<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

பின்னூட்டங்கள் 301 - 350


பின்னூட்டங்கள் 301 - 350

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


baba மணிக் கூண்டு சிவாவின் கேள்விக்கு பதில்: கறுப்பு/வெள்ளை: ஏன் மெகயின்? ::

I L'dOL when I read manikoondu's post... I wanted to
ask him was "WHY" "HE" chose to support obama? to ask
his 'clear' view on obama and american politics..
But, him being 'manikoondu', its not that hard to
guess.. He tried to use what he knows best... the same
ol' dravida/tamil branding, using the same flavors,
but in the US of America..

I dint follow the post/comments, but coming TN
election, just trasliterate his post, supporting a
minority candidate/party, your post would get enough
comments from Real/Reel "Tamils" that would help make
ur blog go up in alexa rating from 123,456,789 to
123,456,678 and I bet ur life's not the same anymore :)
 



முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள் ::

இப்பதிவில் விடுபட்டவை - முற்போக்கு பின்னவீனத்து வாதிகளின் சுபாவங்கள் - என என் காத்திர அவதானிப்பில் ::

1. எதாவது சல்லி ப்ரச்னை என்றால் அந்த ப்ரச்னையை மட்டும் மறுதலிக்ககூடாது. மறுப்புக்கு முன்பு அதிர்ச்சி மதிப்பீடு கூடிய இன்னொரு பேரதிர்ச்சி பாம் போட்டு சல்லியை மறுதலிக்க வேண்டும். உதாரணத்துக்கு “நீ ஜிப்பு போட மறந்துவிட்டாய்” என்று யாராவது உங்களை பற்றி சொன்னால் அதற்காக “நான் ஜிப்பு போடாதவன்னு சொல்லிட்டாங்கய்யா, நான் ரொம்ப நல்லவன்யா” என்று அழுதால் நீங்கள் சாதா ரண வாந்தி... ”என்ன பெத்த அம்மாவ தேவடியான்னு சொல்லிப்பாருங்க, நான் சந்தோசமா எரும மாட்டு மேல ஒண்ணுக்கு போன மாதிரி சொரணயே இல்லாம இருப்பேன, ஆனா நான் ஜிப்பு போடாதவன்னு சொல்லிட்டாங்கய்யா, நான் ரொம்ப நல்லவன்யா” என்று தெரு தெருவாக அந்த கோடிக்கும் இந்த கோடிக்குமாக அழுதால் அதுதான் முற்போக்க்கு பின்னவீனம்.

2. நானு கலியாணம் கட்டிக்க போறேன். எனக்கு ஆரோக்கியமான ஒரு பொண்ணோ இல்ல ஆணோ பார்ட்னர் (தோழர்?) பாத்து கொடுங்கன்னு ஓலை விட்டா நீங்க சாதாரணவாந்தி... ஆனா சாதி மறுப்பாளன்னு அழுத்தமா பதிய வைக்கணும்னா ”இந்தா பாருங்கய்யா, நானு இந்த சாதி. அதனால எனக்கு பாக்கிற பொண்ணு கண்டிப்பா வேற சாதியில இருக்கணும். பார்ட்னரோட அம்மாவும் அப்பாவும் வேற வேற சாதியில இருந்தா உத்தமம். பொண்ணோட சித்தப்பா அவங்க எல்லாரியும் விட மத்த சாதியா இருந்தே ஆகணும் அது கட்டாயம்” என்று பார்த்து பார்த்து - கவனிக்கவும் நீங்கள் சாதியை மறக்ககூடாது, மறுதலிக்க மட்டுமே வேண்டும் - கல்யாணம் செய்தால் நீங்கள் முற்போக்கு பின்னவீனம்.

3. என் கடன் யாருக்காவது விசிலடிச்சி கிடப்பதே என்று பிறப்பெடுத்த விசிலடிச்சான் குஞ்சுகள் சில தானாக அமையும் என்றாலும், அன்பு முத்தங்கள் சில பல கொடுத்து உங்களுக்கு என சில தனிப்பட்ட குஞ்சுகளை உருவாக்க வேண்டுவது அவசியம். அப்பொழுதுதான் உங்கள் அபத்த வாந்திகளை யாராவது வெளிச்சம் போட்டு காட்டினால் கூட விவஸ்தையே இல்லாமல் உங்கள் சார்பாக முத்த குஞ்சு அங்கே சென்று “பின்னவீனம் என் நண்பன், என் உயிர், என் தளபதி... என்னதான் வீரமா அட்டை கத்தி சுத்தி ஆடினாலும் அடிப்படையில அவன் ஒரு கோழை.. உங்க கருத்து அவன சாகடிச்சா அப்புறம் முத்தத்துக்கு எங்க போவேன்” என்று ஒரு காட்டு காட்டும். அதை பிச்சையெடுத்த ஓசி பிராந்தி குடித்துக்கொண்டே நீங்கள் எஞ்சாய் செய்யலாம்.
 



வருண் கமல், ரஜினியாக இருந்தால் ::

கிசுகிசு எழுதி அரிப்பை தீர்த்துக்கொள்ளும் பத்திரிக்கைகளுக்கு என்று எந்த தர்மமும் கிடையாது.. "ஒரு நடிகையின் கதை" என்று ஒரு நடிகையை டார்கெட் செய்து எழுதும் ஆசிரியனுக்கும் சரி, நெருப்பாற்றில் நீந்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு கிசுகிசு எழுதும் ஆசிரியனுக்கும் சரி, வாசகனை எப்படியாவது குசிப்படுத்தினால் சரி பீ விற்ற காசு நாறவா போகிறது என்பது ஒன்றே அவர்களுக்கு தெரிந்த நியதி.. அவர்கள் பொண்டாட்டியோடு அவர்கள் புணர்வது பற்றி விளக்கமாக எழுதினாலும் அதே வாசகன் குசிப்படுவான் என்பது அவர்களுக்கு தெரியும் என்றாலும் பொண்டாட்டி தனி சொத்து, நடிகை பொது சொத்து...

அதே கண்றாவி வாந்தியை வலைப்பதிவிலும் பார்க்க நேரிடுகையில் ஒரு வேளை சொன்னால் புரியுமோ என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்தாக சொல்லப்பட்ட அனைத்தையும் ரசிகர்களின் அதீத அன்பு என்று ஒரே வீச்சில் உதறும் உங்களுக்கு சத்தியமாக புரியப்போவதில்லை...

கள்/சாராயம் ஆனாலும் கணவன் ஃபுல் ஆனாலும் புருஷன் என்பதுதான் நமது கலாச்சாரம்.. பார்க்கவே பிடிக்கவில்லை என்றாலும் இருட்டில் மட்டும் புணர்ந்துகொண்டு கடமைக்காக வாழுதல்தான் கலாச்சார காவலர்களின் மொழியில் "மனிதனின்" இயல்பு. எனில் மனப்பொருத்தமா, அப்படியென்றால்? மூக்கணாங்கயிறு கொண்டு பட்டியில் அடைபட்ட மிருகத்துக்கு கூட சுதந்திரம் இருக்கலாம் ஆனால் மஞ்சள் கயிறு கொண்டு கட்டப்பட்டுவிட்டால் அவர்கள் சுதந்திரம் பற்றி அவர்கள் முடிவு எடுக்க முடியாது இல்லையா?

கமல்ஹாசனுக்கும் அவர் மனைவி/காதலி/தோழிக்கும் ஏற்படும் பிரிவு எதற்காக என்பது தெரியாது. யார் அதை விரும்பியிருப்பார்கள் என்பது தெரியாது. எத்தகைய நிர்ப்பந்தம்/சந்தர்ப்ப சூழலில் அவர்கள் அந்த முடிவை எடுப்பார்கள் என்பது தெரியாது. இருந்தாலும் காலம் காலமாக இருக்கும் "பெண்ணை பிரிந்தால் ஆண்தான் குற்றவாளி" எனும் பொது புத்தியின் காரணமாக தீர்ப்பு எழுதுகிறோம் என்பது புரியாது, சரி. அவன் யார் கூட வாழலாம், எப்படி வாழ வேண்டும் என்பதெல்லாம் நாம் எப்படி முடிவு செய்யமுடியும் என்பது புரியாது சரி... ஆனால்...

ஒரு காலகட்டத்திற்கு மோல் உடல் தேவை என்பது இரண்டாம்பட்சமாக போகும் என்பதை உணரும் வயது இல்லாத அரை வேக்காடு மாதிரி "பெண்களை போக பொருளாய் என்னும் ஒரு sadist இவன். இவனுடைய இரண்டு பெண்களையும் இப்படி நாலு பேருக்கு அனுப்ப சொல்லுங்கள் பார்போம்" என்பதாக பேசுகிறோமே. கமலுக்கு வெறும் போகப்பொருளுக்காக மட்டும் என்றால் சேர்ந்து வாழும் நிர்ப்பந்தம் எல்லாம் தேவையில்லை. அரை வேக்காட்டின் அம்மா முதற்கொண்டு நிறைய பேர் மூலமாக கமல் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பது கூடவா புரியவில்லை?


**

கயல்விழி, இங்கே ரசிகர்கள் நிலையில் இருந்து மட்டும் எல்லாரும் எழுதுவதில்லை... ரஜினி இமயமலை போவது அவரது தனிப்பட்ட விஷயம்தான். ஆனால் 2000 வயது கொண்ட ஒருவரை சந்தித்தேன் என்று சொல்லும்போது அது ஒரு சிலருக்கு நகைப்பாக இருக்கத்தான் செய்யும்.. அதை தனிப்ப்பட்ட் அவரின் வாழ்க்கை மீதான தாக்குதலாக எடுத்துக்கொண்டு அதை கமல் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்று எழுதும் தீர்ப்புக்கு பக்கவாத்தியமாக உபயோகப்படுத்துவது எப்படி பொருந்தும் என்பது எனக்கு புரியவில்லை...
 



அபி அப்பா வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்"- பாகம் # 3" ::


நேத்திதான் சித்தப்பா கல்யாணத்துல அம்பாசிடர் (ஒயிட் கலர்) கார்ல எப்பிடி பதிமூணு பேரு 12 கி.மீ ரணகளப்பட்டு போணோமின்னு பிரண்ட்சுகிட்ட பேசிகிட்டு இருந்தேன். வந்தா இங்க இது.எல்லா பாகத்தையும் ஒரே மூச்சா இப்பதான் படிச்சேன்..

ஒரு இருவதே இருவது வருசத்துல எவ்ளோ விசயம் காணாமலே போயிட்டுதுன்னு நெனச்சா ஏக்கமாவும் கஷ்டமாவும் இருக்கு. அதனால .. // குறிப்பு: இந்த தடவையும் பதிவு பெருசா ஆகிடுச்சு! அடுத்த பாகம் இரவு நடக்கும் கூத்துகள், அதுக்கு அடுத்த பதிவு கல்யாணம்! // ஒண்ணும் அவசரப்படாம, பதிவு கணக்கெல்லாம் வச்சிக்காம, கொஞ்சம் கூட போனாலும் பரவால்லலன்னு ஞாபகத்துக்கு வர்ரதயெல்லாம் விவரமா பதிச்சி வைங்க.. அடுத்த தலமுறைக்கு கதை சொல்லம்போது பிரயோசனமா இருக்கும்.

முக்கியமா அந்த பாஷை.. அதையும் மறக்காம பதிஞ்சி வைங்க, எம்பளது வயசானாலும் மூப்பே வராது...
 



பாபா பாஸ்போர்ட் மருதன் வெளியிடாத பின்னூட்டம் ::


// அதுக்காக வியாழன் கிரகத்தை பத்தி புக்கு எழுதனும்னா பாராகவன் வியாழனுக்கு போவனுமா ? //

அவசியமில்லை.. ஆனால் ஒரு தடவையாவது தொலைநோக்கி வழியாக வியாழன் கிரகத்தை பார்க்க வேண்டும் என்பது ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. வியாழன் உட்பட்ட கிரகங்களை பற்றி கோளரங்கங்கள் வெளியிட்ட அறிக்கைகள் சிலது, கோழியூர் நாராயணன் மற்றும் ஸ்ரீரங்க சுத்த வாக்கிய பஞ்சாங்க கம்பேனி வெளியிட்ட வியாழபெயர்ச்சி கையேடுகள் சிலது என்று கலந்து கட்டி வைத்துக்கொண்டு வியாழன் கிரகத்தை பற்றி நடு மத்தி யுத்தி வைத்து இலக்கியம் படைக்ககூடாது.

போன வாரம் எங்க வூட்டுல நடந்த உரையாடல் ::

டூரிஸ்டு விசாவுல இங்க வந்திருக்கிற என் நைனா :: ஏண்டா ஒபாமா பிரண்டு யாரோ anti-ப்ளாக் கொள்கை கொண்டவரு எஜுகேசன் மினிஸ்டரா வந்து எல்லா பப்ளிக் ஸ்கூலையும் ப்ரைவேட்டுக்கு மாத்தி டெண்டர் உடப்போறாராம். அதுனால பீஸ் கட்ட முடியாம அப்படி இப்படின்னு ப்ளாக்ஸ் எல்லாம் ட்ராப் அவுட் ஆகிடுவாங்களாம்.. இந்த திட்டத்துக்கு ஒபாமாவும் அக்ரி பண்ணிகிட்டாராம். ஏன் ஒரு ப்ளாக்கா இருந்துகிட்டு ப்ரஸிடண்டு இப்படியெல்லாம் பண்றாரு.

நான் :: ஜூனியர் விகடனா?

டூ.வி.இ.வ.எ.நைனா :: இல்ல ஆ.வி.

நான் :: நம்மூர்ல உக்காந்துகிட்டு எதையாவது அரைகுறையா படிச்சிட்டு இஷ்டப்படி கத வுடுறதே இவனுங்களுக்கு வேலையா போச்சி. இதயெல்லாம் படிக்காதீங்கன்னா நீங்களும் கேக்க மாட்றீங்க.

முந்தியெல்லாம் இது போன்ற கட்டு கதைகளென்றால் நக்கீரனா என்று கேட்ட நிலை இப்பொழுது தினமலரா, குமுதமா, விகடனா என்று கேட்கும் அளவு விஸ்தாரித்துக்கொண்டு ஹவுசிங் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட், பொலிடிகல் க்ளைமேட் என்று புரிகிறதோ இல்லையோ தினப்படி அமெரிக்க நடவடிக்கைகளை அமிஞ்சிகரை அண்ணாசாமிகளுக்கு கொண்டு சேர்த்தே தீருவது என்று வெறி கொண்டு அலைகிறார்கள்...
 



Jayashree ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்த கதை ::

எங்க வீட்டு திண்ணையில் வாழைக்காய் தோல் சாப்பிடும் ஆடுகளின் புகைப்படம் - ன்னு முடிக்க வேண்டிய சப்பை மேட்டருக்கு இம்மாம் பெரிய பதிவு... மெகா சீரியலுக்கு கதை எழுத போகலாம் நீங்க. (இருந்தாலும் பதிவு சுவாரசியமா இருந்தது, வரி விடாமல் படித்தேன் - இது சத்தியம்)
 



உஷா குடியரசு தினத்தில் ஒரு கவிதையாய் ஒரு நிகழ்வு ::

எச்சுச்சுமி.. பக்கத்தூருல ஏப்ரல் ஒண்ணு நிகழ்ச்சிக்கி தலைமையேற்று நடாத்தி தர பொருத்தமான தகுதியான ஒரு சிறப்பு விருந்தினர் வேணுமாம்.. உங்கள(மட்டும்தான், ஹஸ்பண்டு நாட் குவாலிஃபைடு)த்தான் பரிந்து உரைச்சிருக்கேன்... வந்து தலைமையேத்து நடத்தி கொடுக்கணுமின்னு கேட்டுக்கிறோம் சாமியோவ்...

**

என்னதான் நெல்லுக்கு பாஞ்ச தண்ணி புல்லுக்குன்னாலும், ப்ளாக்கருக்கெல்லாம் சல்யூட்டு அடிக்கிற நெலமயாகி போச்சேன்னு அந்த ச்சோ ச்வீட் பையன் கோவி கோவி அழறானாமே?
 



same link as above -

ஒன் மோர் கொஸ்டீன் :: நாமெல்லாம் பிச்சயெடுத்துகிட்டே இருக்கோம். இதுக்கெல்லாம் ஹெல்த் மினிஸ்டர் தவிர்த்த இந்திக்காரனுங்கதான் காரணம். அதனால அவனுங்க பண்டிகையான குடியரசு தினத்தை நாமெல்லாம் கொண்டாடக்கூடாதுன்னு டாலரில் சம்பாதிக்கும் தமிழர்கள் கட்சி சர்க்குலர் விட்டுச்சே பாத்தீங்களா?

துணை கொஸ்டீன் ::

குடியரசு தினத்துக்கு போயி அதில் கலந்து ஆரிய மாயையில் மயங்கிட்டீங்களா? அல்லது உணர்வில்லாமல் வெறுமே பார்வையாளர்களாக மட்டும் இருந்து இன உணர்வை வெளிப்படுத்தினீர்களா?
 



மாலன் முத்துக்குமார் ::

செவ்வாய், ஜூன் 14, 2005 அன்று நான் எழுதிய பதிவு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம். அதற்கப்புறம் பொதுவாக இலங்கை ப்ரச்னை பற்றி நான் பேசுவதில்லை (என்றே நினைக்கிறேன்). அன்றிலிருந்தும் அதற்கு முன்பும் பின்பும் மாறாத விஷயம் ஒன்றென்றால் அது, மாற்றாக வரும் எந்த ஒரு கருத்தையும் லொடுக்கு பாண்டிகள் பார்ப்பனீய ஜாடியில் போட்டு மூடுவது.. பதில் எதிர்பார்க்கவில்லை எனினும் இரு கேள்விகள் ::

அ) இலங்கை அரசாங்கத்திடம் போர்நிறுத்தம் குறித்து வலியிருத்த எல்லாதிக்கிலிருந்தும் நிர்ப்பந்தங்கள் வருகின்றன. ஆனால் அதற்கு பரஸ்பரமாக இலங்கை அரசாங்கம் ஏதாவது வலியிருத்த விரும்பினால் அல்லது உத்தரவாதம் கேட்டால் எதிர் தரப்பு சார்பாக அதற்கு பொறுப்பு எடுத்துக்கொள்ளக்கூடியவர்கள் யார்?

ஆ) இந்தியாவில் இருக்கும் ஏழு கோடி தமிழர்களை பற்றி இந்தியா கவலைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் மீதி இருக்கும் தொன்னூற்றி மூன்று சொச்சத்து தமிழரல்லாத இந்தியர்களுக்காக இந்தியா என்ன படவேண்டும் என்று கருதுகிறார்கள்.
 



சுரேஷ் கண்ணன் பிரியாணியும் பிரியாமணியும் ::

// எச்சரிக்கை: இது ஒரு ... மொக்கை // இத தனியா வேற சொல்லணுமாக்கும்...

எந்த நான்-வெஜ் ஓட்டலுக்கு போனாலும் மெயின் உணவாக, சிக்கன் பிரியாணி - நானும் இந்த கட்சிதான், ஆனால் முந்திரி திராட்சைகள் போன்ற பாயாச பதார்த்தங்களை பிரியாணியில் பார்த்தால் கடுப்பாக வரும்.
 



கோவி.கண்ணன் யார் வைத்த ஒப்பாரி இனிமையாக இருந்தது ? ::


உரிமைகளை எடுத்துக் கொள்ளாமல் போய் கெஞ்சுவதும், பாதங்களில் விழுந்து கொண்டு பிச்சை எடுப்பதும் தமிழினத்துக்கே இழுக்கு. இதற்கு பதிலாக செத்து தொலையலாம்... யார்? நீங்களும் தமிழினத்துல ஒருத்தர்தானே? மேலும் இது உங்களாலும் செய்யக்கூடிய விஷயம்தானே... அப்புறம் எதுக்கு அப்பப்போ பஞ்ச் டயலாக் மட்டும் அடிச்சிகிட்டு இருக்கீங்க... பொலிடிகல் அரங்கமோ, வலைப்பதிவு அரங்கமோ ”ஓட்டு”ன்னு வந்துட்டா வார்த்தை ஜால பொலிடிகலி வழ வழ கொழ கொழ டயலாக் எல்லாம் அப்படியே சரளமா வர்றதுதான் இல்ல?
 



போன பின்னூட்ட தொடர்ச்சி :-

கோவி,

என் உள்நோக்கம் கிடக்கட்டும், பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதது.. நம்மோட உரையாடல் உங்கள் டயலாக் பற்றித்தான்.. மாற்று கருத்தை பதிய வைப்பது நல்லதுதான்.. நன்றாக பதிய வையுங்கள். ஆனால் உங்களுடைய மாற்று கருத்து என்பது என்ன?

”என்னால், எங்களால் செய்ய முடிந்தது எதிர்ப்புகளை பதிய வைப்பது (மட்டுமே)” என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ”தமிழினத்துக்கே இழுக்கு. செத்து தொலையலாம்” என்று சொன்னால் அது யாரை நோக்கி..

இதே போன்ற அர்த்தமற்ற பேச்சை அரசியல் கழிசடைகள் மேடையில் பேசுவதை கேட்டு சுயசிந்தனை இல்லாத எத்தனையோ இளைஞர்கள் ஏற்கனவே செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... (உடனே அவர்கள் தமிழினத்துக்காக அடைந்த வீர மரணத்தை கொச்சைப்படுத்துகிறேன் என்று வாதம் வரும்.. ஆம் அவர்களுக்கு சுயசிந்தனை இல்லைதான்.. உண்மையிலேயே செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவர்களும் பதிவர்களும் வைத்திருப்பது போல “என்னால் முடிந்தது அவ்வளவுதான்” என்ற சுயசிந்தனை..) மேலும் போரில் ஏற்கனவே செத்துக்கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் நோக்கில்தானே கட்டுரையே எழுதப்படுகிறது, அதிலும் செத்துத்தொலையலாம் என்றால்?

செத்து தொலையலாம் என்பது வெறுமே இயலாமையை பதிவு செய்வதன் குறியீடுதான்.. அதற்கு மேல் அதற்கு அர்த்தம் கிடையாது என்று சொல்வீர்களானால் நோ கமெண்ட்ஸ்...
 



போன பின்னூட்ட தொடர்ச்சி :-

// செத்துத் தொலையலாம் என்பதை குறியீடாகத்தான் பதிய வைத்தேன் //

ஹ்ம்... அப்ப சரி.. விடுங்க.. ரெண்டு குறுங்கருத்து :-

அ) 'எங்கேயாவது போய் செத்து தொலையேன்' என்ற வீட்டில் சொல்லும் இயலாமை கலந்த பேச்சு வழக்கால் சொல் பேச்சு தாங்காத எத்தனையோ உயிர்கள் நிஜமாகவே போயிருக்கின்றன..

ஆ) நல்ல கம்பீரமான உரத்த குரலில் தோளில் கிடக்கும் கருப்பு துண்டை இரு கையாலும் ஆட்டியபடி ஏற்ற இறக்கத்தோடு நீங்கள் சொன்ன கருத்து போலவே ஒரு கருத்தை ஒரு தலைவர் கர்ஜித்த ஒரு கூட்டத்தில் சொல் பேச்சு தாங்காத பலகீனமான இதயங்கள் சிலதோடு கலந்து நானும் இருந்திருக்கிறேன்...
 



பிச்சைப்பாத்திரம்குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் ::


// ... காட்சிக் கோர்வை உலகத்தரத்தி்ல் ... //

இந்த உலகத்தரம் உலகத்தரம்கிறாங்களே, அப்டீன்னா என்னா? அது எங்க கிடைக்கும்?
 



கோவி சீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி ::

அந்தாள் பாவம் ஓடாத படம் ஒண்ணு ரெண்டு எடுத்து பொழுத ஓட்டிகிட்டு இருந்தான்.. அவனுக்கு எம்.பி கனவு எல்லாம் ஊட்டி ஒரு வழி பண்ணது பத்தாதுன்னு, இப்ப இப்பிடி கிளம்பிட்டீங்களா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி சீமான நிரந்தரமா ஜெயில்ல போட்டு கொல்லாம விடமாட்டீங்க போல :)

இன்னும் கொஞ்ச நாள்ல எதாவது சாக்கு சொல்லிகிட்டு ஒரு விழா எடுத்து கருணாநிதிய முன்வரிசைல உக்கார வச்சி இந்த நாய்ங்க வரிசையா வந்து சொரணையேயில்லாம வாலாட்டுறத பாக்கத்தானே போறோம்..
 



விவசாயி ஈழம்...இனி யார் தலைவன்? ::

// இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன் //

சந்தோஷம். எதுக்கு சொல்லணும்? அப்படி சொல்ல சொல்லி யாராவது துப்பாக்கி முனையில மிரட்டுறாங்களா?

// தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான் // அப்படியெல்லாம் இல்ல.. தமிழ்நாட்டு தமிழன் சக தமிழன்கிட்ட தான் அடிமைப்பட்டுள்ளான்.. அந்த ஆண்டான் தமிழன் வடநாட்டவன்கிட்ட அடிமைப்பட்ட மாதிரி தெரிவது ஒரு டகால்ட்டிதான்..

ஈழத்தமிழனோ பாதிப்பேர் சிங்களவன்கிட்டயும், பாதிப்பேர் புலிகள்கிட்டயும் அடிமைப்பட்டுள்ளார்கள்...

// என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான் // அப்ப கருணாந்தி தமிழன் இல்லியா?

// தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம் // இது நல்லா இருக்கே கத.. தமிழகம் இன்னும் இந்தியாவுல ஒரு பகுதிதான? என்னவோ தனி நாடு மாதிரி பேசற? உனக்கு பிடிக்கலையின்னா நீ எங்கியாவது ”தமிழன்” ஆச்சி புரியும் நாடா பாத்து போ..
 



காலம் பிரபாகரன் மீண்டும் வருவாரா ? ::


// பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு //

வைகோ, சுற்றி உட்கார்ந்து இருக்கும் சிப்பிப்பாறை மற்றும் கோஷ்டியிடம் - இந்த தேர்தல்ல ஊரே சேந்து நம்மோட நடு முதுக பிளந்து ரத்தம் கொட்ட கொட்ட அடிச்சாலும் ஊருக்குள்ள இப்பிடி நாலு பேரு இருந்துகிட்டு இன்னமும் நம்மள நம்புறாய்ங்களே... இவிங்க ரொம்ப நல்லவங்க போலருக்குடா ஊஊஊ...
 



சீமாச்சு அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள் ::

ஒற்றை வரியில் இவ்வளவு விஷயங்களா? ஜவஹர், சீமாச்சு, கேயாரஸ் மூவருக்கும் நன்றி.

அப்புறம் மீனா சினேகா அப்படின்னு எல்லாம் நடு நடுல சொல்றீங்களே? அவங்க எல்லாம் யாரு?
 



மருத்துவர் ப்ரூனோ முதுகலை மருத்துவம் ::

// 2017 முதல் 2020 வரை - மூன்று வருட கிராமப்புற சேவை //

// மருத்துவர்கள் தங்களது தொழிலை ஆரம்பிப்பது 35 வயதிற்கு பிறகு தான் //

அப்போ 2017 முதல் 2020 வரை அவங்க செய்யறதுக்கு பேர் என்னங்க ? அது சேவை, இது தொழில்னு கடி ஜோக் அடிச்சிடாதீங்க :)

அது சரி, (பட்ட முதுகலை)படிப்பை முடித்து தனியா செய்தால்தான் தொழிங்கற மாதிரியே பேசறீங்களே.. அப்போ வெறும் எம்.பி.பி.எஸ் மட்டுமே போதும்னு இருக்கறவங்க பண்றதுக்கு பேரு? வெறும் பி.இ மட்டும் படிச்சிட்டு தட்டு தடுமாறி ரிட்டையர் ஆகும்போது ஒரு ஏ.டி.இ அல்லது அதிகபட்சமா சி.இ ஆகிறவங்க உண்டு. ஆனா முதுகலை மருத்துவர்கள் மாதிரியே இன்னும் கொஞ்ச வருசம் ஆனாலும் பரவாயில்லைன்னு எம்.பி.ஏ {அல்லது} எம்.எஸ்/எம்.இ, எம்.ஃபில், பி.எச்.டி (இது - இடையில் மூணு வருசம் தொழில் நடத்தி பிறகு ஆகும் - முதுகலை டாக்டர் படிப்பை விட அதிக காலம் பிடிக்கும்) {அல்லது} இ.ஆ.ப (பல முறை கோட் அடித்து பிறகு பாஸ் செய்வதற்கென்றே முழு முனைப்போடு சென்னை புறநகரில் லட்சியத்தோடு வாழும் பலர்) அப்படீன்னு வேற பாதையில் போய் சாதா பி.இ வாழ்நாள் லட்சியமாக கருதுவதை சில பல வருடங்களில் கடப்போரும் உண்டு.. இது குறித்து உங்கள பார்வை என்ன?
 



தொடர்ச்சி :

// நீங்கள் எத்தனை தடவை உங்களுக்காக எம.பி.பி.எஸ் மருத்துவர்களிடம் சென்று இருக்கீறீர்கள்? //

நிறைய தடவை.. இன்னமும் புறநகரங்களிலும் கிராமங்களிலும் எம்.டியா எம்.பி.பி.எஸ் ஆ என்பதையும் விட கைராசி என்பதற்குத்தான் முக்கியத்துவம் அதிகம். ஆனால் கைராசி/பெயர் பற்றி தெரியாத போது முதுகலைக்கு முக்கியத்துவம் என்பது ஒத்துக்கொள்ளக்கூடியதே.

//பி.இ மற்றும் degree படித்தவர்களுக்கு ph.d, IAS என்பது ஒரு option.. ஆனால் மருத்துவம் படிப்பவர்களுக்கு முதுகலை என்பது தேவை மற்றும் கட்டாயம் ..//

தேவை/கட்டாயம் என்பது சொந்த ஆர்வத்திற்க்காக மட்டுமா அல்லது வருமானம்/மரியாதை பிரதானமா? பி.இ யோடு ஒப்பிட்டால் எம்.பி.பி.எஸ்க்கு கொடுக்கும் காலமும் உழைப்பும் மிகவும் கொடுமை எனும் தொனி தெரியும் வகையில் நிறைய பேரின் எண்ணத்திற்காகவே இதை குறிப்பிடுகிறேன்.. அட, எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் வருமானத்துக்கு குறைந்தபட்ச கியாரண்டி உண்டு.. பி.இ படித்து வெறும் 800 ரூபாயில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? கிராமப்புற வாய்ப்பில் அரசாங்கம் மருத்துவர்களுக்கு தரும் படி எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் அரசாங்க அலுவலகங்களில் அப்ரண்டிஸ்களுக்கு தரும் படி ரூ.1120 மட்டுமே (என்ன, இந்த வருசம் ஒரு அஞ்சி பத்து மேல பாத்து போட்டு கொடுப்பாங்களா இருக்கும்) அவர்களுக்கு எதிர்கால எதற்கும் உத்தரவாதம் இல்லை. இருந்தும் தரமணியில் இருக்கும் அலுவலகத்தில் எப்போது அப்புரண்டிஸ் பதவி(?!)க்கு விண்ணப்பம் காத்திருப்பு பட்டியல்தான்.

’வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்பதே ஒரே தகுதியாக இருக்கட்டும். எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு பெண் கேட்டு (கல்யாணத்துக்குத்தான்) பாருங்கள். பி.இ. முடித்துவிட்டும் பாருங்கள். அப்போ தெரியும் மரியாதை. எல்லாம் ”தமிழ் எம்.ஏ”வா மாறி பி.பி.ஓ வை மட்டும் வைத்து பி.இ ஐ எடை போடாதீர்கள். உலகம் ரொம்ப பெரிசு.
 



தொடர்ச்சி :

// 1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார். இன்று எதாவது ஒரு துறையின் செயலராகி இருப்பார் //

1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் முடித்தவுடன் இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் - இ.ஆ.பவிற்கு வெறும் இளங்கலை போதும் - அவர் மற்ற இளங்கலை இ.ஆ.பவைவிட வெறும் இரு வருடங்களே சீனியாரிட்டி இழக்கிறார் என்பதையும் நினைவில் வையுங்கள்.

// அது சேவை இது தொழில் இது தான் உண்மை //

2017-2020 காலகட்டம் - கிராமத்தில் ஆ.சு.மையத்தில் ஒரு முழுமையான டாக்டராக பணிபுரிவதை - உங்கள் கிராம அனுபவங்கள், உள்ளூர் கோஷ்டி அரசியல் மேலாண்மை பதிவுகள் நான் வெகுவாக ரசித்தவை - எல்லாம் எப்படி படிப்பதற்கான காலகட்டத்தில் 'கணக்கு' செய்துகொள்கிறீர்கள் என்ற எண்ணத்திலேயே என் கேள்விகள் அமைந்தன. மீண்டும் உங்கள் பதிவை "நன்றாக" படித்ததில் ஆ.சு.மை "கடமை" முதுகலைக்கு ஒரு கட்டாய-முன்-தேவை என்பதாக புரிந்து கொள்கிறேன். (ஒரு சைடுகிக் - முழுமையாக படித்தால்தான் பின்னூட்டம் போட வேண்டும் என்ற கொள்கையாலேயே இதுவரை ட்ரூதமிழன் பதிவில் ஒரு பின்னூட்டமும் இட்டதில்லை)

இ.இ என்பதற்கு பதில் சி.இ என்று அடித்துவிட்டேன். பெரும்பாலான 'வெறும்' பி.இக்களின் அதிகபட்ச பயணம் இ.இ மட்டுமே. அவர் வாழ்நாளின் மொத்த சம்பாத்தியம் (மட்டும்) மருத்துவத்துக்கு வெறும் ஆறே வருடங்கள் அதிக காலம் செலவிட்ட மருத்துவரின் மொத்த சம்பாத்தியத்தோடு ஒப்பிடக்கூடிய தகுதியுடையதா என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன்.

லாஸ் ஏஞ்சலீஸ் மாநகரம்தான். (ப்ளாக்கர் ஐடியில் லாகின் செய்தும் அது அனானிமோஸாக காண்பிக்கிறது) நான் குறிப்பிட்டது குறு/சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் குறித்து. என் கல்லூரி பருவம் வரை வாழ்ந்தது ஒரு (பின்தங்கிய) மாவட்ட தலைநகரத்தில். அங்கே மிகப்பிரபல குழந்தைகள் மருந்துவரும் மிகப்பிரபல பெரியவர்கள் மருத்துவரும் வெறும் MBBSதான். அனைத்து முதுகலை மருத்துவரையும் விட அவர்களுக்கு கூட்டம் அதிகம். நான் மேல்நிலை பள்ளி போனபோதுதான் இருவரும் "லீவ் விட்டுவிட்டு" கு.ம DCHம் பெ.ம MDம் கூட சேர்த்துக்கொண்டார்கள். அவர்கள் படிக்க எடுத்த விடுமுறை முடிந்து வந்தும் மூன்றே மாதத்தில் அவர்கள் பழைய கஸ்டமர்கள் மீண்டும் அவர்களிடம். காரணம் மக்களுக்கு அவர்கள் டிகிரியை விட ராசியே முக்கியமாக பட்டதுதான். அவர்கள் முதுகலை முடித்தும் மக்கள் அவர்களிடம் கண்ட ஒரே மாற்றம் கன்சல்டிங் பீஸ் 25/30லிருந்து 50/100ஆக ஆனதுதான் (MD அந்த காலத்திலேயே 1 கோடிக்கு நாஃப்டா லோன் எடுத்து ஐந்து அடுக்கு மருத்துவமனை கட்டி அனைவரையும் மூக்கில் விரல் வைக்க செய்தார். இன்று அவரின் இரு மகன்களும் இளங்கலை மருத்துவம் முடிக்கும் தருவாயில்)

என் நெருங்கிய நண்பர்கள் சிலர் மருத்துவமும் பலர் இஞ்சினியரிங்கும் சேர்ந்தோம். மருத்துவம் கிடைத்தாலும் இஞ்சினியரிங்தான் என்ற வகையறா என்னையும் சேர்த்து எங்கள் கூட்டத்தில் இருந்தது. சிலர் அப்படி மருத்துவம் கிடைத்தும் இஞ்சினியரிங் சேர்ந்தார்கள். அவர்கள் ஆர்வம் அப்படி. மருத்துவம்தான் என்று ஒற்றைக்காலில் இருந்து சிலர் சேர்ந்தார்கள். அவர்கள் ஆர்வம் அப்படி. ஆர்வம் என்று நான் சொல்வது படிக்கும் ஆசையை மட்டும் அல்ல. எப்படிப்பட்ட வாழ்க்கை முறை, எவ்வகை அந்தஸ்து, எவ்வளவு பணம் என்று எல்லாமும்தான்.

ஆகவே இதன் மூலம் ஊர் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் --- என்னதான் மருத்துவர்கள் அவர்கள் படிப்பு காலம் குறித்து தற்போதைக்கு சலித்துக்கொண்டாலும் தொலைநோக்கு திட்டத்தின்படி வெறும் ஆறு வருட முதலீட்டில்......... (இதுக்குத்தான் பதிவு பக்கம் ஒதுங்காம இருக்கிறது. ட்ரூதமிழனுக்கே டார்ச் அடிச்சிடுவோம் போலருக்குடா யப்பா)

**

// என் மகன் இந்த வருடம் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளான் // இப்பத்தான் பார்த்தேன். கங்ராஜுலேஷன்ஸ் உஷா ஆண்ட்டி. உங்கள டாக்டர் அம்மான்னு (தளபதி படத்துல கலெக்டர் முயற்சியில போர் தண்ணி பீரிட்டு அடிக்கும்போது அந்த ஊர் மக்கள் எல்லாம் ஸ்ரீவித்யாவ நெகிழ்வா கூப்பிடுவாங்களே, அந்த மாதிரி) கூப்பிடலாம்னு ஆசைதான். அதுக்குத்தான் இன்னும் 22 வருசமிருக்கே :))
 



தொடர்ச்சி...

ஒரு தகவலுக்காக -

பொறியியல் அப்ரண்டீஸ் குறித்த சுட்டி இதோ : Apprenticeship Training Scheme பொறியியல் பட்டதாரிகளுக்கான

படி கடந்த பத்தாண்டுகளில் நிறைய உயர்த்தியுள்ளார்கள். ரூ.1120 இப்போது ரூ.2600 ஆகியிருக்கிறது.

*

monsterindia தளத்தில் 0-2 வருட அனுபவம், பொறியியல் படிப்பிற்கான வேலை சம்பளத்துடன் என்று தேடியதில் கிடைத்த ஒரு சுட்டி நேரம் கிடைத்தால் நீங்களும் தேடலாம்.
Two years MBA / PGDM in HR/Finance/Marketing & Sales Management from reputed University / Institution. (OR)
Four year BE / B Tech in Mechanical / Production Engineering/ Electrical Engineering from reputed University / Institution
தகுதிக்கு சம்பளம் மாதம் ரூ.6250 (0.70 - 0.80 lacs என்பது வருட சம்பளமாக கொள்கிறேன். ட்ரெயினிக்கு மாதம் அவ்வளவு தருகிறார்கள் என்றால் அந்நிறுவனத்தில் சேர கண்டிப்பாக நான்

முயற்சிப்பேன்). இது விளம்பரம் கொடுத்து தேடும் அளவு வசதியுள்ள ஒரு நிறுவனத்தில்.. அப்படியென்றால் சிறிய நிறுவனங்களில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே விசாரிக்கலாம். கோவையில்

ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் டிப்ளமா படித்தவர்களையே வேலைக்கு எடுக்கும். இருப்பினும் கணக்கு காட்டுவதற்காக ஒன்றிரண்டு பொறியாளர்கள் இருப்பார்கள். அவர்கள்

சம்பளம் என்ன என்று கேட்டு பாருங்கள்.

ரூ.800க்கு வேலை என்பது என் கற்பனை அல்ல. இரண்டு வருடங்களுக்கு முன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு இயந்திரவியல் நிறுவனத்தில் வேலை பார்த்த என் நண்பனின் தம்பி - ஒரு

பட்டதாரி - வாங்கிய சம்பளம். அவன் சொன்னது - ”கம்யூட்டர் படிக்க வசதி/இஷ்டமில்லை. வீட்டில் “எக்ஸ்பீரியன்ஸுக்காக” சும்மா இருக்கலாம். அதற்கு பதில் தொழில் கற்றுக்கொள்ளலாமே என்று இதில் சேர்ந்தேன். இவ்வளவுதான் சம்பளம் தர முடியும் அதற்கு டிப்ளமாவே போதும் என்று என்னை சேர்க்க அவர்கள் தயாரில்லை. நாந்தான் அடம் பிடித்து சேர்ந்தேன். ஓரிரு வருடங்கள் தொழில் கற்று நானே லோன் கீன் போட்டு ஒரு பட்டறை ஆரம்பிக்கலாம். அல்லது அதற்குள் “இரண்டு மூன்று” வருட அனுபவம் கிடைத்திருக்கும், அதை வைத்து கொஞ்சம் கதையும் சேர்த்து வேறு

கம்பெனிக்கு மாறலாம்”

தமிழ்நாட்டில் 250 பொறியியல் கல்லூரிகள் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக தளம் சொல்கிறது. சராசரியாக 400 பேர் ஒரு கல்லூரியில் படிப்பதாக கொண்டால் ஒரு வருடம் வெளிவரும் பட்டதாரிகள் 1 லட்சம். இதில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள். மற்ற அனைவரும் போன சிலவருடங்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், வெளி மாநிலங்களிலிருந்து - தி.நகர்/திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் இருக்கும் மணவாடுகள் எண்ணிக்கை மாத்திரம் பல ஆயிரங்கள் - வந்தவர்கள், குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் டிப்ளமாவே போது பட்டதாரி தேவையில்லை என்று இருக்கும் நிறுவங்கள் என்று பல ப்ரச்னைகளின் நடுவே வாழும் ஐ.டி தவிர்த்த பொறியிலலார்களின் சராசரி சம்பள விகிதம் பொதுஜனத்துக்கு தெரியவே தெரியாது.

*

சரி விடுங்க.. நாம பேசி ஆகப்போறது என்ன.. இந்த கார்ட்டூன பாத்துட்டு இந்த நாள் இனிய நாள்னு வேலைய பார்ப்போம்
 



சித்திரக்கூடம் Goodbye Jayshree! ::

// அயல்நாடுகளில் செட்டிலாகி இருக்கும் என் தோழிகள்தான் உதாரணம். பிள்ளைப்பேறின்போது அல்லது ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே விமானமேறுபவர்கள் பெண்ணின் பெற்றோர்களாகத்தான் இருக்கிறார்கள் //

பிரசவத்தின் போது அம்மா அல்லது மாமியார் - யார் தங்கள் அருகில் இருக்க பிரியப்படுவார்கள் என்று உங்கள் உதாரண தோழிகளிடம் விசாரித்தீர்களா? அயல்நாட்டில் செட்டிலான நிறைய நண்பர்கள் எனக்குண்டு (ஒருவேளை நான் அயல்நாட்டில் இருப்பதாலும் இருக்கலாம்). பெரும்பாலானாவர்கள் தங்கள் மாமியாரை அந்நியமாக பார்க்காதவர்கள், ஏன் மாமியாரை அம்மா என்றுதான் அழைப்பவர்கள் என்றாலும் அம்மா என்று அழைக்கப்படும் மாமியாரை விட சுமந்து பெற்ற அம்மாவிடமே அதிக உரிமையுடனும் சுதந்திரமாகவும் இருப்பார்கள், பிரசவம் மாதிரி ஒரு அதிமுக்கிய காலகட்டத்தில் அவர்கள் அருகாமையையே விரும்புவார்கள் என்பதும் அவர்களது விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் கணவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கான உபரி தகவல்.. இவர்களே இப்படியென்றால் சாதா காலங்களில் தனிக்குடித்தனம் போக விரும்பும் பெண்களா பிரசவ காலத்தில் மாமியாருடன் இருக்க பிரியப்படப்போகிறார்கள்?

// பையனின் பெற்றோரை, மருமகள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிற சமூகம், பெண்ணின் பெற்றோரை(பெண்களை மட்டுமே பெற்றவர்களின் நிலைக்) குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்? //

என்னதான் மகளும் மருமகனும் வலிந்து கூப்பிட்டாலும் மகள் வீட்டில் போய் - நிரந்தரமாக விடுங்கள், தற்காலிகமாக சில மாதங்கள் கூட - தங்க பெரும்பாலான பெண்ணின் பெற்றோரின் "கௌரவம்" இடம் கொடுப்பதில்லையே, அது ஏன்?

உங்கள் வீட்டிற்கு அருகில் நடந்த சம்பவத்தின் பாதிப்பில் மொத்த உலகத்தையும் பொதுப்படுத்திவிடாதீர்கள். உலகம் அனைத்து வகை மக்களாலும் ஆனது.

*

// பெரும்பாலான பெண்களுக்கு திருமணமான புதிதில் கணவன்கூட புது மனிதன்தான். அதற்காக அவனை நேசிப்பதில்லையா? கணவனின் பெற்றோரை, உடன்பிறப்புகளை நேசிக்க வேண்டுமென்றால் மட்டும் ஏன் கசக்கிறது? அதே சமயம் (பெரும்பாலான) ஆண்கள் தங்கள் மனைவிகளின் உறவுகளை வெறுப்பதில்லையே. //

வழிமொழிகிறேன்!
 



உ.தமிழன் சாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..! ::

இன்று வரை எங்காவது ”தனது” கருத்தை ஆண்மையோடு லக்கி பதிவு செய்து பார்த்திருக்கிறீர்களா? எப்போது எல்லாருக்கும் ”நல்லவனாக” இருப்பதே லக்கியின் நோக்கம் என்பது அவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும். அது மற்றவரின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, எதிர்காலத்தில் எவர் மூலமாவது எதாவது அனுகூலம் கிடைக்கும் என்ற சுயலாபத்திற்காக என்பதாகவே அனுமானிக்க முடியும். வெகு சில சந்தர்ப்பங்களில் அவர் வீரம் காட்டியபோது நமக்கு எழுந்த ஆச்சரியங்களை கூட சில மணிநேரங்களிலேயே அவர்களிடம் வழிந்துகொண்டே இளித்து போடும் பின்னூட்டங்கள் மூலம் அழித்துவிடுவார். (நிறைய பேருக்கு போலவே) மூர்த்திக்கும் அடிவருடியாக லக்கி இருந்தார் என்ற என் திடமான நம்பிக்கையை நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அது அவர் இயல்பு. எதிர்கால அனுகூலத்திற்காக தெரிந்தே எழுத்து விபச்சாரம் செய்பவர்களை பற்றி என்ன சொல்லி என்ன. அண்ணே கலக்கிட்டீங்க என்று அவரிடமிருந்து உங்களுக்கு போன் வரும்போது எதிர்காலத்தில் அரசியலில் பெரும் இடத்திற்கு வரப்போகும் லக்கிக்கு என் வாழ்த்துக்ளை தெரிவித்து விடுங்கள்.
 



above comment contd...

// வருசத்துக்கு நாப்பதாயிரம் வரை கொலைகள் நடக்கும் நாட்டில் ரெண்டு தனி நபர்களை பற்றி ஆபாசமாக பதிவு எழுதினார் என்பதற்காக எல்லாம் அவர் சிறையில் இருக்கவேண்டிய ஆள் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மூர்த்தி மீது அனுதாபத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் அவர் அரசியல்,சமூக கருத்துகளை எழுதி வந்தவர். இது போல ஆபாச பதிவு எழுத அவர் தூண்டப்பட்டார் என்பதே உண்மை. //

களப்பிரர்.. இப்படி நீங்கள் எழுதுவதை பார்த்தால் எனக்கு உங்கள் குடும்பத்தை இழுத்து ஆபாச பதிவு எழுத தூண்டும் வகையில்தான் என் மூளை அமைப்பு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். உடனே நான் என்ன செய்கிறேன், ஒற்றை எழுத்து மட்டும் மாற்றி உங்கள் மெயில் ஐ.டி மாதிரியே ஒன்றை உருவாக்கி உங்கள் தெரிந்தவருக்கு மெயில் அனுப்பி உங்கள் குடும்பத்தின் பெண்கள் இருக்கும் நிழற்படத்தை திருடிவிடுகிறேன். அப்புறம் உங்கள் மனைவி அல்லது மகள் முகத்தை மட்டும் எடுத்து வலையில் கிடைக்கும் ஒரு நிர்வாண பெண்ணின் உடம்போடு ஒட்டி அதை போஸ்டர் அடித்து அதில் உங்கள் பெண் உங்களோடு உடலுறவு கொள்கிறால் என்பதாக அணு அணுவாக விவரித்து ஒரு காமக்கதை எழுதி வெளியிட்டால் நீங்கள் நாப்பதாயிரம் கொலைகள் பற்றி யோசிப்பீர்களா அல்லது உங்கள் மகள்/மனைவி நிர்வாணப்படத்தையா? இதை மூர்த்தி செய்தான் என்பதற்கு ஆதாரம் நிறைய பேரிடம் இருக்கிறது. எப்போதிருந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் புகைப்படங்கள் வெளியிடுவது தவிர்க்கப்படுகிறது என்பது தெரியுமா. பச்சை குழந்தைகளை ரேப் செய்பவன் கூட தூண்டப்பட்டே செய்கிறான். அவன் நியூரான் அமைப்பு அப்படி. அவனுக்கும் போய் வக்காலத்து வாங்குங்கள். தூண்டப்பட்டார், புடுங்கப்பட்டார் என்றெல்லாம் டமில் ஹீரோ பாணியில் ஊருக்கு உபதேசம் செய்யாமல் போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியை பாருங்கள்.
 



உ.தமிழன் சைபர் கிரைம்-செந்தழல் ரவிக்கு எனது பதில்..! ::

// இல்லாத என்னுடைய அலுவலக முகவரியில் இருந்து டோண்டுவை அடிக்கவா என்று அவனுக்கே மடல் அனுப்புவது போலவும், அவனுக்கு க்ரெடிட் கார்டு தகவல் அனுப்புவது போலவும் உருவாக்கினான். அதை தரன் முகமூதி உட்பட எல்லோரும் இணைப்பு கொடுத்து சொறிந்துகொண்டார்கள் //

அடங்கொய்யால... நாம் பாட்டுக்கு செவனேன்னு போனாலும் கூப்பிட்டு சொறியிறீங்களே.. அது எப்பிடி கூச்சமே படாம ப்ளேட்ட மாத்தி மாத்தி போட்டு புருடா உட்டுகிட்டே இருக்க முடியுது. சரி கொஞ்சம் பிட்டு ஓட்டுவோம்.

http://tvpravi.blogspot.com/2007/09/blog-post_20.html

இந்த லிங்க் எங்கியோ பாத்த மாதிரி இருக்கா? இம்சை ரவி - அதாம்பா நீ.. உன்னோட இன்னொரு பதிவுதான். இந்த பதிவில் செந்தழல் ரவியின் வாக்கு மூலம் : போலி டோண்டுவின் நம்பிக்கையை பெறலாம், அவன் எண்ணங்களை அறியலாம், அதன் மூலம் வலையுலகின் நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு முடிவை எட்டிவிடலாம் என்று அவனுடன் மடல் தொடர்பில் இருந்தது உண்மை...

அதே பதிவில் முகமூடியின் பின்னூட்டம் :- நீங்க போலியின் அல்லக்கை என்று நான் நம்பவில்லை. ஆனால் அவன் நம்பிக்கைக்கு உட்படுவதற்காக சென்ற தூரம் ரொம்பவும் அதிகம் என்றும் அது என்னை பொருத்த வரை அருவருப்பாக இருக்கிறது என்பதையுமே நான் சொல்லி வந்திருக்கிறேன். (ஆனால் இன்று எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் லக்கிலுக் போலியின் அல்லக்கை என்பது தனிப்பட என் நம்பிக்கை)

மேற்கண்ட பதிவு இந்த நிமிடம் வரை இருக்கிறது. எதிர்காலத்தில் "தொழில்நுட்ப காரணங்களுக்காக" மாயமாவதும் சாத்தியமே.
 



செந்தழல்.. இதற்குள் புக விருப்பம் இல்லை. முகமூதி என்று (தேவையில்லாமல்) அன்பாக கூப்பிட்டதால் என்ன என்று எட்டி பார்த்தேன். மற்றபடி முயலவும் இல்லை ஆமையும் இல்லை. அது நாம் 2007ல் பேசியதன் காப்பி பேஸ்ட்தான். ஆகவே நிறுவ முயற்சிக்கிறார்கள் என்று கன்னா பின்னாவென உணர்ச்சிவசப்படவேண்டாம் (இதுக்கு மேலதான் புதுசா நிறுவனுமாக்கும்) அந்த சுட்டி கூட கூகிளில் ஒரு தேடு சொல் போட்டு சிம்பிளாகத்தான் அடைந்தேன். ரொம்பவும் மெனக்கெடவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. உங்கள் நண்பர் என்பதால் அல்லக்கையை புனித*சுவாக நீங்கள் நிறுவ முயலுவதுதான் ப்ரச்னை என்பது புரியாவிட்டாலும் பரவாயில்லை.

மற்றபடி என் குடும்பம் உட்பட எல்லார் குடும்பத்தையும் ஆபாசமாக எழுதப்பட்ட பல சுட்டிகள் தரவுகள் இணையம் முழுக்க இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. என் பதிவில் உங்களை பற்றி என்ன எங்கு இருக்கிறது என்று சுட்டினால், அது அப்பதிவுக்கு சம்பந்தப்படாத அனாவசிய சுட்டியாக இருக்கும்பட்சத்தில் ஆவண செய்யப்படும். புரிந்துணர்வோடு தொடரும் கொலைவெறிக்கு நன்றி.
 



பைத்தியக்காரன் சுகுணா - சுயதம்பட்டம் ஆணாதிக்கம் ஆதிக்க சாதி மனப்பான்மை ::

பலருக்கு “தோழராகவும்” சிலருக்கு அறிவு ஜீவியாகவும் இருக்கும் சுகுணா திவாகர் சிறிது காலத்திற்கு முன் - அதாவது ஒரு பதிவு சண்டையின் பொழுது அரசாங்கம் முற்போக்கு சாதி என்று அறிவித்திருக்கும் ஒரு சாதியில் பிறந்தவர் குசுணா என்று அவர் அப்போதைய நெருங்கிய நண்பராலே சுட்டப்பட்டபோது - அருளிய பொன்மொழி இது :

"இந்தியச்சமூகம் சாதியச்சமூகமாக இருப்பதால் நாமெல்லாம் ஏதேனுமொரு சாதியில் பிறக்கிற விபத்து ஏற்படுகிறது.மேலும் நமது வளர்ப்புச்சூழல், கல்விச்சூழல், நம்மீது திணிக்கப்படட் கருத்தியல், அரசு, ஊடகம் என அனைத்துமே நமது ஜாதிய உனர்வையும் ஜாதியக் கருத்தியலையுமே வளர்க்கின்றன. நம்மை மீறி சாதிய உணர்வோ சாதியக்கருத்தியலோ வெளிப்படுகிறபோது அது விமர்சனமாக வைக்கப்படும்போது அதை நியாயமாக எதிர்கொள்ளவேண்டியதும் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டியதும் அவசியமானதாகும். ஆனால் அந்த விமர்சனத்திற்கு ஏதாவது அடிப்படை இருக்கவேண்டுமே தவிர தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவே போகிற போக்கில் ஜாதிமுத்திரை குத்திச் செல்வது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையல்ல. மேலும் இங்கே மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்வது ஜாதிய உணர்வுகளும் ஜாதியக் கருத்தியலும்தான் இருக்கின்றனவே தவிர ஜாதிப்புத்தி என்கிற ஒன்று கிடையாது"

ஆனால் சுகுணா பார்ப்பனர் சாதியில் பிறந்த அல்லது பிறந்ததாக தனக்குத்தானே கற்பிதம் செய்து கொண்ட - உ.போ.ஒ பெண் நிருபர் - யாரை பற்றியும் எழுதும்போதும் அவர்கள் பிறந்த சாதியில் இருந்துதான் தனது முன்முடிவுகளோடு கூடிய வசைகளை ஆரம்பிப்பார். உன்னை போல் ஒருவன் படம் ஆபத்தான குப்பை படமாகவே இருக்கட்டும். கமல் நடித்தாலே அது ”கமல் படம்” என்பது எனக்கும் தெரியும், இருப்பினும் மூலக்கதை என்று ஒன்று இருக்கிறது, தமிழ் படத்துக்கு இயக்குனர், வசனகர்த்தாக்கள் என்று இருக்கிறார்கள் என்பதையும் மீறி அதில் நடித்த நடிகனின் பிறப்பில் இருந்து விமர்சனத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன? தான் தவிர்க்க முயற்சித்த சாதி மறுப்பாளன் பட்டம் தனக்கு தரப்பட்டது என்று ”தாங்கமுடியாத மனவேதனையோடு” வலைப்பதிவிலிருந்து (நான்கு நாட்களுக்கு) விடை பெற்ற சுகுணா பார்ப்பனர் சாதி என்று தெரிந்தால் கீழ்த்தரமாக அவர்களை சாதியாலேயே அடிக்க முயல்வது என்ன வகை சிந்தனை.

அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தோடு ஏற்படுத்தப்படும் சமரசத்திற்கு ரோசாவோடு சேர்ந்து சப்பை கட்டு கட்டிக்கொண்டார். அறச்சீற்றத்தை விடவும் வயிற்றுப்பாட்டோடு முக்கியம் என்ற அடிப்படையில் பணியிடத்தில் பதுங்குதல் பதிவுலகில் பொருமுதல் சுகுணாவுக்கு மட்டும் சரி, கமலஹாசன் என்றால் சரியில்லையா? (உடனே கமலும் சுகுணாவும் ஒன்றா, கமல் சொத்து அளவு என்ன என்று கூமுட்டை சிந்தனையோடு யாரும் வரமாட்டார்கள் என்று நம்புவோம். இங்கு நாம் பேசுவது அவனவன் அளவிலான வயிற்றுப்பாடு)

இதுவும் சுகுணாதான் : என் அம்மாவைத் 'தேவடியாள்' என்று அழைப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை என்று இதே பக்கங்களில் எழுதியிருக்கிறேன். ஆனால் அதைவிடவும் கொடூரமான வார்த்தை என்னைச் சாதிப்பற்றாளன் என்பது.

ஒருவர் வாழ்நாள் முழுக்க எப்படி இருந்தார் என்பதை தெரியாமல் ஒரு சில படங்களின் மூலம் அவர்களின் குணாதிசயத்தை ஆராய்ச்சி செய்து அதற்கு காரணம் அவரின் பார்ப்பனர் பிறப்பு என்பதை மட்டுமே ஒரு தகுதியாக கொண்டே இனியும் சுகுணா எழுதிக்கொண்டிருந்தால், இவரை முழுவதும் அறியாமல் ஆனால் இவர் பிள்ளை சாதி (இவரே வெளிப்படுத்தியதுதான்) என்று அறிந்த நாமும் சுகுணாவை பிள்ளைசாதிக்காரன் என்ற தகுதியோடே விளிக்கவேண்டியிருக்கும் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டால் சரிதான்..
 



பைத்தியக்காரன் சுகுணா - சுயதம்பட்டம் ஆணாதிக்கம் ஆதிக்க சாதி மனப்பான்மை ::

// இங்கு விவாதிக்கபடும் விசயமே, "சுகுணா - சுயதம்பட்டம் ஆணாதிக்கம் ஆதிக்க சாதி மனப்பான்மை" இவைகளை பற்றிதான். சுகுனாவின் கடந்த 3 பதிவுகளையும், அவர் வெளியிட்ட பின்னூட்டங்களையும் பைத்தியகாரனின் தவறாக புரிந்திருக்கிறார் என்பதே எனது எண்ணம். //

Mãstän - கடந்த 3 பதிவுகள் மட்டும் என்றில்லாமல் சிறிது பின்னோக்கி போய் முடிந்த வரை அவரின் எழுத்துக்களை படித்தால் பைத்தியக்காரன் சரியாகத்தான் புரிந்திருக்கிறார், சுகுணாவை தவறாக புர்ந்துகொண்டது நீங்கள்தான் என்பது உங்களுக்கே புரியலாம். மேலும் சுகுணா கேட்டுக்கொண்டால் தவிர அவர் பதிவுலகில் இயங்கும் காலத்திலேயே - அவர் வார்த்தைகளில் சொன்னால் “பார்மில் இருக்கும்போது” - அவர் சார்பாக நீங்கள் மல்லுக்கட்ட்டுவது - இது சுகுணாவின் இன்னோரு ஐ.டி என்றால் தவிர - வேறு விதமான தோற்றத்தையே தரும்.

எனது எண்ணம் என்னவென்றால் - அடையாளக்குழப்பம் காரணமாக சிலருக்கு தன்னை நிரூபிக்க வேண்டி தவிர்க்க இயலும் என்றாலும் சாதியை துணைக்கு அழைக்கிறார் குசுணா என்பது. இஸ்லாமியர்கள் என்று குறிப்பிடும் இடத்திலெல்லாம் சகோதரர்கள் என்ற அடைமொழியும் பார்ப்பனர்கள் பிறப்பை பற்றி பேசும்பொழுதெல்லாம் கீழ்த்தரமான வசைகளையும் எண்ணிப்பாருங்கள். இந்த படத்தில் எதுவும் மாறாமல் ஆனால் கமல் இடத்தில் நாசர் நடித்திருந்தால் இவரின் இப்பட விமர்சனம் எப்படி வந்திருக்கும் என்பது ஒரு சுவாரசியமான சிந்தனை.
 



ஜ்யோவராம் சுந்தர் ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல் ::

உடல் வலி குறைந்திருக்கும். மன வலி குறைய காலமும் சிந்தையும் துணைபுரியட்டும். மன்னித்துவிட்டீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் மறக்கவேண்டாம்.

நடிப்பின் மூலம் கட்டமைக்கப்படும் நிழல் பிம்பங்களை நிஜமாக நம்பும் வேடிக்கை மாந்தரை நக்கலடிக்கும் நாமே எழுத்தின் மூலம் பிம்பங்களை கட்டமைத்துக்கொள்கிறோம்.

ஒருவர் நிஜ வாழ்வில் கடைபிடிக்கும் நியதிகள் என்னவென்றே தெரியாமல் அவர்களின் வெற்று எழுத்துக்களை மட்டும் கொண்டு பின்னவீனத்துவ பதிவர், முற்போக்கு சிந்தனையாளர், பெண்ணியவாதி, சமூக சேவகர் என்று எத்தனை எத்தனை முகமூடிகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது இங்கே... தமிழினத்தலைவருக்கு ஒரு ஈழப்பிரச்னை, சாதி மறுப்பாள பதிவருக்கு ஒரு திருமண சம்பவம் என்று காலம் கடந்தாவது எல்லாருக்கும் என்றாவது ஒருநாள் முகமூடி கிழியும் நேரம் வரத்தான் செய்கிறது..
 



as above...

// உண்மையான கரிசனத்துடன் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை // என்ன எழவுடா இது. ஜீனியர் விகடன்ல "ரஜினி இடது பக்கமாக திரும்பி நாப்பது டிகிரி கோணலாக சிரித்தார். அவர் அரசியல் வருவதற்கான அறிகுறி அதிலேயே தெரிந்தது"ன்னு எழுதுற சைக்(கோ)காலஜி ரிப்போர்(ட்டர்) பாணியில நான் என்ன நினைச்சி எழுதறேன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண வந்துட்டானுங்க...

முகமூடிங்கிறதுக்கு பதிலா வேற ஒரு பேர்ல எழுதப்பட்டிருந்தா பொட்டீக்கு இவ்ளோ அஜீரண கோளாறு வந்திருக்காதுன்னு நினைக்கிறேன். ரிப்பீட்டு போட்டுட்டு போயிருக்கலாம்.. பேருதான் இப்ப ப்ரச்னை.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு ஒவ்வொரு தடவ தண்ணியடிக்கிறப்பயும் வெளக்கெண்ணய் ஆ(ரா)ய்(ச்சி) பண்ணி(ன்னி) இங்க வந்து வாந்தியா எடுத்துகிட்டு இருக்கு ஆர்க்கிடெக்ட்டுன்னு தெரியல...

// இம்மாதிரி ஆட்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் // ஜ்யோவ்ராம் சுந்தரை 'பாரு'க்கு அழைக்கவோ, ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்று கல்யாணம் செய்வதற்கோ அட குறைந்த பட்சம் பதிவர் சந்திப்பில் எதேச்சையாக சந்திக்கும் திட்டம் மாதிரி கூட எதுவும் இந்த ஜென்மத்தில் என்னிடம் இல்லை. ஆகையால் பொட்டீ மற்றும் மற்ற பாடிகார்டுகள் பதைபதைப்பில்லாமல் நிம்மதியாக தூங்கவும்...
 



bruno இந்த மூன்று அதிகாரிகளுடன் ஒப்பிட்டால் ஹிட்லர் நல்லவரே !!" ::


// what if the the party these guys were going to was a critical life-changing event for these guys. //

life changing? whose? and life changing for all three of them at the same time? remember, that driver has a teenage girl and a wife - if something would have happened to the driver, its these people's lives thats changed forever in a dimension unimaginable to you and me.

not to tag them as hitlers? what if the driver is someone u know personally? say ur father. would ur statement be the same?
 



மணற்கேணி ஞாநி, கருணாநிதி மற்றும் உச்சநீதிமன்றம் ::

// அவரது பதிலினை படிக்கும் யாருமே, கேள்விக்கு பொருத்தமில்லாத பதிலினை கூறியிருக்கிறார் என்று கூறுவார்களே தவிர நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று கூற மாட்டார்கள். //

ஞாநி குறிப்பிட்டிருப்பது கருணாநிதியின் பதிலை பற்றி அல்ல. அது கேள்வியை ஒட்டியே என்பது என் எண்ணம். அதற்கு கேள்வி கேட்டவரைத்தானே குற்றம் சுமத்த வேண்டும் எதற்கு கருணாநிதியை என்கிறீர்களா? கருணாநிதியின் கேள்வி பதில்கள் எல்லாம் நமக்கு நாமே திட்டத்தில் தயாராவது என்பதால் இருக்கலாம்.

மற்றபடி ஞாநியின் சட்ட அறிவு குறித்து - ஹிஹி.
 



ஜோசப் பால்ராஜ் குசும்பன் அப்பா ஆயிட்டான் ::

என்னதான் உங்க நண்பரா இருந்தாலும் ஒரு வயசானவர் அதுவும் ஒரு குழந்தைக்கு அப்பா, அவர போய் மரியாதை இல்லாம அவன் இவன்னா நல்லாவா இருக்கு?

**

வாழ்த்துக்கள் குசும்பர்.
 



வா.மணிகண்டன் குடித்து விட்டு பேசலாம் ::

குத்து விட்டவன், வாங்கியவன், அதை வேடிக்கை பார்த்தவன், மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ட்ரைவர் என்று எல்லார் தரப்பு வாதங்களையும் அலசி ஆராயாமல் எடுத்தவுடனே பொதுபுத்தி கொண்டு அனுதாபம் தெரிவித்தால் நான் கொலைகாரன் என்று முத்திரை குத்தப்பட்டு குடிகார தொடர் இலக்கியங்களை படித்து தொலைக்க நிர்ப்பந்திக்கப்படும் அபாயம் இருப்பதால் - ஒரு வேளை உங்கள் மூக்கு உடைந்தால் நான் அதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க இயலாது என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.
 



சீமாச்சு ஸ்டைலு ஸ்டைலு தான் ::

புகைப்படத்துல பீச்சாங்கை பக்கம் வரப்புதானே? தொட்டாசிணுங்கி இருக்கான்னு உத்து பாத்தேன், சரியா தெரியல... பம்புசெட்டு தண்ணியா இல்ல வாய்க்கா தண்ணியா?

பையன் நல்ல அழகு.. அப்புறம் முடிஞ்சா இந்த போட்டோவ ஒரு ப்ரிண்டு எடுத்து அந்த பையன் குடும்பத்துகிட்ட (இன்னும் கொடுக்கலைன்னா) கொடுங்க.. அவங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க. முந்தியெல்லாம் ஊருக்கு போகும்போது போலராய்டு கேமிரா கொண்டு போவேன்.. இப்பத்தான் அதுக்கு பிலிம் தயாரிக்கிறதயே நிறுத்திட்டானுங்க..

அப்புறம் இந்த இடுகைக்கு தலைப்பு முதல் பாராவுக்கு மட்டும் போலருக்கே.. எல்லாரும் கைமா கொத்து பரோட்டா, ஊசிப்போன இட்லி சாம்பார்னு எழுதறாய்ங்க.. நீங்களும் இந்த மாதிரி கலவை பதிவுக்கு எம்பளத்தஞ்சி குறிப்புகள் மாதிரி எதுனா - ஒரு மண்வாசனைதான் - பேர் வைக்கலாமே?
 



லீனா மணிமேகலை கடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே ஒரு சிறு விளக்கம் ::

சாக்கடை பன்றிகள் உறுமுவதற்கும் அது நாராசாமாய்(த்தான்) இருப்பதற்கும் நான் பொறுப்பல்ல என்று யாராவது தன்னிலை விளக்கம் தருவார்களா என்ன?

இவர்களால் பார்ப்பு பத்திரிக்கை தினமலம் என்று அன்போடு அழைக்கப்படும் பத்திரிக்கையில் மட்டும் இக்கிசுகிசு வந்திருந்தால் கூட அதையும் ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியிருப்பார்கள். அப்பொழுது மட்டும் கொள்கை பிடிப்பு மக்கு-இக-காரர்களுக்கு தினமலம் தனமலர் ஆகிவிடும்.
 



பைத்தியக்காரன் சாரு நிவேதிதா இதற்கு உங்கள் பதில் என்ன? ::

என்ன நக்கலா? யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அவை இலக்கியமாகுமா? உதாரணத்துக்கு மலாவி ஆனந்தையே எடுத்துக்கொள்வோம். அவர் எண்ணங்கள் எல்லாம் வெறும் கருத்துதான். ஒரு நாளைக்கு நாய்களுக்கு சாப்பாடு வைக்கும் நேரம் தவிர்த்து குறைந்தது 26 மணிநேரமாவது கடுமையாக உழைத்தால்தான் அது இலக்கியமாகும். அப்படி நெய்த இலக்கியத்தில் எப்படி அய்யா ஆனந்துக்கு நன்றி சொல்லமுடியும். அதுபோலத்தான் ஆபிதீனும்.. வாப்பா இருக்கிற ஊர்ல உம்மாதான் என்பது குப்பை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். ஓசியில் தண்ணி அடிக்க கூப்பிடும் அழைப்பை கூட நிராகரித்து அதை அம்மா என்று இழைத்ததால்தான் அது இலக்கிய அந்தஸ்து அடைந்தது. இதெல்லாம் புரியும் அளவுக்கு உமக்கு இலக்கிய அனுபவம் கிடையாது. இதெல்லாம் புரியும் அளவு இலக்கிய அனுபவம் கிடைக்க பாவம், நீர் என்ன கேரளாவிலா பிற்ந்திருக்கிறீர்.

பி.கு: இதை படித்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த பக்கத்தை கிழித்து போட்டு சிறுநீர் கழித்துவிட்டேன். சிறுநீரில் இருந்து நெருப்பு பொறிகள் பறந்த போது கூட அது கடவுள் நித்யானந்தரின் அருள் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது நான் போதையில் கம்ப்யூட்டர் மானிட்டரில் சிறுநீர் கழித்த விஷயம். இப்போது மானிட்டரை சரி செய்வதற்கு பணம் அனுப்பும் நண்பர்கள் அப்படியே க்வார்ட்டர் மானிட்ட்டர் பிராந்திக்கும் சேர்த்து அனுப்புமாறு கேட்டுக் கொல்கிறேன்...
 



prev comment contd...

சுரேஷ் கண்ணன்,

புளித்துப்போன விஷயங்களை புதுப்பிக்கும் இடுகை குறித்த உங்கள் கருத்துக்கு. தமிழ் இணைய வாசிப்பு என்பது விகடன் மற்றும் பல, தினமலர் மற்றும் பல என்ற அளவில் இருந்த போது அந்துமணி என்பவர் வெறும் ஆபிஸ் பாய் என்றும் அவர் லென்ஸ் மாமா துணையுடன் திக்கி திணறி ஆங்கிலம் படித்து உலக விஷயங்களை அறிபவர் என்றும் பெண்ணியவாதி என்றும் நம்பிக்கொண்டிருந்த பல லட்சக்கணக்கான வாசகர்களின் நானும் ஒருவன். அந்துமணி என்பது ரமேஷ் என்பது உங்களை போன்றவர்கள் எதிர்பார்க்காத, நீக்கப்படவேண்டிய ஏதோ ஒரு இடுகையின் மூலம்தான் எனக்கும் இன்னும் ஒரு சிலருக்கும் தெரிய வந்தது. அதனால் உலகம் ஒன்றும் தலைகீழாக மாறிவிடவில்லைதான். ஆனால் என் போன்ற சிலர் பாகேப போன்ற சில்லறைத்தனங்களிலிருந்து மீள அது உதவியது. முந்தாநாள் வரை சாரு ஆன்லைன் மட்டும் படித்து வந்த, அதனால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை மட்டுமே நிஜமென நம்பும் சிலருக்கு அப்பிம்பத்தின் மறுபக்கத்தின் ஒரு துளியை இதுபோன்ற சில பதிவுகள் - நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு சிவராமன் மற்றும் சிலர், இதே வேலையாக இல்லாமல் இதையும் ஒரு வேலையாக - அவ்வப்போது சுட்டுவது ஆரோக்கியமற்றது என்பதுதான் உங்கள் நம்பிக்கையா?
 



prev comment contd..

சிவராமன்,

”தமிழ்ச் சூழலில் ஒரு கலைஞன் வாயைத் திறந்து பணம் கேட்பதற்கு காரணம், புறச் சூழல் அவனை அந்தளவுக்கு அழுத்துவதால்தான்”
என் பால்ய காலத்தில் இருந்த கீழ்நடுத்தரவர்க்க ஒண்டு குடித்தன குடியிருப்பில் மதிய சாப்பாட்டு நேரம் தாய்மார்கள் அனைவரும் ஒரே இடத்தில் பேசிக்கொண்டே தத்தமது குழந்தைகளுக்கு சோறூட்டுவார்கள். அப்போது பக்கத்து குடித்தன அம்மணி இன்னொரு வீட்டுக்கு போய் தன் குழந்தைக்கு நெய் வாங்கி வருவார்கள். “இந்த பயலுக்கு நெய் இல்லாம இவனுக்கு சோறு இறங்கறதில்லை”. அப்பொழுது என் தாய் சொன்னது “குழந்தைக்கு சோறில்லையெனில் கடன் வாங்கலாம். ஆனால் நெய் இல்லையென வாங்கினால் அதற்கு பெயர் யாசகம்”.. யாசகமும் தவறில்லை, அது அத்தியாவசியமெனும் போது. வழியில்லாமல் கையேந்துபவர்களை பார்த்து எள்ளி நகையாடினால் அங்கே மனிதம் இல்லை. ஆனால் சோறும் பருப்பும் இருக்க கடன் கேட்டாவது நெய் சேர்த்துதான் உண்பேன் என்பவர்களுக்கு பொது புத்தி மதிப்பு தருவதில்லைதான். இங்கே என்ன காரணங்கள்? சிம்கார்டை டாப் அப் செய்யக்கூட பைசா இல்லை. உங்களுக்கு இலக்கியத்தை கடத்த வேண்டும் என்பதையே உயிர் மூச்சென வாழும் ஒரு கலைஞனுக்கு இங்கே இருக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதெல்லாம் சொல்லப்படுகிறது. பணம் அனுப்புவர்கள் ஒன்றும் அதை செலவு செய்ய தெரியாமல் வேறு வழியில்லாமல் அனுப்புவதில்லை. அதை அனாதை ஆசிரமத்துக்கோ அல்லது உயிர் பிழைக்க பணம் வேண்டி போராடிக்கொண்டிருக்கும் ஆபத்திலிருக்கும் நோயாளிகளுக்கோ அவர்களுக்கு அனுப்பத்தெரியாதா? ஆனாலும் அவர்கள் எழுத்தாளருக்கு அனுப்புகிறார்கள். அது கட்டமைக்கப்பட்ட பிம்பம் கஷ்டப்படுவதை பார்த்து சகிக்க இயலாத அன்பினால அனுப்பபடும் பணம். ஆனால் பின்பு நடப்பது என்ன? நான் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவன். என்னால் எல்லாம் மலிவான சரக்கு குடிக்க இயலாது. மிக உயர்ந்த ஸ்காட்ச்தான் உடம்பு ஒத்துக்கொள்கிறது என்றெல்லாம் சொன்னால் அது எவ்விதமான புறச்சூழல். பிச்சை புகினும் கற்கை நன்று என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். பிச்சை புகினும் கால்வின் க்ளெயின் ஜட்டி போட்டால்தான் தம்பிக்கு பாதுகாப்பு என்று சொல்லவில்லை. ஆகவேதான் நக்கல் தவிர்க்க இயலாததாகிறது. சாருவை பிரதிகளை முன்வைத்து மட்டும் உரையாட முடியாத ஒரு சூழ்நிலையை அவரேதான் உருவாக்கியிருக்கிறார். சாரு உருவாக்கிய ஆனால் சாரு இல்லாத பிரதிகளை சொல்லுங்கள் பார்ப்போம்.
 



நர்சிம் விஜய் டிவி..நீயா நானா ::

// பேசாப் பொருளை பேசத் துணிந்தமைக்கு பாராட்டுக்கள் பாஸ்! //

என்ன கொடுமை பரிசல் இது.. கொஞ்சமே கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்.. இந்த பதிவு உண்மையிலேயே பேசாப்பொருளை பேசியதாக உணர்கிறீர்களா?

நீங்கள் இமேஜ் விரும்பாத நபராக இருக்கலாம்.. ஆனால நர்சிம், அப்துல்லா, ஆதி, செல்வேந்திரம் மற்றும் குறிப்பிட்ட சிலரின் பல பதிவுகளில் நட்புக்காக நீங்கள் உதிர்க்கும் அதீத கருத்துக்கள் “அடங்கொப்புரானே!! இந்தாளு **** வுக்கு ஒரு அளவே இல்லையா” எனும் அளவுக்கு - படிப்பவர்களுக்கே கூச்சம் வரவைக்கும் விதமாக இருக்கிறது.

*** - ஜால்ரா என்று சொல்ல மனம் வரவில்லை.. அதற்கும் மேல் ஏதோ ஒன்று.

(ரொம்ப நாட்களாக அங்கங்கே படிக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டும் என்று - ஆனால் நமக்கென்ன போச்சி என்று இருந்தேன்.. இன்று என்னவோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டேன்)
 



prev comment contd...

பேசாப் பொருளை என்பதற்கு மட்டுமல்ல பேசத் துணிந்தமைக்கு என்பதற்கும் போல்டு (இது bold) போட நினைத்து மறந்துவிட்டேன்... உண்மையிலேயே பேசாப்பொருள், பேசத்துணிந்தமை போன்ற வார்த்தை பிரயோகங்கள் தேவைப்படும் அளவு இந்த இடுகையில் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. இப்போதெல்லாம் விஜய் டிவியும் ஆட்டோ அனுப்புகிறதா என்ன? அதுவும் அவர்களின் பல மொக்கை தயாரிப்புகளில் ஒன்றை மொக்கை என்று ஒரு வலைப்பதிவில் குறிப்பிடுவதற்கெல்லாம்.. அல்லது வழக்கம் போல் நண்பர்கள் உங்களுக்குள் வேறு எதுவும் பின்புல அரசியலா?

// இந்தாங்க உங்களுக்கும் ஒண்ணு:- // :) ஹும்.. ”புரட்சி” தலைவர், ”புரட்சி” கலைஞர் மாதிரி இது இன்னுமொரு பின்னூட்ட வார்த்தை விளையாட்டு.. அத புரிஞ்சிக்காம....
 



பினாத்தல்கள் காபரே கருத்துகள் ::

// (பட்டாயா) //

என் கருத்து கீழே இருக்கும் ஒளித்துணுக்குகளில் குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில் -

http://www.youtube.com/watch?v=0G9qLQg-Fn8
3:01 - 3:04

http://www.youtube.com/watch?v=O7ON_Wd20EY
4:17 - 4:27
 



பாதாளக் கரண்டி ::

// தெரிந்து கொள்கிற ஆர்வம் பரிட்சையை மறக்க வைத்தது. அவள் பின்னாலேயே போய் பார்த்தேன் // எதை? உடனே சொல்லவந்ததை இமேஜ் காரணங்களுக்காக மறைத்து சபை நாகரீகம் கருதி சொல்லப்படும் பொய்யை ரேவதியின் பேரன் கூட நம்பமாட்டான்.

// ரேவதிக்கு இப்ப 35 வயசாவது ஆயிருக்கும் // ரேவதியை தலைவர் சைட் அடிக்கும்போது பரீட்சைக்கு படிப்பது போல் பாவ்லா காட்டியிருக்கிறார். ஒரு ஃபிகரிடம் பீட்டர் விட வேண்டும் என்றெல்லாம் அந்த காலத்திலேயே, அதுவும் நாகப்பட்டிணம் மாதிரி ஒரு கிராமத்தில், தோன்றியிருந்தால் குறைந்த பட்சம் அது காலேஜ் மெச்சூர்டு வயசு என்று கொள்ளலாம். சைட் அடிக்கப்படும் வயசு என்பது தலைவர் வயதுக்கு சில பல வருடங்கள் கூட (இது addition என்பதாக அர்த்தப்படும் கூட) குறைச்சல் என்று கொண்டால் ரேவதிக்கு இன்றைய தேதிக்கு 55-60 வயசு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் யுவர் ஆனர்.
 



உ.த வி.எம்.சி.ஹனீபா - ஒரு அஞ்சலி ::

// லிவர் கேன்சர் பெரும்பாலும் மொடாக் குடியர்களையே தாக்கும்... //

# Hepatitis B or C virus infection
# Certain autoimmune diseases of the liver
# Diseases that cause long-term inflammation of the liver
# Too much iron in the body (hemochromatosis)

மேற்கண்ட ஏதாவதாலும், மற்றும் வேறு ஏதோ ஒரு பாகத்தில் ஆரம்பித்து லிவருக்கு கேன்சர் பரவியதாலும் கூட லிவர் கேன்சரால் பாதிக்கப்படலாம்.. அப்படி இருக்க இறந்தவர் வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியாமல்

//அவர் குடிப்பழக்கம் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை;அப்படி இருந்தால் அவரது முடிவு அவரே தேடிக்கொண்டதாகத்தான் இருக்கும் //

குருட்டாம்போக்காக தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட அனுமானம் காரணமாக போகிற போக்கில் எழுதப்படும் “விமர்சனம்” அருவருப்பானது என்றால்

//அறிவன் சொன்னது தான். கலை உலக நாயகர்களை கல்லீரல் ஓரளவிற்குத் தான் பொதி சுமக்கும். பிறகு அதன் வேலையை காட்டி விடுகிறது.//

அதற்கு ஒரு ”இன்ஸ்டன்ட்” ஒத்தூதி பின்பாட்டு வேறு.

*

சினிமாவில் இருப்பவர்களை நிம்மதியாய் வாழத்தான் விடுவதில்லை என்றால் நிம்மதியாய் சாகக்கூடவா...
 



பெனாத்தல் வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா! ::

மே ஐ கம் இன்?

// என் பையனுக்கு வயசு பதினெட்டு // எனக்கு வர்ற தை வந்தா பதினைந்து முடிஞ்சி பதினாறு.. நான் உங்களை எப்படின்னு கூப்பிடுறது ஆண்ட்டி?

அதான் // இருபத்தி அஞ்சு வயசுக்குமேலே முப்பத்தி ஐந்துக்கு கீழே இருப்பர்கள் மட்டுமே படம் சூப்பர் //னு சொல்றாங்க இல்ல.. நாமளோ ஓவர் குவாலிஃபைடு.. அப்புறமும் ஏன் // நான் இன்னும் படம் பார்க்கவில்லை // இப்படி ஒரு கொலவெறி ஸ்டேட்மெண்டு...

**

இதுவரை சொம்பு படம் எதையும் தியேட்டருக்கு போய் பார்த்ததில்லை.(கைக்குழந்தையாய் இருந்தப்போ ஒரு தாயின் சபதம் படம் பார்த்துட்டு ஜுரம் வந்திடுச்சி. அதனால அது சாய்ஸ்ல விட்டுட்டேன்) சரி சொம்ப இது மூலமா பயாஸ்கோப்புல மொத மொதலா பார்க்கலாம்னு இருந்தேன்.காசையும் நேரத்தையும் மிச்சப்படுத்தியதற்கு நன்றி பெனாத்தல் @ இலவசக்கொத்தனார் @ சர்வேசன் { ஒண்ணுமில்ல கோயிஞ்சாமி எஃபக்டு. ஹிஹி.. }
 



இதயம் பேத்துகிறது
போலிச் சாமியார்களுக்கு சில யோசனைகள்
::

// எப்போதும் ஆகாத சுருதியில், கர்ண கொடூரமான குரலில் ஒருவரை பஜனைப் பாடல்களைப் பாடச் செய்வது // எங்கள் ஆசிரமத்தில் இந்த போஸ்ட் உங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை எங்கள் ஏஜண்ட் பீரு கபோதிதா உங்களிடம் நேரில் வந்து தெரிவிப்பார்...
 



வால் பையன் அடிவருடி, சொம்புதூக்கி, அல்லக்கை (charu) ::

நித்தியை கடவுள்னு சொன்ன பீரு கபோதிதாவ கடவுள்னு சொல்லும் அல்லக்கைங்கள பார்த்தா ”கரடியே காறித்துப்பிய என் மன்னர் காறித்துப்பியன்னு” இம்சை அரசன் படத்துல வருமே...

என்னதான் சுயநலத்துக்காகன்னாலும், பொதுவெளியில கூச்சமே படாம யாரயாவது கடவுள்னு சொல்லலைன்னா ஒரு சிலருக்கு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும் போல. அடிமையா கிடக்கவே பிறந்தவனுங்க..
 



ஜவர்லால் இளங்கோவின் உள்ட்டாதான் கோவலன் ::

// see, தலை சாத்தினார் // என்றால் உங்கள் பாக்கெட் சாராயத்தை (அதாங்க உரை) வெறுமே பார்த்ததுக்கே “ஸ்ப்பா கண்ண கட்டுதே” என்று சீத்தலை சாத்தனார் தலையை (பக்கத்தில் உள்ள) சுவற்றில் சாத்தினார் அல்லது தரையில் கிடத்தினார் என்று வருகிறது...

ஆனால் சீத்தலை சாத்தனாரின் தொண்டர்கள் “see, தலை (ஜவர்லாலை) சாத்தினார்” என்றால் பொருத்தமாக இருக்கிறது. இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவென்றால் (அப்பாடா நீதி சொல்லி எவ்வளவு நாளாச்சி) -

சீத்தலை சாத்தனார்தான் தமிழ்நாட்டின் முதல் தலை என்பதால், அஜீத் இன்று முதல் தறுதலை ச்சை குறுந்தலை என்று அழைக்கப்படுவார்.
 



உண்மை தமிழன் பதிவர் சந்திப்பு அமங்கலமான துயரம்..! ::

மொதல்ல இது மாதிரி ஆலோசனை கூட்டத்துக்கு முக்கிய சமாச்சாரம் :: ஒரு கண்டிப்பான ஒருங்கிணைப்பாளர், ஒரு தெளிவான அஜெண்டா. இது ரெண்டுமே இல்லாம வாங்க பேசிக்கலாம்னு ஒரு கூட்டத்த கூட்டிட்டு அப்புறம் சரியாவே முடிவு ஏற்படலன்னா எப்பூடி?

பக்கத்து வூட்டுக்காரன் புள்ள பெத்துக்குரானேன்னு நாமளும் புள்ள பெத்துக்க ஆசைப்பட்டா இப்படித்தான்... முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. விஜய் கூடத்தான் முதல்வர் ஆகணும்னு (அவங்கப்பன் கவர்னர்?) ஆசைப்படுறான்.

//ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..? //

பத்திரிக்கைகாரனுக்கு கிடைக்கும் அதிகாரமும் அங்கீகாரமும் சங்கம் வைச்சா கிடைச்சிடுமா? அது பத்திரிக்கையின் ரீச்சை பொறுத்தது அல்லவா? உண்மையான ‘சுதந்திர’ நாட்டில் என்னதான் மட்டமான பத்திரிக்கைனாலும் தராசு பத்திரிக்கையிலும் முரசொலியிலும் நடத்திய கூத்தையெல்லாம் செய்துவிட்டு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்துவிட முடியாது... ஆனால் தமிழகத்தில்...?

//ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு... ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம்..//

மேற்கண்ட எல்லா சங்கத்திலும் அதன் உறுப்பினர்களுக்கென்று ஒரு பொது புள்ளி உண்டு. அப்புளிக்கென்று ஒரு பாதிப்பு வரும்பட்சத்தில் அதில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு தொழிலை செய்துகொண்டு குடும்பத்திற்கும் இதர பொழுதுபோக்கிற்கும் நேரம் செலவிட்டது போக மிச்சமிருக்கும் நேரத்தில் மீத பர்ஸ்டேய் போடும் சிலர் சங்கம் வைத்துதான் நட்பு வளர்க்க வேண்டும் என்பதில்லை. சும்மா காந்தி சிலைக்கருகில் சுண்டல் சாப்பிட்டும் வளர்க்கலாம்.
 



உண்மை தமிழன் பதிவர் சந்திப்பு அமங்கலமான துயரம்..! ::

//ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? //

அதாங்க வலைப்பதிவளர்களின் அடிப்படை சோலியே.. எவனவனுக்கு எழுத்து வருதோ, அல்லது எழுதறதுக்கு ஏதாவது ஒண்ணு நம்மகிட்ட இருக்கோன்னு தோணுதோ அவனவன் தன்னளவில் கட்டற்ற சுதந்திரத்தோட எந்தவித நிர்பந்தமோ கவலையோ இல்லாமல் எழுதுவதுதான் வலைப்பதிவு. ஏற்கனவே அதெல்லாம் மாறிப்போய் கொஞ்ச கொஞ்சமா கூட்டணி சேர்ந்துகிட்டு இப்படி எழுதினா அந்த பிரபல பதிவருக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு சென்சர்... தனக்கு பிடிச்ச பதிவர் எழுதினா அது குப்பைனா கூட ஆகா ஓகோன்னு முதுகு சொறிதல்னு இருக்கிற கூத்து போதாதுன்னு இப்போ சங்கம் வேறயா...

// அமைப்பை உருவாக்குவோம்.... to ....செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..? //

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

// பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு // இது எப்படி சேவை என்ற கணக்கில் வருகிறது?

மீண்டும்.. முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. சங்கத்தின் சட்ட திட்டங்கள் என்ன? அடிப்படை அம்சங்கள் என்ன? என்ன குறிக்கோள், அதை அடையும் வழிமுறைகள் என்ன? சங்கத்தின் எல்லை எது? மூர்த்தி மாதிரி ஆட்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு சங்கம் வக்கீல் அமைக்குமா? உறுப்பினர்களுக்கு தகுதிகள் என்ன? ஜோக்குகள் காப்பி பேஸ்ட் செய்து அதை பதிவாக்கி மற்ற பதிவுகளில் மீதபர்ஸ்டேய் அல்லது ரிப்பீட்டேய் சொல்பவர்கள் பதிவர்களா இல்லை பர்ஸ்டு பெஞ்சில் உட்கார்ரவ்ன் எல்லாம் பூணுல் போடுறானா என்று உன்னிப்பாக பார்த்து பதிவு எழுத வேண்டுமா? இதெல்லாம் முதல்ல சொல்லுங்க... அவசியமில்ல அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று (என்ன எழவுடா இது, இதுல கூட எதுன்னே தெரியாம எதையாவது ஒன்னா) அமைச்சே தீருவோம் அப்படீன்னு வெறியோட இருந்தீங்கன்னா.. ஆல் த பெஸ்ட்...

- நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத (உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்த சொல்லல..அதில் சேரும் குறிக்கோளும் இல்லை) ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)
 



டோண்டு http://dondu.blogspot.com/2010/03/blog-post_30.html ::

”“Be more concerned with your character than your reputation, because your character is what you really are, while your reputation is merely what others think you are” என்று ஒரு quote உண்டு...

தமிழகத்தில் மனநல மருத்துவர் என்றாலே பெயர் சொல்லக்கூடியவராய் இருந்த/ப்பவர் வலைப்பதிவு எழுத வந்தபின் தெரியும் அவரது இன்னொரு முகம் ஏமாற்றம்/அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது... ரெப்யூடேஷன் பற்றி அவர் கவலைப்படாதவராய் இருக்கலாம்... ஆனால் அவரது எண்ணங்கள் எழுத்துக்களாய் மாறி, பதியப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடக்கூட அந்த அளவு அவரது கேரக்டர் வெளிப்பட்டு ஜாதீய பாம்புகளை இன்னும் எந்த எந்த எதிர்பார்க்காத புற்றுக்களில் எல்லாம் பார்க்க வேண்டுமோ என்ற ஆயாசமே மேலோங்குகிறது....

**

உமா.. ஹாய்ராமிற்கு டோண்டு ஸ்போக்ஸ்மேனா என்று உங்களுக்கு கேள்வி எழுவதை போலவே ருத்ரனுக்கு நீங்கள் மனைவி என்ற காரணத்தால் ஸ்போக்ஸ்வுமன் வேலை பார்க்கிறீர்களே அது அவசியமா என்று பலருக்கும் கேள்வி எழுகிறது. ஒரு சாதாரண பதிவராகத்தான் உங்கள் கருத்தை பதிகிறீர்கள் என்று ஜோக் அடிக்காதீர்கள்.

பார்ப்பன வெறுப்பு தேவையற்றது என்று பார்ப்பனரல்லாதோர் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா? அதற்கு முதலில் சொல்பவன் பார்ப்பானா இல்லையா என்ற ஆராய்ச்சியிலிருந்து விடுபடவேண்டுமே? அது உங்களுக்கு சாத்தியமா?

”அரண்டவன் மிரண்டுதான் "பார்ப்பானா"?” என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... ”இது எச்சரிக்கை / let me see your courage/conviction/commonsense. i warn you again” என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று ஒரு சாதா வலைபதிவர் பார்வையில் அல்லாமல் அவர் மனைவி ஆகவே அவரை மற்றவரை விட நன்றாக புரியும் என்ற அளவில் நீங்கதான் அருஞ்சொற்பொருள் விளக்குங்களேன்...
 



காலம் கால் கழுவும் கலாச்சாரம் ::

// நக்கீரினல் வெளிவந்து நாறிய தகவல் தான் இது, மறுக்கும் மற்றும் ஆர்வம் உள்ள நீ தான் இது பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் //

நக்கீரன் அக்மார்க் உண்மை மட்டுமே எழுதும் பத்திரிக்கை, அதில் எழுதப்படும் எதையும் அப்படியே நம்பி அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு பெயர்தான் பகுத்தறிவா? வாழ்க! வளர்க!!

பி.கு: நான் இங்கு பேசுவது உங்களுக்கு ”தேவையானதை” மட்டும் கேள்வி கேட்காமல் உண்மை என்று நம்ப விழையும் உங்களின் புத்தியை பற்றி மட்டுமே.. எனக்கும் எதாவது முலாம் பூசிவிட்டுவிட்டு ”கலக்கிட்டோம்ல” என்று சுய இன்பம் அடைய முயற்சிக்கவேண்டாம்.
 



// எனக்கும் எதாவது முலாம் பூசிவிட்டுவிட்டு ”கலக்கிட்டோம்ல” என்று சுய இன்பம் அடைய முயற்சிக்கவேண்டாம் //னு தெளிவாத்தானே சொல்லியிருந்தேன், அப்புறமும் ஏன் // பெரியவா சின்னவா என்றால் மட்டும் வந்துடுறியள். //னு இந்த சின்ன புத்தி..

பத்திரிக்கை விக்கணும்னா கோபால் பொண்டாட்டி தவிர மத்த எல்லா பொம்பளைய பத்தியும் கீழ்த்தரமா கிசுகிசு எழுதுவான் நக்கீரன்ல. அத மறுத்து சம்பந்தப்பட்டவர்கள் கேஸ் போடலைன்னா உடனே “விஷயம் தெரியுமா, இந்த வாரம் இந்த நடிகை தேவடியான்னு நக்கீரன்லயே சொல்லிட்டான்” என்று வெட்டி ”உண்மை” புரளும் லெவல்லயே இருந்துகிட்டு என்னத்துக்கு அப்பப்போ பகுத்துமயிரு வியாபாரம் வேற.

சாமியர் பற்றிய உங்க கருத்து உடன்படக்கூடியதுதான் என்றாலும் அத கால் - ஐ மீன் ஜஸ்ட் லெக் - கழுவறவனோட நம்பிக்கையா பார்க்ககூடாது. அதாவது செத்து போன அப்பாவோட லெகசிய கேர் ஓவர் பண்ணும் நம்பிக்கையில சில குடும்ப உறுப்பினர்கள், ஏன் பகுத்தறிவு வாழைப்பழமே காவடி சுத்தும்போது என்னவோ ஒரு எழவு நம்பிக்கைக்காக சில சில்லுண்டிகள் எவனவன் காலயோ கழுவி அதத்தான் புண்ணியம்னு தேடுறாங்கன்னு நினைச்சிக்க வேண்டியதுதான்.
 



டோண்டு பதிவர் குழுமம் - குழந்தைக்கு பல் முளைக்கும் பிரச்சினைகள்" ::

பார்ப்பனீய எதிர்ப்பு Freudian slipல் பார்ப்பன எதிர்ப்பு ஆனதை பற்றிய ஒரு பழைய ஜோக் -

Two guys are sitting at a bar talking and one guy asks the other guy, "Man, do you ever have a Freudian slip?"

"What are you talking about?" says the other guy.

"Well I was at the airport the other day and one of the clerks had really big tits, and I meant to say, 'Could I have two tickets to Pittsburgh,' but I accidentally said, 'Could I have have two tickets to Titsburgh."

The other guy says, "Oh yeah! I know what you're talking about! I was sitting at the dinner table with my wife the other day and I meant to say, 'Could you pass the salt please,' but instead I said, 'Bitch you ruined my life!"
 



குசும்பு பொத்திவெச்ச மல்லிகை மொட்டு... ::

”மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” ஆப்பு ரேசன் மல்லிகை மொட்டு வீடியோ சுட்டி பார்க்க கிடைக்குமா?

- அகில உலக பெண்கள் சங்கம்,
நெ.26, விவேகானந்தர் குறுக்கு தெரு,
துபாய் மெயின் பஸ் ஸ்டாண்டு சமீபம்,
துபாய்.
 



உலகத்தமிழ் மக்களுக்கு உன்னதமான செய்தி ::

சில கேள்விகள் தொக்கி நிக்கிதுண்ணே... தமிழன் நீங்கதாண்ணே இதுக்கு பதில் சொல்ல சரியான ஆளு...

1. இந்த தமிழ் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம்கிறாய்ங்களே. அப்படீன்னா என்னாண்ணே.. இந்த கலாச்சாரத்துக்கு யாருண்ணே அத்தாரிட்டி? கலாச்சார ரூல்ஸ் அண்டு ரெகுலேசன்ஸ எல்லாம் அப்பப்போ மாத்துவாய்ங்களா இல்ல கோமணம் கட்றவன் பொடவ கட்றவ மட்டும்தான் தமிழன் தமிழச்சின்னு காலத்துக்கும் மாறாம அப்படியே இருக்குமா? இல்ல மாற்றம் வந்திச்சின்னா யார கேட்டு மாத்துவாய்ங்க?

2. சட்டப்படியோ சட்டத்துக்கு புறம்பாவோ ஆம்பிளைங்க ரெண்டு மூணு பொண்டாட்டி வச்சிகிறதெல்லாம் தமிழ் கலாச்சாரத்துல சேத்தியாண்ணே? கருணநிதி பெரியாருக்கும் இந்த கேள்விக்கும் சம்பந்தம் இல்லீங்கோ.

3. குஷ்பு ஒன்னியும் கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிப்பா எல்லாரும் செக்ஸ் வச்சிகிட்டே தீரணுமின்னு சொல்லலீங்க. சரி விடுங்க அவங்க சொன்னது என்னன்னு சொன்னா மட்டும் நீங்க சரியா புரிஞ்சிக்க முயற்சி பண்ணவா போறீங்க? அப்படியே சொன்னதாவே வச்சிகிட்டாலும் அத சொல்ல அவங்களுக்கு கருத்து சொதந்திரம் கெடையாதா? அவங்க மேல ஊர் முச்சூடும் இருக்கிற கோர்ட்டுல எல்லாம் கேஸு போடறது என்னா கலாச்சாரம்? அப்புறம் இத்தயே சொன்னது குஷ்புவுக்கு பதிலா மு.க.அழகிரின்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம், இளிச்சவாய் குஷ்பு மேல கேஸு போட்ட மறத்தமிழனுங்க எத்தினி பேருக்கு அழகிரி மேல கேஸு கொடுக்க இடுப்புக்கு கீழ சமாச்சாரம் வெளீல இருந்திருக்கும்னு நினைக்கிறீங்க?

4. குஷ்பு சரித்திரம் எழுதினதால உங்ககிட்ட ஒரு கேள்வி. கேள்வி என்னவோ சும்மா பேச்சிக்குத்தான், ஆனா சீரியஸா யோசிச்சி பதில் சொல்லுங்க. உங்க சம்சாரம் (இன்னமும் கல்யாணம் ஆகலைன்னா வருங்கால) கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவ நீங்க இல்லாத ஒரு அன்னிய ஆடவர் கூட ஒரே ஒரு தடவ சந்தர்ப்ப வசத்தால செக்ஸ் வச்சிருந்தாங்கன்னு தெரிய வந்திச்சின்னா உங்க ரியாக்சன் என்ன ?
 



சுரேஷ் கண்ணன் ஹாலிவுட் வியட்நாம் வீடு :: // என பின்னூட்டத்திலும் தனி மடலிலும் நேர் உரையாடலிலும் தெரிவிக்கும் நண்பர்களுக்கு //

"என தெரிவிக்கும் நண்பர்களுக்கு" ன்னு சொன்னா பத்தாதா? இல்ல யாரும் தொலைபேசி, தந்தி, எஸ்.எம்.எஸ்ல எல்லாம் சொல்றது இல்லின்னு குத்தி காமிக்கிறீங்களா?
 



உண்மைத்தமிழன் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு யாருக்காக நடத்தப்பட்டது? ::

//அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான்..” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்//

சரியாத்தான் சொல்லியிருக்காரு.. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுக்கலாம்னு ஆசை ஆசையா வர்ற வழியிலேயே அவன மடக்கி நெல்லிக்கனிய புடுங்கி இவரு தின்னுபுட்டா அதியமான் ஏமாந்துதான போயிருப்பான்...
 



ஜாக்கி "மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ::

// எலக்ஷன் வரும் போது சீமானின் வாயை கட்ட முடியாது என்பதால் // இப்படி நாலு பேரு ஏத்தி வுட்டு ஏத்தி வுட்டுத்தான் சும்மா கிடந்தவன் இப்போ ஜெயில்ல... உடம்ப ரணகளமாக்காம உடமாட்டீங்க போல... சீமான் வாய கட்டாம போனா மட்டும் என்ன நடந்திடும்னு நினைக்கிறீங்க.. அரசாங்கம் பயப்படுற அளவுக்கெல்லாம் சீமான் ஒரு சீரியஸ் பீசுன்னு உண்மையிலேயே நம்புறீங்களா? ஹய்யோ ஹய்யோ...
 



1. கலகலப்ரியா பதிவரசியலில் ஒரு மனுஷியாக வெட்கப்படுகிறேன் ::

2. வினவு நீங்க யாருக்கு அடியாள் ::

// ஆமாம்... உண்மை! ஒரு பெண் ஏதோ ஒரு சம்பவத்திற்காக அவமானமாக உணர்ந்தால், காயப்பட்டால், தானே சம்மந்தப்பட்டவர்களுடன் அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளாது, ஆஆஆஆஆஆண் மகன்கள் அல்லது மகாஆஆஆன்களிடம் முறையிட்டுப், பிச்சையேந்தி நிற்க வேண்டியிருக்கிறதே! அதிலும் போன இடம்... அய்யகோ... //

சென்னாரெட்டி கைய பிடிச்சி இழுத்தாருன்னு ஜெயலலிதா சும்மா பத்திரிக்கைகாரங்கள கூப்பிட்டு புலம்புனதுக்கு பதிலா வினவு க்ரூப்புகிட்ட சொல்லியிருந்தா தமிழ்நாட்டுல இந்நேரம் ஒரு பெரிய பெண்ணீய புரச்சியே ஏற்பட்டிருக்கும். இப்பவும் ஒன்னியும் கெட்டுப்போகல, வினவு அத கையில எடுத்து பதிவுலக அடுத்த கட்டத்த்டுக்கு நவுத்தனும்கறதே நம்மள மாதிரி பொதுசனத்துக்கு ஆச.
 



சுரேஷ் கண்ணன் எந்திரன் - FAQ's ::

// அணுகுண்டுக்கு இணையாக ஏவிஎம் நிறுவனம் 'சகலகலா வல்லவனை' எறிந்து சூழலை மாசுபடுத்தியோடு //

லாட்டரி, மது போன்ற பொதுவான கேளிக்கைகளை கூட சுய கட்டுப்பாட்டோடு எதிர்கொள்ளும் திராணியற்ற அல்லது அப்படி நினைத்து அதை சட்ட ரீதியில் தடை செய்யும் அரசாங்கத்தை - அதனிடமே பணம் பெற்றுக்கொண்டு ”தேர்ந்தெடுக்கும்” மக்களை - கொண்ட சமூகத்தில், டைரக்டரின் சுதந்திரத்தில் கத்தரி போடும் அமைப்பின் தணிக்கையை தாண்டி வெளிவரும் ஒரு படம் வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றால் அதற்காக நாம் சபிக்க வேண்டியது சமூகத்தையா அல்லது சட்டத்துக்குட்பட்டு வியாபாரம் செய்யும் ஏவிஎம்மையா?

பொதுவான டிக்கெட் விலை $10 - $12. என்னால் முடியும் என்றாலும் $15 மேல் எந்திரன் டிக்கெட்டுக்காக கொடுக்க மாட்டேன். எனக்கு தெரிந்து பெரும்பாலான மத்திய வர்க்கம் அப்படிதான் என்று நினைக்கிறேன். ஆனால் பொது விலையை விட 10 மடங்கு விற்கும் டிக்கட்டை தன் சக்திக்கு மீறி கடன் வாங்கியாவது வாங்கி படம் வெளியான முதல் வாரத்திலேயே பார்த்தே ஆக வேண்டும் என்ற போதை கொண்ட கும்பலையா அல்லது அந்த கும்பலை தனது வியாபாரத்துக்காக பயன்படுத்தும் - கவனிக்கவும் யாரும் துப்பாக்கி முனையில் படம் பார்க்க வற்புறுத்தவில்லை - வியாபாரியையா யாரை நோவது?

மீசை கூட முளைக்காத கருணாதி குடும்ப சிறுவர்கள் பல நூறு கோடியில் படம் எடுப்பதும், திரைப்படத்துறையில் (மட்டுமா?) கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் குறித்த கவலை பெரும்பாலானோருக்கு உண்டு. லஞ்சம் பற்றி அங்கலாய்த்துக்கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் சமூகத்தை விடுங்கள். உங்களுக்கான இரண்டு கேள்வி.. சன் குழும தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறீர்களா, புறக்கணிக்கிறீர்களா? எந்திரம் படம் பார்ப்பீர்களா, மாட்டீர்களா?
 



இரும்புத்திரை செந்தழல் ரவி மற்றும் எல்லா பெண்ணியக்காப்பாளர்களுக்கும்:

நடிகை ரம்பா கல்யாணத்தின் பொழுது அவரை மிகவும் கீழ்த்தரமாக பதிவு எழுதி அதை விட கீழ்த்தரமாக அதை நியாயப்படுத்தி பின்னூட்டம் எழுதிய செந்தழல் ரவி, தனது கம்யூனிஸ கடவுள்களை விமர்சனம் செய்தபொழுது அதை எழுதியது ஒரு பெண் என்பதாலேயே பெண்மையின் எல்லா குணநலன்களையும் இழிவு படுத்தி ஒரு சாக்கடைப்புழுவை விட அருவருப்பான நிலையில் நின்று ஆர்ப்பரித்த வினவு எல்லாம் பெண்ணியக்காவலர்கள் என்றால் அப்போ ஹிட்லரை இனி மகாத்மா ஹிட்லர்னு கூப்பிடனுமா?
 



வால் பையன் மணமகள் தேவை! ::

// i believe, the caste system could abolished only by inter-caste marriages. so i am looking for inter-caste marriage. //

இதை கண்டவுடன் இது போன்றதொரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு இணைய புரட்சியாளர் தனது கல்யாணத்திற்கு நண்பர்கள் மூலமாக பெண் தேடினார். இணையத்திலும் தான் விரும்பும் பெண் தகுதிகள் குறித்து இப்படி சொல்லியிருந்தார். அதாவது தான் ஒரு சாதி மறுப்பாளன் என்பதால் கலப்பு மணத்தை எதிர்நோக்குவதாகவும் கண்டிப்பாக பெண் தன் சாதியல்லாதவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். பின்பு திருமணம் முடிந்தவுடன் தன் துணைவி குறித்த குறிப்பு ஒன்றில் தன் நோக்கம் நிறைவேறியதாகவும், அதிலும் அப்பெண்ணின் தாய் தந்தையர் கலப்பு மணம் செய்தவர்கள் என்றும் அப்பெண்ணின் நெருங்கிய சொந்தம் (தாய்மாமன்?) முற்றிலும் வேறுபட்ட சாதியை சார்ந்தவர் என்றும் பெருமையாக குறிப்பிட்டிருந்தார். சாதி மறுப்பாளன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் எத்தனை பேரின் சாதியை ஆராய்ந்து இருக்கிறார் என்பதில் உள்ள முரண்பாடுகள் புரிகிறதா?

**

ஆக சாதி மறுப்பாளர்களும் ஏன், தன் சாதியை தவிர்த்த ஏனைய சாதிகளில் பெண் தேடுகிறார்கள். இங்கும் ஏதோ ஒரு விதத்தில் சாதி என்பது வெளியே வருகிறதே? “பெண்ணில் சாதி அறிய ஆர்வமில்லை” என்று சாதியை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் தன் மனதிற்கு விருப்பப்படும் பெண் - திருமணத்திற்கு பிறகு மட்டுமே அவர் தன் சாதி என்பது அறிய வந்தால் கூட அதை கண்டு கொள்ளாமல் - வேண்டும் என்பதாக மட்டும் தேடுவது இயலாதா?

**

உங்களின் இக்குறிப்பிலுள்ள மணமகனுக்கு அவரின் கொள்கைகளுக்காக பாராட்டுகளும், தோழமையுடன் இருக்க ஒரு துணை வேண்டும் என்று தேடும் அவர் விருப்பம் நிறைவேறி நல்லதொரு வாழ்க்கை துணை கிடைத்து திருமணத்திற்கு பின்பு தோழமையா கொள்கையா என்று சிக்கலான நிலைப்பாடு வரும் காலகட்டங்களில் கொள்கை என்ற வறட்டு பிடிவாதத்தில் நிற்காமல் தோழமைக்கு மதிப்பு கொடுத்து சந்தோஷமாக வாழ்க்கை அமைய வாழ்த்துக்களும்...
 



முந்தைய பின்னூட்டத்தில் நான் தொட்டுச்சென்ற திருமணம் குறித்த சுட்டி - http://suguna2896.blogspot.com/2008/02/blog-post.html

இப்போதுதான் கூகிள் சர்ச்சில் கண்டுபிடித்தேன். நான் கேட்ட கேள்வியை ஏற்கனவே மறுப்பாளரை சிலர் கேட்டிருந்தனராம்.. ஆனால் அதை தனக்கு சாதகமான ஒரு வகையில் புரிந்து கொண்டு வித்தியாசமான ஒரு பதில் சொல்லியிருக்கிறார். நான் இங்கு கேட்டிருக்கும் கேள்வி அவரின் புரிதலில் இருந்து வேறுபட்டது என்பது என் புரிதல்.
 



வால் பையன் ஒரிஜினல் ப்ளாக்கர்! ::

நான் பதினொன்னாவதுன்னு நினைக்கிறேன், ஒரு நாள் நாங்கள்லாம் கெமிஸ்ட்ரி லேபுக்கு வெளில மரத்தடில - அதான் எங்க க்ளாஸ் ரூம் - உக்காந்திருக்கோம். அப்ப நடந்த ஒரு பரீட்சைக்கான ஆன்ஸர் பேப்பரை எடுத்துகிட்டு தமிழய்யா வர்றாரு. வந்தவரு என் க்ளாஸ்மேட் ஒருத்தன் பேப்பர எடுத்து டேபிள்ல போட்டுட்டு காச் மூச்னு கத்துறாரு. அங்கங்க மரத்தடில இருந்த வாத்திங்க எல்லாம் வந்து படிக்கிறாங்க. உடனே க்ளாஸ்மேட்ட கூப்பிட்டு ஒரு வாத்தி வுடாம எல்லாரும் சேர்ந்து அடி பின்றாங்க. அதுல ஒரு வாத்தியாரு கெமிஸ்ட்ரி லேபுக்குள்ல பூந்து பர்னர்ல இருந்து கேஸ் வால்வுக்கு போகும் ரப்பர் ட்யூப்ப எடுத்துகிட்டு வந்து பட்டைய கிளப்புறாரு. பயங்கர டெரர். இனிமே இந்த கருமாந்திரம் புடிச்ச க்ளாஸுக்கு பாடம் எடுக்க மாட்டேன், நீங்கல்லாம் உருப்படவே மாட்டீங்கன்னு சாபம் விட்டுகிட்டே தமிழய்யா போறாரு. க்ளாஸ்மேட்ட அப்படியே ஹெட் மாஸ்டர் ரூமுக்கும் கூப்பிட்டு போறாங்க. அப்புறம் அவனுக்கு டி.சி கொடுக்கிற வரைக்கும் போயி அவன் அப்பா வந்து ஹெட்மாஸ்டர் காலில் விழுந்து ஒரு வழியா சமாதானம் ஆச்சி.. இதுக்கெல்லாம் காரணம்? “அணி நயம், தொடை நயம் - விளக்குக” அப்படீங்கற தேர்வு கேள்விக்கு அவன் எழுதுன பதில். பின்னாடி ஒருநாள் அதுசம்பந்தமா பேசும்போது சொன்னான், “உங்க பொண்ணுன்னு பொதுவாத்தான்டா எழுதியிருந்தேன். திருத்தற வாத்திக்கு பொண்ணு இருக்கும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்”
 



அபி அப்பா ஸ்ரீ குருவே நமஹ!!!! கோவில் விசிட்!!! :: எச்சூச்மி... உடன்பிறப்பா இருந்துகிட்டு கோயிலுக்கு போறீங்களே? உங்க தலைவர் கோவிச்சிக்க மாட்டாரா?

என் கொள்கை வேற, என் மனைவி கொள்கை வேற. அவங்களுக்காக கோவிலுக்கு போயி அவங்க கேட்டுகிட்ட மாதிரியே “என் மனைவியின் கணவனுக்கு நல்ல புத்தி கொடப்பா” ன்னு வேண்டிகிட்டேனே தவிர எனக்காக இல்லன்னு உங்க தலைவர் பாணியிலேயே ஒரு வெண்டக்காய் பதிலா சொல்லாம வேற எதாவது நல்ல பதிலா மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா இருந்தாலும் பரவாயில்ல சொல்லுங்க..
 



// தலைவர் என்னிக்கு நீங்க சொன்ன மாதிரி சப்பைகட்டு கட்டினாரு // ஒரு திமுக தொண்டர் பொட்டு வச்சத பத்தி உங்க தலைவரு விமர்சனம் பண்ணப்போ தலைவர் மனைவி வச்சிக்கிற பொட்டு பத்தி ஏதோ ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டப்ப (ஞாபகத்துல இருந்து சொல்றேன், உங்ககிட்ட மேல்விபர சுட்டி இருந்தா தாங்க.. மாயவரத்தான் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)

ஆன்மிகவாதியா இருக்கிற குட்டி தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்தா தலைவர் சொல்றத பின்பற்றுவது என்ன, முடிஞ்சா அணி சேந்துகிட்டு தலைவர் கண்ணுலயே விரல விட்டு ஆட்டுவாங்க.. ஆக இங்க திமுக தலைமை பத்தி பேசலீங்க.. தலைவர் சொல்ல வேதவாக்கா எடுத்து பின்பற்றும் அப்பாவி தொண்டர்கள் பத்தி மட்டும்தான் பேசுறோம். அப்ப தீவிரமான தொண்டர்கள்னா கூட தலைவர் கொள்கைய முழுசா இல்லாம தனக்கு வேண்டியதா பாத்து செலக்டிவா பின்பற்றலாமா? அப்படீன்னா “உடன்பிறப்புக்கும்” சாதா திமுக அனுதாபிக்கும் என்ன வித்தியாசம்?

பி.கு:

1. உங்க பதிவுல ஏகப்பட்ட ஸ்க்ரிப்டு. ஃபயர்பாக்ஸ்ல இருந்து கமெண்ட் போட முடியல. அதனால ஐ.இ. வச்சி போட்டேன். அது எனக்கு அவ்வளவா சரிப்பட்டு வரமாட்டுது.
2. எனக்கு தெரிஞ்ச நான் எழுதுன ஒரே பஸ், முந்தி சோழனா இருந்து அப்புறம் த.அ.பேருந்தா மாறுனது மட்டும்தான். அதுல நாலணா காயின வச்சி சுரண்டி சுரண்டி ஆட்டின் படம்லாம் வரஞ்சி ஏதோ எழுதினேன்னு நினைக்கிறேன்.. மத்தபடி கூகிள் பஸ்ல இன்னும் ஏறல.
3. இதுக்கு முன்னாடி நீங்க எழுதின கோவில் கட்டுரைகள் இதுவரை படித்ததில்லை
4. இதுவரை நீங்க எழுதி நான் படித்த பொது கட்டுரைகள் முக்கியமாக ராதா சம்பந்த்மானவை நான் மிகவும் ரசித்தவை - வந்தமா பதிவ படிச்சமான்னு பேசாம போனாலும் கூட
5. இன்னிக்கும் அப்படியே போயிருப்பேன்.. ஆனா எனக்கு இன்னிக்கி பொழுது போகல.. ஹிஹி..
 



துளசிதளம் நம்ம கோவிலில் நவராத்திரி விழா :: தமிழ் ரத்தம் உடம்பிலே ஓடும்போது அவருக்கு மட்டும் “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” பட்டம் வாங்க ஆசையிருக்காதா? வருங்கால முதல்வர் கோபால் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் (எலக்சன் டைம்ல கொஞ்சம் பாத்து செய்ங்க)

பி.கு: அவருக்கு அப்பிடி என்ன வயசாயிடுச்சின்னு சந்தடி சாக்குல அவரை “பெரியவர்கள்” லிஸ்டுல சேத்துட்டீங்க? (நாராயண நாராயண)
 



பிச்சைப்பாத்திரம் பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா?" ::

// டிரைய்லரே பச்சை மிளகாயை மிளகாய்ப் பொடி தொட்டுக் கொண்டு கடித்தாற் போல் விறுவிறுவென்று இருக்கிறது //

”ட்ரைலர்” என்று குறிப்பிட வேண்டியதை ”ட்ரைலரே” என்று குறிப்பிடுவதிலேயே ராம் கோபால் வர்மா (ராமு?) மீதான உங்கள் நம்பிக்கை, அதன் காரணமாக ஏற்கனவே படத்தை பற்றி நீங்கள் எடுத்த முன்முடிவு எல்லாம் தெரிகிறது. ட்ரைலரால் தூண்டப்பட்டு படத்துக்கு போய் வெறுத்துப்போய் வெளியே வந்த பல படங்களை போல் இல்லாமல் உங்கள் 'பரிசுத்தவுணர்வை’ எழுப்பும் வண்ணம் இப்படம் இருக்க வாழ்த்துக்கள்.

// ராமுவை முன் வரிசையில் வைப்பேன், நான் எழுதியிருந்தேன், நான் என்ன சொல்ல வருகிறேன் ..... என்ற ரீதியில் இப் பதிவில் பல நான்கள் வருகிறது. ஆமா நீ யார்? //

பதிவை படிக்கும்போது எனக்கும் தோன்றியது.. என்னடா இந்தாள் பாலகுமாரன் ரேஞ்சுக்கு “நானை” முன்னிலை படுத்தி எழுத துவங்கிவிட்டாரே என்று.

// பஞ்ச பாண்டவர், குந்தி, பாஞ்சாலி அளவிற்கு ஒருவர் அலைக்கழிக்கப்பட்டு இருந்தால், துன்பப்பட்டு இருந்தால் பழி வாங்குதல் ஒரு பரவச உணர்வே. //

கேசினோவுக்கு போய் மொத்த சொத்தையும் இழந்துவிட்டு கேசினோ ஓனரை பழிவாங்க புறப்படுவது பரவச உணர்வா. கிருஷ்ணனில் வழிகாட்டுதல்கள், சூழ்ச்சிகள் இல்லையென்றால் வெறும் கைப்புள்ளையாக போயிருக்க வேண்டிய பாண்டவர்கள் ரொம்ப நல்லவர்கள், கவுரவர்கள் என்றாலே கெட்டவர்கள் என்றே போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறோம். பொதுபுத்தியில் பாண்டவர்களின் கஷ்டம் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. எரிதழல் கொண்டுவா தம்பி என்பதை பீமன் தன் அண்ணன் தன் குடும்பத்தையே பணயம் வைத்து தோற்பதற்கு முன்னாடி சொல்லவில்லை. மனைவியை சூதாடி தோற்றவனைத்தான் நாம் “தருமர்” என்று அழைக்கிறோம். என்னதான் பட்டத்து ராணியாக இருந்தாலும் சகல வல்லமை பொருந்திய மகாராஜாவான துரியனை தன் அரண்மனைக்கு வரவழைத்து அவன் தடுமாறியதை பார்த்து சிரித்த திரவுபதி, ஜெயலலிதாவுக்கு எதிரில் (தன்) கால் மேல் (தன்) கால் போட்ட வட்ட செயலாளர் மாதிரிதான். அதற்கு பதிலடியாக அவளை சபையில் துகிலுரிந்த துரியனின் பழிவாங்குதலும் பரவச உணர்வா??
 



பிச்சைப்பாத்திரம் ஒரு நண்பரின் கடிதம் ::

// இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு எழுதப் போகும் (நிச்சயமாக எழுதி விடுவேன், ஐயா நம்புங்கள்) விளக்கப்பதிவுதான் //

அவரோ அவரது நண்பர்களோ உங்கள் தரப்பில் உள்ளதாக சொல்லப்படும் “நியாயத்தின்” இடையில் உள்ள ”அநியாயத்தை”த்தான் படிக்கப்போகிறார்கள்.. நீங்களோ உங்களது நண்பர்களோ உங்கள் தரப்பில் இருப்பதாக அவர்கள் சொல்லும் “அநியாயத்தின்” இடையில் உள்ள “நியாயத்தை”த்தான் பெரிதுபடுத்த போகிறீர்கள். ஒரு சில “சில்லுண்டிகளின்” வெட்டி அரட்டைக்கு வேண்டுமானால் உபயோகப்படலாம் என்பதை தவிர்த்து பார்த்தால் வரிகளுக்கு இடையில் மட்டுமே படிக்கப்படப்போகும் உங்கள் விளக்கம் யாருக்காக அல்லது எதை நிரூபிப்பதற்காக? (இதையெல்லாம் நான் சொல்வதுதான் காலத்தின் கோலம்)
 



பிச்சைப்பாத்திரம் சினிமா பற்றி பேச நீ யார்? ::

// 'இப்படி எழுத நீ யார்?' என்றொரு அனானி நண்பர் பின்னூட்டத்தில் கேட்டார். நண்பர் முகமூடி அதை வேறு நோக்கில், "ஏன் அகங்காரம் தெறிக்கும் இத்தனை நான்கள்?' என்று கேட்டிருந்தார். //

’பெரும்பான்மையோருக்கு’ ஒன்றும் தோன்றியிருக்காது.. ஆனால் உங்கள் பதிவினை தொடர்ந்து வாசித்து வருவதில் அந்த பதிவின் கொஞ்சம் மிகுதியான “நான்” கள் வித்தியாசமாக தோன்றியது, அவ்வளவுதான்.. பாலகுமாரனை தொடர்ச்சியாக வாசித்த ஏதோ ஒரு காலகட்டங்களில், ஒரு சக வாசகருடனான உரையாடல் என்பதிலிருந்து “நான்” என்பதாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போய், ஒரு கட்டத்தில் ”நான் குரு ஸ்தானத்தில் எனக்கு தெரிந்ததை உனக்கு உபதேசிக்கிறேன் அதை புரிய முயற்சிக்காத ஜடமாக இருக்கிறாயே” என்பது வரை அவரது எழுத்து மாறிப்போனபோது “போடா வெண்ணை” என்று அவரை உதறியவன் “நான்” (இதை படிக்கும் பாலகுமாரன் ரசிகர்கள் சிலருக்கு “ஆமா நீ பெரிய புடுங்கி, போடா வெண்ணை என்று தோனறலாம். அதுதான் இந்த “நான்”க்கு உள்ள மகிமை).

உங்களுடையது அந்த ஒரு பதிவின் மட்டுமான நடையாக எதேச்சையான அமைந்திருக்கலாம்.. ஆனால் பதிவை படித்த போது - அகங்காரம் என்று அல்ல, வெறுமே பாலகுமாரன் சம்பவம் எனக்கு ஞாபகம் வந்ததின் சாயல் மட்டுமே - இன்னொருவருக்கும் தோன்றியதை பின்னூட்டத்தில் பார்த்ததும் எதேச்சையாக பதிவு செய்தேன்...

பி.கு: வேணு என்ற “தோழர்” அந்த பதிவில் உங்களை இன்சல்ட் செய்யும் நோக்கில் சிலர் கமெண்ட் போடுவதாகவும் அதை நீங்கள் ரிஜக்ட் செய்ய வேண்டும் என்றும் உங்களுக்கு ஆலோசனை செய்து போட்ட கமெண்ட் படித்தீர்களா? அ) அந்த பதிவில் நான் கண்டவரை உங்களை இன்சல்ட் செய்யும் வகையில் எதுவும் எனக்கு தோன்றவில்லை. ஆ) அல்லது இந்த மாதிரி சாதா கமெண்டுக்கெல்லாம் நீங்கள் இன்சல்ட் ஆவீர்கள் என்பதாகவும் நினைக்கவில்லை இ) நீங்கள் ரிஜக்ட் செய்யும் முன் அந்த கமெண்டை படித்தாக வேண்டும் என்பதும் அதை படிக்கையிலேயே இன்சல்ட்ன் நோக்கம் நிறைவேறிவிடும் என்பதும் அப்புறம் அதை ரிஜக்ட் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்பது “தோழர்” வேணுவுக்கு புரியாமல் போனது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. இப்போது இந்த பதிவை படித்தால் ஒரு சில லேசாக புரிகிறார் போல் இருக்கிறது.

**

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனபின்பு தன் கடன் பணி (உங்கள் பாணியிலான பதிவுகள்) செய்து கிடப்பதே என்பதாக மீண்டு(ம்) வாருங்கள்.
 



dondu சென்னை பதிவர் சந்திப்பு - 20.10.2010 - ராஜன் திருமண வரவேற்பு ::

அனேகமாக இப்போதிலிருந்து பதிவுலகில் அமோகமாக பிரயோகப்படுத்தப்படப்போகும் என்று நான் நினைக்கும் “மாகேமாகோ” (மாமனார்கிட்ட கேட்டுட்டீங்களா, மாமனார் கோச்சிக்க போறாரு) என்ற வார்த்தை பிரயோகத்தை என் பெயரில் காப்பிரைட் செய்துகொள்கிறேன். கொள்கை விரோத கருத்துக்கு எதிர்ப்பிரயோகமாக உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எத்தனை தரம் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம், அனுமதி இலவசம்.
 



cable sankar The Town ::

// நான் கொடுக்காவிட்டாலும். வேறு யாராவது கொடுக்கத்தான் செய்வார்கள் // இதே மாதிரிதான் இந்த பெண்மணியும் நினைத்திருக்கக்கூடும் - Single mom can't pay $1.5M song-sharing fine

வேறு யாராவது செய்வார்களா மாட்டார்களா என்பது ப்ரச்னையல்ல.. நீங்கள் எதற்கு செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி?
 



பிச்சைப்பாத்திரம் காமராஜர் அரங்கமும் கவர்ச்சி இலக்கியமும் ::

வெளியீட்டு விழா (?!) விமர்சனம் லொல் (LOL). ஒரு சில பீன்னூட்ட குஞ்சுகளின் கூவல் லொல்லோ லொல்...

இயல்பாய் எழுந்த இரு கேள்விகள் (இ னாவுக்கு இ னா) -

1) ஏழுல ‘தேகம்’ மட்டும் வாங்கினதுக்கு எதாவது விசேஷ காரணம் உண்டா?
2) இலக்கியவாதி சாரு வணிகரீதியா அலப்பறை விடுறாருங்கிற மாதிரி ஒரு ஆதங்க தொனி (எனக்கு மட்டும்?) தெரியுதே. சாரு இலக்கியவாதின்னு உண்மையிலேயே இந்த உலகம்.. வேணாம் நீங்க நம்புறீங்களா?
 



திங்கள் சத்யா மன்மதன் அன்பு படத்தில் செருப்படி வாங்கிய ஈழத் தமிழன் ::

வாழும் ஈழத்தமிழர்களில் காட்டிக்கொடுப்பவர்கள் கூட்டிக்கொடுப்பவர்கள் எல்லாம் இருக்கலாம். பதவிக்காக துரோகம் செய்பவர்கள் இருக்கலாம். ஆனால் பயந்தாங்கொள்ளியாக, செருப்படி வாங்கும் ஒரு நிழல் கேரக்டராக ஒரே ஒரு ஈழத்தமிழ் பேசுபவனை சினிமாவில் காண்பித்தால் உடனே சூடு சொரணை எல்லாம பொங்குகிறதோ? ஆமாம் எல்லா ஈழத்தமிழனும் வீராதி வீரன்தானா? பயந்த சுபாவம் கொண்டவர்கள் இருக்க வாய்ப்பே இல்லையா? சினிமா நடிகர்களுக்கு செருப்பாய் உழைக்க தயாராய் ஒரே ஒரு ஈழத்தமிழன் கூட கிடையாதா? முதலில் இந்த தொட்டாச்சிணுங்கித்தனத்தை விட்டு வெளியே வர பாருங்கள்.

**

// ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா? //

// ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா? //

நல்ல நகைச்சுவை. லாஸ் ஏன்ஜலீஸில் தமிழ் படஙகள் வெளியிட்டு கல்லா கட்டுபவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் அய்யா ஈழத்தமிழர்கள்.
 



சீமாச்சு நம்ம முன்னாள் மந்திரி ராசாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க ::

அபி அப்பா, ரொம்ப தெளிவா எல்லாருக்கும் புரியும்படி எழுதி இருக்கீங்க. ஆனா என்னவோ தெரியல முரசொலி படிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்.

நாட்டுக்கு ஏற்பட்டத பத்தி பேசும்போது அது வருவாய் இழப்பு. ராசா அண்டு கோ செஞ்சது பத்தி பேசும்போது ஊழல். சிஏஜி முன்னத பத்தி மட்டும்தான் பேச முடியுங்கிறதால அந்த டெர்ம் மட்டும்தான் உபயோகிக்க முடியும். ஆனா நாம பேசுறது அத இல்லீங்களே.

ஒரே ஒரு சின்ன கேள்வி. ராசா, கருணாநிதி, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள், மற்றும் குடும்பத்தார், காங்கிரஸ் மேலிடம் இவர்கள் யாரும் பெரிய அளவில் இந்த ஸ்பெக்ட்ரம் மேட்டரில் காசு பார்க்கவில்லை என்கிறீர்களா? எவ்வளவு என்பதை விடுங்க, டுபாக்கூர் பினாமி கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்து கணிசமான அளவு ஊழல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறீர்களா? ஆதாரம் இல்லை என்றால் நம்பமாட்டேன் என்றால் அதே அளவுகோளின்படி ஜெயலலிதா அண்ட் கோவும் ஊழல்வாதிகள் இல்லைதானே? அவர்களை மட்டும் ஊழல் பேர்வழிகள் என்று பிரச்சாரம் செய்கிறீர்களே, அது ஏன்? (முக்கியமாக டான்சி கேஸ் - இதற்கும் ஸ்பெக்ட்ரத்துக்கும் ஒரு நூலிழைதான் வேறுபாடு. அரசுக்கு வருவாய் இழப்பு என்ற அடிப்படை என்னவோ அதேதான்)

என்ன இருந்தாலும் தலைவர் தலைவர்தான். விஞ்ஞான முறையில் ஊழல் என்பதற்கு உதாரணம் காட்டக்கூடிய அளவு தகுதியுடைய ஒரே ஆள்னா அது சும்மாவா?

இது சும்மா ஜெனரல் நாலேட்ஜ் கொஸ்டீன் : நீங்க கழக பொறுப்பு எதிலாவது இருக்கீங்களா? இல்ல வெறுமே தொண்டர்தானா?
 



இட்லி ஹரன் சென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்பர் ::

// ஐந்திணை அரங்கில் ‘நல்ல தமிழ் எழுதவேண்டுமா’ புத்தகத்தைப் பார்த்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று இன்னொரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். இன்னொரு அரங்கில் ‘தவறின்றித் தமிழ் எழுத’ என்னும் புத்தகம் கண்ணில் பட்டது. //

இதயெல்லாம் ரெண்டுக்கு நாலு தடவையா படிங்க.. அப்படியாவது நல்ல தமிழ் எழுத வருதான்னு பார்ப்போம்..

// பல்வேறு விஷயங்கள் குறித்த ஆழமான விவாதங்கள் நடைபெற்றன! என்ன என்ன பேசினோம் என்று சொல்வதற்கில்லை. //

போட்ட மொக்கை பதிவு போடுறதுகுள்ள மறந்துச்சின்னா இப்படித்தான் பில்டப் கொடுக்கணும்.
 



badri மகாபாரதம்

//கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.//

;)

In case ur daughter wonders why,, how would u explain this? Just asking...
 



பரிசல்காரன் அவியல் 28.07.2011 ::

இரு லேட்டரல் கேள்வி -
அ) அவ்ளோ அட்வான்ஸ்ட் எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு இன்ஜின் ஒரு முப்பது செகண்டு ஐடிலிங் கண்டிஷனில் எவ்ளோ பெட்ரோல் குடித்துவிட போகிறது?
ஆ) சிக்னலுக்கு சிக்னல் அணைச்சி அணைச்சி ஸ்டார்ட் பண்ணுவதால் இஞ்சினுக்கு ஏற்படும் பாதிப்பை விட அந்த தம்மாத்தூண்டு கேப்பில் சேமிக்க்கப்டும் பெட்ரோல் விலை ஒர்த்தா?
 



ஹைக்கூ வாங்கலையோ ஹைக்கூ ::

என்றோ ஒரு நாள் விகடனில் படித்த சுஜாதாவின் ஹைக்கூ அறிமுக கட்டுரையில் ஹைக்கூ இலக்கணம் பற்றி அவர் சொல்லியிருந்ததில் முக்கியமானது - படித்தவுடன் அந்த சொற்களின் மூலம் நம் மனதில் விரியும் நேரடியான காட்சிப்படிமம் மற்றும் சற்று யோசித்தால் கிடைக்கும் அதை தாண்டிய அனுபவம். அந்த படிவமோ அனுபவமோ, உங்களது இந்த பதிவில் இருக்கும் - உரைநடை கவிதை/ குறுங்கவிதை/ சிறுகவிதை - களில் ”எனக்கு” கிடைக்கவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 



முரண்தொடை சாரு நிவேதிதாவின் எக்ஸைல் (அ)கோகிலா எங்கே போகிறாள்? (அ) அய்யாங்....ட்டொய்ங்.. 6 ::

’புதிய’ நாவல் எல்லாம் எழுதும் அளவுக்கு சாருவுக்கு சரக்கு கிடையாது என்பது அவரை கொஞ்ச காலம் அவதானித்தாலே தெரிய வரும். ஒவர் hypeதான் என்றாலும் சாருவின் BDSM Slaves ஸாரி சாரு வாசகர் வட்ட அன்பர்கள் தவிர மற்றவர்கள் அவர் நாவலை வாங்கி படிக்கிறார்கள் என்பதே ஆச்சர்யம் அளிக்கிறது. உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்பி இந்த கேள்வி - என்ன எதிர்பார்ப்பில் இந்த நாவலை வாங்கினீர்கள்?
 



சரி, உங்க கருத்து ??