும் பார்ப்போம். தற்போதைய வேலைப்பளு குறைந்த பிறகு ஒரு 15 நாட்கள் கழித்து - தேவைப்படின் - உங்கள் பார்வை குறித்து விரிவாக பேசுவோம்... (இப்பதிவுக்கு என் சார்பில் ஒரு + ஓட்டு)
 



ரஜினி ராம்கி கொடுத்து வைத்தவர்கள் ::

மயிலாடுதுறை - சென்னை (திண்டிவனம் வழி) தடத்தில் ஏதோ ஒரு குக்டவுனில் கண்ட தெருவோர ரசிகர் மன்ற பலகை வாசகம் ::

தலித்துகளின் பிரபாகரன் திருமா *** மன்றம்
 



குசும்பன் சில பல இணைய அரசியல்கள் ::

1. ஏம்பா அன்னியோன்னியமா பேசும்போது கயிதன்னா உடம்பிறப்பேன்னு அர்த்தம். அத்த வெளியில இருந்து எட்டி பாத்துபுட்டு படா பேஜாராக்கீதுன்னா எப்பிடிப்பா

2. பெரிய எடத்து சமாச்சாராம் போல கீதே. பேசாம நியூட்ரல் ஜல்லி அடிச்சிட்டு விடு ஜூட்.

3. எனக்கு ஒரு சந்தேகம் "இன்றைய வலைப்பதிவர்" க்கு நமக்கு நாமே திட்டத்துல கருத்து அனுப்பிச்சா பரிசீலிப்பாங்களா? "அந்த" அளவு இலக்கிஅ தமிழ்ல அறி முக ப்படுத்த முடியாட்டாலும் நம்ம லோக்கல் தமிழ்லயாவது ஒரு அறிமுகத்த போட்ற மாட்டோம்.

4. அது யாரு வர்றாங்கன்றத பொருத்து இருக்கப்பு... ரஜினிகாந்துக்கு கை கொடுக்கிறதும் ரகுவரனுக்கு கட்டவுட் வக்கிறதும் ஒண்ணா?

5. இது இன்னாபா புதுக்கரடி.

6. இன்றைய வலைப்பதிவர்க்கு இவரு பேரத்தான் பரிந்துரைக்கலாம்னு இருக்கேன். இவர போயி கலாய்க்கிறியே நைனா.

7. ஹைய்யோ ஹைய்யோ.. சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு

8. என்னதான் மதுரக்காரவிங்க நெறைய பேரு இருந்தாலும் அவங்கள ஒருங்கிணைந்து நடாத்தி செல்ல ஒரு இணைய சக்தி இல்லையேப்பா

9. நம்ம கணிப்பு 1
நம்ம கணிப்பு 2

10. இறந்த காலத்த ஏம்பா விடாம மீள்பதிவு செய்யறீங்க.. ஓம் ஷாந்தி. ஓம் ஷாந்தி.
 



ஜொள்ளுப்பாண்டி ஸ்ரீல ஸ்ரீ ஜொள்ளானந்தா ஸ்வாமிகளின் கும்தலக்கா பேட்டி ::

// சங்க ‘தல’ கைப்புவும் தளபதி ‘தேவ்’வும் //

உங்க கட்சியில இருந்த மொத்த ஆளுங்க எண்ணிக்கையே மூணுதான். அதுல ரெண்டு சாமியார தேடவோ சாமியாராகவோ இமயமலைக்கு போயிட்டாங்க.. லெட்டர்பேட பழைய பேப்பர்காரனுக்கு போட்டுட்டு பமக பக்கம் வாங்க. தினமூடிக்கு ஆசிரியராக்கி தினமும் எனக்கு குட்டி கதைகள் எழுதும் பொறுப்பு தாரேன். அதவிட்டுபோட்டு... ஹைய்யோ ஹைய்யோ.. சிறுபிள்ளதனமால்ல இருக்கு...
 



காகாப்ரியன் ஜப்பானில் ஒரு குரூரம் ::

காகாப்ரியன், இவை உண்மை அல்ல... இது போன்ற செய்திகள் மின்னஞ்சல் வழியே வந்தால் http://www.snopes.com தளத்திற்கு சென்று ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள். இந்த தளம் இது போன்ற டுபாக்கூர் கட்டுக்கதைகளை (urban legends) கட்டுடைப்பதில் சிறந்தது.

உங்கள் ஜப்பானில் ஒரு குரூரம் பற்றிய விபரம் இங்கே http://www.snopes.com/horrors/cannibal/fetus.htm
 



குசும்பன் உச்சகட்டம் ::

ஆமா உம்ம தி(வி)ரட்டி பட்டியல்ல, தேன்கூட்ட காணமே... என்ன விசயம்.
இவண்,
தேன்கூடு இன்றைய வலைப்பதிவு பரிந்துரைப்பவர்களை கண்டுபிடிப்போர் கழகம் (வ.அமேரிக்கா)

*

// உச்சகட்டம் //
அடுத்த பதிவின் தலைப்பு "மாமனாரின் இன்ப வெறி"யா?

*

கொசுறு :: கில்லி தி(வி)ரட்டி பட்டியல்ல வருமா? இல்லாங்காட்டி அத்த எப்படி பட்டியல் படுத்தறது?
 



மீனாக்ஸ் திருமண அழைப்பு ::

பதினாறு பேரும் அளவான குழந்தைகளும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
 



ஞானபீடம் முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் ::

அடடா புளகாங்கிதத்தில் புல்லரிக்க வைக்கிறீர்... ஆனந்த கண்ணீரு அருவி மாதிரியில்ல கொட்டுது (வெண்ணிற ஆடை ரேஞ்சுல வசனமா கொட்டுதய்யா)

(எல்லாம் சரி "ஓ. அப்படியா.." ன்னு எதுக்கு ஆரம்பிக்குது கவிதை... (இது கவிதைதானே?) அதில் ஏதும் உள்குத்து உண்டா?)

*

இப்படி ஒரு பதிவு போட்டேன், ப்ளாக்கர் முழுங்கி விட்டது :)

இன்றைக்கு ஞானபீடம் அவர்களின் தளத்தில் நம் பதிவை பற்றி வந்திருக்கிறது. அவருக்கு நன்றி.
 



பாபா métier ::

அப்பாடி.. சுஜாதா கட்டுரை படிச்சி ரொம்ப நாளாச்சேன்னு இப்பத்தான் நினைச்சேன்.. என்னது இது நீங்க எழுதினதா?
 



திம்மிக்களும் டாவின்சி கோடும் ::

// அப்படி நடந்தால் இப்படி அமுக்குவார்கள் //

ஆனால் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான Ian McKellen இப்படி சொன்னதையும் பத்திரிக்கையில் சுதந்திரமாக வெளியிட்டார்கள். அவர் வீட்டு மீது வெடிகுண்டு வீசவில்லை. அவர் உயிருக்கு இன்னும் விலை வைக்கவில்லை.

"I'm very happy to believe that Jesus was married," said McKellen, an outspoken defender of gay rights since disclosing his homosexuality in the late 1980s. "And I know the Catholic church has problems with gay people, and I thought this would be absolute proof that Jesus was not gay."
 



விட்டுது சிகப்பு நீங்கள் தமிழன் தானா? சான்றிதழ் பெறுங்கள் ::

;)))

இந்த பதிவ படிக்கிறதுக்கு முந்தி நான் செய்ய வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு.. என் கொள்ளு தாத்தாவோட எள்ளுதாத்தா திராவிடரா இல்லையா? என்ன மொழி பேசுனாருன்னு நோண்டி நொங்கெடுக்கணும். அதுக்கப்புறம் இந்த சான்றிதழ் விவகாரத்துக்கு வர்றேன்..

*

அப்புறம் ஸ்டாண்டர்டு கேள்வி (எனக்கு ஸ்கேலே தெரிய மாட்டேங்குதே, நான் பாஸா பெயிலா?) கேட்டாத்தான் நான் மரத்தமிழன்னு அர்த்தம். அதெல்லாம் உங்களுக்கு புரியாது. நீங்க வலைப்பதிவுக்கு வரதுக்கு முந்தி நடந்த திராவிட விஷயம் அது. அதனால இது மாதிரி முக்கிய பதிவுகள்ல ஒரு கேள்விய போட்டு வக்கிறது வழக்கம்.. ஆக, நான் பாஸா பெயிலா?
 



பாபா Annual FETNA Festival - New York City ::

வாழிய தமிழகம்
வாழ்க நற்றமிழர்
வாழிய தமிழக மணித்திருநாடு
வந்தே திராவிடம்

© முகமூடி
 



ஞானபீடம் வானிலை அறிவிப்பு ::

// வல்லாரை தூதுவளை போன்ற மூலிகை மருந்துகள் கிடைக்கும் //

இல்லையெனில் இருக்கவே இருக்கு சிட்டுக்குருவி லேகியம். ஆனா பத்தியத்த ஒழுங்கா கடைபிடிக்கணும். மருத்துவரு 1 குளிகை வீதம் 30 நாள் சாப்பிட சொன்னா, கெரகம் சீக்கிரம் தாதுபுஷ்டி கிடக்கணுமின்னு 30 குளிகையையும் ஒரே நாள்ல சாப்பிட கூடாது. அப்புறம் மண்டை சுத்தமா காலியாகிடும். எல்லாரும் மூளை கெட்ட ஜென்மமேன்னு திட்டுவாங்க.
 



செல்வன் பதிவுகள் ஆராய்ச்சி மையத்தில் சுப்பனும்,நாயும் ::

:))))

"நாயும்"னு தலைப்பே வச்சிருக்கீங்களே, நாய் கூட்டத்துல முக்கிய பங்காற்றியிருக்குமோன்னு பாத்தா ஒரு செய்தியும் காணோம். நாய் சுப்பனோட சும்மா கூட போனதோட சரியா? வேற ஒண்ணுமே பண்ணலையா?
 



புல்+இ = புலி ::

இப்பொழுது எல்லாரும் புலியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சிவனே என்று தூங்கும் புலியை சீண்டினால் அது தூக்கம் கலைந்து எழுந்து கடுப்பாகி பிறகு அது தூங்க வேறு இடம் தேட வேண்டும். அப்படி அதை தொந்தரவு செய்வதில் உங்களுக்கெல்லாம் என்ன இன்பம்?

முதலில் சிறுத்தையை பற்றி பேசி முடியுங்கள். பிறகு புலியை பற்றி பேசலாம்.

*

நைல் நதியின் லீலி புஷ்பங்கள் ::

எழுதிய கவிஞர் பேரயும் வெளிவந்த புத்தகத்தின் பெயரையும் போடாம விட்டுட்டீங்களே...
 



ஸ்ரீரங்கன் என்னைத் தேடும் புலிகள் ::

ஸ்ரீரங்கன், சிறிது காலத்துக்காவது உங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் செயல்படுங்கள். அருகிலுள்ள காவல்நிலையத்தில் உங்களிடம் இருக்கும் தகவல்களை பதிவு செய்யுங்கள். I express my solidarity with you.
 



ரோசா அறைகூவல் ::

// வாரத்தின் துவக்கத்திலேயே 'அமங்கலமாய்' கதைப்பதாக விடும் // எப்போதிருந்து இப்படி?

// சில நேரடி வாசிப்புகளை தவிர்க்கும் வகையில் உருவக உருவத்திலேயே எழுதியிருந்தால், கவிதை பசுவய்யா தரத்திற்கு வந்திருக்க கூடும் என்றே தோன்றுகிறது // ...கலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. இலக்கிய முதிர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் கோளாறு என்று வேண்டுமானால் கொள்ளலாம்...

// முகமுடி ( மற்றவர்களும்) கூட, தங்கள் மன அரிப்புக்கு ஏற்ப, உண்மையிலேயே சுரா போல கவிதை படைத்து விட முடியும் என்ற தரத்தில்தான் அது இருக்கிறது // :)))

இப்போதுதான் கவனித்தேன். இந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக நிறைய பதிவுகள் எழுதுவதாக முடிவெடுத்திருக்கிறீர்கள் போல... நல்லது.
 



ரோசா அறைகூவல் ::

'அமங்கலமாய்' என்ற பகுத்தறிவுக்கு முரணான சொல் பற்றிய வெறும் கேள்வி மட்டுமே...

உங்கள் விமர்சனம் மட்டுமல்ல எல்லா விமர்சனங்களையும் சகஜமாகவே எடுத்துக்கொள்கிறேன். ஆனால் விமர்சனம் என்ற போர்வையில் சிலர் [ உங்களை சொல்லவில்லை, தற்போதைக்காவது :) ] தங்களுடைய கற்பனையான நம்பிக்கைகளை முன்வைத்து அதுகுறித்து என்னிடம் மேல் விளக்கம் இருந்தால் "விமர்சனத்தை தாங்க முடியாமல் கதை எழுதுகிறேன்" என்பதும், எதுவும் தராவிட்டால் கற்பனைகளை உண்மை போல் கற்பிப்பதுமான சம்பவங்கள் நிகழ்வதால் அது குறித்த குழப்பத்தில் இருக்கிறேன்...
 



ரோசா ஸ்ரீரங்கனுக்காக ::

ரோசா,

இப்பதிவின் ஒரு சுட்டியை ஸ்ரீரங்கன் பதிவிலே கொடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. அந்த அபத்த லாஜிக்கல் கேள்விகள் குறித்து நீங்கள் வெளிப்படுத்தியதும் அதற்கு மேலேயுமான என் கேள்விகளை பதிவாக எழுதும் எண்ணம் வந்து பின் அந்த கேள்விகளில் சம்பந்தப்பட்ட சிலருக்கும் எனக்கும் உள்ள நட்பின் காரணமாக அது அரசியலாக்கப்படும் சூழலை விரும்பாததால் - அரசியல் என்பது பழகியதுதான் என்றாலும் ஸ்ரீரங்கனின் இக்கட்டான சூழ்நிலையிலும் அதை வைத்து வெளியே ஒரு ஆபாசம் (என்னால்) அரங்கேற வேண்டாமே என்று நிறுத்திக்கொண்டேன்.. இங்கு ஏதாவது "தெளிவான" விளக்கம் வருகிறதா எனப்பார்ப்போம்.

இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை :: சிலருக்கு ஸ்ரீரங்கனின் பதிவிலே பின்னூட்டம் தருவதில் தயக்கம் தரும் அரசியல் இருக்கலாம். அவர்கள் தனிப்பதிவாக எழுதலாம் அல்லது அமைதியாக இருக்கலாம்.. அதை விடுத்து ஸ்ரீரங்கனுக்கு அறிவுரையையும் ஆறுதலையும் உங்கள் பதிவிலோ பெயரிலி பதிவிலோ தருவது - ஜாபர்கான் பேட்டையில் மேடை போட்டு ஜார்ஜ் புஷ்ஷை கேள்வி கேட்கும் - அபத்தமாக தோன்றுகிறது.
 



துளசி கிடைக்கிறது ::

கடேசில $20 ஹப்ப தேடுறேன் பேர்வழின்னு ரெண்டு மூணு ரவுண்டு அடிச்சி $20க்கு பெட்ரோல் போட்டீங்கன்னு சொல்லுங்க.. (இங்கல்லாம் எக்கச்சக்க விலை இப்போ)

*

"ஒரு சின்ன நகைப்பெட்டி குடுத்தாங்க. திறந்து பார்த்தா.. என் pendant."

இதான் சாக்குன்னு கண்டெடுத்ததையே கல்யாணப்பரிசா கொடுத்திட்டு பர்ஸையே திறக்காம எஸ்கேப் ஆகிடாங்களா?

*

"ஆத்து நிறைய தண்ணி போனாலும், நாய் நக்கிதான் குடிக்குமுன்னு" ஊரோடு ஒத்து வாழ்னு நீங்களும் ஒரு நாய் (பதிவில்லைன்னாலும்) பின்னூட்டமாவது போடணுமின்னு இருக்கு பாருங்க.
 



ஞானபீடம் கரிநீலக் கண்ணழகி... கண்ணகி ::

ரிவ்யூவில் விட்ட குறை தொட்ட குறை ::

striking back again என்று கண்ணகி கூறும் பஞ்ச் வசனம் பகுத் அறிவு மக்களை திகிலூட்டுவதாக உள்ளது.
 



லிவிங் ஸ்மைல் ஏன் லிவிங் ஸ்மைல் ::

வருக வருக என்று வரவேற்கிறேன்... உங்கள் பார்வைகளும் அனுபவங்களும் இதுவரை அனுமானங்களில் அடிப்படையில் அமைந்த கட்டுமானத்தை மாற்றியமைக்கும் என்று நம்புகிறேன். நிறைய எழுதுங்கள்.
 



SK நாயும் நானும் ::

அப்போதே சொன்னேனா என்று ஞாபகம் இல்லை.. கவிதை மிகவும் நன்றாக இருந்தது... (இப்போதெல்லாம் நிறைய கவிதைகள் எழுதுகின்றீர்களா அல்லது நான் இப்போதுதான் கவனிக்கிறேனா?)
 



NJ அவுத்துப் போட்டு ஆடு ::

இது ஒரு தரங்கெட்ட பதிவு (ஏன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.. சரி சரி சொல்றேன்.. ஏன்னா இந்த பதிவுல **** என்ற வார்த்தை(கள்) இருக்கு. ஓ, **** வார்த்தை(கள்) மீண்டும் மீண்டும் இருப்பதால் இது ஒரு மிக மிக தரங்கெட்ட பதிவு...)
 



பொன்ஸ் நான் ஏன் மாற்றினேன்? ::

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை

அவ்ளோதான் ஞாபகத்துக்கு வருது :(
 



மதுமிதா என் இனிய வலைப்பதிவாளர்களே ::

உங்கள் ஆய்வின் அட்டைப்படத்தை அலங்கரிக்க

http://mugamoodi.blogspot.com
 



தாணு சண்டைக்கு இழுக்கும் ஜாதி ::

// தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்! //

இதை வழிமொழிகிறேன் (இது தனிநபர் துவேஷத்தால் வந்ததல்ல, அவரின் கருத்துக்களில் இருக்கும் வேஷத்தால் வந்தது... உதாரணத்தோடு வேண்டுமென்றாலும் விளக்க தயாராகவே இருக்கிறேன்)
 



NJ சென்று வருகிறேன் ::

இது இந்த டைப்பு சென்று வருகிறேனா, இல்ல இந்த டைப்பா?

(கும்பேனியில லீவு கொடுத்திருக்காங்க... ஊருக்கு போயிட்டு வாரேன்னு நேரா சொல்ல வேண்டியதுதான... என்னத்துக்கு பில்டப்பு)
 



உஷா கேள்விகளும் பதில்களும் ::

பதில்கள் தானாய் தெரியட்டும் என்று
கேள்விகளை நிறுத்தியபின்னே
பொருத்தமில்லா பதில்களாய்
வந்துகொண்டிருந்த பதில்கள்
கேள்விகளாய்
உருமாற்றம் அடைந்தன...
இந்த கேள்விகளில் ஏதும்
அர்த்தம் உள்ளதா
என்ற கேள்வியை மட்டுமாவது
கேட்கலாம் என்றால்
கேள்விக்கான பதில்களை நிறுத்தி
கேட்பவனுக்கு மட்டுமே
பதில் சொல்வதாய் இருப்பதால்
கேட்பதற்கான அருகதையை
வளர்த்துக்கொண்டு வா என்றார்கள்
இப்போது கேள்வி கேட்டவர்கள்
கேள்வி கேட்டது போய்
கேள்விகளை கேட்டுக்கொண்டு நிற்கிறார்கள்!
 



பாபா Chat Meet - Icarus Prakash ::

ப்ரகாஷின் முயற்சியை பாராட்டி ஒரு பின்னூட்டம் விட வேண்டும்... ஆனால் இந்த பதிவு கில்லியில் வந்தபிறகு அங்கு விட்டால் ஒரே கல்லில ரெண்டு மாங்காய்... எப்பங்க இது கில்லில வரும்? (எதுக்கு வம்பு... ஏற்கனவே நேரம் சரியில்ல... சில ஸ்மைலிக்கள தூவிக்கிறேன்)
 



பாபா Thamizmanam for Sale ::

மைக்ரோசாப்டுக்கும் ஹாட்மெயில் சபீர்பாட்டியாவிற்கும் நடந்த வியாபாரத்தை - சபீர் பாட்டியா விற்ற போது 2.2 கோடி பயனர்கள் கொண்ட விளம்பரதாரர்களால் மொய்க்கப்பட்ட ஹாட்மெயிலின் நிலை, விற்பனை நடந்த டாட் காம் எழுச்சிக்கு முந்தைய காலகட்டம், 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிய மைக்ரோசாப்ட் அது ஹாட்மெயிலை "எடுத்துக்கொண்டதின்" பிண்ணனியில் இருந்த வியாபார நோக்கங்கள் - அதற்கு பின் வெற்றிகரமாக மற்றும் தோல்விகரமாக நிகழ்ந்த ஒரு சில டாட் காம் விற்பனைகள் ஆகியவற்றுடன் தமிழ்மண வியாபார அறிவிப்பையும் ஒப்புமைப்படுத்தி ஒரு பதிவு எழுதி கிடப்பில் போட்டேன்... (தற்போதைக்கு இது குறித்தான கருத்துக்கள் எதுவும் நான் வெளியிட விரும்பாததாலும், ஒரு சில விஷயங்களை என்னால் சுதந்திரமாக தொட முடியாது/கூடாது என்பதாலும்...)

உங்களின் சாதக பாதக அலசல் நன்று... மயூரன் கோர்வையாக சொல்லியிருக்கிறார்... அவர் சொல்வதான // தமிழ் மணத்தை வாங்கும் அணிக்கு இலாப நோக்கம் குறிக்கோளாக இருந்தால் அதற்கு அச்சுறுத்தல் மிக மிக அதிகமாக உள்ளது // என்பது இலாப நோக்கம் அடையும் வழியை பொறுத்தது... பயனர் தளத்தில் - பயனர்களின் வலைப்பதிவுகளில் - விளம்பரம் அல்லது அறிவிப்பு என்று ஆக்கிரமிக்க முடியாதே தவிர (அதற்கும் ஒரு addendum தயாரித்து பயனர்களிடம் ஒப்புமை பெறலாம்) வேறு மாடல்களின் - bharatmatrimony மாடல் ஒரு உதாரணம் - மூலம் பயனர்களில் ஒரு பகுதியினரை கொண்டே இலாபம் ஈட்ட முடியும். மற்றும் உங்களின் உருமாற்ற உத்திகளும்... மற்ற விஷயங்களை தேவைப்பட்டால் - எதிர்காலத்தில் தமிழ்மணம் யார் கைக்கு போகிறது என்பது வெளிப்படையாக தெரியும் பட்சத்தில் - பேசலாம்...

***

Ash or Not ::

போஸ்டன் மாநகரத்தில் பறந்த சிட்டுக்குருவிகள் ஒன்றையும் ரெண்டு நாளா காணோம்னு பேப்பர்ல படிச்சேன்... இப்ப பிரியுது... (லேகியம் சொந்த தயாரிப்பா... இல்ல லயன் டாக்டர் காளிமுத்து ஸ்பெஷல் விமானத்துல வந்தாரா?)
 



மயூரன் தமிழ் மண யாவாரம் ::

மைக்ரோசாப்டுக்கும் ஹாட்மெயில் சபீர்பாட்டியாவிற்கும் நடந்த வியாபாரத்தை - சபீர் பாட்டியா விற்ற போது 2.2 கோடி பயனர்கள் கொண்ட விளம்பரதாரர்களால் மொய்க்கப்பட்ட ஹாட்மெயிலின் நிலை, விற்பனை நடந்த டாட் காம் எழுச்சிக்கு முந்தைய காலகட்டம், 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிய மைக்ரோசாப்ட் அது ஹாட்மெயிலை "எடுத்துக்கொண்டதின்" பிண்ணனியில் இருந்த வியாபார நோக்கங்கள் - அதற்கு பின் வெற்றிகரமாக மற்றும் தோல்விகரமாக நிகழ்ந்த ஒரு சில டாட் காம் விற்பனைகள் ஆகியவற்றுடன் தமிழ்மண வியாபார அறிவிப்பையும் ஒப்புமைப்படுத்தி ஒரு பதிவு எழுதி கிடப்பில் போட்டேன்... (தற்போதைக்கு இது குறித்தான கருத்துக்கள் எதுவும் நான் வெளியிட விரும்பாததாலும், ஒரு சில விஷயங்களை என்னால் சுதந்திரமாக தொட முடியாது/கூடாது என்பதாலும்...)

நீங்கள் கோர்வையாக சொல்லியிருக்கிறீர்கள்.. // தமிழ் மணத்தை வாங்கும் அணிக்கு இலாப நோக்கம் குறிக்கோளாக இருந்தால் அதற்கு அச்சுறுத்தல் மிக மிக அதிகமாக உள்ளது // என்பது இலாப நோக்கம் அடையும் வழியை பொறுத்தது... பயனர் தளத்தில் - பயனர்களின் வலைப்பதிவுகளில் - விளம்பரம் அல்லது அறிவிப்பு என்று ஆக்கிரமிக்க முடியாதே தவிர (அதற்கும் ஒரு addendum தயாரித்து பயனர்களிடம் ஒப்புமை பெறலாம்) வேறு மாடல்களின் - bharatmatrimony மாடல் ஒரு உதாரணம் - மூலம் பயனர்களில் ஒரு பகுதியினரை கொண்டே இலாபம் ஈட்ட முடியும். உங்களின் மற்ற சில விஷயங்கள் குறித்து விவாதிக்க ஆசை... அவசியம் என்று தோன்றினால் வருகிறேன்.
 



பாலா பெரியார் திரைப்பட சர்ச்சை ::

முகமூடி ஒரு தீர்க்கதரிசின்னு யாரும் சொல்லிடாதீங்க எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் ;)
 



நிலா போட்டி + பாடம் + பரிசு ::

// இனி எப்போது போட்டி நடத்தினாலும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று நான் முடிவு செய்திருக்கிறேன் //

இந்த மாதிரியை தமிழ் வலையுலகத்திற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யாருன்னு தெரிஞ்சிக்கணுமின்னா இங்க பாருங்க
 



ராசபார்வை டைமிங் ::

கவுண்டரு பஞ்ச், பாடி லேங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷனக்கூட ரசிக்க வாய்க்காம "ஆராய்ச்சி" பண்ணும் அறிவிசீவிகளுக்காக பரிதாபப்படுவோம்.
 



ஜோ இந்து மதம் -சில சந்தேகங்கள் ::

ஜோ, நல்லதொரு பதிவும் விவாதங்களும்...

// Panjali refused to come to the palace initially because she had her periods that day."ooraadaiyil irukkiReen'Did Kannan leave her? //

தேன்துளி, நான் கேட்ட (திருமுருக. கிருபானந்த வாரியார், பேராசிரியர்கள் சரஸ்வதி ராமநாதன், சத்தியசீலன், அறிவொளி) மகாபாரதத்தில் பாஞ்சாலியை கண்ணன் இழுத்து வரச்சொல்லவில்லை... இழுத்து வரச்சொன்னது துரியோதனன், இழுத்து வந்தது துச்சாதனன்.
 



உஷா அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு ::

லக்கி லுக், வாந்தி வருவதை போல் தோன்றினால் எலுமிச்சை, இஞ்சிமொறப்பா போன்றவை உபயோகப்படுமா என்று பார்க்க வேண்டும்.. தோன்றிய உடனே கண்ட இடத்திலும் எடுக்கக்கூடாது... இந்த பதிவு பேசுவது என்ன, நீங்கள் பேசுவது என்ன?

பிறப்பில் கிடைக்கும் அட்டாச்மெண்ட்டான சாதியின் காரணமாக "கூட்டிக்கொடுப்பது, மாமா வேலை செய்வார்கள், பெண்கள் கேவலமானவர்கள்" என்றெல்லாம் தொடர்ந்து எழுதப்படுவதைப் பார்த்து இதற்கு எதாவது தீர்வு உண்டா என்று கேட்கிறார் பதிவாளர்.

அந்த இடத்தில் வந்து "இதற்கு வருத்தப்படுகிறீர்களே, அப்படியே ஒரு சாதியில் பிறந்தவர்கள் தொடர்ந்து இந்தியை ஆதரிப்பது, சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என்பது... இடஒதுக்கீடு என்றாலே உடனே கச்சைக்கட்டி ஓடிவந்து எதிர்ப்பது, திராவிடம் என்றாலே வாந்தி எடுப்பது என்பதற்கும் வருத்தப்படுங்கள்" என்று சொல்கிறீர்கள்... (நம் மதிப்பீடுகளுக்கு எதிர்ப்பதமாக இருக்கிறது என்பதால் அது பாவகரமானது, கேவலமானது என்பது போன்ற கருத்துத்திணிப்புகளை அப்புறம் பார்ப்போம்)

யார் என்ன பேசினாலும் தனக்கு தோன்றிய வகையில் செக்கூலரிஸத்தை தூக்கி பிடிக்கும் உம்மை மாதிரி மலமண்டைகளை குறித்துதான் இந்த பதிவே பேசுகிறது... ஒன்று செய்வோம்... நீர் பிறந்த ஜாதியை சொல்லும்.. இல்லை உம்ம பேரை சொன்னால் கூட போதும் சில இணைய *சுக்கள் பேரை வைத்து ஜாதியை கணிக்கிறார்களாம், அவர்களிடம் உம்ம ஜாதி என்ன என்று கேட்போம். பிறகு உம்ம ஜாதிக்கு உண்டான பொதுப்புத்திகளை எல்லாம் பட்டியல் போட்டு, உம்ம சிந்தனைக்கு எல்லாம் ஜாதிதான் காரணம் என்று சொல்லி அப்படியே உம்ம குடும்பத்தையும் உம்ம வீட்டு பெண்களையும் போர்னோ விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடுவோம்... அதற்கு பதில் சொல்லி நீர் போடும் இழவு பதிவில் ஒப்பாரி வைக்கும்போது அப்படியே பக்கத்து வீட்டு பூனை செத்த்தற்கும் சேர்த்து வருத்தப்பட்டு ஒப்பாரி வைக்கலாம்...
 



உஷா அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு ::

லக்கி லுக்,

உங்கள் கருத்தை உங்களிடமே பிரயோகித்தால் எனக்கு நீங்கள் தரும் சர்டிபிகேட் ஜாதிவெறியன்.. தமாஷாக இல்லை? எதை வைத்து எனக்கு ஜாதி சர்டிபிகேட் தருகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? (உஷாவுக்கு பின்னூட்டம் அளித்ததால் / உங்கள் பிராமண எதிர்ப்பு கருத்துக்கு எதிர் கருத்து சொன்னதால் / உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து சொன்னதால் என்ற காரணங்களில் ஒன்று என்பது உங்கள் பதிலானால் அதை சொல்லக்கூட வேண்டாம்...) இல்லையெனில் சொல்லலாம்... சும்மா உங்கள் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்கிறேன்... ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மீது பொது அபிப்பிராயம் வைத்துக்கொண்டு அலையும் நீங்கள் ஜாதி வெறியரா, அல்லது நானா என்பதை முடிந்தால் சிந்தித்துப்பார்க்கவும்...

hard core திராவிட skin heads யாராவது உங்கள் கருத்தை சொல்லியிருந்தால் வழக்கம் போலவே சும்மா போயிருப்பேன்.. ஏனோ உங்களிடம் சொல்ல தோன்றியது... மற்றபடி உங்களை 'திருத்தும்' எண்ணமெல்லாம் இல்லை... You are what you are... Be yourself.


**

// ஒரு சக பெண்வலைப்பதிவரை "அருக்கானி" என்று முகமூடி எழுதியபோது பெண் என்ற முறையில் நீங்கள் ஏன் வெகுன்டு எழவில்லை? //

இதற்கு ஏற்கனவே பதில் தெரிந்தும் வழிப்போக்கன், வெள்ளைப்பூண்டு என்று பல விதங்களில் சலிக்காமல் கேள்வி கேட்கலாம்... அதற்கு எதற்கு பெண் குலத்தை எல்லாம் இழுத்துக்கொண்டு... அருக்காணி என்று குறிப்பிடப்பட்டவர் யார் என்று உங்களுக்கு தெரிந்தால் அந்த காலகட்டத்தில் எங்களுக்கிடையில் என்ன ப்ரச்னை இருந்தது என்று அறிந்து கொள்ள முயற்சிக்கவும்.. பொதுவில் நடந்த விஷயமென்றாலும் இருவருக்கு இடையில் நடக்கும் தனிப்பட்ட அரசியலை உலகமயமாக்கி குளிர் காய்வதை விட்டு வேறு ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால் பேசவும்...
 



உஷா அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு ::

லக்கிலுக் :: முகமூடி கருத்துக்கு உங்க பதில் என்ன என்ன என்னனு கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி என்னத்துக்கு ஒரே புலம்பல்... (அப்புறம் நான் எங்கே கேட்டேன், நெருக்கடி கொடுத்தேன், மிரட்டினேன்னு ஒரு ஸ்மைலி போட்டு எப்பய்யா திருந்த போறீங்கன்னு வழியணும்...) உஷா எனக்கு நன்றின்னு சொன்னதை வேணா நான் திருப்பி கொடுத்து விடுகிறேன்.. போதுமா?

உங்களுக்கும் மட்டுமில்ல, நீங்க என்ன எழுதினீங்க, நான் என்ன சொன்னேன் அப்படீங்கறதை அவங்க அவங்களுக்கு புரிஞ்ச மாதிரி அர்த்தப்படுத்தி, என்னவோ என் பதில் கொலைக்குற்றம், ஆபாசம், தனிமனித தாக்குதல் அப்படீங்கற ரேஞ்சுல பில்டப் கொடுத்து, அதை வெளியிட்டதுக்கு என்ன காரணம்னு "பதில் கேட்டு சாகும் வரை போராட்டம்" நடத்தும் அனைவருக்கும் நானே பதில் சொல்லிக்கிறேன்.

ஒரு ப்ரச்னை பற்றி பேசினால் அதனோடு தொடர்புடைய இதர ப்ரச்னைகளை பற்றி பேசலாம் தப்பில்லை... சில சமயங்களில் சம்பந்தமில்லாத, ஆனால் தனது கொளுகைகளால் சம்பந்தமிருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுவது ஓரளவு ஓக்கேதான்.. ஆனால் அது படிப்பவருக்கும் சுகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை... அதுவும் அந்த கொளுகைகள் கண்மூடித்தனமானதான கொளுகையாக இருக்குபோது யாராவது பதில் சொல்லத்தான் செய்வார்கள்...

பார்ப்பனர்கள் கூட்டிக்கொடுப்பவர்கள், மாமா வேலை செய்பவர்கள், பாப்பாதிகள் கேவலமானவர்கள் என்று அப்பட்டமாகவேத்தான் வலைப்பதிவுகளில் எழுதப்படுகிறது... கேட்டால் பார்ப்பனீயத்தை கடைபிடிக்கும் பார்ப்பனர்களுக்குத்தானே கோபம் வர வேண்டும் என்று மடக்க்க்கு வேறு... மரம்வெட்டி என்றால் மரத்தை வெட்டியவனுக்கு மட்டும் கோபம் வருவதுதானே அது ஏன் வன்னியர்களுக்கு கோபம் வருகிறது என்று ஏதாவது உதாரணம் தரலாம், ஆனால் அது ப்ரச்னையை வேறு விதமாக்கும்... இங்கு கேள்விக்குள்ளாவது பார்ப்பனீயத்தை கடைபிடிப்பவர்களைத்தான் கண்டிக்கிறேன் என்ற சப்பைக்கட்டிக்கொண்டு பார்ப்பனர்கள் என்ற வார்த்தை பிரயோகம் குறிப்பிடப்படுவதைத்தான்... அந்த பொது பிரயோகத்தை குறிப்பிட்டு பார்ப்பனர்கள் **** என்று எழுதும்போது (எங்கும் சாதியை தாங்கிப்பிடித்ததில்லை என்று கூறும் உஷாவே பெயர் குறிப்பிடப்பட்டு அவர் சாதியால் சுட்டப்பட்டிருக்கிறார்) இப்படி கண்டபடி எழுதுவதற்கு விடிவுகாலம் கிடையாதா என்று கேட்கிறார்...

அந்த இடத்தில் வந்து லக்கிலுக் பார்ப்பனர்கள் என்றால் சில குணாதிசயங்கள் இருக்கிறதே அதையும் கண்டித்தால்தானே நீங்கள் நடுநிலையாளர் என்று உளறுகிறார்... ரெண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை எந்த "புத்தி"யுள்ள ஜீவனாவது விளக்கட்டும்.. எனக்கு இந்த இரண்டுக்கும் ஒரு கனெக்ஷனும் புரியவில்லை... லக்கிலுக் ஏதாவது இழவு வீட்டுக்கு போனால் அங்கு அழுபவர்களை பார்த்து, மூணாம் வீட்டு முனுசாமி வீட்டு பூனை செத்து போச்சாம் அதுக்கும் சேத்து அழுங்க என்று சொன்னால் கூட பரவாயில்லை, ஆனால் முனுசாமி புள்ளக்கி ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களாம் அதுக்கு அழுதீங்களா என்றால் என்னய்யா அர்த்தம்... அதாவது யாரோ கேட்ட மாதிரி முஸ்லீம்களை பொதுப்படையாக கேவலமாக எழுதுகிறார்களே, அதுக்கு வருத்தப்பட்டீர்களா என்பது கூட லாஜிக்கான கேள்வி... ஆனால் பார்ப்பனர்கள் மாமா வேலை பார்ப்பவர்கள் என்று எழுதுகிறார்களே என்று கேள்வி கேட்டால், பார்ப்பனர்கள் ஹிந்தியை சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறார்களே அதற்கு வருத்தப்படாமல் இதற்கு மட்டும் வருத்தப்படுவது ஏன் என்று லக்கிலுக் கேட்டால் அதை மலமண்டை விமர்சனம் என்று சொல்லாமல் வேறு எந்த பெயரில் அழைப்பது...

கவிஞர் என்று அறியப்படும் முத்துக்குமரனுக்கே என் தமிழ் புரியவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.. வார்த்தை விளையாட்டு என்று உஷாவுக்கு சர்டிபிகேட் தரும் அவர் சொல்வதுதான் முக்கியமானது :: "ஏன் அவர்கள் வீட்டுப்பெண்கள் எல்லாம் உங்களுக்கு பெண்களாகத் தெரியவில்லையா" இதைத்தானய்யா இவங்களும் கேட்டாங்க... அதுக்கு எப்படியெல்லாம் சிலம்பம் சுத்தறீங்க... நான் லக்கிலுக்குக்கு பதில் சொன்னது ஒரு உதாரண சம்பவத்தைத்தான்... உங்க ஜாதி தெரிஞ்சா அதை வைத்து உங்க ஜாதி(வீட்டு) பெண்களையெல்லாம் மானம் கெட்டவங்கன்னு பொதுவா எழுதினா அங்கயும் இப்படித்தான் நடுநிலைமை பேசுவீங்களான்னு நான் எழுதினது வெறுமே ஒரு உதாரணம்... அப்படியெல்லாம் கண்டிப்பாக நான் எழுதப்போவதில்லை... வெறும் உதாரணத்துக்கே லக்கிலுக், வழிப்போக்கன், முத்துக்குமரன்னு ஆரம்பிச்சு ஏகப்பட்ட பேரு இப்படி சிலம்பம் சுத்தறீங்களே ஏகப்பட்ட இடத்துல இப்படி எழுதப்பட்ட/எழுதப்படுவதை படிக்கிற பெண்கள் எப்படியெல்லாம் சுத்தணும்?
 



பாலசந்தர் கணேசன் ::


பகுதி 1) உங்கள் பதிவில் நான் கண்ட பிழைகள் (நீங்கள் அவசரமாக எழுதியதால் இருக்கலாம்) ::

அ) தமிழ் வலையுலகம் சூடாக உள்ளது என்று இருக்க வேண்டியது தமிழ்மணம் சூடாக உள்ளது என்று உள்ளது (தமிழ்மணத்தை அவதூறு பரப்புகிறீர்கள் என்று யாராவது பின்னூட்டம் போட்டு அப்புறம் அதை ஒரு பதிவாகவும் போட்டு அதற்கு பதில் சொல்ல சில பின்னூட்டங்கள் பதிவுகள் என்று சங்கிலித்தொடர் சூடு பரவுவதை தடுக்கவே இந்த யோசனை)

ஆ) உங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்ட முதல் ஐந்து பேருக்கு மட்டும் பொருத்தமான வரிகளை மேலே தந்துவிட்டு இரண்டு பேரை டீலில் விடுவதன் மூலம் பாரபட்சம், பாகுபாடு காண்பித்து அவர்களிடம் சூட்டை கிளப்ப நீங்களே முயல்கிறீர்கள்

**

பகுதி 2) குறிப்பாக ஒரு ஏழு பேர் பெயரை மட்டும் பட்டியலில் சொல்லக்காரணம் ::

அ) இவர்கள் ஏழு பேரால்தான் தமிழ் வலையுலகம் சூடாக உள்ளது
ஆ) இவர்கள் நல்ல முறையில் தமிழ்மணம் பரப்பினாலே எல்லா ப்ரச்னையும் தீர்ந்துவிடும்
இ) All of the above

**

தேவையான இடங்களில் இந்த ஸ்மைலிக்களை தூவிக்கொள்ளவும் :) :) :) :) :) :) :) :) :)
 



பாபா Cooling Tamil Blogosphere ::

பூனை புலியாகுமா? என்று குறிப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? பூனை தோற்றத்தில் புலியாகுமா என்று கேட்கிறீர்களா? அல்லது என்னதான் இன்று தோற்றத்தில் புலிகள் என்றாலும் அது செயலில் பூனைதானே என்று இளக்காரமாக சொல்கிறீர்களா?

சிரிக்கும் சிறுத்தையை நம்பாதே என்று சொல்வதன் மூலம் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் சிரிப்பதை கூட நம்பக்கூடாது என்று நைச்சியத்தை புகுத்தும் ***த்தன (ஒரு பதிவரின் பெயர்) மேட்டுக்குடி மனோபாவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் பூனை (புலியாகாதது) குட்டி வெளிவந்தது...

ஆண் பெண் கற்பு நிலை விவாதங்களின் மூலம் நீங்கள் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லையா? சட்டையை திற காற்று வரும் என்ற படத்தில் ஒரு ஆணின் மார்பகமும், ***உம் வெளிப்படையாக தெரியும் அளவு வெளியிட்டிருப்பது ஆபாசம் இல்லையா? இப்படி எல்லாம் ஆபாசத்தை கடை பரப்பிவிட்டு போலி டோண்டுவை மட்டும் குறை சொல்வது கயமைத்தனம் இல்லையா? (எதிர்காலத்தில் இதை கண்டிக்காமல் போலியை மட்டும் குறை சொல்வதை கேள்வி கேட்கும் போலியின் ஆதரவாளர்கள் அவச்சொல்லில் இருந்து ஒரு வழியா தப்பினேன்)

*

இந்த பின்னூட்டத்துக்கு நன்றியை உடனடியாக ஒரு தனி பின்னூட்டமாகவோ அல்லது 1) ந 2) ன் 3) றி என்று பிரித்து பிரித்து >3 பின்னூட்டங்களாகவோ போடுவீர்கள் என்று நம்புகிறேன்... இல்லை உங்கள் பெயரில் நீங்களே பதிவு எழுதுகிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்... அப்படி இல்லையெனில் அதை நிரூபிக்கவும்... இல்லையென்றால் இதுவரை நாங்கள் வைத்திருந்த உங்கள் பிம்பத்தை சுக்கு ஆயிரமாக உடைத்து எறிந்துவிடுவோம்...
 



குசும்பன் மதிப்பிற்குறிய மாமிக்கு ::

சிம்பிள் எழுத்து நடையில் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை புரியும்படி ஒரு பதிவு... படிக்க நன்றாகவும் இருந்தது... பதிவுக்கு நன்றி...

நான் கூட கும்மியடிச்சவங்களுக்காக ஒரு பின்னூட்டம் போட்டேன்... ஆனா ப்ரச்னை ஒரு வழியா முடிவுக்கு வந்ததால, பிள்ளைப்பூச்சிங்க சத்தம் அடங்குனா சரின்னு அத அதுக்கு அப்புறம் கண்டுக்காம விட்டேன்... யாருக்காச்சும் பொழுது போவலையின்னா இங்கன இருக்கு படிச்சி பாத்துக்கோங்க...

அப்புறம் மதிப்புக்கு உரிய அப்படீங்கறது சேந்தா மதிப்பிற்குறியன்னு ஆகுமா?
 



சரி, உங்க கருத்து ??