<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

பின்னூட்டங்கள் 201 - 300


பின்னூட்டங்கள் 201 - 300

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


உஷா நேற்றையப்பொழுது ::

// மீண்டும் மீண்டும் பேசியதையே பேசிப் பேசி பலன் என்னவென்று புரியவில்லை.மிகப்பெரிய பின்னூட்டம் மீண்டும் முகமூடியிடமிருந்து. போதும் ஐயா ஆளைவிடுங்கள் //

உஷா... அந்த பின்னூட்டம் சச்சரவு நட்ந்து கொண்டிருந்த போதே (ஜூலை 13, காலை 10:00 மணி) எழுதப்பட்டது... நான் எழுதியது ஏதோ பெரிய பாவகர விஷயம் என்பதை போல, சொல்ல வந்ததை வேண்டுமென்று திரித்து மீண்டும் மீண்டும் உங்களிடம் நீதி கேட்டு நெடும்பயணம் ஆரம்பித்திருந்த லக்கிலுக்குக்கும் அதை வழிமொழிந்த அடையாளம் தெரியாத அறிவு ஜீவிகளுக்கும் எழுதிய விளக்கம் அது... இதுவரை நான் எழுதி வெளியாகாத பின்னூட்டங்களை பற்றி அலட்டிக்கொள்ளாதது மாதிரியே, இது வெளிவராதததையும் நான் கண்டுகொள்ளவில்லை... வெளியிடாதது உங்கள் உரிமை...

ஆனால் எல்லாம் முடிந்து அனைவரும் சமாதானம் ஆகிய நிலையில் சம்பவங்களின் செய்திக்குறிப்பை வெளியிடும் நேரத்தில் "மீண்டும் முகமூடியிடமிருந்து" என்று காலத்தை குறிப்பிடாமல் எழுதப்படும் செய்தி அமைதியான குளத்தில் நான் கல்லெறிய முயற்சிப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது...

பி.கு :: உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை புரிந்து கொள்கிறேன். இது தவறு என்று நான் எண்ணவில்லை... இதை மாற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை... எனக்கு இமேஜ் ப்ரச்னை எல்லாம் இல்லாததால் மற்றவர்களிடம் இது தரும் தோற்றம் குறித்த அக்கரை எனக்கு இல்லை... இது உங்களிடம் நான் சொல்ல விரும்பியது... அவ்வளவுதான்.
 



பாபா Aadu Puli Aattam in Chidambaram ::

இந்த (தமிழ் மொழியில் எழுதப்பட்ட) சுட்டியையும் இணைக்கலேன்னா உங்க மேல தமிழ் விரோதி என்ற முறையில நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்...

http://mugamoodi.blogspot.com/2006/07/vs.html

உங்க நியூ இண்டியா எக்ஸ்பிரஸ் சுட்டி என்னவோ லாகின் எல்லாம் கேக்குது.. அத உருவாக்க எல்லாம் பொறுமை இல்லீங். கொஞ்சம் விசயத்த சுட்டு இங்கன போடுறது...
 



பிரகாஷ் சிம்ரனின் 'இடை' நவீனத்துவமும், சில கவிதைகளும் ::

அண்ணாத்த சைடு பார்ல தமிழ்ப்பதிவுகள் அப்டீன்ற தலைப்புல சில பதிவுகள ஒட்டிகினுகீதே.. அதுல http://mugamoodi.blogspot.comபதிவு மிஸ்ஸாவுது... ஒண்ணு இத்தயும் லிஷ்டுல ஒட்டு.. இல்லாங்காட்டி அந்த டைட்டில "எனக்கு பிடிச்ச தமிழ் வலைப்பதிவுகள்"னு மாத்து...
 



வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் பரிணாம வளர்ச்சி ::

அடங்கொப்புரானே... நான் பார்ப்பது உண்மைதானா... இல்ல தில்லாலங்கடியா... அதான் பின்னூட்ட எண்ணிக்கை 511ன்னு பாக்குறனே அதத்தான் கேட்டேன்... எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் 500 பின்னூட்டத்த தாண்டுனது டோண்டு எழுதிய நமக்கு நாமே பின்னூட்ட பதிவுதான்... அதுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசத்த நினைச்சி பாத்தா, அடேங்கப்பா... அசத்தல்தான். நடக்கட்டும் நடக்கட்டும்.
 



பெனாத்தலார் ஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி ::

நான் எழுதிய புத்தம் புதிய ஆறு வார்த்தை சிறுகதை இது.. எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க ::

அனுபவச் சிதறல்னுதான் சொல்லணும்.. அடங்குடா மவனேன்னுதே மனசு...
 



சாம்பு தமிழ்மணத்தில் இவ்வளவு குழுக்களா? ::

// சூப்பர் ஸ்டார் முகமூடி //

நன்றி.. எப்போ ரசிகர் மன்றம் அமைக்கிறதா உத்தேசம்? (ஆரம்பிக்கிறதா இருந்தா சொந்த காசத்தான் போடணும் சொல்லிட்டேன்... எங்கிட்டயிருந்து துட்டு எதுவும் பேராது.. மை துட்டு இஸ் ஒன்லி ஃபார் டமிள் சேவா)
 



இட்லிவடை தேன்கூடு போட்டி ( ஆறுதல் பரிசு ) பதிவு ::

ரொம்ப நல்லா இருந்தது.. ரெண்டு தடவை சாப்பிட்டேன்.. 18வது ஈடு மட்டும் கொஞ்சம் ஊசிப்போயிடுச்சி... இன்னொரு தடவை வேகவைச்சா ::

18. இட்லிவடை ::

உலகம் அழியப்போகிறதே என்று எல்லாவற்றையும் ஊத்தி மூடிவிட்டு கடற்கறையில் சுண்டல் சாப்பிட சென்றேன். அங்கே ஒரு கூட்டம் சோகமாக உலக முடிவை பற்றி பேசிக்கொண்டே மசால் வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் போய் உட்கார்ந்து நைசாக இரண்டு வடைகளை அமுக்கிய போது பேச்சு திசை மாறி இட்லிவடை பற்றி திரும்பியது. இந்த "முடிவையும்" இட்லிவடை ரிப்போர்ட் செய்வாரா என்று அவர்கள் பேசியதை கேட்டதும் புல்லரித்தது... உடனே முருகன் இட்லி கடையில் ஒரு ஓரமாக பெஞ்சு போட்டு லேப்டாப் செட்டப் செய்துவிட்டேன். அடுத்த வாரம் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வரும் அழிவு செய்திகள் மினிட் பை மினிட் அப்டேட் தரப்படும்.

*

மேலும் உலக அழிவு குறித்து ரஜினி எழுதியதாக வெளிவந்த சத்தியநாராயணாவின் அறிக்கை. (20 செகண்ட் காப்பி எடுக்க போனேன், அதற்குள் அறிக்கை முடிந்துவிட்டது.. நாளை தினமணியில் வந்ததும் கட் & பேஸ்ட் செய்கிறேன்)

வைகோவின் பேட்டி ஜெயா டிவியில் (கரண்ட் கட் என்பதால் இந்த வீடியோ க்ளிப்பிங் முழுவதும் இருட்டாக இருக்கும்)
 



வஜ்ரா ஆரியக் கேள்வி ::

தமிழ் சினிமாவுக்கு கவுண்டமணி செந்தில் மாதிரி தமிழ் வலையுலகத்துக்கு திராவிட தமிழர்கள்... கவுண்டமணி காமெடிய பாத்து சிரிச்சமா, ஜாலியா அடுத்த வேலய பாக்க போணமான்னு இருப்பீங்களா.. அத்த விட்டுட்டு ஆராய்ச்சி பண்ணிகிட்டு...
 



மணிக்கூண்டு பேராசிரியர் அன்பழகன் - அம்மா செயலலிதா ::

ஜெயலலிதாவ அம்மன்னோ செல்வின்னோ புரட்சி தலைவின்னோ இன்னும் என்ன என்னவோ சொல்றாங்களே அப்படியெல்லாம் சொல்றது பிடிக்காம, வெறுமே ஜெயலலிதான்னு மட்டும்தான் விளிக்கிறது என்னோட வழக்கம்... அப்படியே கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ்னு யாரா இருந்தாலும் அடைமொழி அடிபணிவது எல்லாம் இல்லாம வெறுமனே பெயர் சொல்லி எழுதறது பேசுவதுதான்... ஏன், தமிழ்நாட்டுல ஒரு நாய்க்கும் உண்மையிலேயே "தலைவன்" தகுதி இல்லைங்கிறது "என்னோட" கருத்துங்கிறதால யாரையும் மனசரிஞ்சி தலைவான்னு கூட சொல்றதில்ல....

ஆனா, பொதுமக்கள் சில பேரு, என்னையும் சேத்துதான், பொதுவில நிறைய பேர அம்மான்னு சொல்லக்கேட்டிருக்கேன்... பஸ்ல ரெயில்ல போகும்போது, "ஏம்மா கொஞ்சம் முன்ன போங்க... அந்தம்மாவ கொஞ்சம் இங்க வர சொல்லுங்க" இப்படி.... "வாங்கம்மா, என்னம்மா எப்படி இருக்கீங்க" அப்படீன்னு மக்கள் பேசும்போது எல்லாம் அவங்க தாய்மை தகுதிய அறியும் நோக்கில் விர்ஜினிட்டி சர்டிபிகேட் வாங்கி பாத்துட்டுதான் பேசுறாங்கன்னு எனக்கு தோணாம போயிடுச்சி... ஆனா இதே பொதுமக்கள் யாரும் சும்மாவாச்சிக்கும் ஒருத்தர பாத்து தொழில்முறை குறியீடுகளான "பேராசிரியர், பைலட், பஸ் கண்டக்டர்" அப்படீன்னு எல்லாம் சொல்லி நான் பார்த்தது இல்ல... நீங்க பாத்து இருக்கலாம், ஆனா அப்படி சொல்றவங்கள "மென்டல்"னு சொல்றவங்கள நான் பாத்துருக்கேன்...

// "செல்வி" என்று சொல்கிறார்களே, உண்மையில் அவருக்கு வாழ்க்கையில் திருமணம் ஆனாதா அல்லது திருமணமே நடக்கவில்லையா? என்பதையும் அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தால் நல்லது // ஏன் நன்னிலம் நடராசன், தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் ரேஞ்சுல பச்சையா கேக்க வேண்டியதுதான.. என்னத்துக்கு கண்ணிய போர்வை... நாமெல்லாம் விளக்கெண்ணையில வெண்டிக்காய் பொறிக்கிறதோட நிறுத்திக்கணும்... அப்படி இல்லையின்னா யாராவது குஞ்சு குளுவானுங்க வந்து, மயிலாடுதுறை சிவா அவர்களே, தொல். திருமா வை அண்ணன்னு போன பதிவு உட்பட எப்பவும் சொல்றீங்களே.. அவர் உங்க கூட பிறந்தவரா? இல்ல நீங்க அவர் கூட பிறந்தவரா? அம்பேத்கார் வழி தோன்றல்னா என்ன? திருமணம் கூட செய்யாம தலித் எழுச்சிக்காக போராடுறாருன்னு மாரு தட்டிக்கிறீங்களே, அவரு சத்தியமா திருமணம் (இந்து முறைப்படியோ, காந்தர்வ முறைப்படியோ) செஞ்சிக்கலையின்னு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியுமா... அவருக்கு குழந்தை இருக்கிறதா இல்லையா (திருமணமே செய்யாதவருகிட்ட குழந்தைய பத்தி கேக்கலாமான்னு கோக்குமாக்கா கேட்டு சிரிக்க வைக்காதீங்க) என்பதையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவும்... அப்புறம் கருணாநிதி ஆரம்பிச்சி ஏகப்பட்ட பேருக்கு சொல்லப்படுற வார்த்தைகளுக்கு உள் ஆராய்ச்சி பண்ணலாம் போல ஆசையா இருக்கு.. ஆனா (அடிவருடின்னா என்னன்னு விளக்கம் கொடுக்கிற அடிவருடி இல்லாம) உங்க கருத்து என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு பண்ணலாமின்னு வெயிட் பண்றோம்னு எதையாவது எளுதுவாய்ங்க... அப்ப என்ன பண்ணுவீங்க?
 



செல்வன் நண்பர் (தமிழினி) முத்துவுக்கு பதில். ::

செவுடன் காதுல சங்கு ஊதற அளவு இவருக்கு நேரம் இருந்தா, இவர இட்டாந்து நம்ம வூட்டுல கோழி முட்டைக்கு வெள்ளை அடிக்கிற உருப்படியான வேலைய கொடுக்கலாம்னுதான் பதிவை படிச்சவுடன் நான் நினைச்சது... ஆனா செவிடனுக்குத்தான்னாலும் அப்பிடியே ஆறுமுகம் மாதிரி சிலருக்கும் கேக்கும்னா தப்பில்ல ஊதலாம்னே தோணுது...
 



சுந்தரமூர்த்தி நவீன மெக்கார்த்தியிசம் ::

உங்கட இந்த பதிவு பத்தி எனக்கு ஒரு நண்பர் (உங்களுக்கு சங்கரபாண்டி மாதிரி எனக்கு இவுரு... ) சொன்னப்போ நான் கவுண்டமணி மாதிரி "இந்த கருமத்த எல்லாம் தெரிஞ்சி ஆவப்போவுரது என்ன... தெரியாமலேயே போகட்டும் விட்ரூ" என்று சொன்னாலும், மனுசப்பய மனசு பாருங்க, அப்பிடி என்னாத்தான் எளுதியிருக்காரு சுந்தரமூர்த்தி அண்ணாச்சின்னு பாக்கலாமின்னு வந்தேன்... ஒரே தமாசுங்க உங்ககூட...

இப்ப பாத்தீங்கன்னா, இந்த பதிவே "காக்க காக்க கவுதம் மேனன்" ஸ்டைல்லா முன்ன வரவேண்டியது பின்ன, பின்ன வரவேண்டியது முன்னன்னு ஒரே எடிட்டிங் டச்சா இருக்கு...

மொத மொத சுந்தரமூர்த்தின்னு ஒரு சீவன (நம்ம நாயனாருக்கு அப்புறம்) நான் "நெருக்கமா ஃபீல் - நண்பன் எதிரின்னு இல்ல, நம்ம வடிவேலுவ நெருக்கமா ஃபீல் பண்றதில்லையா அப்பிடி - பண்ணதே" குழலிய காபந்து பண்ண வந்து "முகமூடிய புறக்கணிக்கணும்"னு ஒரு அறிக்கை விட்டீங்களே அப்பத்தான்... இவுரு என்னாத்துக்குடா நம்ம மேல இவ்ளோ காண்டா இருக்காரு... எவனோ எழுதறான், அத எவனோ மறுத்து எழுதறான், அதுல சம்பந்தமே இல்லாம ஓடியாந்து அவனை புறக்கணியுங்கள்னு நட்பு வட்டம் உருவாக்க முயற்சி செய்றாங்களேன்னு உருவாக்கினதுதான் மந்திரகீர்த்தி சூத்திரம்... அதுக்கு முன்னயும் சரி பின்னயும் சரி நான் எதுக்காவது உங்கள சம்பந்தமில்லாம எங்கயாவது பேசியிருக்கனா எழுதியிருக்கனா... இப்பிடி சம்பந்தமில்லாத இடத்துல நீங்களே மூக்க நொழைச்சிட்டு, அப்புறம் அவன் எதிரி இவன் நண்பன்னு என்னத்துக்கு உணர்ச்சி வசப்படுறீங்க.. ஆனா உங்க குசும்ப, விஷமத்தனத்த ஜஸ்ட் லைக் தட் சொல்லிக்கிட்டு உங்கள விஷமத்தனமா நையாண்டி செய்றாங்கன்னு மைக் போட்டு சொல்றீங்களே மெக்கார்த்தியண்ணா...

அப்புறம் நம்ம மெகா மெக்கார்த்தி - அவரு பேர சொல்லக்கூடாது... அப்புறம் என்பாட்டுக்கு போறேன், எங்கிட்ட வம்பு பண்ணுது முகமூடின்னு அவரு வேற புலம்புவாரு - ஸ்டைல்ல வீரமணி பேர போட்டு "அவங்களுக்கும் இவங்களுக்கும் என்ன தொடர்போ என்னாவோ..."ன்னு பக்கத்து வூட்டு கிழவி ஸ்டைல்ல அங்கலாய்க்கிறீங்க... வழக்கமா வர மலமண்டைங்க வந்து உங்களுக்கு ஒத்து ஊதுவாங்கன்னு வைங்க... அதத்தவிரவும் இப்பிடி சொல்றதுல எதுனா சம்பந்தம் இருக்கான்னு செத்த நேரம் உக்காந்து ரோசன பண்ணா உங்களுக்கே தமாசா இருக்கும்...

வீரமணிய சென்ற வார நட்சத்திரமாக்கியதுக்கெல்லாம் உள்ளர்த்தம் கற்பிக்க முயற்சி பண்ணாதீங்க சுந்தரமூர்த்தி... அது என் பதிவு என் இஷ்டம்கிறதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்ல... அப்புறம் வாரா வாரம் ஒருத்தர நட்சத்திரமா ஆக்குறாங்களே அதுல இருக்குற எதேச்சை தனங்களையும் வரிசைப்படுத்தி ஒன்று இரண்டு மூன்றுன்னு பாடுங்கன்னு யாராவது சொல்லப்போக, அதக்கண்டு பொறுக்காம எவனாவது அறச்சீறின்னு ப்ரச்னை பெரிசாயிடும்,

மத்தபடி பெட்னா கிட்னா விவகாரம் எல்லாம் மூக்க நுழைக்க விருப்பமில்லை.. அமெரிக்க தமிழ் சங்கங்கள் மேல் - தமிழ் சங்கம்கிற பேர்ல அவனவன் அடிக்கிற கூத்த பாத்தவன்ற முறையில
- கொஞ்சூண்டு மரியாதை கூட எனக்கு இல்லை... அதனால் அதபத்தியெல்லாம் நோ கமெண்டு...

அப்புறம் உங்ககிட்ட தனியா ஒரு வார்த்தை :: இணையத்துல இதத்தான் எழுதணும், இத எழுதக்கூடாதுன்னு எதுக்குன்னா வரைமுறை பண்ணிக்கிறீங்க... வீரமணி எழுத்து விஷமின்னா, கசப்புன்னா அதுக்கு மாத்து விதமா எழுத ஏன் முயற்சி பண்ண கூடாது.. யாராவது வீரமணி வாச்சார்னு ஒருத்தர் அந்த வேலைய பண்ணலாம்... ஆனா அதவிட்டுட்டு எப்பவும் புலிவால் புடிச்சி எழுதினாத்தான் அது உயர்ந்த எழுத்து இல்லைன்னா விஷமின்னு எதுக்கு பிரச்சாரம் மட்டும் நடக்குது... நீங்க புலியால பாதிக்கப்பட்டிருக்கீங்களா? புலின்னு இல்ல, சிறுத்தை, மாம்பழம், சூலாயுதம்னு பல விசயங்களால பாதிக்கப்பட்டவன் அவனவன் கடுப்ப எழுதத்தான் செய்வான்.. முடிஞ்சா மாத்துவிதமா எழுதுங்க, இல்லன்னா கண்டுக்காம போங்க.. அத விட்டுட்டு விஷம், புறக்கணிங்கன்னு வெத்து கூச்சல் மட்டும் போட்டுகிட்டே இருந்தா அப்புறம் எவனாவது நையாண்டி செய்வான்... அப்புறம் அத ஆவணப் "படுத்தறதுலயே" உங்க காலம் முடிஞ்சிபோயிறும்...
 



கில்லியில் பாபாThamizh Blog Feed Reader ::

அடப்பாவிகளா ஸ்லிப்பு 'ஆப்பு' த டங்க்குக்கு ஒரு உள்குத்து கண்டுபிடிப்பா? அதுக்கு ரெண்டு கண்டனம் வேறயா? அப்ப இனிமே "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தா"ன்னு ரிவர்ஸ் க்ரானலாஜிக்கல் ஆர்டர்ல எழுதினா சரித்திரத்த மல்லாக்க "புரட்டி" போடுறீங்கன்னு சொல்வாங்க போலருக்கே?

ஒரு ஸ்மைலியுடன் முகமூடி
 



தீவு யாரைக் கேட்டு? ::

பத்து நிமிடத்துக்கு முன்புதான் இதை ஒரு பதிவில் பார்த்துவிட்டு சென்று என் பதிவிலும் இது இருப்பதை பார்த்தேன். இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் நீங்கள் கேட்டே விட்டீர்கள்.

இப்பொழுதெல்லாம் பதிவுகள் அவ்வளவு படிப்பதில்லையாதலால், இது குறித்த அறிவிப்பை தமிழ்மணம் வெளியிட்டிருந்தாலும் இருக்கும் என்று நினைத்துக்கொள்கிறேன். இல்லை fine prints disclaimer எதிலாவது இது பதியப்பட்டிருக்கலாம்.. எதுவுமே இல்லையென்றாலும், "(மக்கள் வரிப்பணத்துல இருந்துதான்னாலும்) இலவச அரிசி போடுறது நாங்க... பையில த/அ முத்திரை போடுவோம், முதல்வர் படம் போடுவோம், முதல்வருக்கு பிடிச்ச கவிஞர், நடிகர்னு போடுவோம், ஏன் மும்தாஜ் படம் கூட போடுவோம். அரிசிய வாங்கிகிட்டு மூடிகிட்டு போவியா" எனும் உடன்பிறப்புகள் வாழும் புண்ணிய பூமியில் இதெல்லாம் சகஜம்தானே என்று போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்...
 



துளசி கொலுவுக்கான அழைப்பு ::

நானெல்லாம் நவராத்திரி ரெண்டாம் நாள்ல இருந்துதான் வசூலுக்கு கிளம்பறது வழக்கம், அதான் வழக்கம் மாறாம இன்னிக்கி வந்திருக்கேன் (சோம்பேறின்னு சொல்ல வேண்டியதுதான, அதுல என்ன சப்பைகட்டு) அதுக்குள்ள 113 பேர் சுண்டலுக்கு வந்திட்டாங்களா... மிச்சம் மீதி எதுவும் இருக்கா?

அந்த காலத்துல ரெண்டு - ஒண்ணு இனிப்பு, ஒண்ணு காரம் - ziploc (வெறும் ப்ளாஸ்டிக் பைதான், சும்மா உதாருக்கு இந்த பேரு) பைங்கள தூக்கிகிட்டு வசூலுக்கு போவோம். ஃபிகர் பாக்கன்னு இல்லாம உண்மையிலேயே சுண்டலுக்கு அலைஞ்ச அப்பிராணி பருவம். ரொம்ப வருசமாச்சி நவராத்திரி சுண்டல் சாப்பிட்டு. fedex next day airல ரெண்டு பொட்டலம் அனுப்பி வைங்க. பாட்டு வேணுமின்னா podcast ஆ அனுப்பி வைக்கிறேன். (ஆனா அதை ஒலிபரப்ப மாட்டீங்க... நவராத்திரியில கானா பாடல் எல்லாம் போடுவீங்களா என்ன?)
 



குழலியின் பகத்சிங்கள் ::

முடிஞ்சா இதையும் உரக்க சொல்லுங்க செல்வன்...

It is better to keep your mouth shut, and be thought a fool than to open your mouth and prove it.
 



செல்வன் மரணதண்டனையும் பொதுபுத்தியும் ::

// மரண தண்டனை ஒட்டுமொத்தமாக தேவை அல்லது தேவை இல்லை என்ற நிலைப்பாடு தான் உண்மையான பொதுப்புத்தி //

சபாஷ்.

// அப்சல் நேரடியாக எதுவும் செய்யவில்லையாம் . மறைமுக தொடர்பு மட்டுமே ( அதாவது தீவிரவாதிகளுடன் டீ குடித்தது) போன்ற செயல்களில் மட்டுமே ஈடுபட்டாராம். ஐயோ பாவம். டீ குடித்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை கொடுத்துள்ளது . முட்டாப்பய கோர்ட்டு அது பாருங்க... //

லேட்டஸ்ட் ட்ரண்ட், கோர்ட் எல்லாம் வேஸ்ட் என்று திருவாய் மலர்வது. NRT (அதாவது non resident tamilsஆம்)களின் தாரக மந்திரமாகவே அகிவிட்டது இது.

**

அப்சலுக்கு மரணதண்டனை தேவை என்பதே பல விஷயங்களுக்காக என்னுடைய நிலைப்பாடு.

ரோசாவசந்த் வர்ணிக்கும் கேவலமான பொதுபுத்தியுடன்,
முகமூடி
 



பாபா AIADMK is the root cause for Chikun Kunya' - Krishnasamy ::

இவனுங்க காங்கிரஸ் தலைவர் ஆனப்புறமா இப்படி மென்டலா ஆவறானுங்களா, இல்ல மென்டலா இருந்தாத்தான் காங்கிரஸ் தலைவராவே ஆகமுடியுமா?
 



செல்வன் குழலியின் பகத்சிங்கள் ::


// It is better to keep your mouth shut, and be thought a fool than to open your mouth and prove it.

அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே...

அண்ணாசாமி: அதுவா... எனக்கு பிடிச்ச கருத்த சொல்றதுக்கு உனக்கு சுதந்திரம் உண்டுன்னு அர்த்தம்.

முகமூடி ஆனாலும் உங்க அண்ணாசாமி சரியாத்தாங்க சொல்லியிருக்கார் //

குழலி, நீங்க கருத்து சொல்லக்கூடாதுன்னு எங்கயுமே நான் சொல்லவில்லை... பாருங்க உங்க பதிவுல நீங்க சொன்ன கருத்து இந்திய பாரம்பரியத்துக்கும் கலாச்சாரத்துக்கும் எதிரானதுன்னு சொல்லி அன்றாடங்காய்ச்சி ஏழை பாழைங்களுக்கு சோறும் சாராயமும் கொடுத்து கட்சி முலாம் பூசி கழுதை ஊர்வலமா போகவிட்டு, உங்க வீட்டு முன்னாடி நின்னுகிட்டு "கற்புக்கரசிங்க" எல்லாம் சேர்ந்து புடவை தூக்கி போராட்டம் நடத்தி கோஷம் போட்டா அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது...

அப்படியெல்லாம் எதுவும் இல்லாம, பொதுபுத்தி கொண்ட மக்கள் கூட்டத்திற்கு கூமுட்டைத்தனமாக தோன்றும் சில கருத்துக்களை சொல்பவரை பார்த்து, இது கூமுட்டைத்தனமானது என்று (பாலீஷா தருமி பாசையில சொன்னா, இது போன்ற பதிவுகளை (?!) உங்களிடம் எதிர்பார்க்கவில்லை, தூக்கிவிடுங்கள்) சொல்லும் ஒருவரை பார்த்து "அய்யா அந்த பட்டம் அவரே விரும்பி வாங்கிக்கொள்வது. உங்களுக்கு எதற்கு இந்த சுட்டி காட்டும் வேலை எல்லாம். அவர் போக்கில் அவரை பேச/வாழவிடுங்கள்" என்று சொல்வது எப்படி கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும்... (இதுக்கும் மேல அப்பாவி அண்ணாசாமி புரியலையின்னா, ஸாரி பரமார்த்த குருகிட்ட கேளுங்க. உங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்வாரு)
 



சிவபாலன் என்ன செய்கிறார் அன்புமணி இராமதாசு?? ::

இந்தியாவில் சுகாதாரத்துறையோடு சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவோ பேர் இருக்க அன்புமணியை மட்டும் இப்படி கேள்வி கேட்பதற்கு பெயர்தான் வன்முறை.. இதை சும்மா கேட்காமல் இப்படி வலைப்பதிவில் எழுதிக்கேட்பதால் இதற்கு பெயர் ஊடக வன்முறை... உங்கள் பதிவை குறைந்தது நீங்கள் தவிர்த்து ஒருவராவது படித்தார் என்றால் இது வெகுசன ஊடக வன்முறை... அன்புமணி பாட்டாளி என்பதால் இது பாட்டாளி மக்கள் மீதான வெகுசன ஊடக வன்முறைகள்... மேலும் விபரங்களுக்கு இது குறித்து நான் எழுதிய பதிவுகளை படித்துப்பாருங்கள்.. ** விளம்பரம் :: வன்முறை என்பது மருத்துவக்குறிப்பா அல்லது மல்லாட்ட பருப்பா? **
 



உஷா சொ. செ. சூ- usha style அல்லது நான் கற்றப்பாடங்கள் ::

ஒன்றுக்கொன்று மாறுபட்ட பலவித விஷயங்களை எழுதும் உங்கள் எழுத்தை ஒட்டு மொத்தமாக படித்தால் அந்நியன் படம் பார்த்த மாதிரி இருக்கிறது. எங்கியோ போயிட்டீங்க போங்க...
 



9 weird things about prakash ::

// இந்தப் பதிவை எழுதுவது, பிரகாஷின் மனசாட்சி //

இப்படியெல்லாம் சொன்னா உமக்கு மனசாட்சி இருக்குன்னு நாங்க நம்பிடுவோமா :)
 



பி.கே.பி தமிழ் OCR - காகிதத்திலிருந்து கணிணிக்கு ::

நான் வெகு நாட்களுக்கு முன்பு இதை முயற்சி செய்தேன். எவ்வளவோ முயற்சித்தும் ஒத்து வரவில்லை. BMPலிருந்து எழுத்துருவுக்கு மாறும்போது 70% எழுத்துக்கள் சொதப்புகின்றன. கிட்டத்தட்ட 130 தமிழ் எழுத்துருக்கள் இதற்காக என் கணிணியில் இறக்கம் செய்தேன்.

ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன். நன்றி.
 



வஜ்ரா அனானிமஸ் அமீபா ::

அய்யய்யோ... என்ன காரியம் செஞ்சீங்க.. இப்பலேர்ந்து எங்க மெண்டலய்யா செய்யப்போற எல்லா காரியத்துக்கும் நீங்க அத ப்ரவோக் பண்ணி எழுதிய இந்த பதிவுதான் காரணம்.

இவண்,
முற்போக்கு தி.சங்கம்
மாங்காமடையனூர் (கிளை)
வெளங்காப்பயலூர் (போஸ்ட்)
கூமுட்டை மாவட்டம்
 



பொன்ஸ் மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன? ::

மகாலட்சுமி விஷயமாக ஏகப்பட்ட பதிவுகள் வந்திருக்கின்றன. ஆனால் அதில் உங்களுடையதும் நிலாவுடையதும் தவிர மற்றவையெல்லாம் "இப்படியெல்லாம் எழுதி மனவருத்தம் தராதீர்கள், சமீபமாக நிலா பரபரப்புக்காக எழுதுகிறார், தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல்" என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு எழுதப்பட்ட ஓவர் ஆக்டிங் வெளக்கெண்ணெய் பதிவுகள். அதன் பின்புலதில் இருந்த 'கூட சேர்ந்து கும்மி அடிக்கலாம்' என்ற மனோபாவத்தையும் இதர பிற அரசியலையும் நம்மால் எளிதில் உணர முடியும். உருப்படியாக இருந்த உங்களுடையதும் ஓவர் ஆக்டிங் பாதையில் போவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. அது டூ மச் ஆகும் முன் என் இரண்டனா.

முதலில் படிப்பவர் குழம்பி உதவி செய்யாமல் இருப்பார்கள் என்று ஆதங்கப்படுவதை எல்லாம் விடுங்கள். உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் கண்டிப்பாக செய்வார்கள். அப்படி யாராவது நிலாவின் கருத்தை படித்து அது படிப்பவருக்கு இன்னொரு பரிமாணத்தை காட்டி, அட இதுவும் சரிதான் என்று அவர் தீர்மானிப்பாரேயானால், அதையும் சரியான முறையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். "யோசிக்காதீங்க, கொடுத்திடுங்க" என்றெல்லாம் அவசரப்படுத்துவது சரியானதாக படவில்லை. அது ஏதோ திருட்டுத்தனம் போல் படுகிறது (இதையும் out of the contextல் எடுத்து ஏதாவது பிரகஸ்பதி உளரும்)

இவ்வளவு நேரமாக கௌசல்யாவை பற்றி யாரும் பேசக்காணோமே என்று மாலையே யோசித்தேன். நீங்கள் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறீர்கள். பதிவிலோ அல்லது இதுவரையில் பின்னூட்டத்திலோ மகாலட்சுமியின் பிறப்பை பற்றி பேசாத நீங்கள், கௌசல்யாவை பற்றி பேசும்போது மட்டும் திடீரென மகாலட்சுமி தாழ்த்தப்பட்ட பெண் என்று பேச ஆரம்பித்தது ஏன் என்பதை பற்றி நீங்கள் யோசிக்கலாம். முதலில் இந்த தாழ்த்தப்பட்ட முற்படுத்தப்பட்ட என்ற முத்திரையெல்லாம் இல்லாமல் யோசிக்க முயற்சிப்போம். மகாலட்சுமி தாழ்த்தப்பட்டவராக இல்லாமல் இருந்தால் நீங்களோ இன்று வந்த மற்றவர்களோ யாரும் உதவிக்கு வந்திருக்க மாட்டார்களா? (இன்று ஓவராக ஆடும் ஒரு சிலர் வந்திருக்க மாட்டார்கள், அதை புள்ளிவிவரத்தோடு பேச முடியும். அது இப்போது தேவையில்லாதது) நீங்களே கேட்ட மாதிரி "கல்விக்கு உதவி கேட்டு வந்தவர் என்ற அளவில் மட்டும்" உங்களாலேயே பார்க்க முடியாதா?

சரி, உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் சில விஷயங்கள் தெளிவாகும். கௌசல்யா பனிரெண்டாவது முடித்து கல்லூரியில் எட்டிப்பார்க்கிறார். அவருக்கு தமிழகத்தில் கிடைப்பதற்கரிய மெடிக்கல் படிப்பு அவரின் கல்வித்தகுதிக்கேற்ப இலவசமாக கிடைக்கிறது (இலவசம் என்பது இதே படிப்பை ப்ரைவேட் கல்லூரியில் காசு கொடுத்து படித்தால் ஆகும் செலவை கணக்கில் கொண்டு) மகாலட்சுமி ஏற்கனவே முதுகலை முடித்தவர். இப்போது ஊரெங்கும் லட்சக்கணக்கானவர்கள் படித்த/படிக்கும் பி.எட் படிப்பை தனியார் கல்லூரியில் வசதிக்கு மிகவும் மீறி படிக்கிறார். இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பாதி படிப்பை படித்துவிட்டார், மீதியை முடிக்க உதவலாம் என்ற வாதம் எவ்வளவு நியாயமோ அதே நியாயம் நிலாவின் கேள்விகளிலும் உள்ளது என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள். என் *** "எனக்கு எம்.பி.ஏ படிக்க ஆசையாக இருக்கிறது" என்ற போது நான் சொன்னது :: உன் தகுதியை வளர்த்துக்கொள். ஒன்று மிகவும் பிரஸ்டீஜியஸான கல்லூரிகளான ஐ.ஐ.எம் போன்றவற்றில் சேரு, எவ்வளவு கடன் வாங்கி என்றாலும் பார்த்துக்கொள்ளலாம்.. ஆனால் ஆசையாக இருக்கிறது என்று ஏ.பி.சி கல்லூரி, ஆ.ஆ.இ கல்லூரி போன்ற பேர் தெரியாத கல்லூரியில் சேர்ந்து நேரத்தை வேஸ்ட் செய்வதை காட்டிலும் வேலைக்கு சென்று அப்புறம் பார்ட் டைமில் எம்.பி.ஏ படி. அவன் ஆசையை நிராசையாக ஆக்குவதா என்ற குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இல்லை, ஆனால் இதுதான் ஒரு மிடில் க்ளாஸின் நிலைமை. நிதர்சனம். பணம் கொட்டிக்கிடந்து வெறும் பெருமைக்காகவும், கல்யாண அழைப்பிதழில் போடுவதற்காகவும் எம்.பி.ஏ படிப்பவர்களுக்கும் கடன் வாங்கி படிக்க ஆசைப்படுபவர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை சிந்திக்க வேண்டும். பேர் தெரியாத கல்லூரியில் படித்து வந்த சிலருக்கும் உடன் வேலை கிடைத்திருக்கும், ப்ரீமியம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த சிலருக்கு வேலை கிடைக்காமலும் இருந்திருக்கும். ஆனால் பெர்சண்டேஜ். எம்.சி.ஏ போன்ற ஒரு சில படிப்புகளுக்கு மட்டுமே நேரடி கல்லூரி படிப்புக்கும் பார்ட் டைம்/அஞ்சல் வழி படிப்புக்கும் வேலை வாய்ப்பில் வித்தியாசம் இருக்கிறது. மற்றவற்றிற்கு அந்தளவு (படிப்புக்கு ஆகும் செலவை கணக்கில் கொண்டால்) இல்லை எனும்போது ஏன் அப்படி செய்யாமல் தனியார் கல்லூரி சாய்ஸை எடுத்தீர்கள் என்று ஒரு கேள்வி மனம் நோகாதபடி, ஒரு வெறும் கேள்வியாக கேட்பதில் தவறேதும் இருப்பதாக எனக்கு படவில்லை. அதை நியாயப்படுத்தும் அளவு அவரிடம் ஒரு தீர்க்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சும்மா ஆசைக்கு என்றால் அது தவறு.

எனக்கு கிடைத்ததில் மிகச்சிறிய அளவை அடுத்தவரிடம் பகிர்ந்துகொள்வதை வேறு யாருக்கும் தெரிவிப்பது என் வழக்கம் இல்லை. இருப்பினும் ஒரு வகையில் என்னுடைய சிறிய பங்கும் மகாலட்சுமிக்கு வந்து சேர்ந்துவிட்டிருக்கும் என்பதை என் தகுதியை கேள்வி கேட்க வரும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்காய் தெரிவித்துக்கொண்டு, இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். ஒரு விசயத்தை பலர் பார்க்கும் விதம் தனி. ஏற்கனவே சொன்னதுபோல் இவர் பாதி படிப்பை முடித்துவிட்டார் என்பதே இதற்கு ஆதரவளிக்க விரும்பும் பலருக்கு ஒரு ஊக்கியாக இருந்திருக்குமே தவிர இது ஆரம்பம் என்றிருந்தால் என்னையும் சேர்த்து பலர் பின்வாங்கியிருப்பார்கள். அது தவறும் அல்ல.. ஏனெனில் செருப்பில்லாத ஒருவருக்கு செருப்பு வாங்குவதற்காக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள். காலே இல்லாதவர்களை பற்றி பேசுபவர்களுக்கு தோள் கொடுப்பதின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறேன் நான். முதலில் பள்ளிப்படிப்பை முடிக்க முயற்சிப்பவர்களை தூக்கிவிட வேண்டும். அது இன்றியமையாதது. பிறகு கல்லூரி படிப்புக்கு. ஒரு உதாரணத்துக்கு http://indiahelpline.blogspot.com/2006/01/blog-post.html சென்று பாருங்கள். பிற்படுத்தப்பட்ட என்றெல்லாம் பேசுகிறீர்களே, சுத்தமாக புறக்கணிக்கப்பட்ட நரிக்குறவ இன சிறுவர் சிறுமிகளின் படிப்பை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்ற வருடம் எட்டாவது படித்துக்கொண்டிருந்த நரிக்குறவ சிறுமி படிப்பிலிருந்து நின்றுவிட்டாள். மேற்கொண்டு தகவல் இல்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் நிதி திரட்டுவது எனும்போது உலகம் பலவித்மாகத்தான் இருக்கும். நிலா ஒன்றும் இதெல்லாம் வெட்டி வேலை என்று ஒரே வார்த்தையில் சொல்லவில்லை. அவரின் நியாயமான சந்தேகத்தை கேட்டிருக்கிறார். அதற்கு நிதானமாக பதில் சொல்வதை விடுத்து 'அய்யோ உதவி செய்பவர்களையும் கெடுத்துவிடாதீர்கள்' என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் டூ மச்தான்.
 



பாபா 2006 - E-Tamil Person of the Year ::

நாயகர் என்ற வார்த்தை பால்மாறாட்ட (ஆண்/பெண்) த்துக்கு அப்பாற்பட்டதா? ஏன் கேக்கிறேன்னா, உங்க லுக்கு படி, டெங்கு மற்றும் சிக்கன்குனியாவுனாலதான் கொசுவுக்கு லைம் லைட்டுன்னா, தலைப்பு 2006ன் நாயகி யார்னுல்ல இருந்திருக்கணும்? கொசு இனத்துல(யும்) நாயகிங்க மட்டும்தான் கடிப்பாங்கன்னுல்ல கேட்டிருக்கேன் ( பாக்கணுமின்னு அறிவு தாகம் எடுக்குதுதான், ஆனா இன அடையாளம் கண்டிபிடிக்க முடியாத அளவு சின்னது, கொசு )
 



பெனாத்தல் ::

என்னது, மூணு மணி நேரம்தான் ஆச்சா.. பிரமாதம் பெனாத்தல் சுரேஷ்.. ச்சே, பினாத்தல் கணேஷ்.

அப்புறம் இதுக்கெல்லாம் டிஸ்கி போடுற மாதிரி ஆயிடுச்சே, தமிழ் கூறும் நல்லுலகத்துல... என்னாத்த சொல்வேணுங்கோ...
 



இதை குமுதம் வெளியிடாது, குழலியாவது வெளியிடுவாரா? ::

// சுப்பிரமணியசாமிக்கு நன்றி! //

// ஒருவராவது முயற்சி எடுக்குறாங்களே...அவர் எந்த சாதி என்பது அடுத்த விஷயம்....ஒரு நல்ல விஷயம் நடந்தா எல்லாரும் அதனால் பயன் அடைஞ்சா, கண்டிப்பா அது நல்லது தான்... //

பங்காளி செந்தழலுக்கும் சோக்காளி லக்கிலுக்குக்கும் ஒரு கேள்வி... இந்த தகவலுக்கு உங்க அதிக பட்ச ரியாக்சன் இதுதானா? இதுல ஜமாத் அப்படிங்கற இடத்துல அக்ரஹாரம் அப்படீன்னு வந்திருந்தாலும் உங்க ரியாக்சன் இப்படித்தான் இருந்திருக்குமா? (இது உங்களுக்கான நேரடி கேள்விங்கறத விட சமூக முன்னேற்றம்னு சொல்லிகிட்டு ஆனா அத "ஒரு சாதி எதிர்ப்பு" அப்படீன்னு குறுக்கிக்கிற தலங்களுக்கான கேள்வின்னு சொல்றதுதான் சரி...
 



பொன்ஸ் வாழ்த்துக்கள் ::

மேல எங்க படத்த போட்டு கீழ கையெழுத்து மாதிரி உங்க படத்த போட்டீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க...

குளிக்க புது வைக்கோல் பிரியும், கழுத்துக்கு நெட்டி மாலையும், கொம்புக்கு பெயிண்டும், சாப்பாட்டுக்கு சக்கரை பொங்கல் கவளமும், தார்க்குச்சி இல்லாத முழு ஓய்வு நாளும் பெற்று சந்தோஷமாக நாளை கழிக்க வாழ்த்துக்கள்
 



சின்னவன் இந்த கதையாவது குமுதத்தில் .... ::

இத அனுப்பும்யா... கண்டிப்பா குமுதம் வெளியிடும். அதுவும் அந்த கடைசி விக்ஸ் பாரா இல்லைன்னா, க்யாரண்டி...
 



உஷா அன்புள்ள பூங்கா நிர்வாகிகளுக்கு ::

இன்னும் எத்தனை "அன்புள்ள" பதிவு போடப்போறீங்களோ.. ஹும்.

அது சரி, எதுக்கு இவ்ளோ அவசரம்... பூங்காவுல சுஜாதாவோட தாக்கம் வராதுன்னு நீங்களா எப்படி நினைச்சுக்கறீங்க.. பொறுத்திருந்து பாருங்க.. எந்த எந்த பதிவு வரும்னு வேணா ஒரு பெட்டிங் கட்டிக்கலாமா? ஆனா, உங்க பரிந்துரை ஸ்நேக்பெட் வராதுங்கறது மட்டும் கேரண்டி. ஏன்னு உங்களுக்கே தெரியும் (வேற ஒண்ணும் இல்ல, டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ் உள்ளார அது சரிப்பட்டு வராதுங்கறது மட்டும்தான் ரீஜன்)

// முகமூடியின் லேட்டஸ்ட் பதிவிலும் உங்க கமெண்ட் எதையும் காணோம் // அப்புறம் நீதி கேட்டு யாராவது நெடும்பயணம் போவாங்க... போங்கடான்னு உட இவங்களுக்கும் மனசு வராது. பதில் சொல்றேன்டா பேர்வழின்னு இவங்களும் சொ.செ.சூ வச்சிக்குவாங்க.. எதுக்கு அவங்கள சீண்டறீங்க. வுடுங்க.
 



பாபா New Jersey Short Film & Documentary Film Festival ::

// ---to deal with issues
like professional misconduct,allegations and responses a brief documentary
is not the right place.---

மைக்கேல் மூர் போன்றவர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்தே முழு நீள விவரணப்படம் எடுத்துக் காட்டும்போது, அரை மணி நேர வாழ்க்கை சித்திரத்தில், இவை அடங்காது?! //

பாபா, அரை மணி நேர வாழ்க்கை சித்திரம் பத்தாது, மூணு மணி நேரம் வேணும்னு நீங்க சொல்றதத்தான் ரவியும் சொல்றாரு... என்ன translate பண்றீங்களா?
 



சற்று முன் "அமெரிக்கன் ஐடலில் இந்தியர் ::

சிறில்,

எனக்கு ஷியாமளியின் குரலும் மிகவும் பிடித்தே இருந்தது... சஞ்சையா, ஷியாமளி இருவரின் பெற்றோர் இந்தியர்களாக இருக்கலாம். ஆனால் இங்கே பிறந்து இங்கேயே வளர்ந்த இவர்களை இந்தியர்கள் என்று சொல்வது பொருந்துமா?

பொதுவாக சாதனை எதுவும் நிகழ்த்தப்படும்போது அவர்களுக்கு இருக்கும் ஏதோ ஒரு தொடர்பை வைத்து "ஆஹா இந்தியர்கள்" என்று கொண்டாடுவதை நான் வெறுக்கிறேன். அதில் என்ன பெருமை இருக்க முடியும் என்று எனக்கு புரியவில்லை. இப்படித்தான் V.S.Naipal ஐ கொண்டாடிக்கொண்டிருந்தோம். அவர் இந்தியாவை பற்றி கேவலமாக பேசும் வரை (இன்னமும் கொண்டாடுபவர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்)

அவர்கள் திறமையை நாம் ரசிக்கலாம், மதிக்கலாம், போற்றலாம். அதற்காக, எதற்காக அவர்களை நமது தேசத்தோடு சேர்த்து வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கேள்வி...
 



சற்று முன் பிரிட்டன் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற்றம்? ::

இது என்ன, சின்ன இளவரசர் சண்டைக்கு போவாருன்னு அறிவிப்பு வருமுன்னு பாத்தா அதுக்கு முன்ன மொத்த படையும் வாபஸ்னு அறிவிச்சிருவாங்க போலருக்கே...

(சின்ன இளவரசர் சண்டைக்கு போவுறதுல நமக்கு இஸ்டம் இல்லையின்னு ஒரு சைடு பிட்ட இங்கன போட்டுக்கிறேன்)
 



பாபா Tamil Blogs - Thamizmanam Tactics & Strategy ::

பாபா,

வருசா வருசம் எதுனா ஒரு அறிவிப்பு வர்றதும், உடனே அதுக்கு ஆதரவா நாலு பேரு அங்கலாய்ப்பா நாலு பேருன்னு குரல் உடுறதும், இதுக்காகவே வெயிட் பண்ணிகிட்டு இருந்தாப்புல என் ஆலோசனைகள்னு நீங்க உங்க பங்குக்கு பாயிண்டுகள் அடுக்குறதும் (எங்கூர்ல ஒரு தாத்தா இப்படித்தான், எவனாவது நம்ம பேச்ச கேக்குறானா இல்லையான்னு எல்லாம் கவலப்படாம ஆலோசனையா சொல்லிகிட்டு திரிவாரு) புத்தக கண்காட்சி, டிசம்பர் கச்சேரி மாதிரி இந்த கூத்தெல்லாம் ஒரு வருசாந்திர சடங்காவே ஆயி (ப்) போச்சி...

(இப்ப இன்னொரு வசதி, 30 லிமிட்ங்கிறதால முக்கியமான பின்னூட்டத்துக்கு இடம் அளிக்கும் வகையில் உங்க பின்னூட்டத்த அனுமதிக்க முடியலைன்னு சொல்லி இத்த ரிஜக்ட் பண்ணிடலாம் :))
 



பாபா Tamil Blogs - Thamizmanam Tactics & Strategy ::

// அணுகக் கூடியவர்களுக்குத்தானே // அப்படீன்னா சொல்றீங்க... எனக்கென்னவோ என் கடுதாசியும் உங்க கடுதாசியும் ஒரே டைப்பு மாதிரிதான் தெரியுது...

நானாவது நாலணா கார்டுல அட்ரஸ் இல்லாம எழுதிப்போடுறேன்... போற வழியில போஸ்டு மேனுக்காவது ஆவுது... நீங்க 'அயல்நாடு சென்று படித்து வரும் அன்பு சிங்கம் அஞ்சாநெஞ்சம் அறிவுகொழுந்து அவர்களே வருக வருக' டைப்பு போஸ்டர் அடிக்கிறீங்களோன்னு தோணுது...
 



ஆசிப் மீரான்எச்சரிக்கை - நயன் தாராவின் நீலப்படம் ::

யோவ், இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் முதல்ல ஒரு உயரெல்லை கொண்டு வரணும்யா...
 



குசும்பன் இணைய அரங்கம் ::

இப்போ எதுக்கு இம்மாம் பெரிய கொசுவத்தி... சைடுல // பேருக்கு ஏத்தாப்புல பெஸ்டாத்தாம்ப்பா பேசுற // ஒரு சுயபுராணம் வேற... என்னதான் நடக்குது இங்க.
 



ஹரி Google-இன் இலவச Wireless Broadband இணைய சேவை ::

TiSP எப்படி வேலை செய்கிறது என்ற விளக்கத்தை படித்தீர்களா? 'நாற்றமெடுக்கும்" சர்வீஸ் போல் தோன்றவில்லை? :)))

அப்படியே இதையும் பாருங்கள் ::
http://mail.google.com/mail/help/paper/more.html

*

இது ரெண்டுமே ஏப்ரல் 1 அன்று வந்த அறிவிப்புகள் என்பதையும் கணக்கில் கொண்டால் அலார்மிங் ஆகவேண்டியதில்லை :))
 



இராம்ஸ் இருதிருவருளர் உதித்தனர்... உலகம் உய்ய!
::

பதவியால் தம்பியாக இருந்தாலும் வயதால் பெரியப்பாக்களாக இருவருக்கும் கள/கிழ சிங்கங்கள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

// ஒரு தலைவருக்கு இன்னொரு தலைவர் பிறந்த நாள் போஸ்டர் அடித்து ஒட்டும் // ஒரு உரையில் ஒரு வாள்தான் இருக்க முடியும். குறுவாளாக இருந்தாலும் அது ஒரே வாளோடு ஒப்பிட முடியாது. அது போல ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் என்பதை இந்த நேரத்திலே கட்சியின் நிரந்தர நம்பர் # வுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைக்க சென்றதாலும் தொடர்ந்து வித்விதமாக ஆப்பு வைப்பதிலேயே நேரம் சரியாக இருப்பதாலும் கட்சி அலுவலகத்தில் சரியாக கவனம் செலுத்திட முடியவில்லை. அடுத்த வாரம் முதல் மீண்டும் பமக புத்துயிர் பெறும் என்பதை சொல்லிக்கொள்ள இந்த நேரத்திலே... (யப்பா ஒரு ஜோடா குடுங்கப்பா)
 



இ.கொ Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் ::

// இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா //

முந்தின வாரம் இந்தியா, அடுத்த வாரம் நியூஜெர்சி...

வர வர எங்க கூட்டம்னாலும் கலந்துகிறதில நம்மள மிஞ்சிடுவாரு போலருக்கேன்னு நல்லி குப்புசாமி செட்டியே பீதியில இருக்காராம் பாபாவ பாத்து :)

விழா இனிதே நடக்க வாழ்த்து கள். எல்லாரும் சும்மா தமாசுக்கு சொன்னது, ஆனா நான் சீரியஸாவே சொல்றேன். பிளைட்டு டிக்கெட்டு அனுப்பினா நானும் ஆஜர்.
 



இ.கொ தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? ::

நீங்க ஆலோசனைன்னு ஒண்ணு கேக்கறீங்களேன்னு எனக்கு தோணுறத சொல்றேன்... முதல்ல இந்த மாதிரி உங்ககிட்ட கேட்கப்படாதப்போ அட்வைஸ் பண்ணாதீங்க... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ரணகளமாயிருக்கு இன்னிக்கி நிலைமை. தமிழ்மணத்தை ஒரு திரட்டி என்ற நிலைமைக்கு மேல பாக்கிறத நிறுத்துங்க.. போன வருசமே "பயனர்கள் என்ற முறையில்" பாசமெல்லாம் ஏகப்பட்டது பொங்கி வழிஞ்சி ஏகப்பட்ட வாதம் பிரதிவாதம் கபம் மூட்டுவலி எல்லாம் நடந்து, அப்ப கூகிளோட ஒப்பிட்டு சொன்னத இங்கயும் காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா அத தேட இப்போதைக்கு மூடு இல்ல...

இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு வருவோம். தினமும் youtubeல் சில பல வீடியோக்களை பார்க்கிறேன். நான் அப்லோட் செய்த சில வீடியோக்களும் வந்திருக்கின்றன.. அதுபோலவே flickrம். இரண்டுமே sharing site. அதன் பயனாளிகள் நாம். அதற்கு நாம் ஆலோசனைகளோ அல்லது நன்றி நன்றி நன்றி எல்லாம் சொல்கிறோமா.. அப்புறம் எதற்கு தமிழ்மணத்துக்கு மட்டும். இணையத்தில் இருக்கும் ஏகப்பட்ட பயனர் பரிமாறும் சைட்டுகளை போலவே இதையும் பாவித்தால் நமக்கு ப்ரச்னை ஏதும் இல்லை. அதை விடுத்து ஒரு பெர்சனல் டச்சை போட்டு நாமாகவே ஒட்டிக்கொண்டால் அப்புறம் ப்ரச்னைதான். பரீட்சைக்கு படிக்கும் பக்கத்து வீட்டு பையனுக்கு அவன் கேட்கிறானோ இல்லியோ நாமாகவே வலிய யோசனை சொல்வானேன், அப்புறம் அவன் வயசு அப்படி இப்பல்லாம் முந்தி மாதிரி நம்மள மதிக்கிறது இல்ல என்று வருந்துவானேன்.

ஆகவே உங்கள் கூட்டத்தில், தமிழ்மணத்தையும் தேன்கூட்டையும் இன்னபிற திரட்டிகளையும் மற்றெல்லா பயனர் வெப்சைட்டுகளை போலவே பத்தோடு பதினொன்றாக பாவிக்கும் மனம் வாய்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசியுங்கள்... தமிழ்மணத்தை லாஜிக் இல்லாமல் கேள்வி கேட்பவர்கள் அதை நிறுத்த வேண்டியது ஏன் என்று ஆலோசியுங்கள். அதே சமயம் தமிழ்மணத்தை விமர்சனம் செய்தால் "அடப்பாவி உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்கிறாயே நீ உருப்படுவியா" என்றெல்லாம் காமெடி கோபப்படுபவர்கள் அவர்களின் மனசாந்திக்கு மருத்து போடுவது எப்படி என்று ஆலோசித்து அதையும் வெளியிடுங்கள். முக்கியமாக தமிழ்மணம்தான் என்னை எழுத வைத்தது தூண்டியது என்றெல்லாம் நம்புபவர்களின் mental block ஐ திறப்பது எப்படி என்றும் ஆலோசியுங்கள்... முக்கியமாக தமிழ் வலைப்பதிவுகள் படிப்பதை படிப்படியாக குறைத்து மொத்தமாக நிறுத்துவது எப்படி என்று ஆலோசித்து சொன்னீர்கள் என்றால் என்போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் :))

// நான் கேட்க போகும் கேள்விகளை தைரியமாக விவாதிப்பீர்களா? //

கால்கரி, இது என்ன வெறும் விவாதம்தானே.. விவாதிப்பதற்கே தைரியம் வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டதா நிலைமை... அல்லா ரட்சிப்பாராக (ஒரு மதச்சார்பின்மைதான்.. பிறப்பால் பை டீபால்டாக இந்துவாக முத்திரை குத்தப்பட்டவன் இசுலாமிய கடவுள் கிறித்துவ போதனையில் வரும் வார்த்தையை போட்டு வேண்டியதாக இருக்கட்டுமே)

அதுசரி ஆடியோ ரிகார்டிங் (open/secret), போட்டா கிராப்பி (flash/secret), விடியோகிராப்பி (handycam/spycam) எல்லாம் உண்டா... இல்லை, வெறும் போண்டா டீயுடன் நடக்கும் கற்கால மீட்டிங்கா?
 



அரவிந்தன் நீலகண்டன் பாசிசம் பராக் பதிவர்களே உசார் ::

// அந்த அனானி கமெண்டை நீங்களே போடவில்லை என்பதை நம்பிவிட்டேன் :-))))) //

ராமதாஸை திட்டி வெற்றிகொண்டான் விட்ட அறிக்கையை கோபாலபுரத்துல வைச்சி கலைஞர் எழுதித்தரவில்லை என்று நம்பினீர்களே அது மாதிரியேவா :-)))))

இல்ல,

ஜெயலலிதா, விஜயகாந்த் மட்டுமில்லாம குட்டி தலைவருங்க, தலைவி குட்டிங்க எல்லாரையும் திட்டி முரசொலியில கவிதை வருமே அத எல்லாம் கோஸ்ட் ரைட்டர் பேர்ல யாரோ எழுதறதில்லைன்னு நம்புவீங்களே அது மாதிரியா?
 



VoW எண்ணங்களின் குரல்வடிவம் ::

படித்த போதே எனக்கும் தோன்றியது... நான் இப்படி எழுதியும் வைத்தேன் "செல்வராஜ், நீங்கள் பல இடங்களில் உங்கள் வீட்டு முகவரியை சொல்கிறீர்கள். உங்கள் வீட்டு தபால்காரனில் ஆரம்பித்து, டிஷ் ஆண்டனா பொருத்த வருபவன் வரை நிறைய பேருக்கு உங்கள் வீட்டு முகவரி தெரிந்தும் இருக்கும். அதற்காக அதில் யாராவது ஒருவர் இந்த இடத்தில் வசிக்கும் செல்வராஜே என்று போஸ்டர் அடித்து ஒட்டினாலும், ஏன் சொன்னாய் என்று பொங்குவதில் இருக்கும் அர்த்தம்/அர்த்தமற்றை பற்றியும் சிறு குறிப்பு வரைவீர்களா?"

ஆனால் இந்த பின்னூட்த்தை அங்கே விடாததற்கு ஒரு காரணம் உங்கள் மேற்கோளில் வரும் நான்காம் வாக்கியம்தான்.

(இந்த ச.சாக்கில்.சி.பா பத்திக்கு மன்னிக்க) செல்வராஜ் பதிவிலோ வேறெங்கோ நானாக விரும்பி அடையாளத்தை முத்திரையை விடுவதில் ஒன்றும் ப்ரச்னை இல்லை.. ஆனால் பொதுவாக "வாலை சுருட்டி பேசாமல் இருந்த/க்கும்" மக்களின் ஐப்பீக்களையும் தார்மீக சம்பந்தமில்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு வீடியோ பாட்டு கேட்கும் மக்கள் ரெட்டை வேச கொல்லன்கள் இரும்படிக்கும் இடத்தில் ஈயின் சத்தம் கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன என்றே அமேதி.

மற்றபடி ஐடண்டிட்டி தெஃப்ட் பற்றியும், செக்யூர் ட்ரான்ஸாக்ஷன்ஸ் பற்றியெல்லாம் கண்டிப்பாக தெரிந்திருக்கும் செல்வராஜ் ஐப்பீயை பற்றி சொல்வது நியாயமாகத்தான் இருக்கும்/இருக்க வேண்டும் என்று எல்லாரையும் போல் நாமும் நம்புவோமாக.
 



சற்றுமுன்-1000 ::

// செய்தி என்றாலே சற்றுமுன் என்ற நிலையை //

யோவ்.. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியில...

*

ஆமா சற்றுமுன் ஆசிரியர் குழு சின்ன பொண்ண கேங் ரேப் பண்ணதா இன்னொரு வலைப்பதிவு குழுமத்த சேர்ந்த ஆசிரியர் குழு உறுப்பினர் சொல்லிகிட்டு திரியிறாரு.. பாத்தா சற்றுமுன் ஆ.குழுவுல பொம்பிளைங்க எல்லாம் இருக்காங்க போலருக்கு.. தலைய சுத்துது.. என்னதான் ஒருத்தருக்கு ஒருத்தர் வணிகரீதியான் போட்டியின்னாலும் அதுக்காக இப்படியா...
 



ப்ரசன்னா ஒரு அவசரப்பதிவு - மதி கந்தசாமிக்கு ::

போன வருடம் வந்த இந்த பதிவை பிம்பங்கள் உடைந்த காலகட்டம் தாண்டிய இந்த வருடம் படிக்கையில்தான் எத்தனை வித்தியாசம்.
 



தென்றல் பங்குச்சந்தையில் - சிவாஜியும், தசாவதாரமும் ::

நல்லதொரு பதிவு தென்றல்.
அப்படியே NRIஸ் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கும் வழிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து தகவல் தர முடியுமா?

நான் இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்று icici prudential mutual fund தளத்தை மேய்ந்த போது, அது 50000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் கட்டாயம் PAN நம்பர் தரவேண்டும் என்கிறது. அவர்களின் கஸ்டமர் சர்வீஸ் துறையை சாட்டில் தொடர்பு கொண்ட போது அமெரிக்காவில் இருந்து இந்திய ம்யூச்சுவல் பங்குகள் வாங்க இயலாது என்று ரெப் சொன்னார். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்று
50000க்கு குறைவாக ஒரு ஃபண்டில் முதலீடு செய்தபோது அதற்கான அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் ஃபோலியோ நம்பர் எல்லாம் போட்டு இமெயிலில் வந்துவிட்டது.

இப்போது ப்ரச்னை என்னவென்றால் என்னுடைய NRI அக்கவுண்டில் இந்தியாவில் இருந்து ரூபாய் டிபாசிட் போட இயலாது. ஒரே ஆள் NRI & NRO ஒரே சமயத்தில் வைக்க இயலாது என்றும் அறிகிறேன். ஆகவே எதிர்காலத்தில் டிவிடண்ட் போன்றவற்றில் ப்ரச்னை வரும் என்று நினைக்கிறேன்.

இது குறித்த உங்கள் கருத்து என்ன?
 



தீவு சிவாசி ஓசியில் பார்க்க.. ::

தீவு... இது என்ன சின்னபுள்ளதனமா... என்னவோ அவங்க எகனாமிக்கல் ஸ்ட்ராட்டஜி எல்லாம் போட்டு பாத்து டிக்கட் விலை வச்ச மாதிரி இல்ல பேசுறீங்க. பட தயாரிப்பு விலை கம்மியா இருந்தா அதுக்கேத்த மாதிரி டிக்கட் விலைய கம்மியா வப்பாங்கன்னா நினைக்கிறீங்க... அதெல்லாம் வினியோகஸ்தருங்களுக்கு மட்டும்தான் சாமி.. ஹய்யோ ஹய்யோ...
 



சற்று முன் ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ ::

ரஜினியோட இன்னுமொரு சாதா ரண ஒரு மினி-பேட்டி அவ்வளவுதான். இதுல பரபரக்க என்ன இருக்கு? ரஜினின்னவுடனே இந்த மீடியாவும் நீங்களும் பண்ற இம்சை தாங்க முடியலப்பா...

ஆனா ரஜினியும் பேச கத்துகிட்டாரு போல... முந்தியா இருந்தா அமிதாப் பேரரசன், நான் ஒரு பிச்சைக்காரன்னு சொல்வாரு... இப்ப சைக்கிள் கேப்புல தன்னத்தானே மன்னன்னு சொல்லிக்கிறாரு :)))
 



மோகன் தாஸ் எச்சூஸ் மீ என்ன நடக்குது இங்க? ::

// எச்சூஸ் மீ என்ன நடக்குது இங்க? //
// சென்னை மெரினா ங்குறது ஒரு திறந்த வெளி லாட்ஜ்.நீங்க போட்டோ புடிச்சதெல்லாம் சும்மா ஜுஜுபி //

கேவலமாக இருக்கிறது... பீச் போன்ற ஒரு பொது இடத்தில் காதலர்கள் தங்கள் போக்கில் தனிமையில் இருப்பதை எட்டிப்பார்க்கும்/விமர்சனம் செய்யும் இந்த போக்குதான் அதிகாரம் கிடைத்தால் அண்ணா நகர் டவர் பார்க்கில் கைது செய்து வைப்பதற்கும் வட இந்தியாவில் காத்லிக்கும் பெண்ணை பெண் போலீஸ் கண்டபடி அடிப்பதற்கும் ஆதார புள்ளி.... சமுக நீதி காவலர்கள் பண்பாடு பற்றி பாடம் எடுக்கும், பைக்கில் கட்டிப்பிடித்து செல்லும் காதலர்களை கண்டு 'நாய்க்காதல்' என்று விமர்சனம் செய்யும் அருகதை படைத்த 'காணாமல் காதலிக்கும்' கருமாந்திர காதலனின் எச்சக்கலை நண்பனின் அறிவுரை வேதமாக ஏற்கும் நாட்டில்தால் உடலழகை மறுத்து இருட்டில் புணர்ந்து புணர்ந்தே பில்லியனை தாண்டி சாதனை படைத்துக்கொண்டிருக்கிறோம்.
 



மாலன் சொன்னது என்ன? ::

மாலன்... என்ன நடக்கிறது என்பது படிப்பவர்களுக்கு நன்றாகவே புரிகிறது. புரிந்தவர்கள் பேசுவதில்லை. நேரமில்லாமல் சிலர், பிரயோசனமில்லை என்பது புரிந்ததால் பலர். புரியாதவர்களிடம் புரிய வைக்க நீங்கள் முயற்சிக்கலாம். ஆனால் இங்கு பேசுபவர்களில் - பொன்ஸ் பூர்ணா போன்ற 'தார்மீக மன்னிப்பு' கேட்ட சிலரை தவிர - பெரும்பாலானோர் புரியாமல் பேசுவதாக தோன்றவில்லை. தமிழ்சசி உள்ளிட்ட 'பேசுபவர்கள்' என்னதான் பசுத்தோலை போர்த்திக்கொண்டு பேசினாலும் - ஈழத்தமிழர்கள் பாஸ்போர்ட்டுக்கும் இந்தியர்களின் பச்சை அட்டை "அலைவதற்கும்" முடிச்சு போட்டு அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமர்ந்து பேசுவதின் - பின்னாலுள்ள நோக்கம் நன்றாகவே தெரிகிறது. எனவே "இனி என் பேச்சின் சாரம்:" என்பதற்கு முந்தைய பத்தியிலேயே உங்களின் இந்த பதிவு முடிந்திருக்கலாம் என்பது எனது மென்மையான அபிப்பிராயம்.

யாருக்கும் உபயோகமில்லாத ஒரு பி.கு: தமிழ்சசியின் பதிவை படித்தவுடன் சிரித்துவிட்டு நான் எழுத ஆரம்பித்த இடுகை கால்வாசி தாண்டாமல் - நேரமின்மையால் - அப்படியே நிற்கிறது. அது முழுமையாகாமலேயும் போகலாம்.. முழுமையானாலும் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று குப்பைக்கு போகலாம் (ஆனா நிரந்தரமா சூடாவே வச்சிருப்பாங்க போலருக்கே நிலைமைய பாத்தா)
 



டாக்டர் ராம்ஸ் என் அப்பா மரு. இராமதாஸ் இல்லையே! ::

அம்பு மணி படிச்ச காலத்துலயே இந்த மாதிரி ஒரு சட்டம் இருந்திருந்தா, "ஜும்பலக்காம்பட்டி கிராமத்தில் சாதா தலைவலி என்று சிகிச்சை பெற வந்த இளைஞர் சாவு. பயிற்சி மருத்துவர் கைது. பட்டம் போலியா அல்லது போலி மருத்துவரா என்று ஆர்.டி.ஓ விசாரணை" அப்படீன்னு தினமூடி மூணாம் பக்கத்து பெட்டி செய்தியோட மேட்டர் முடிஞ்சிருக்கும். முந்தாநேத்து ப்ளாக் ஆரம்பிச்சி தன்னத்தானே இணைய ஆத்தாடி, நாடோடின்னு சொல்லிக்கிறவனெல்லாம் கொல்லைப்புர அமைச்சர்னு கிண்டல் செய்யிற அளவும் போயிருக்காது, நமக்கும் ஈகோ இல்லாத அமைச்சரு கிடச்சிருப்பாரு.. என்ன ஒண்ணு, எங்கூரு காரரு கோட் சூட்டெல்லாம் போட்டு எப்பிடி இங்கிலீஸ் பேசறாரு பாத்தியான்னு வாசிங்க்டன் டிசியில மயிலாடுதுறை பட்டிக்காட்டானுங்க மணிக்கூண்டு மிட்டாய்க்கடைய பாத்து வாய்பிளக்கிற சந்தோசம் மட்டும் இருந்திருக்காது. கம்பேரிட்டிவ்லி இது நோ பிக் (B not P) டீல்.

மத்தபடி டோண்ட் ஓர்ரி.. ப.ம.கவுல newborns அணி - மருத்துவர் அமைப்பு செயலாளர் போஸ்டு நிரந்தரமா ஒங்களுக்குத்தான் (இசுடாலின் இளைஞர் அணியில இருந்து ரிடையர் ஆகும்போது உங்களுக்கும் toddlers அணிக்கு ப்ரமோஷன் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்திலே....)
 



உஷா வாழ்வை சுவையாக்கும் சில அபத்தங்கள் ::

கீழ்க்கண்ட குறிப்பை இப்பதிவில் காணமே, காரணம்? ::-

1957 காமதேனு இதழில் வெளிவந்தது.
 



பிச்சைபாத்திரம் சுரேஷ் கண்ணன் குப்பி - திரைப்பார்வை ::

// படுகொலை சம்பவம் பின்ணனி ஒலியுடன் மாத்திரமே பார்வையாளனுக்கு உணர வைக்கப்பட்டு (சென்சாரில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் கூறுகிறார்) //

இயக்குனர் சென்சாரை நினைத்து செய்ந்திருந்தாலும், பார்வையாளர்களின் அனுபவத்தை பொறுத்து அந்த சம்பவத்தை அவர்களே கற்பனையாக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு தருவதன் மூலம் இந்த யுக்தியே நேரடியாக காண்பிப்பதை விட தாக்கம் ஏற்படுத்தக்கூடியது என்பது என் கருத்து... பம்பாய் திரைப்படத்தில் மசூதி இடிப்பை "பார்த்த" போது ஏற்பட்ட அனுபவத்தை விட ஃபாரன்ஹீட் 9-11 திரைப்படத்தில் இரட்டை கோபுரம் இடிந்ததை "கேட்ட" மட்டும்போது ஏற்பட்ட தாக்கம் அதிகம்.

*

வித்தியாசமான முயற்சிகளை சிலாகித்து எழுதிய உங்களின் முந்தைய ஒரு பதிவை படித்த போதே நான் ரசித்த வித்தியாச பட்டியலை உங்களுடன் பகிர நினைத்தேன். இன்னமும் வேளை வரவில்லை. நேற்று Dogville என்ற திரைப்படம் பார்த்தேன். உங்களை நினைத்துக்கொண்டேன். வெறுமே ஒரு நூறடி x நூறடி அரங்கில் இரவு பகல் வேறுபாட்டுக்கு ஒளியை மட்டும் துணைக்கு கொண்டு கதாபாத்திரங்களின் முகபாவங்களை மட்டுமே முக்கிய விஷயமாக முன்னிருத்தி ஒரு முன்னுரை + ஒன்பது அத்தியாங்கள் என்று அந்தக்கால நாடக பாணியில் எடுக்கப்பட்ட படம். படம் மிகவும் நீளம், ஆனால் ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து இது நமக்குள் (குறைந்த பட்சம் எனக்குள்) கிளறும் சிந்தனைகள் முக்கியமானவை. கிடைத்தால் பாருங்கள்.
 



தமிழச்சி ஜாதிப்புத்தி என்ற தலைப்பில் பதிவா? ::


// ஒரு சகபதிவரின் ஜாதியை வைத்து பேசும் போது எப்படி உங்களால் இவ்வளவு கூலாக பேசமுடிகிறது //

வாவ்... பார்ப்பான் பார்ப்பான் என்று ஒரே கூச்சலாக இருக்கிறதே. அப்போது மட்டும் ஏன் யாரும் அதிர்ச்சி அடைவதில்லை. ஒருவேளை பார்ப்பான் என்பது ஜாதி இல்லியோ...

(பார்ப்பான் என்று ஜாதியை குறிப்பிடவில்லை. பார்ப்பனீயத்தை தூக்கி பிடிப்பவர்களை பற்றிய ஒரு குறியீடாகத்தான் குறிப்பிடுகிறேன்/றோம் என்ற ஜல்லி 2003ல் இருந்து தமிழ் வலையுலகில் புழக்கத்தில் இருக்கிறது என்பது உங்களுக்கான உபரி செய்தி)
 



சர்வேசன் போறாங்களாம் வழியனுப்ப வாங்க ::

அப்படியே கீழ்க்கண்ட சர்வேக்களையும் எடுக்கவும்.

1) சுகுணா திரும்பி வந்துவிட்டேன் என்று அறிவிக்க எடுக்கும் காலம் ::

அ) 1 நாள்
ஆ) 2 நாள்
இ) 3 நாள்

2) சுகுணா திரும்பி வருவதற்கு கொடுக்கப்போகும் ஜல்லி

அ) ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்/பெண்/திருநங்கை தொலைபேசியில் திட்டி மீண்டும் வலைப்பதிய அழைத்தார்
ஆ) நண்பர்கள் (ஒருத்தரை பன்மையில் விளிக்கலாமா?) அழுதுகொண்டே அழைத்தனர்
இ) எனக்கு மப்பு கலைந்த பின்புதான் நான் போறேன் என்று என்னையறியாமலேயே அறிவித்ததன் அபத்தாம் புரிய வந்தது.
 



லக்கி கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..100 % மொக்கை.. கண்டினியூஸ்! ::

கதை தொடர்ச்சி...

"சத்யா.. என்னை பொட்"டீ"க்கடைன்னு கூப்பிடுவாங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன்" என்று பதிலளித்தேன்.

"ங்கொய்யால.. காதல்னவுடனே பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியே.. நீ சத்தியமா சத்யா இல்லையின்னு எனக்கு தெரியும். உன் நெச பேர சொல்லு" என்றாள் சில்வியா..

அடங்கொக்கமக்கா, எப்படி இவ்வளவு தீர்மானமாக சொல்கிறாள் என்று மனதுக்குள் ஆச்சரியப்பட்டுக்கொண்டேன்... மேலும் பார்க்கிறவனையெல்லாம் கொண்டையை மறைக்க சொல்லும் என் டவுசரையே அவிழ்த்துவிட்டாளே என்ற வெட்கமும் பிடிங்கித்தின்றது. "என் பூனை பேரு லக்கிலுக்கு.. நெச பேரு கலைஞர்தாசன்" என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"சரி சரி எதுக்கு வெக்கப்படற, வுடு. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்ல.. பீடி வேணுமா" என்றாள்.

"வேணாம், ஆனா நான் பொட்டீ இல்லையின்னு எப்பிடி கரீக்டா கண்டுபிடிச்ச" என்றேன் நான்.

சத்தமாக சிரித்த அவள், "ஏண்ணா நாந்தான் சத்யா.. என்னை பொட்"டீ"க்கடைன்னு கூப்பிடுவாங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன்... கொஞ்ச நாளா மசுரு வெட்ட நேரம் கிடைக்கல" என்றாள்(ன்).
 



சர்வேசன் பதிவு

சர்வேசன் என் பின்னூட்டத்தை டெலீட் செய்வதெல்லாம் உங்கள் பதிவு உங்கள் இஷ்டம். ஆனால் ரவி உளறுவதையெல்லாம் உண்மை என்று நம்பி அதை ஒரு காரணமாக கூறாதீர்கள். என் பதிவை போய் எட்டி பாருங்கள்.

மேலும் என் கமெண்டில் சம்பந்தமேயில்லாமல் தமிழச்சி, லிவ்ங் ஸ்மைல், வரவணையான் எல்லாம் எப்படி வந்தார்கள் என்பது புரியவில்லை...

நண்பர்கள் எல்லாம் குடிகாரர்கள், சுகுணா வருவதில் எனக்கு விருப்பமில்லை (அவர் வந்தால் எனக்கென்ன வராவிட்டால் எனக்கென்ன) என்பதெல்லாம் ரவியின் பைத்தியக்காரத்தனமான உளறல். கும்மிக்கு ஆள் சேர்க்கிறான்.

"பலருக்கு" ரசிக்கவில்லை என்று நீங்கள் நீக்கிய பின்னூட்டத்தை வைத்துதான் ரவி ஒரு மொக்கை பதிவு போட்டிருக்கிறான்.
 



எ.அ.பாலா சாக்கடைக் கொசுக்களா நாம்? ::

நீங்களும் அப்போதே வெறும் சூன்யத்தை உணர்ந்து வூட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்து நடந்து அழுததை பதிவாக போட்டிருந்தால் உங்களோடு தண்ணியடித்தவர்கள் (அப்படி யாரும் இல்லையின்னா இனிமேயாவது உருவாக்கிக்கோங்க.. இந்த மாதிரி நேரத்துல உபதகவலுக்கும் ஆதாரத்துக்கும் உதவுவாணுங்க) வாங்க வாங்க பதிவு போட்டிருந்திருப்பார்கள்.

சுட்டியதற்கு நல்லது.. சுட்டிகள் தேட நேரம் இல்லை. இன்னமும் நிறைய சொல்லலாம். ஆனால் அவசியம் இல்லை. உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.

இதைத்தான் ஒரு கேள்வியாக கேட்டேன். மொக்கை பல்கலைக்கழக வேந்தர் வரவனை எனக்கு மாமா பட்டம் அளித்து கவுரவித்திருக்கிறார்.
 



செல்வன் ஏழ்மையை அழிக்கும் ஏழுமலை ::

திருமலைக்கு செல்லும்போதெல்லாம் நான் வியப்பது அது நிர்வாகிக்கப்படும் முறை குறித்து.

*

திருப்பதி அளவு இல்லாவிட்டாலும் பழநி ஓரளவு வருமானம் பெறும் ஸ்தலம்தான். அங்கு - அறங்காவலர்கள், அரசாங்கம் சாப்பிட்டது போக - நடக்கும் நல்ல திட்டங்கள் (?!), நிர்வாக முறை குறித்தும் ஒரு வெள்ளை அறிக்கை கிடைக்குமா?
 



செந்தழல் ரவி சில தன்னிலை விளக்கங்கள்... ::

இந்த வார விவகாரம் ?? அந்த மாதிரி நான் எதுவும் எழுதிய ஞாபகம் இல்லை. இருந்தாலும் ரவீந்திரன் அந்தோணிசாமி என்பது உங்கள் மின்னஞ்சல் "மூலமாக" நான் டீகோட் செய்தேன் என்பதெல்லாம் கற்பனை குதிரை தறி கெட்டு அலைவதன் விளைவே. அது ஏற்கனவே ஆங்காங்கே படிக்க கிடைத்த விஷயம்தான். அதுவுமில்லாமல் ரவீந்திரன் அந்தோனிசாமி என்று எழுதுவதன் மூலம் நான் ஒரு பாஸிஸ்டாக கருதப்படுவேன் என்பதுவும் ஒரு புதிய செய்திதான்.

பொன்ஸ் பதிவில் எழுதியது நான் அவர் எழுதியதன் விளைவாக எழுதிய பின்னூட்டம். 'முதல் முதலில்' மகாலட்சுமி மேட்டரை எழுதியவர் என்பதால் அதை கொண்டு வந்து உங்கள் பதிவில் போட வேண்டும் என்பதைத்தான் கட்டற்ற பின் வெளி என்பதா?

சுகமளிக்கும் கூட்டம் என்பது தன்னைத்தானே சொறிந்து கொண்டு சுகமாக இருக்கும் என்பதை குறிக்க எனக்கு கிடைத்த வார்த்தை என்பதையும் அதை எழுதும்போது பெரியார் மீது ஆணையாக நான் செந்தழலை நினைத்து பார்க்கவில்லை என்பதையும் அறியத்தருகிறேன். (எப்ப பாத்தாலும் ரவிய பத்தியே "நான்" நினைக்கிற காலம்னு ஒண்ணு வந்தா... அய்யோ நினைக்கவே முடியலையே... நான் பாவமில்லையா)

// சுகுணா பற்றி அவர் சர்வேசன் பதிவில் இட்ட பின்னூட்டம் தான் விவகாரத்தின் ஆரம்பம்...துடிக்கும் மீனை ஷூக்காலில் இட்டு நசுக்கினால் அது நிரந்தரமாக துடிப்பதை நிறுத்திக்கொள்ளும் இல்லையா...அதே போலத்தான் அந்த பின்னூட்டமும் இருந்தது...ஆஹா விழுந்துருச்சுடா, போடுறா ஒரேப்போடு...சுத்தமா ஒழிஞ்சுபோகும்...என்பது போல.... // காந்தி மகான் படம் போட்டு ஒரு பதிவு வந்ததே. அது அரைபிளேடை "போடுறா ஒரேப்போடு" என்று சுத்தமா ஒழிக்க போட்ட பதிவு என்று ஊரணி கிணத்தாண்ட பேசிக்கிறாங்களே.. (உடனே அரைபிளேடும் நானும் ஒரே ஜாதி அதனாலதான் அவருக்கு வக்காலத்து வாங்கறேன்னு கிளப்பிறாதீங்க..)

// முதல் முதலில் போலி டோண்டு மூர்த்தியை உருவாக்கி // திருந்துங்கடே.. உளறுவதுன்னு முடிவு செஞ்சா அதுல செந்தழல் உட்பட எல்லாருக்கும் பங்கிருக்குன்னு ஒத்துக்கணும் ஓகே?

மற்றபடி காசியை எதிர்த்தது, ஓசையை எதிர்த்தது காலத்தில் எல்லாம் நான் ஓடி வந்து எதிர்க்கவா? எனக்கே தினமும் டஜன் கணக்கில் அருமைத்தமிழில் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருந்தது/க்கிறது என்பதையும் அதன் விளைவாக மாடரேஷன் கருமத்தை கூகிள் அறிமுகப்படுத்திய உடனேயே போட்ட துர்பாக்கியசாலி நான் என்பதையும் முதன் முதலில் டோண்டுவுக்கு அப்புறம் எனக்குத்தான் போலி வெப்சைட் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் அதை பெரிய அளவு ப்ரப்பகாண்டா (சரியாக படிக்கவும்) பண்ணாமல் நான் பாட்டுக்கு கூகிள் நண்பர் ஒருவர் மூலம் அகற்றினேன் என்பதுவும் உங்களுக்கு கொசுறு செய்திதான். எப்போதோ மாயவரத்தான் போலி விஷயங்களை அம்பலப்படுத்திய போது, ஆதாரம் எல்லாம் தந்தார், ஆனால் நம்பத்தான் யாரும் தயாராயில்லை. இன்று காந்தி வேசம் போடும் பலர் உட்பட அவரையே தாக்கினார்கள். மேலும் போலி விவகாரம் குறித்து என் செயல்பாடுகள் நிறைய பேருக்கு தெரியும். ஏதோ ஒரு வகையில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தால் சரிதான் என்பதாலும் நான் கருத்து/விமர்சனம் சொல்ல ஆரம்பித்தால் அது அனாவசியமான பல விஷயங்களை கிளறி இன்றைய தார்மீக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அமைந்து அது சூழலுக்கு பங்கமாக அமையும் என்பதாலேயே நான் இது குறித்து எல்லாம் எதுவும் சொல்வதில்லை.

யாரும் இங்கே "எங்களை பார்ப்பான்னு கூப்பிட்ட போது எங்க போயிருந்தீங்க" என்று கேட்கவில்லை. அப்பிடியெல்லாம் ஒருத்தரு கேக்க முடியுமா? கேட்கிறது என்னன்னா ஒரே ஆளு பார்ப்பான சாதின்னா ஒரு ஸ்டாண்டர்டும் மத்த சாதி - அது அரசாங்கத்தால கிட்டத்தட்ட ஃபார்வார்டு சாதியில இருக்கும் ஆண்டை சாதின்னாலும் - ஆளுங்கன்னா ஒரு ஸ்டாண்டர்டும் வச்சி பேசறத பத்திதான். அது புரியலையின்னா ஒண்ணும் செய்ய முடியாது.

சாதி மறுப்பு குறித்து இன்று செந்தழல் ரவியும் போன வாரம் சுகுணாவும் விடும் ஸ்டேட்மண்டை நான் 2005லேயே விட்டவன். ஆனால் என்னை எப்பொழுது பார்த்தாலும் சாதி சொல்லித்தான் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் என் சாதி இதுதான் என்று கற்பனை புருடா விடுபவர்கள் அப்படி ஒரு முடிவுக்கு வந்ததற்கான காரணங்கள்.

மேலும் பல இமெயில்கள், தகவல்கள், ஸ்க்ரீன்ஷாட்ஸ் - எந்த விதத்திலும் அவனோடு சம்பந்தப்படாத என்னை, அடிவருடித்தனத்தின் எச்ச புத்தி அவன் தனித்துவம் என்பதால் மட்டுமே கலாய்த்த தமிழ் பார்டெண்டர் யோக்கியவான் யார் என்பதற்கான ஆதாரம் உட்பட - என் வசமும் இருக்கிறது. அது குறித்து எல்லாம் நான் பேசுவதில்லை. சீக்கு பட்ட தமிழ் வலைப்பூ சூழலில் எல்லாமே அனாவசியம் என்று கருதுவதால். நீங்க போலியின் அல்லக்கை என்று நான் நம்பவில்லை. ஆனால் அவன் நம்பிக்கைக்கு உட்படுவதற்காக சென்ற தூரம் ரொம்பவும் அதிகம் என்றும் அது என்னை பொருத்த வரை அருவருப்பாக இருக்கிறது என்பதையுமே நான் சொல்லி வந்திருக்கிறேன். (ஆனால் இன்று எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் லக்கிலுக் போலியின் அல்லக்கை என்பது தனிப்பட என் நம்பிக்கை)

இன்னமும் உங்கள் மற்றும் ஒருசில 'பார்' போற்றும் பதிவாளர்கள் குறித்த இரு டஜன் பின்னூட்டங்கள் ரிஜக்டட் ஸ்டேடஸுக்கு முந்தைய ஸ்டேஜில் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடாமல் இருப்பது - ஒரு சில மொக்கை பதிவுகளின் பின்னூட்டங்களில் வெளிவரும் தகவ்ல்களை பார்க்கும்போது - என் பெருந்தன்மைதான் என்பது குறித்து எனக்கே சந்தோஷம்தான்...

மற்றபடி "எப்போதும் போல என்னுடைய வழியில் நான் தொடருகிறேன்...நான் நானாகவே" என்பது சந்தோஷம்தான். ஆனால் எப்போதும் அடுத்தவர் வழியில் குறுக்கே கார் ஓட்டும் நம் வழியில் என்றைக்காவது ஒருத்தன் ஒரே ஒரு முறை ஏர் ஓட்டத்தான் செய்வான் - என் அழுவாச்சி காவிய பதிவும் ஒரு தன்னிலை விளக்க பதிவுதான் என்பதையும் அதை எழுதும்போது நிசமாவே எனக்கு கோவமோ மூலமோ இல்லை என்றால் நம்புவீர்களா - அப்படி நடக்கும்போது நம்மாலும் தன்னிலை விளக்கங்கள் கொடுக்காமல் இருக்க முடிவதில்லை என்பதையும் புரிந்துகொண்டால் சரிதான். ஓகே மேட்? கூல்...

பி.கு: இதை ஒரு தனி மொக்கையாக போடாமல் ஒரு பின்னூட்டமாக போடுவதன் காரணம் புரியாவிட்டாலும் பரவாயில்லை.
 



செந்தழல் ரவி சில தன்னிலை விளக்கங்கள்... ::

// உண்மையில் பலமுறை வலைப்பதிவுகளிலும் // அப்படியா? அப்படியா? அப்படியா? - போதுமான அளவு ஸ்மைலிகளை தூவி இளஞ்சூட்டில் இறக்கி வைக்கவும்.

மத்தபடி இந்த வில்லன், கதாநாயகன், காமெடியன் பத்தியெல்லாம் கவலப்படாமல் ஜாலியாக இருக்கவும்.. வலைப்பதிவு மூலமா கிடைக்கிற இமேஜ் பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்ல.. unless நீங்க வலைப்பதிவு மூல(தன)மா பொண்ணு தேடறீங்கன்னா தவிர...
 



தமிழ்நிதி அமெரிக்கர்களின் சேமிப்பு ::

ப்ரோக்கரேஜ் கமிஷனுக்காக மட்டுமே DSPயை தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இனி அந்த கவலை வேண்டாம். www.zecco.com ப்ரோக்கரேஜ் தளத்தில் இலவசமாக (நாளைக்கு 10, மாதம் 40 லிமிட்) வர்த்தகம் செய்யலாம். இதனால் DSP அசௌகரியங்கள் தவிர்க்கலாம்.
 



பினாத்தல்கள் 20-20 நுணுக்கமான கிரிக்கெட்டுக்கு சாவுமணியா? ::

// இந்த டோர்னமெண்டுலே இந்தியா ஆடி, ஜெயிச்ச அத்தனை மேட்சையும், வேலைக்குத் தொந்தரவில்லாம //

என்னை பொருத்த வரை 20-20 என்பதே பொய்யாய் பழங்கதையாய் ஆகி ஆட்டக்காரர்கள் அனைவரும் வந்தனரா, தொடர்ந்து அம்பயர் அவரும் வந்தாரா, டாஸை போட்டாரா, ஜெயித்த அணியை அறிவித்தாரா என்று கிரிக்கெட் நிசமாலுமே அடுத்த நிலைக்கு செல்லும் நாள் என்று வருமோ அதுவே கிரிக்கெட்டுக்கு ஒரு பொன்னாள் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
 



பெனாத்தல் கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம் ::

நகைச்சுவை மட்டுமில்லாம அப்துல் கலாம் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் டாக்டர் விஜய் பதிவுக்கு 39 பின்னூட்டம் என்பது வரை இன்றைய வலைப்பதிவு குமுகாயத்தை நுணுக்கமாக கவனித்து பதிவு போட்டதுக்கு ஒரு சப்பாஸு...

// அப்போ நம்ம ஆளுங்க பதிவே போட முடியாதா? கலைஞர் வாரத்தில் லக்கி லுக் கூடவா பதிவு போட முடியாது? //
கலைஞர்னா கலைஞரேவா வலைப்பதிவுல எளுதுவாரு.. எல்லாம் அவரு முரசொலியில எளுதுனத பாத்து உடம்பிறப்பு லக்கி காப்பி பேஸ்ட் செய்றதுதான்.

// நீங்க புதுப் பதிவு போட்டா இராமநாதன் ஏன் தண்டோரா போடறார்னு புரியலியே... // எல்லாம் கட்சி பாசம்தான்.. என்ன கட்சின்னு கேட்டுறாதீங்க. அப்புறம் பமக (பச்சோந்தி மக்கள் கட்சி) பத்தி திருப்பியும் மொத மொதல்ல இருந்து ஆரம்பிக்கணும்...
 



பெனாத்தல் முதுகலை இல்லறத்தியல் - வகுப்புகள் ஆரம்பம் (1) ::

இதெல்லாம் ஒரு சப்ஜெக்டு, இதுக்கு ஒரு கோர்ஸு, வாத்தி, ப்ராக்ஸியோட ஸ்டூடண்ட்ஸு.. ச்சை.. வெக்கமாயில்ல.. ஆம்பிளைங்கதான நீங்க எல்லாம்.












அப்படீன்னு நல்லா நாக்க புடிங்கிக்கிற மாதிரி கேட்டுட்டு வா அப்பால துண்ணலாம்னுட்டாங்க.. ரொம்ப பசிக்குது.. நான் சமைச்சத நானே சாப்பிட முடியாம ரொம்ப கொடுமையா இருக்கு... அவ்வ்...
 



டோண்டு அவசர அறிவிப்பு - உங்கள் பிளாக்கர் கணக்கு ஜாக்கிரதை ::

எனக்கு நேற்றே உங்களிடம் (?!) இருந்து மேற்கண்ட மின்னஞ்சல் வந்தது... ஞாநி லெட்டர் மாதிரி ஒரு சப்பை மேட்டருக்கு வலைப்பதிவுல/திராவிட எளுத்தாருங்க சர்க்கிள்ல ஒரு அஜெண்டா இருக்கு.. பொழுது போகாம இல்ல காக்கா பிடிக்க புடிச்சி தொங்கிகிட்டு இருக்காங்க... ஏற்கனவே பத்தாத நேரத்துல இதுக்கு போயி ஆர்குட் விவாதம் எல்லாம் தேவையா அப்படீன்னு அதுக்கு போகல..

(ஒரு சுயகுறிப்பு : பொதுவாவே என்னோட வலைப்பதிவு அஞ்சல் முகவரிக்கு பின்னூட்டம் தவிர்த்த ஏனைய மெயில்கள்னா சும்மா நோட்டம் விடுவதோடு சரி.. அட்டாச்மெண்ட் இருந்தா திறப்பதே இல்லை)
 



இட்லி வடை FLASH: திரும்பவும் இட்லிவடை ::

// அனானி நானே முகமூடி, இப்ப இன்னொரு முகமூடி என்று வைத்துக்கொள்ளுங்கள். //

யோவ் இருக்குற கொயப்பம் பத்தாதா?
 



கொழுவி இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ? ::

வெறும் ஓடியோ மட்டும்தானா... எனக்கு வீடியோவில் கேட்டால்/பார்த்தால்தான் திருப்தி...
 



பாபா அமெரிக்காவும் விழுமியங்களும் ::

சன்னாசி அண்ணாச்சியோட சம்சயம் பண்ணா அத்த அனுபவிச்சிட்டு வுடாம ஆராய்ச்சி பண்ண இறங்கினா இப்படித்தான் திண்ணையில வாஸந்தியோட ஸ்ரீதேவி கட்டுரை மாதிரி பதிவு பத்தாம பறக்கும்.

(ஒரு சைடு மேட்டர் :: உம்மோட சுப. பதிவு படிச்சதும் தோணியது "என்னாச்சு பாபாவுக்கு" ஆச்சரியம் உங்க கேள்விகள நினைச்சி இல்ல, அப்படிப்பட்ட கேள்விகள் தோணக்கூடிய ஆளுதான்னு தெரியும்... அத வெளிப்படையா கேக்க ஆரம்பிச்சிட்டீங்களேன்னுதான்)

முகமூடி
 



ஆயில்யன் சஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில் ::

மூன்று வருடங்கள் முன்பு சென்றது நினைவில் வருகிறது. அழகான படத்துக்கு நன்றி.
 



பினாத்தல் எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா? ::

அசினுக்கு ரெண்டே ரெண்டு பாடலா? இந்த படத்தை இனமான தன்மான வெகுமான பகுமான கணிசமான உணர்வுள்ள உலக தமிழர்கள் மொத்தமாக புறக்கணித்து கஞ்ச இயக்குனர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள்...

*

// அசினுக்கு மேக்கப் போட இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம் - கட்சி மாற வைத்துவிடுவார் போல //

திருவிழா கூட்டத்தில் கலர் காகிதம் சுற்றப்பட்ட ட்யூப்லைட் தருவதுதான் வெளிச்சம்தான் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு சந்திர ஒளி டல்லாகத்தான் தெரியும்.

நீர் என்ன கட்சி மாறுவது.. மேற்கண்ட வாக்கியத்துக்கு பகிரங்க மன்னிப்பு கடுதாசி தரும் வரை உம்மை பமக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் (பொதுக்குழு + செயற்குழு) ஒதுக்கி வைக்கிறேன்...
 



காசி புனித பிம்ப தமாஷ்! ::

காசியண்ணை பொளுது போவல போல. இன்னிக்கி எனக்குந்தான். சரி, என் புண்ணூட்டம் ஒன்னு கொஞ்சம் பெரிசா ஆயிருச்சி. அதனால காசி போகல, கருமமும் தொலையில அப்படீங்கிற பேர்ல சுட்டியா இருக்கு. படிக்கிறதும் படிக்காததும் உங்க இஸ்டம்.
 



டுபுக்கு ப்ளாக் பார் டம்மீஸ் ::

எனது லேட்டஸ்ட் பதிவு படிச்சிட்டீங்களா?

அப்படீன்னு நேரடியா சொல்லாம மறைமுகமா வேற ஜல்லியடிச்சி விளம்பரம் செய்வாங்களே? அத்த பத்தி பேசலையா உங்க நண்பர்?
 



காசி புனித பிம்ப தமாஷ்! ::

ஒரு ஆறு மணி முப்பத்தேழு நிமிடங்கள் முன்பு இந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்துக்கான சுட்டியை இணைத்து உங்களுக்கு ஒரு புண்ணூட்டம் போட்டிருந்தேன்...

"தொழில்நுட்ப காரணத்துக்காக" அது ரிலீஸ் ஆகாமல் போயிருக்கலாம்... இருந்தாலும் நாலு வருசம் கழிச்சி தனிப்பதிவா போட்டு புலம்பாமே இப்பவே ஒரு ரிமைண்டு கொடுப்பமேன்னுதான்...
 



இலவசம் கலைஞரே, உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம்! ::

மலேசிய அமைச்சர் சொன்னது கண்டிக்கத்தகுந்தது அல்ல. 'உண்மையிலேயே' நெஞ்சார கவலைபடுகிறாரா என்பது வேறு விஷயம் என்றாலும் தமிழர்களை பற்றி கவலைப்பட தமிழகத்தின் முதல்வருக்கு தகுதி உண்டு. ஆனால் மலேசியர்களை பற்றி கவலைப்பட?

மலேசியாவில் மலேசிய வாழ் தமிழர்கள் - இவர்கள் மலேசிய குடிமகன்கள் என்பது முக்கியம் - தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை கண்டித்து 'தடையை மீறி' ஊர்வலம் சென்றதர்காக போலீஸ் தடியடி கண்ணீர்புகை வகையறாக்களை கொண்டு அடக்கியிருக்கிறது. அவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயம், அதை மலேசிய அரசு நசுக்க எடுத்த அநியாய முயற்சிள் எல்லாம் தனி விவாதத்துக்குறியது. இங்கு நாம் பேசுவது 'தமிழினத்தலைவர்' என்ற சுயபிரகடணத்தோடு மலேசியாவை கண்டிக்க இந்தியாவை வலியுறுத்தும் கருணாநிதி பற்றியது.

சமீபத்தில் சென்னையில் 'தடையை மீறி' ஊர்வலம் செல்ல முயற்சித்ததற்காக வைகோ, நெடுமாறன் உட்பட்ட "தமிழர்களை" தமிழக முதல்வர் சிறையிலடைத்த விதம் பற்றி தம் வருத்தத்தை கருணாநிதி கடிதமாக எழுதுவாரா? இதுபோன்று எத்தனையோ முறை கூட்டத்தை கலைக்க தமிழக அரசின் காவல்துறை தடியடி பிரயோகமும், கண்ணீர் புகைகுண்டும் வீசியிருக்கிறதே அதற்கெல்லாம் யார் யாருக்கு கடிதம் எழுதுவது?

நிறைய கடிதங்களை போலவே இக்கடிதமும் ஒரு அடையாள விஷயம் மட்டுமே, இதனால் பத்து பைசாவுக்கு பிரயோசனம் இருக்காது என்பதை உணர்ந்தே கருணாநிதி எழுதியிருப்பார். பொதுவாக யாரும் அவர் கடிதங்களை பொருட்படுத்துவதில்லை. இது தெரியாது மலேசிய அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அவ்ளோதான் மேட்டர்.
 



மோகன்தாஸ் நடுவர்களுக்கு அடிதடி தமிழ்மணத்தில் ரகளை ::

மோகன்தாஸ், லேட்டாக இப்பொழுதுதான் இதை பார்த்தேன். டூலேட்டா என்பது தெரியாது எனினும் தோன்றியதை பகிர்ந்து கொள்கிறேன்.

அ) தகுதியிருக்கிறதா என்பது ஒரு புறமென்றாலும், எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்வதில் எனக்கு விருப்பமோ ஆர்வமோ இல்லை. ஆ) எனக்கும் வேறு எந்த ஒரு திரட்டி அல்லது குழுவுக்கும் நன்றியுணர்ச்சியோ/காழ்ப்போ இல்லை.

முதலில் சில கேள்விகள் :

உங்களின் கோபத்திற்கு காரணம்,

நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தது போல, தமிழ்மணம் விருதுகள் என்று அறிவித்த பின்பு அதையொட்டி இன்னொரு குழு விருதுகள் என்று அறிவித்ததா? அல்லது பதிவில் சொன்னது போல அந்த அறிவிப்பையே தமிழ்மணத்தின் மூலம் விளம்பரம் செய்வதா?

தமிழ்மணம் விருதுகள் என்று அறிவித்த பின்பு அதையொட்டி இன்னொரு குழு விருதுகள் என்று அறிவித்ததாகவே வைத்துக்கொண்டாலும் அதனால் என்ன ப்ரச்னை. அது தமிழ்மண விருதுகளை நீர்க்கச்செய்யும் முயற்சியாக பார்க்கவேண்டுமா? அப்படி பார்த்தால் தமிழ் வலைப்பதிவுகளுக்கு(ம்) இண்டிப்ளாக்கீஸ் என்ற நிறுவனம் கடந்த இருவருடங்களாகவே விருதுகள் தந்து கொண்டிருக்கிறது. அந்த விருதை பலகீனப்படுத்தும் முயற்சிதான் தமிழ்மணத்தின் விருதுகள் என்று சொல்ல முடியுமா?விருதுகள் என்பது தமிழ்மணத்தின் காப்பிரைட் ப்ராப்பர்டி என்பதாக ஆகுமா? தமிழ்மணத்தின் விருதுகளை ஒட்டி அப்படியே ஈயடிச்சான் காப்பியாக அதே தேர்வு முறைகள், அதே டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் என்றெல்லாம் செய்தால் அது கண்டிக்கத்தகுந்தது. ஆனால் தமிழ்மணம் விருதுகள் பற்றிய அறிவிப்பை தவிர வேறு எதையும் செய்ததாக தெரியவில்லை. ஆக வேறு யார் யார் விருதுகள் தந்தால் என்ன?

விருது கொடுப்பவனின் தகுதி குறித்து கேட்கிறீர்கள். எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கத்தான் வேண்டும். இரு வருடங்களுக்கு முன்பு நான் சிறுகதை போட்டி ஒன்று நடத்தினேன். தமிழ் வலையுலகில் முதல் முறையாக நச்சுன்னு ஒரு போட்டி என்று அறிவிப்பு ஏதும் செய்தேனா என்று ஞாபகம் இல்லை. மாலன் நடுவராக இருந்தார். என் வேலை வந்த கதைகளை அவருக்கு அனுப்பியது மட்டுமே. அதனை எனக்கு தெரிந்த முறையில் நேர்மையாக நடத்தினேன் என்றே நினைக்கிறேன். அப்போது இதை நடத்த உனக்கு என்ன தகுதி என்று யாரும் கேட்டிருப்பார்களேயானால் என்னால் என்ன பதில் தந்திருக்க முடியும்.

// எவனுக்கு எவன்டா விருது கொடுக்குறது. தகுதியை நிரூபிக்கணுமாம். எவனோட தகுதியை எவன்கிட்ட நிரூபிக்கணும். தன்னைத்தானே பீடத்தில் அமர்த்திக்கிட்டு கூட இன்னும் கொஞ்சம் பேரையும் நீயும் உக்காந்துக்க நீயும் உக்காந்துக்க என்று பீடத்தை பகிர்ந்து கொடுத்துட்டா போச்சுதா பீடத்தில உட்கார்ந்தவனுங்க எல்லாம் கிழிச்சிட்டதா அர்த்தமா? இந்த கிழிச்ச பிரகஸ்பதிகள் தான் 2007ல் நீதான் பெஸ்டா கிழிச்சன்னு சொல்வாங்களா? // என்ற உங்களின் கேள்வி தமிழ்மண விருதுகள் குழுவுக்கும் பொருந்துமா? ஏன் கேட்கிறேன் என்றால் உங்களை போலவே பின்புல அரசியல் தெரிந்த நிலையில் நானும் இருந்திருக்கிறேன். அப்பொழுது தகுதி குறித்து கேள்வியெழுப்பியவர்களை பார்த்திருக்கிறேன். பின்னர் அவர்களே தங்களை தாங்களே தகுதியானவர் என்று அறிவித்த அவலமும் நடந்தது.

ஒரு ஆசிரியர் குழு சிறந்ததாக அவர்கள் கருதும் தமிழ் பதிவுகளை தொகுத்து பூங்கா என்ற மின் இதழில் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தகுதி என்று கேட்க முடியுமா? எப்படி அவர்கள் பார்வையில் சரியென்று படுவதை அவர்கள் செய்கிறார்கள் விரும்பினால் படி இல்லை விடு என்று சல்தா ஹை செய்கிறோமோ அது போலவே ஏன் இந்த விருதுகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது? இனிமேல் யாரும் வலைப்பதிவுகளை தொகுத்து மின் இதழ் வெளியிட்டால் பூங்காவுக்கு போட்டி என்று உங்கள் கோபம் அவர்கள் மேலும் திரும்புமா?

புகைப்படங்களுக்கு மாதா மாதம் போட்டி வைத்து பரிசுகள் தருகிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன Pilsner Urquell International Photography Awards வாங்கியவர்களா? அதிலும் ஒரு பதிவர் எதிராளி எல்லாம் ஒன்றும் தெரியாத கூமுட்டைகள் என்ற எண்ணத்தில்தான் எழுதுவார். சிரிப்போடு நகர வேண்டியதை தவிர செய்ய என்ன இருக்கிறது?

உங்கள் பதிவின் போக்கு ஒருவாறாக இருந்தாலும், மற்றொரு குழுவினர் தமது விருதுகள் அறிவிப்பையே தமிழ்மணத்தின் மூலம் விளம்பரம் செய்வதுதான் தலையாய ப்ரச்னை என்பதாக உங்கள் பின்னூட்டம் தெரிவிக்கிறது... எனில் அதனால் உங்களுக்கு என்ன ப்ரச்னை? தமிழ்மணத்தில் சினிமா வெளியீடு குறித்த விளம்பரம் வரலாம். இடியாப்ப கம்பெனி குறித்த விளம்பரம் வரலாம். ஆனால் தமிழ் பதிவுகளுக்கான விருது குறித்த விளம்பரம் தமிழ் பதிவுகள் திரட்டியான தமிழ்மணத்தில் வரக்கூடாதா?

உங்களின் தார்மீக கோபத்தின் பின்னால் இருக்கும் தமிழ்மணத்தின் மீதான நன்றியுணர்ச்சியை - அதுவே கேள்விக்குட்பட்டதுதான் - மீறிய பக்தி குறித்தான் கேள்விகள் எனக்குண்டு. இதற்கு முன்பே பல சந்தர்ப்பங்களில் இது குறித்த விவாதங்களில் பரவசப்பட்டவரின் உணர்ச்சிகளை புரிய முயன்று தோற்றிருக்கிறேன். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் கட்டற்ற இணையவெளி, மட்டற்ற சுதந்திரம் என்றெல்லாம் ஒரு பக்கம் பேசிக்கொண்டே இன்னொரு புறம் தமிழ் வலையுலகின் எல்லா நலலது (கெட்டதற்கும்?) ஒரு நிறுவன ப்ராண்டை மட்டும் முன்னிறுத்தி அதை மோனோபோலியாக ஆக்க துணை நிற்கும் முரண்பாட்டு எண்ணங்கள் எழுப்பும் பாதிப்புகளின் எச்சம் மட்டும் கொஞ்சம் உண்டு.
 



ரவிசங்கர் தமிழ்மணத்துக்கு பகிரங்க மடல் :) ::

எப்பொழுது தமிழ்மணத்தின் செயல்பாடு விமர்சனத்துக்குட்பட்டாலும், அது எந்த விதமான விமர்சனமானாலும், "தமிழ்மணத்தை விட்டு வெளியேற வேண்டியதுதானே" என்று சொல்லும் ஒரு கூட்டம் இருக்கிறது. வாழ்க கோஷம் மட்டுமே கேட்க வேண்டும், மாற்று கோஷம் நமக்கு மட்டுமே உரியது என்ற கருத்து கொண்டவர்கள். பொதுவாக "தமிழ்மணத்தின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நான் பங்கு கொண்டிருந்தாலும் இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே" என்ற டிஸ்க்ளைமரோடு வருவார்கள். இன்று சு.மூ அதை மறந்துவிட்டார்.

இந்தியாவில் குடும்பம் குட்டியோடு வாழ்ந்து கொண்டு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் இது போன்ற கேள்விகள் கேட்பவர்களில் பலருண்டு. அவர்களை பார்த்து "இந்தியாவில் இருப்பதுதானே ப்ரச்னை. இந்தியாவை விட்டு வெளியேறி சுபிட்சமாக இருக்கலாமே" என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது.

அது இருக்கட்டும், தலைப்புல எதுக்கு ஸ்மைலி?
 



தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை? ::

இந்தியாவில் இருந்த வரை வருடம் தவறாமல் களி தின்றிருக்கிறேன், சேந்தன் கதையும் அறிந்திருக்கிறேன், ஆனால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு இன்றுதான் அறிந்தேன்.

// கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான் //

திருவாதிரை நாள் மட்டும் மார்க்கெட்டில் / தள்ளுவண்டியில் எல்லா காய்கறிகளிலும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ஒரு சிறு துண்டு என்று கலந்து பேக்கேஜாக விற்பார்கள். அதற்கென்றே ஒரு பெயர் கூட உண்டு. மறந்து விட்டது.

நல்லதொரு பதிவு.
 



வடக்கு நோக்கி என் முதல் பயணம் - A Tale of Twists ::

எல்லாம் சரி, இண்டர்வ்யூ ரிசல்ட் என்னாச்சி என்பதே தெரியவில்லையே, சரி பின்னூட்டத்திலாவது யாராவது கேட்டிருப்பார்கள் என்று பார்த்தால் "நல்ல பயணக் கட்டுரை" என்ற அனானி கமெண்ட் தவிர்த்து ஒரு பின்னூட்டமும் பதிவு சம்பந்தமாக பேசக்காணோம்!!! சரி இப்பவாவது சொல்லுங்க. இண்டர்வ்யூ ரிசல்ட் என்னாச்சி.

(தயவு செய்து இந்த வேர்ட் வெரிபிகேஷனை நீக்கவும்.. ஏகப்பட்ட இடத்தில் இதை செய்து செய்து மண்டை காயுதுன்னா இங்கயுமா?)
 



கானா பிரபா அண்ணன் மேர்வின் சில்வாவை ஆறுதல் படுத்த ::

நானும் பார்க்கிறேன், டாக்டர்.மேர்வின் என்று யாருமே குறிப்பிடுவதில்லை? ஏன் இந்த கொலைவெறி.

ரூபவாஹினியில் தலைவர் மன்னிப்பு(?!) கேட்பதாக ஒரு வீடியோ பார்த்தேன். சிங்களத்தில் பேசியதால் மன்னிப்புதான் கேட்கிறாரா இல்லை மிரட்டல் எதுவும் விடுக்கிறாரா என்று தெரியாத அளவு அதிகார தோரணை ? ஆராவது சிங்கள நண்பர்கள் இருந்தால் மொழிபெயர்த்து போடக்கூடாதா?

மேலும் இந்தாளை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வடிவேலுவை கேவலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
 



உஷா புத்தாண்டு சுவாரசியம்- 2008 ::

// உலக இலக்கியங்களைப் பற்றியும், அதில் நான் அவசியம் படிக்க வேண்டியவைகளையும், எழுத்தாளர்கள் நிறைய படிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு //

அப்ப வலையுலகில மட்டும்தான் ஈகோ பீலா கோஷ்டி இருக்கானு/ளுங்கங்கிற என்னோட நெனப்பு தப்பா?
 



செல்வன் டிஸ்னிலாண்ட் போன பதிவர்களே,ஓடியாங்க ::

சென்னைல இருக்கிறவங்க சொந்த பந்தம் நட்பு வட்டம் வந்தா பீச்சுக்கு கூட்டிட்டு போற மாதிரி இங்க யாராவது குழந்தைகளோட வந்தா நம்மோட முதல் வேலை டிஸ்னிக்கு கூட்டிட்டு போறதுதான். அங்க போனா குழந்தைங்க போகுதோ இல்லியோ, எல்லா ரைடுக்கும் (பீட்டர் பேன் மாதிரி ரைடு கூட) நான் போயிடுவேன் (என்னது நானே ஒரு குழந்தை மாதிரிதானா? அதுவும் சரிதான் ஹிஹி)

இந்த சர்வே விவகாரம் பக்கம் தலை வைச்சும் படுக்கிறது இல்ல.. ஆனாலும் இதுல கலந்துகிட்டாச்சி.. (ஆனா நாலு பக்கம் கொஞ்சம் டூ மச்சி)

அப்புறம் பாஸ்ட் பாஸ் விவகாரம். அது இலவசம்தான். சாதா டிக்கெட் வைத்திருக்கிறவங்க சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு மட்டும் வெளிப்புற பூத்தில் டிக்கெட்டை தானியங்கி இயந்திரத்தில் விட்டு ஃபாஸ்ட் பாஸ் எடுத்துக்கலாம்... அது சொல்லும் நேரத்தில் நீங்க திரும்பி வந்தா கூட்டம் கம்மியா இருக்கிற ஃபாஸ்ட் பாஸ் லைனில் போகலாம்.. நீங்க சொல்ற 50 டாலர் அதிக டிக்கெட் ஃப்ரண்ட் ஆஃப் லைன் டிக்கெட்டா இருக்கும்.
 



தாரா சென்னையிலிருந்து தாரா - 1 ::

// நீங்கள் சொன்ன அந்த கழிப்பறையை சுத்தப்படுத்துபவனின் சிரமங்கள், அவன் சம்பளம்..என்று ஆராய்ந்து ஒரு கழிப்பறையை தத்து எடுத்து உங்களின் எண்ணப்படி ஒன்றை நடத்த முயற்சிக்கலாம் //

எர்ரம் எர்ரம்னா இல்ல குர்ரம்னுமாம் குதிரை.. அது மாதிரியே எந்த ப்ரச்னைனாலும் தனி ரூட்டுல ஆரம்பிச்சுடுவாங்கய்யா..... கண் தெரியவில்லை என்று டாக்டரிடம் போனால் 'அதெல்லாம் அப்பிடித்தான்யா இருக்கும்'னு சொல்லிட்டு வேணும்னா இத சாப்பிடுன்னு தலைவலிக்கு மாத்திரை தருகிறார் என்று வைப்போம், டாக்டருக்கு என்ன ப்ரச்னையோ என்ன சம்பளம் வாங்குறாரோ என்று சமூக அக்கரை இருப்பவர்கள் அதை அப்படியே சாப்பிடுவார்கள் போல...

எந்த நாட்டிலுமே அடிப்படை வேலையை செய்பவர்களுக்கு இருப்பதிலேயே அடிப்படையான சம்பளம்தான் தருகிறார்கள். அந்தந்த நாட்டு பொருளாதாரத்தை பொறுத்து அது அவனுக்கு சிரமமேற்படுத்தும் வேலைதான். ஆனால் ஏன் இந்திய விமான நிலைய கழிப்பறை மட்டும் இப்படி இருக்க வேண்டும். உலகில் இந்த தொழில் என்றில்லை எல்லா தொழிலிலுமே சிறுபான்மை தவிர்த்து அனைவருக்குமே தனது சம்பளம் குறித்தும் பணி குறித்தும் அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. நீங்களோ நானோ ஒரு குறிப்பிட்ட சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு வேலையில் சேர்ந்தால் அந்த வேலை ஒழுங்காக நடைபெறாவிட்டால் உடனே நமது பின்புலம், சம்பளம் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்கிறார்களா அல்லது வேறு என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். செய்யப்போகும் வேலை என்ன அதற்குறிய சம்பளம் என்ன என்று தெரிந்துதானே அவர் வேலைக்கு சேருகிறார்.

கழிப்பறை சுத்தம் செய்பவருக்கு கஷ்டம் என்றால் போய் நேரம் இருந்தால் அவர் கஷ்டம் களைய முயற்சியுங்கள். ஆனால் அவருக்கு சிரமங்கள் அதனால் அவர் வேலையை அவர் இஷ்டப்பட்டு முடிந்தால்தான் செய்வார் என்று வக்காலத்து வாங்காதீர்கள். (ஒரு தகவலுக்கு: எங்கள் ஏரியா குப்பை பொறுக்குபவர் தினமும் கடமையே கண்ணாக பணியாற்றுவார். சென்ற முறை இந்தியா சென்ற போது பொங்கல் சமயம் அவருக்கு 100 ரூ தந்தேன். வாங்க மறுத்துவிட்டார். மகனை நல்லபடியாக படிக்க வைத்து நல்ல வேலையில் இருக்கிறான். மகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அரசாங்கத்தில் தரும் சம்பளம் எனக்கும் மனைவிக்கும் போதுமானதாக இருக்கிறது என்றார். சாட்டையடியாக இருந்தது அவரின் சுயமரியாதை என்று பேன்ஸியாக எழுதலாம். ஆனால் வருடா வருடம் தரும் பொங்கல் பரிசு - இனாம் என்கிறார்கள் - என்ற நினைப்பிலேயே அந்த வருடமும் தர முயற்சித்ததாலும் அவர் அவ்வருடம் புதியவர், வித்தியாசமான கொள்கை கொண்டவர் என்றதாலும் சாட்டையெல்லாம் அடிக்கவில்லை. ஆனால் அவரிடம் பேசிக்கொண்டிருந்ததில் அவரின் வாழ்க்கையில் சில விஷயங்களை சொல்லி ஆச்சரியப்படுத்தினார். அவரிடம் இருந்து ஒரு விஷயத்தை அன்று கற்றுக்கொண்டேன்)

மேலும் விமான நிலைய கழிப்பறையை பொதுமக்களில் ஒருவர் தத்து எடுக்க வேண்டும் என்றால் அந்த வேலையை செய்வதற்காகவும் சேர்த்து வரி வசூலிக்கும் அரசாங்கமும் விமான நிலைய குழுமமும் வேறு என்ன அதைவிட முக்கிய விஷயத்தில் புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். எங்கும் இல்லாத விஷயமாக பார்வையாளர்கள் விமான நிலையத்தின் உள்ளே செல்பவர்களுக்கு என்று 60ரூ கட்டணம் வசூலிக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கானோர் அதை வாங்கி உள்ளே செல்கிறார்கள். அந்த டிக்கட்டை சரிபார்ப்பவர்கள் மத்திய அரசில் சம்பளம் வாங்கும் CISF பாதுகாப்பு படையினர்... ஆக அந்த வசூல் பணம் டிக்கட் விற்பனையாளர் சம்பளம் தவிர்த்து எதற்குத்தான் உபயோகப்படுகிறது?

அதுமட்டுமல்ல.. அடுத்த முறை விமான நிலையத்தில் இறங்கியவுடன், "இந்த கழிப்பறையை நான் தத்து எடுத்துக்கொள்கிறேன்" என்று விமான நிலைய ஆணையரிடம் சென்று கல்வெட்டு பேசிப்பார்க்கட்டும்... வந்துட்டான்யா எல்லாம் தெரிஞ்ச NRI டோமரு என்ற பாணியில் பதில் இருக்கிறதா அல்லது ஒரு கழிப்பறையை உடனே பட்டா போட்டு கொடுக்கிறார்களா என்பதை தெரிவித்தால் வசதிப்பட்டவர்கள் தத்து எடுக்க வசதிப்படும். நான் அப்பொழுதும் வரி வசூலிக்கும் நாய்கள் இதை ஏன் சரியாக செய்வதில்லை என்று குறை மட்டுமே சொல்வேனே தவிர தத்து எல்லாம் எடுக்க மாட்டேன்.
 



ஜெயஸ்ரீ சர்க்கரைப் பொங்கல் ::

சரி எப்பவுமே தொலைபேசி பேசி செய்றோமே, இந்த வாட்டி வித்தியாசமா இருக்கணுமின்னு இந்த வருச பொங்லுக்கு நம்ம வீட்டுல இதுதான் செய்முறை. ரொம்ப நல்லா வந்திச்சி (நமக்கு நாமே திட்டத்துல கூட பாராட்டிக்கிலன்னா எப்படி) ரெண்டே ரெண்டு சிறு விஷயங்கள தவிர.

அ) வெல்லம் துருவி 2.5 கப்பா? அத மட்டும் குத்து மதிப்பா போட்டு கொஞ்சம் இனிப்பு கம்மியா வந்திச்சி.. (heart healthy pongal அப்படீன்னு பேரு)

ஆ) சிட்டிகைன்னா என்னன்னு தெரியாம கொஞ்சம் அதிகமா ஜாதிக்காய் பொடி (செய்து) போட்டேன். வாசனை தூக்கோ தூக்கு.

*

உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 



இ.கொ வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்"

எ.அ.பாலா வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்" ::

முதலில் நீங்கள் எல்லாரும் கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் க்ரிக்கெட் மேனேஜ்மெண்ட் பற்றிய உபயோகமான விஷயங்களில் சிலதையாவது படித்து பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்.

cricket management
 



செந்தழல் டோண்டு மீட்டிங் - முழுமையான கவரேஜ்...!!! ::

// கரிய நிற ஸ்கோடா ஒன்று வந்து நிற்பதும் அதில் இருந்து ஆஜானுபாகுவான ஒருவர் இறங்கிவருவதும் தெரிந்தது...முகம் சரியாக தெரியவில்லை... //

மூலிகை வைத்தியர் மூசிலாபனியன்மணி ::-

சந்தேகம் என்ற வியாதி வந்தால் திருடிய கோழி சூப் குடித்தால் கூட குணமாகாது.
 



தமிழ்பித்தன் அக்கா ரவுசரை உருவிட்டாளே! ::

பெயரிலி நெலம இப்பிடி வடிவேலு கணக்கா ஆயி பொச் சே!!!
 



பினாத்தல் ஹொகேனக்கல் - நீர் மட்டுமா வீழ்ச்சி அடைகிறது? ::

ஓட்டு பொறுக்கும் செயலுக்கு அப்பட்டமான ஒரு சப்பைகட்டு.. கர்நாடகாவில் கவர்னர் ஆட்சி இல்லாமல் மக்களாட்சி இருந்த போது தண்ணீர் பெற முடிந்ததா? எந்த ஆட்சி வந்தாலும் ரவுடி கூட்டமும் மொழி வெறியர்களும் இதை செயல்படுத்த விடப்போவதில்லை. தமிழன் என்றால் குட்ட குட்ட குனிபவன் அல்ல என்ற வீர வசனம் பேசியவன் எல்லாம் பின்பக்கம் புண்ணாகி கிடக்கிறார்கள்.

தர்மபுரியிலும் கிருஷ்ணகிரியிலும் "தமிழர்கள்" சாக்கடை பீக்கு பக்கத்தில் அமர்ந்து நாத்த தண்ணீரை சேந்து குடித்து வாழும்போதே சாவார்கள்.. பேடிகள் தான் 'போகும் வரை' எப்படியாவது நாற்காலியில் ஒட்டிக்கொள்ள "தமிழர்களுக்கு" உயிரை கொடுப்போம் மயிரை கொடுப்போம் என்று கூறிக்கொண்டு செத்து செத்தே வாழ்வார்கள்.
 



லக்கி மைடியர் மகரநெடுங்குழைகாதா! ::

லக்கி.. சினிமா நட்சத்திரங்கள் ஆட்டம்னா ஆறு மணிநேரம் அசையாம "உக்காந்து" பாக்குற வயசாளி ஒருத்தருக்கு அந்த மாதிரி சந்தர்ப்பத்துல தன்னையும் மீறி வேட்டி நனைஞ்சிதின்னு சொல்லி "வெளி ஆயி"ட்ட நிழல் படம் "ஒன்னுக்கு" ஆத்திரப்பட்டு குஞ்சுங்க எல்லாம் விகடன எரிச்சாங்களாமே, அந்த படம் ஒரு ரெஃபரன்ஸுக்கு வேணும், உங்களாண்ட கிடைக்குமா?
 



// ஆய் போன படம் என் ரெஃபரென்ஸுக்கு வேணும் //

ஏம்பா லக்கி, உடம்பிறப்பாச்சே... வேட்டி நனைஞ்ச விவகாரத்துல மூத்திர ச்சே ஆத்திரப்பட்டு ஆட்டம்போட்ட ஆளுங்க யாரையாவது தெரிஞ்சிருக்குமேன்னு உங்களாண்ட கேட்டா பதிலுக்கு ஆய் போற படத்த எங்கிட்ட போய் கேக்குறீங்களே...

ஒண்ணுக்கு போற, ஆய் போற படங்கள எல்லாம் சேத்து வச்சிக்கிறது, அத வச்சி பதிவு போடுறது எல்லாம் எனக்கு அவ்வளவா பயக்கமில்லீங்க்களே... காண்டு கஜேந்திரங்கிட்ட வேணா கேட்டு பாருங்களேன், கிடைக்கும்..
 



லக்கி, இருட்டடிப்பு என்றானபின்னர் எதற்கு அரைகுறையாக ஒன்றை மட்டும் சென்ஸாரித்து மற்றொன்றை விட்டு வைத்து... முழுமையாக க்ளீன் செய்து கொள்ளலாமே..

திராவிட தலைவர்களை கிண்டலடித்த சோ ராமசாமியை கண்டிக்க வேண்டுமா? திராவிட தலைவர்கள் என்ன புனித பிம்பமா? அவர்கள் அடிக்காத நக்கலா, தனிமனித இழிவுபடுத்தலா? இல்லை சோவைத்தான் அவர்கள் பதிலுக்கு தாக்கவில்லையா?

ஒரு மதத்தை அதன் நம்பிக்கையாளர்களை எல்லாம் போகிற போக்கில் நக்கலடிக்கலாம்.. அதற்கு எதிர்வினையாக வரும் (தன் தலைமையை விமர்சிக்கும்) நக்கல்களில் மட்டும் மனம் பாதிப்படைவது எந்த வகை நகைச்சுவை?

இன்றைக்கு சன் டிவி கருணாநிதி எதிர் அணி என்றவுடன் சன் டிவியை கண்டிக்கும் பகுத் அச்சா அறிவு வந்திருக்கிறது.. வேப்பிலைக்காரி முதல் ஆயிரம் மூட நம்பிக்கை சீரியல்களை அவர்கள் ஒளிபரப்பியபோது எங்கேயிருந்தது இந்த பகுத்தறிவு சிந்தனை?

திராவிட அரசியல் பரிணாம வளர்ச்சியில் பகுத்தறிவு என்பது தனிமனித ஆராதனை மற்றும் துதிபாடல் அளவிலேயே நின்றுவிட்டதை உடன்பிறப்புகள் உணரக்கூட முடியாத அளவிலேயே தேக்கம் அடைந்து நின்றுவிட்டத்துதான் இங்கே சோகம்.

(இதன் ஒரு நகல் நான் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என் பின்னூட்டங்கள் பதிவிலும்)
 



நம்ம வீட்டுல சன் டிவி எல்லாம் கட்டாகி ரொம்ப நாளாவுது.. கருணாநிதி அஃபிலியேட்னா பாக்கவும் இல்லைன்னா வெறுக்கவும் மாதிரியான பாச உணர்ச்சி இல்லை.. எனக்கு சன்னில்/எந்த தமிழ் டிவி சானலிலுமே எப்பவுமே content இருந்தது இல்லை.. மேலும் நான் ராமாயணம் பார்க்க ஆசைப்பட்டால் சன்னில் பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை..

// நீங்க தான் புனிதபிம்பம் //

இப்படி பாக்குறவனை எல்லாம் புனித பிம்பம்னு உணர்ச்சி வசப்படுறதத்தான் கடைசி பாராவுல சொன்னேன்.. ஆடு நனையுறது அப்பட்டமா தெரியுதேங்கிறத தவிர அதுக்காக யாரும் அழுவுலங்கிறதயாவது புரிஞ்சிக்க முயற்சித்தல் நலம்.
 



ஆசிப்பு தசாவதாரம் - இசை வெளியீடு - என் பார்வையில் ::

// "செப்டம்பர் ஒன்பதில் சரிந்தது ட்வின் டவர்
எப்போதும் சரியாதது என் டவர்" என்று மல்லிகா ஷெராவத்துக்காகப் பாடல் எழுதியிருக்கிறாராம். அப்படின்னா என்னன்னு யாராவது எனக்கு சொல்லுங்கப்பா. //

அது செப்டம்பர் பதினொன்னு. பாட்டு தப்பா, இல்ல கேட்டது தப்பா?

மத்தபடி மல்லிகா ஷெராவத்துன்னா யாரு? தம்பி மோகன்தாஸிடம் கேட்டு வாங்கி ஒரு படம் போடவும்.
 



இலவசம் மை டியர் பெனாத்தலாரே ::

// கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை //

தாராளமா படிக்கலாம்..

http://elavasam.blogspot.com/feeds/post/default - இது பதிவுக்கு
http://elavasam.blogspot.com/feeds/comments/default - இது பின்னூட்டத்துக்கு

என்ன ஒன்னு, எல்லா பின்னூட்டமும் ஒரே feedல இருக்கும்கிறதால எந்த பதிவுக்கு எந்த பின்னூட்டம்னு தெரியாம குத்து மதிப்பா படிச்சிக்க வேண்டியதுதான்...

ஒரு உதாரணத்துக்குத்தான் உங்க பதிவோட feeds.. தெரியாத்தனமா உங்க பின்னூட்ட feedஅ ரீடர்ல கொடுத்தா ரீடர் நொந்து நூடுல்ஸாயிடாது???
 



// அதெல்லாம் இருக்கட்டும். நல்ல விசயம்தானே சொல்லி இருக்கீங்க. அதுக்கு எதுக்கு எங்க தல பெயருக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கணும்? சும்மா உங்க பெயரிலேயே வந்து அட்டகாசம் செய்யலாமுல்ல.... //

அலாவ்... அது நாந்தாம்பா... ப்ளாகர்ல லாகின் பண்ண சோம்பேறிதனப்பட்டு அப்பப்ப இப்பிடி பண்றதுதான்... ஒரிஜினல் நான்னா http://mugamoodicomments.blogspot.com/ல ஒரு பிரதி இருக்கும்.. டூப்ளிகேட் நான்னா இருக்காது...

**

விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சி, பின்னூட்ட எண்ணிக்கைய உயர்த்திய மாதிரியும் ஆச்சி.. நம்ம ரெண்டு பேருக்குமே இது ஒரு வின் - வின் சிச்சுவேசன் இல்ல???
 



போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு ::

// இணைய குசும்பன், முகமூடி மற்றும் திருமலையை தாக்கும் அனானியின் பின்னூட்டம் ஏற்கப்படவில்லை //

யாருப்பா அனானி நீ, இவ்ளோ நல்லவனா இருக்க... வருசக்கணக்கா ஆகியிருக்கும் நாம களத்துல சந்திச்சி.. இவ்ளோ நாளா இருட்டு ரூம்பு மூலையில குந்தி குமுறி குமுறி அழுதுமா இன்னமும் மன அழுத்தம் தீரல உனக்கு? அப்பிடி என்னதாம்பா ப்ரச்னை உனக்கு? உன் மனபிராந்திக்கு மருந்தா அயல்நாட்டு பிராந்தி வேணும்னா சொல்லு அனுப்பி வைக்கிறேன்... இல்லையின்னா இந்த லிஸ்டுல உன் வீட்டுக்கு பக்கமா எது இருக்கோ அங்கன போயி யாருகிட்டயாவது மனசு விட்டு பேசு...

http://www.tnhealth.org/treatment.htm -
01. Institute of Mental Health, Medavakkam Tank Road, Kilpauk, Chennai - 10
02. Dept. of Psychiatry, Madras Medical College, Chennai
03. Dept. of Psychiatry, Govt. Stanley Medical College,. Chennai
04. Dept. of Psychiatry, Govt. Kilpauk Medical College, Chennai
05. Dept. of Psychiatry, Govt. Chengalpattu Medical College, Chengalpattu
06. Institute of Psychiatry, Govt. Govt. Madurai Medical College
07. Dept. of Psychiatry, Govt. Coimbatore Medical College, Coimbatore
08. Dept. of Psychiatry, Govt. Mohan Kumaramangalam Medical College, Perundurai
09. Dept. of Psychiatry, Govt. Salem Medical College
10. Dept. of Psychiatry, Govt. Tanjore m,edical College, Tanjore
11. Dept. of Psychiatry, Ki.Va.Po. Medical College, Trichi
12. Dept. of Psychiatry, Govt. Tirunelveli Medical college, Tirunelveli
13. Psychiatric Clinic, Govt. ESI Hospital, Ayanavaram
 



ஜோ "ரஜினி செய்தது தவறா? ::

// நல்ல மனிதரும் கூட //

இதையே ஏகப்பட்ட பேர் சொல்கிறார்கள். முதலில் நல்ல மனிதர் என்பதற்கான அளவுகோல் என்ன? நல்ல மனிதன் என்ற ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பமே எல்லாவற்றிற்குமான - எங்களை ஆளுங்கள், வழிநடத்துங்கள் என்று சரண்டர் ஆகும் அளவு - தகுதியை தந்துவிடுமா? அப்படியென்றால் ஒரு படத்துக்கு 25 கோடி வாங்கும், நதிநீர் இணைப்புக்கென ஒரு கோடி தாராள நன்கொடை தரும் ஒரு நடிகனை விட ஊருக்கு ஊர் சுலாப் இண்டர்நேஷனல் என்ற பெயரில் கக்கூஸ் கட்டி ஒரு ரூபாய்க்கு வாடகைக்கு விடுபவன் முதல்வர் பதவிக்கு அதிக நல்லவனாக தெரிகிறானே?

அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலையில் எப்பொழுதும் ஊசலாடும் தமிழகத்தை உண்மையிலேயே ஆண்டவன் காப்பாற்றியது, ரஜினி வாய்ஸ் ஊத்திக்கொண்டபொழுதுதான். ரஜினி பற்றி அவ்வளவாக தெரியாது, ஆனால் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் வியாபாரத்தில் படுகெட்டி என்பது ரஜினி 25 நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் நுழைவு சீட்டு வசூலத்ததில் ஆரம்பித்து இன்று வரை ரஜினி இமேஜால் சம்பாதித்த ஏகப்பட்ட நிகழ்வுகளில் உணர்ந்து கொள்ளலாம். (அது ஒன்றும் தப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்)

ஆக, நல்ல மனிதன் என்ற பிம்பத்தை மட்டும் வைத்து ரஜினி ஜுரம் அடித்த சந்தர்ப்பத்தில் ரஜினியை முதல்வராக்கியிருந்தால் தமிழக ஆட்சி அதிகார வியாபாரம் என்பது அங்கிருந்து இங்கே என்று குடும்பம் மாறியிருக்குமே தவிர கேனை தமிழன் வாழ்வில் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது.

**

இந்த வார ஜு.வி ரஜினியை விமர்சித்திருப்பது செம காமெடி. ரஜினி தனியறையில் குசு விட்டால் கூட அதற்கும் ஒரு யூகம் வைத்து எதையாவது எழுதி சாமான்ய ரஜினியை தெய்வ மச்சான் ஆக்கியதில் விகடனின் பங்கு மிக அதிகம். ரஜினிக்கு மதன் அடிக்கும் ஜால்ரா ஊர் பிரசித்த அசிங்கம். இன்று என்னவோ மான ரோசம் வந்து எழுதிய மாதிரி எழுதியதின் பிண்ணனி என்ன கருமமோ.
 



குசும்பன் நோபலும் குப்பைத்தொட்டியும் ::

ரீடரை திறந்தால் குசும்பனிடம் இருந்து புதிய பதிவென்கிறது. சவுக்கியமா?

*

சாருவை பொறுத்த வரை எழுத்தையும் எழுதுபவனின் பின்புலத்தையும் பிரித்து பார்க்க இயலாத அளவு சுயபிரதாபம் இருக்கும். அதுவே புதிய வாசகர்களை பொறுத்த வரை அவருக்கு பலமாகவும் அதே வாசகர்கள் பழக பழக அவருக்கு பலவீனமாகவும் ஆகிவிடுகிறது.

இவருடன் நீண்ட நாள் சாட் தொடர்பில் இருந்த வாசகி இவரை (இவரின் சைபர் செக்ஸ் ஆர்வத்தை என்று படிக்கவும்) புறக்கணித்து அவள் காதலனை மணக்க முடிவு எடுத்த பொழுது அவளை கேவலப்படுத்தி எழுதிய போதே சாருவின் பிம்பம் காணாமல்போய்விட்டது (மனதுக்குள் எப்பொழுதுமே பெரிய மன்மதன் என்ற நினைப்போடு அலைபவரை என்னென்பது)

'படமெடுத்து ஆடும்' தன் ஆண்மைக்கு நிகரில்லை என்று பல கட்டுரைகள். இலக்கியவாதிகளின் சண்டையின் போது டவுசர் (லிட்டரலி) அவிழ்க்கப்பட்ட போது வெளிப்பட்ட துக்கிணியூண்டு சைஸ் குறித்த ஜார்ஜ் கொஸ்டாண்ஸா நீச்சல் குள தண்ணீர் டெம்பரேச்சர் தன சப்பைகட்டு. ஒரு புறம் இலக்கியத்துக்காக பிச்சை மறுபுறம் காஸ்ட்லி தண்ணீர் மற்றும் அக்ஸசரீஸ் (பாரில் தொலைக்கும் செருப்பு விலை 6000ரூ). செக்ஸ் டிப்ரிவியேஷன் ஆள் சமயங்களில் கவுதம புத்தருக்கு அண்ணன் என்று முரண்பாடுகளின் மொத்த உருவம் சாரு.

இதெல்லாம் தேவையில்லை. அவர் எழுத்தை மட்டும் பார்க்கலாம்தான். ஆனால் இதுவரை பெரும்பாலும் தன்னை மட்டுமே எழுதுபவரை எப்படி எழுத்தை மட்டுமே பார்ப்பது.

அவரின் எழுத்தில் இருக்கும் வசீகரம் மட்டுமே அவரை தொடர்ந்து படிக்க தூண்டுவது.. நடு நடுவே ஒரு சில உருப்படியான கட்டுரைகள் கிடைக்கும். அதை தவிர்த்து பார்த்தால் கமல் சொல்வது போல சாருவின் மற்றெல்லா துணுக்கு தோரணங்களையும் அனுபவிக்கலாமே தவிர ஆராய கூடாது.
 



திராவிடக்குஞ்சு ::

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?


நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது "தம்பிமார்கள்' பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி "கண்ணீர்த்துளி'களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, "நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்'' என்று பித்தலாட்டமாடினார். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்'' என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.


இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் "திராவிட நாடு'' என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் "அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு'' என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே "திராவிட நாடு' என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.

தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன் என்றார். "ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்'' என்றும் பிதற்றினார். "தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்கவிட்டால், அடைவோம் திராவிடநாடு'' என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.

சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், "திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன'' என்று சமாளித்தார்.


இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 "குடியரசு' நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.


ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.


மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25ஆம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமõகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.


இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், "இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது'' என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் "மன்னிப்பு' எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் "இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது'' என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.


பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.



ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957இல் நடந்த தேர்தல் மாநாட்டில் "தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?' என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே "புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்' என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.



தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957இல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.



கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான "மூதறிஞர்' ராஜாஜியை "குல்லுகப் பட்டர்' எனச் சாடியவர், 1962 தேர்தலிலே "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை'' எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை "அண்ணாதுரை முதலியார்'' எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். "சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது'' என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.



1967இல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. "எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு'' எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.



நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே "நேருவின் மகளே வருக'' என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை "அன்புச் சகோதரி'யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.



"தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்' என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' எனும் தத்துவம்(!)தான்.



அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக "ஆளைக்காட்டினால் ஐம்பாதியிரம் கூடும். முகத்தைக்காட்டினால் முப்பதாயிரம் கூடும்'' எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.



கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக "காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்'' எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.



அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். "உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது'' என்று அண்ணா சொன்னார்.



வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் "மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்'' என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ "பேரறிஞர்' எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த "உண்மையான' கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.



கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை "நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல'' என கூச்சநாச்சமின்றி இப்"பேரறிஞர்' விளக்கம் வேறு தந்தார்.



எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க "எதையும் தாங்கும் இதயம்' பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது "அண்ணா வழியில் அயராது உழைப்போம்!'' இவ்வாறு 70களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி "கலைஞர்', "தளபதி' என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.



பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.



கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.
 



இணைய உலக சூப்பர் ஸ்டார் இட்லி வடையா? - முனீஸ்வரி கடிதம் ::

அன்பின் முனீஸ்வரி,

நா(ங்க)ந்தான் இட்லி வடைன்னு நீங்க நெனைக்கீறீங்களா? களா?? களா?? ளா??? ளா????

இப்டிக்கி,
பத்ரி (அ)
பாரா (அ)
க்ருபா (அ)
ஜெ.ராம்கி (அ)

முகமூடி
 



சரி, உங்க கருத்து ??